< ஏசாயா 15 >
1 ௧ மோவாபைக்குறித்த செய்தி. இரவிலே மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது; இரவிலே மோவாபிலுள்ள கீர் என்னும் பட்டணம் பாழாக்கப்பட்டது, அது அழிக்கப்பட்டது.
有關摩阿布的神諭:實在,摩阿布的阿爾經過一夜的蹂躪,就滅亡了!實在,摩阿布的克爾經過一夜的摧殘,就滅亡了!
2 ௨ அழுவதற்காக மேடைகளாகிய பாயித்திற்கும் தீபோனுக்கும் போகிறார்கள்; நேபோவின் காரணமாகவும் மெதெபாவின் காரணமாகவும் மோவாப் அலறுகிறது; அவர்களுடைய தலைகளெல்லாம் மொட்டையடித்திருக்கும்; தாடிகளெல்லாம் கத்தரித்திருக்கும்.
狄朋女兒走上高丘哭泣,摩阿布為乃波和默德巴悲號;眾人的頭都剃光了,眾人的鬍鬚都剪去了;
3 ௩ அதின் வீதிகளில் சணல் ஆடையைக் கட்டிக்கொண்டு, எல்லோரும் அதின் வீடுகள்மேலும், அதின் தெருக்களிலும் அலறி, அழுதுகொண்டிருக்கிறார்கள்.
有的在街道上穿著苦衣,有的在屋頂上痛哭;在廣場上的人,人人哀號,流淚痛哭。
4 ௪ எஸ்போன் ஊராரும் எலெயாலெ ஊராரும் சத்தமிடுகிறார்கள்; அவர்கள் சத்தம் யாகாஸ்வரை கேட்கப்படுகிறது; ஆகையால் மோவாபின் ஆயுதம் அணிந்தவர்கள் கதறுகிறார்கள்; அவனவனுடைய ஆத்துமா அவனவனில் பயப்படுகிறது.
赫市朋和厄肋阿肋號啕,雅哈茲都可聽到他們的哭聲;因此摩阿布的兩腰為之顫動,她的心靈為之恐怖。
5 ௫ என் இருதயம் மோவாபுக்காக ஓலமிடுகிறது; அதிலிருந்து ஓடிவருகிறவர்கள் மூன்று வயது கிடாரியைப்போல அலைகிறார்கள்; லூகித்திற்கு ஏறிப்போகிற வழியிலே அழுதுகொண்டு ஏறுகிறார்கள்; ஒரொனாயிமின் வழியிலே நொறுங்குதலின் சத்தமிடுகிறார்கள்.
我的心為摩阿布發出哀號,她的難民已逃至左哈爾。他們哭著攀上了路希特的山坡,在曷洛納因的道上揚起了失望的哀聲。
6 ௬ நிம்ரீமின் நீர்ப்பாய்ச்சலான இடங்கள் பாழாய்ப்போகும்; புல் உலர்ந்து, முளை அழிந்து, பச்சையில்லாமல் போகிறது.
尼默陵的水地成了荒野,青草枯焦了,嫩芽萎縮了,再也見不到青綠。
7 ௭ ஆதலால் மிகுதியாகச் சேர்த்ததையும், அவர்கள் சம்பாதித்து வைத்ததையும், அலரிகளின் ஆற்றுக்கப்பால் எடுத்துக்கொண்டுபோவார்கள்.
為此,他們將所有的積蓄和財物,都帶過了「柳樹河。」
8 ௮ கூக்குரல் மோவாபின் எல்லையெங்கும் சுற்றும்; எக்லாயிம்வரை அதின் அலறுதலும், பெரேலீம்வரை அதின் புலம்புதலும் கேட்கும்.
因為哀叫聲傳遍了摩阿布四境,她的哭聲已傳到厄革拉因,她的哭聲已達到貝爾厄林。
9 ௯ தீமோனின் தண்ணீர்கள் இரத்தத்தால் நிறைந்திருக்கும்; தீமோனின்மேல் அதிகக் கேடுகளைக் கட்டளையிடுவேன்; மோவாபிலே தப்பினவர்கள்மேலும், தேசத்தில் மீதியானவர்கள்மேலும் சிங்கத்தை வரச்செய்வேன்.
狄孟的水已滿了鮮血,我還要加禍於狄孟:為摩阿布的難民和當地的遺民將有一隻獅子。