< ஏசாயா 10 >

1 ஏழைகளை வழக்கிலே தோற்கடிக்கவும், என் மக்களில் சிறுமையானவர்களின் நியாயத்தைப் புரட்டவும், விதவைகளைச் சூறையாடவும், திக்கற்ற பிள்ளைகளைக் கொள்ளையிடவும்,
وای بر قاضیان بی‌انصاف که قوانین غیر عادله وضع می‌کنند تا حق فقیران و بیوه‌زنان و یتیمان قوم مرا پایمال کنند و اموالشان را به غارت ببرند و بر ایشان ظلم کنند.
2 அநியாயமான தீர்ப்புகளைச் செய்கிறவர்களுக்கும், கொடுமையான கட்டளைகளை எழுதுகிறவர்களுக்கும் ஐயோ,
3 விசாரிப்பின் நாளிலும், தூரத்திலிருந்து வரும் அழிவின் நாளிலும் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதவி பெறும்படி யாரிடத்தில் ஓடுவீர்கள்? உங்கள் மகிமையை எங்கே வைத்துவிடுவீர்கள்?
در روز بازخواست، وقتی خدا از سرزمین دور دست بر شما مصیبت بفرستد، چه خواهید کرد؟ به چه کسی پناه خواهید برد؟ گنجهایتان را کجا مخفی خواهید کرد؟
4 கட்டுண்டவர்களின்கீழ் முடங்கினாலொழிய கொலைசெய்யப்பட்டவர்களுக்குள் விழுவார்கள்; இவையெல்லாவற்றிலும் அவருடைய கோபம் தணியாமல், இன்னும் அவருடைய கை நீட்டினபடியே இருக்கிறது.
در آن روز هر چه دارید زیر پای اسیران و کشته‌شدگان از بین خواهد رفت. با این حال، غضب خدا فروکش نخواهد کرد و دست او برای مجازات شما همچنان دراز خواهد بود.
5 என் கோபத்தின் கோலாகிய அசீரியனுக்கு ஐயோ, அவன் கையிலிருக்கிறது என் கோபத்தின் தண்டாயுதம்.
خداوند می‌فرماید: «وای بر آشور که عصای خشم من است. من آشور را مانند چوب تنبیه به دست خواهم گرفت و برای مجازات آنانی که بر ایشان خشمناک هستم به کار خواهم برد.
6 அவபக்தியான மக்களுக்கு விரோதமாக நான் அவனை அனுப்பி, எனக்குக் கோபமூட்டின மக்களைக் கொள்ளையிடவும், சூறையாடவும், அதை வீதிகளின் சேற்றைப்போல் மிதித்துப்போடவும் அவனுக்குக் கட்டளைகொடுப்பேன்.
قوم آشور را بر ضد این قوم خدانشناس که مورد خشم من هستند خواهم فرستاد تا آنها را غارت کنند و مانند گل، زیر پاهای خود لگدمال نمایند.»
7 அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
اما پادشاه آشور نمی‌داند که وسیله‌ای است در دست خدا. آرزوی دل او این است که اقوام بسیاری را نابود کند.
8 அவன்: என் பிரபுக்கள் அனைவரும் ராஜாக்களல்லவோ?
می‌گوید: «سرداران من هر یک پادشاهی هستند!
9 கல்னோபட்டணம் கர்கேமிசைப் போலானதில்லையோ? ஆமாத் அர்பாத்தைப்போல் ஆனதில்லையோ? சமாரியா தமஸ்குவைப்போலானதில்லையோ?
شهرهای کرکمیش و کلنو و حمات و ارفاد را تسخیر کردیم؛ سامره و دمشق نیز تسلیم ما شدند.
10 ௧0 எருசலேமையும் சமாரியாவையும்விட விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,
ممالکی را که بتهایشان بیش از بتهای اورشلیم و سامره بودند از بین بردیم.
11 ௧௧ நான் சமாரியாவுக்கும், அதின் சிலைகளுக்கும் செய்ததுபோல், எருசலேமுக்கும் அதின் சிலைகளுக்கும் செய்யாமலிருப்பேனோ என்று சொல்கிறான்.
ما سامره را با تمام بتهایش نابود کردیم و همین کار را نیز با اورشلیم و بتهایش خواهیم کرد.»
12 ௧௨ ஆதலால்: ஆண்டவர் சீயோன் மலையிலும் எருசலேமிலும் தமது செயலையெல்லாம் முடித்திருக்கும்போது, அசீரிய ராஜாவினுடைய பெருமையான நெஞ்சின் வினையையும், அவன் கண்களின் மேட்டிமையான பார்வையையும் நான் விசாரிப்பேன் என்கிறார்.
پس از آن که خداوند پادشاه آشور را برای مجازات کوه صهیون و اورشلیم به کار گرفت، آنگاه برمی‌گردد و پادشاه مغرور و متکبر آشور را نیز مجازات می‌کند.
13 ௧௩ அவன் என் கையின் பெலத்தினாலும், என் ஞானத்தினாலும் இதைச் செய்தேன்; நான் புத்திமான், நான் மக்களின் எல்லைகளை மாற்றி, அவர்கள் பண்டகசாலைகளைக் கொள்ளையிட்டு வல்லவனைப்போல் குடிமக்களைத் தாழ்த்தினேன்.
پادشاه آشور می‌گوید: «من به قدرت و حکمت و دانش خود در این جنگها پیروز شده‌ام. من به نیروی خود مرزهای ممالک را از میان برداشتم و پادشاهان را سرکوب کردم و گنجهایشان را به یغما بردم.
14 ௧௪ ஒரு குருவிக்கூட்டைக் கண்டுபிடிக்கிறதுபோல் என் கை மக்களின் ஆஸ்தியைக் கண்டுபிடித்தது; விட்டுவிடப்பட்ட முட்டைகளை வாரிக்கொள்வதுபோல் பூமியையெல்லாம் நான் வாரிக்கொண்டேன்; ஒருவரும் இறக்கையை அசைத்ததுமில்லை, வாயைத் திறந்ததுமில்லை, கீச்சென்று சத்தமிட்டதுமில்லை என்று சொல்கிறான்.
ممالک دنیا را مانند آشیانهٔ پرندگان تکان دادم و ثروت آنان را که مثل تخمهای پرندگان به زمین می‌ریخت جمع کردم بدون این که کسی جرأت کند بالی برایم تکان دهد و یا دهانش را باز کرده، جیک‌جیک کند.»
15 ௧௫ கோடரியானது தன்னால் வெட்டுகிறவனுக்கு விரோதமாக மேன்மைபாராட்டலாமோ? வாளானது தன்னைப் பயன்படுத்துகிறவனுக்கு விரோதமாகப் பெருமைபாராட்டலாமோ? பாராட்டினால், தடியானது தன்னைப் பிடித்தவனை மிரட்டினாற்போலவும், கோலானது நான் மரக்கட்டையல்லவென்று எழும்பினதுபோலவும் இருக்குமே.
اما خداوند می‌فرماید: «آیا تبر به خود می‌بالد که قدرتش بیش از هیزم شکن است؟ آیا اره خود را بالاتر از کسی می‌داند که اره می‌کند؟ آیا عصا انسان را بلند می‌کند یا انسان عصا را؟»
16 ௧௬ ஆகையால் சேனைகளின் ஆண்டவராகிய யெகோவா, அவனைச் சேர்ந்த கொழுத்தவர்களுக்குள்ளே இளைப்பை அனுப்புவார்; சுட்டெரிக்கும் அக்கினியைப் போலவும் ஒரு அக்கினியை அவன் மகிமையின்கீழ் கொளுத்துவார்.
خداوند لشکرهای آسمان بر جنگاوران تنومند پادشاه آشور بلایی خواهد فرستاد تا آنها را ضعیف و نحیف کند و مانند آتش آنها را بسوزاند.
17 ௧௭ இஸ்ரவேலின் ஒளியான தேவனானவர் அக்கினியும், அதின் பரிசுத்தர் அக்கினி ஜூவாலையுமாகி, ஒரே நாளிலே அவனுடைய முட்செடிகளையும், நெரிஞ்சில்களையும் எரித்து அழித்து,
خدای پاک که نور اسرائیل است همچون شعلهٔ آتش در یک روز همه چیز را مانند خار و خس خواهد سوزاند.
18 ௧௮ அவனுடைய வனத்தின் மகிமையையும், அவனுடைய பயிர்நிலத்தின் மகிமையையும், உள்ளும்புறம்புமாக அழியச்செய்வார்; கொடிபிடிக்கிறவன் களைத்து விழுவதுபோலாகும்.
جنگل و مزارع پهناور آنها از بین خواهد رفت درست مانند بیماری که جسم و جانش تباه می‌شود.
19 ௧௯ காட்டில் அவனுக்கு மீதியான மரங்கள் கொஞ்சமாயிருக்கும், ஒரு சிறுபிள்ளை அவைகளை எண்ணி எழுதலாம்.
درختان جنگل به قدری کم خواهد شد که یک کودک نیز خواهد توانست آنها را بشمارد.
20 ௨0 அக்காலத்திலே இஸ்ரவேலின் மீதியானவர்களும், யாக்கோபின் வம்சத்தில் தப்பினவர்களும், பின்னொருபோதும் தங்களை அடித்தவனைச் சார்ந்துகொள்ளாமல் இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவையே உண்மையாகச் சார்ந்துகொள்வார்கள்.
زمانی فرا خواهد رسید که کسانی که در اسرائیل و یهودا باقی مانده باشند، دیگر تکیه‌گاهشان آشور نخواهد بود، بلکه از صمیم قلب بر خداوند که یگانه قدوس اسرائیل است توکل خواهند داشت.
21 ௨௧ மீதியாயிருப்பவர்கள், யாக்கோபில் மீதியாயிருப்பவர்களே, வல்லமையுள்ள தேவனிடத்தில் திரும்புவார்கள்.
تعداد کمی، یعنی باقی ماندگان یعقوب به سوی خدای قادر مطلق باز خواهند گشت.
22 ௨௨ இஸ்ரவேலே, உனது மக்கள் கடலின் மணலளவு இருந்தாலும், அவர்களில் மீதியாயிருப்பவர்கள் மாத்திரம் திரும்புவார்கள்; தீர்மானிக்கப்பட்ட அழிவு நிறைந்த நீதியோடே புரண்டு வரும்.
هر چند اکنون قوم اسرائیل مانند شنهای ساحل دریا بی‌شمارند، ولی در آن زمان عدهٔ کمی از ایشان باقی خواهند ماند و این عده به وطن باز خواهند گشت، زیرا مجازات عادلانه‌ای که تعیین شده، اجرا خواهد شد.
23 ௨௩ சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தேசம் முழுவதற்கும் தீர்மானிக்கப்பட்ட அழிவை வரச்செய்வார்.
خداوند، آن خداوند لشکرهای آسمان، بدون درنگ و با قطعیت تمام سرزمین ایشان را ویران خواهد کرد.
24 ௨௪ ஆகையால் சீயோனில் குடியிருக்கிற என் மக்களே, அசீரியனுக்குப் பயப்படாதே; அவன் உன்னைக் கோலால் அடித்து, எகிப்தியரைப்போல் தன் தண்டாயுதத்தை உன்மேல் ஓங்குவான்.
خداوند، آن خداوند لشکرهای آسمان، می‌فرماید: «ای قوم من که در صهیون ساکنید، از آشوریان نترسید، حتی اگر مانند مصریان در قدیم بر شما ظلم کنند.
25 ௨௫ ஆனாலும் இன்னும் கொஞ்சக்காலத்திற்குள்ளே என் கடுங்கோபமும், அவர்களைச் அழிக்கப்போகிறதினால் என் கோபமும் தணிந்துபோகும் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்கிறார்.
زیرا پس از مدت کوتاهی از مجازات شما دست خواهم کشید و به هلاک کردن آنها خواهم پرداخت.»
26 ௨௬ ஓரேப் கன்மலையின் அருகிலே மீதியானியர்கள் வெட்டுண்டதுபோல் சேனைகளின் யெகோவா அவன்மேல் ஒரு சவுக்கை எழும்பிவரச்செய்து, எகிப்திலே தமது கோலைக் கடலின்மேல் ஓங்கினதுபோல் அதை அவன்மேல் ஓங்குவார்.
خداوند لشکرهای آسمان ایشان را مجازات خواهد کرد همان‌گونه که مدیانی‌ها را در کنار صخرهٔ غراب، و مصری‌ها را در دریا هلاک کرد.
27 ௨௭ அந்நாளில் உன் தோளிலிருந்து அவன் சுமையும், உன் கழுத்திலிருந்து அவன் நுகமும் நீக்கப்படும்; அபிஷேகத்தினால் நுகம் முறிந்துபோகும்.
در آن روز خداوند به اسارت شما پایان خواهد داد و شما قوی خواهید شد و یوغ بندگی از گردن شما خواهد افتاد.
28 ௨௮ அவன் ஆயாத்திற்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் பொருட்களை வைத்திருக்கிறான்.
سربازان دشمن به شهر عای رسیده‌اند! از مغرون عبور کرده و ساز و برگ خود را در مکماش گذاشته‌اند.
29 ௨௯ கணவாயைத் தாண்டி, கேபாவிலே முகாமிடுகிறார்கள்; ராமா அதிர்கிறது; சவுலின் ஊராகிய கிபியா ஓடிப்போகிறது.
از گذرگاه گذشته‌اند و می‌خواهند شب را در جبع به سر برند. اهالی شهر رامه هراسانند. تمام مردم جِبعه، شهر شائول، از ترس جان خود فرار می‌کنند.
30 ௩0 காலீம் மகளே, உரத்த சத்தமாகக் கூப்பிடு; ஏழை ஆனதோத்தே, லாயீஷ் ஊர்வரை கேட்க சத்தமிட்டுக் கூப்பிடு.
ای مردم جلیم فریاد برآورید! ای اهالی لیشه و ای مردم بیچارهٔ عناتوت گوش دهید!
31 ௩௧ மத்மேனா தப்பி ஓடிப்போகும், கேபிமின் மக்கள் எருசலேம் அருகில் மறைத்துக்கொள்கிறார்கள்.
اهالی مدمینه و ساکنان جیبیم فراری شده‌اند.
32 ௩௨ இனி ஒருநாள் நோபிலே தங்கி, மகளாகிய சீயோனின் மலைக்கும், எருசலேமின் மேட்டிற்கும் விரோதமாகக் கை நீட்டி மிரட்டுவான்.
امروز دشمن در نوب توقف می‌کند. او مشت خود را گره کرده و به طرف اورشلیم که بر کوه صهیون قرار دارد تکان می‌دهد.
33 ௩௩ இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் தோப்புகளைப் பயங்கரமாக வெட்டுவார்; உயர்ந்து வளர்ந்தவைகள் வெட்டுண்டு மேட்டிமையானவைகள் தாழ்த்தப்படும்.
اما همان‌گونه که هیزم شکن درختان جنگل لبنان را با ضربه‌های تبر قطع می‌کند، خداوند، آن خداوند لشکرهای آسمان، نیز آن درخت بزرگ را با یک ضربه قطع خواهد کرد، و شاخه‌های بلند و تنومند آن کنده شده به زمین خواهند افتاد.
34 ௩௪ அவர் காட்டின் மரங்களின் அடர்த்தியைக் கோடரியினாலே வெட்டிப்போடுவார்; மகத்துவமானவராலே லீபனோன் விழும்.

< ஏசாயா 10 >