< ஏசாயா 12 >

1 அக்காலத்திலே நீ சொல்வது: “யெகோவாவே, நான் உம்மைத் துதிப்பேன்; நீர் என்மேல் கோபமாயிருந்தீர்; ஆனாலும் உம்முடைய கோபம் நீங்கியது; நீர் என்னைத் தேற்றுகிறீர்.
Langalolosuku uzakuthi: Ngiyakubonga, Nkosi, lanxa wawungithukuthelele, ulaka lwakho seluphendukile, njalo ungiduduzile.
2 இதோ, தேவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன்; கர்த்தராகிய யேகோவா என் பெலனும், என் கீதமுமானவர்; அவரே எனக்கு இரட்சிப்புமானவர்.
Khangela, uNkulunkulu ulusindiso lwami, ngizathemba ngingesabi; ngoba iNkosi uJehova ingamandla ami lengoma yami, isibe lusindiso lwami.
3 நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியுடன் தண்ணீர் மொண்டுகொள்வீர்கள்.
Ngakho ngentokozo lizakukha amanzi emithonjeni yosindiso.
4 அக்காலத்திலே நீங்கள் சொல்வது: யெகோவாவை துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை மக்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம் செய்யுங்கள்.
Lithi ngalolosuku: Bongani iNkosi, libize ibizo layo, lazise izenzo zayo phakathi kwezizwe, limemezele ukuthi ibizo layo liphakeme.
5 யெகோவாவைக் கீர்த்தனம்செய்யுங்கள், அவர் மகத்துவமான செயல்களைச் செய்தார்; இது பூமியெங்கும் அறியப்படக்கடவது என்பீர்கள்.
Hlabelelani eNkosini ngoba yenzile izinto ezinhle kakhulu; lokhu kakwaziwe emhlabeni wonke.
6 சீயோனில் குடியிருக்கிறவளே, நீ சத்தமிட்டுக் கெம்பீரி; இஸ்ரவேலின் பரிசுத்தர் உன் நடுவில் பெரியவராயிருக்கிறார்.”
Memeza, uhlabele ngentokozo, mhlali weZiyoni, ngoba oNgcwele kaIsrayeli mkhulu phakathi kwakho.

< ஏசாயா 12 >