< ஓசியா 9 >

1 இஸ்ரவேலே, மகிழ்ச்சியாக இருக்காதே; மற்ற மக்களைப்போல் களிகூராதே; உன் தேவனைவிட்டு நீ வழிவிலகிப்போனாய்; தானியம் போரடிக்கிற சகல களங்களிலும் கூலியை நாடுகிறாய்.
以色列啊,不要像外邦人欢喜快乐; 因为你行邪淫离弃你的 神, 在各谷场上如妓女喜爱赏赐。
2 தானியக்களமும் திராட்சைத்தொட்டியும் அவர்களைப் பிழைக்கச்செய்வதில்லை; அவர்களுக்குத் திராட்சைரசம் ஒழிந்துபோகும்.
谷场和酒榨都不够以色列人使用; 新酒也必缺乏。
3 அவர்கள் யெகோவாவுடைய தேசத்தில் குடியிருப்பதில்லை; எப்பிராயீமர்கள் மீண்டும் எகிப்திற்குப் போவார்கள்; அசீரியாவில் தீட்டுள்ளதைச் சாப்பிடுவார்கள்.
他们必不得住耶和华的地; 以法莲却要归回埃及, 必在亚述吃不洁净的食物。
4 அவர்கள் யெகோவாவுக்குத் திராட்சைரசத்தின் பானபலியை ஊற்றுவதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாக இருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைச் சாப்பிடுகிற அனைவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கே உரியது, அது யெகோவாவுடைய ஆலயத்தில் வருவதில்லை.
他们必不得向耶和华奠酒, 即便奠酒也不蒙悦纳。 他们的祭物必如居丧者的食物, 凡吃的必被玷污; 因他们的食物只为自己的口腹, 必不奉入耶和华的殿。
5 ஆசரிப்பு நாளிலும், யெகோவாவுடைய பண்டிகைநாளிலும் என்ன செய்வீர்கள்?
在大会的日子, 到耶和华的节期,你们怎样行呢?
6 இதோ, அவர்கள் அழிவிற்குத் தப்பும்படி போய்விட்டார்கள்; எகிப்து அவர்களைச் சேர்த்துக்கொள்ளும், மோப் பட்டணம் அவர்களை அடக்கம் செய்யும்; அவர்களுடைய வெள்ளியிருந்த விருப்பமான இடங்கள் நெருஞ்சிமுட்செடிகளுக்குச் சொந்தமாகும்; அவர்களுடைய குடியிருப்புகளில் முட்செடிகள் முளைக்கும்.
看哪,他们逃避灾难; 埃及人必收殓他们的尸首, 摩弗人必葬埋他们的骸骨。 他们用银子做的美物上必长蒺藜; 他们的帐棚中必生荆棘。
7 விசாரிப்பின் நாட்கள் வரும், நீதி சரிக்கட்டும் நாட்கள் வரும் என்பதை இஸ்ரவேலர்கள் அறிந்துகொள்வார்கள்; உன் மிகுதியான அக்கிரமத்தினாலேயும், மிகுதியான பகையினாலேயும் தீர்க்கதரிசிகள் மூடர்களும், ஆவியைப் பெற்ற மனிதர்கள் பைத்தியம் பிடித்தவர்களுமாக இருக்கிறார்கள்.
以色列人必知道降罚的日子临近, 报应的时候来到。 民说:作先知的是愚昧; 受灵感的是狂妄, 皆因他们多多作孽,大怀怨恨。
8 எப்பிராயீமின் காவற்காரர்கள் என் தேவனோடு எதிர்த்து நிற்கிறார்கள்; தீர்க்கதரிசி தன் வழிகளிலெல்லாம் குருவிபிடிக்கிறவனுடைய கண்ணியாகவும், தன் தேவனுடைய ஆலயத்திலே பகையாளியாகவும் இருக்கிறான்.
以法莲曾作我 神守望的; 至于先知,在他一切的道上作为捕鸟人的网罗, 在他 神的家中怀怨恨。
9 கிபியாவின் நாட்களில் நடந்தது போல, அவர்கள் தங்களை மிகவும் கெடுத்துக்கொண்டார்கள்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைப்பார், அவர்களுடைய பாவங்களை விசாரிப்பார்.
以法莲深深地败坏, 如在基比亚的日子一样。 耶和华必记念他们的罪孽, 追讨他们的罪恶。
10 ௧0 வனாந்திரத்தில் திராட்சைக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்முறை பழுத்த பழங்களைப்போல உங்கள் முற்பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோரிடம் போய், இழிவானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப்போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.
主说:我遇见以色列如葡萄在旷野; 我看见你们的列祖如无花果树上春季初熟的果子。 他们却来到巴力·毗珥专拜那可羞耻的, 就成为可憎恶的, 与他们所爱的一样。
11 ௧௧ எப்பிராயீமின் மகிமை ஒரு பறவையைப்போல் பறந்துபோகும்; அது பிறப்பதுமில்லை, வயிற்றிலிருப்பதும் இல்லை, கர்ப்பமடைவதும் இல்லை.
至于以法莲人,他们的荣耀必如鸟飞去, 必不生产,不怀胎,不成孕。
12 ௧௨ அவர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்தாலும், அவர்களுக்கு மனிதர்கள் இல்லாதபடிக்கு அவர்களைப் பிள்ளைகள் இல்லாதவர்களாக்குவேன்; நான் அவர்களை விட்டுப்போகும்போது அவர்களுக்கு ஐயோ,
纵然养大儿女, 我却必使他们丧子,甚至不留一个。 我离弃他们,他们就有祸了。
13 ௧௩ நான் எப்பிராயீமைத் தீருவின் திசைவரை இருக்கிறதைப் பார்க்கிறபோது, அது நல்ல வசதியான இடத்திலே நாட்டப்பட்டிருக்கிறது; ஆனாலும் எப்பிராயீமர்கள் தங்கள் மகன்களைக் கொலை செய்கிறவனிடத்தில் வெளியே கொண்டுபோய்விடுவார்கள்.
我看以法莲如泰尔栽于美地。 以法莲却要将自己的儿女带出来, 交与行杀戮的人。
14 ௧௪ யெகோவாவே, நீர் அவர்களுக்குக் கொடுப்பதைக் கொடும்; அவர்களுக்கு விழுந்துபோகிற கர்ப்பத்தையும் பால் இல்லாத முலைகளையும் கொடும்.
耶和华啊,求你加给他们— 加什么呢? 要使他们胎坠乳干。
15 ௧௫ அவர்களுடைய பொல்லாப்பெல்லாம் கில்காலிலே நடக்கும்; அங்கே நான் அவர்களை வெறுத்தேன்; அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களை நான் என் சமுகத்தைவிட்டுத் துரத்துவேன்; இனி அவர்களை நேசிக்கமாட்டேன்; அவர்களுடைய அதிபதிகள் எல்லோரும் துரோகிகள்.
耶和华说:他们一切的恶事都在吉甲; 我在那里憎恶他们。 因他们所行的恶, 我必从我地上赶出他们去, 不再怜爱他们; 他们的首领都是悖逆的。
16 ௧௬ எப்பிராயீமர்கள் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அழிப்பேன்.
以法莲受责罚, 根本枯干,必不能结果, 即或生产, 我必杀他们所生的爱子。
17 ௧௭ அவர்கள் அவருக்குச் செவிகொடாமற்போனதினால் என் தேவன் அவர்களை வெறுத்துவிடுவார்; அவர்கள் அந்நிய மக்களுக்குள்ளே அலைந்து திரிவார்கள்.
我的 神必弃绝他们, 因为他们不听从他; 他们也必飘流在列国中。

< ஓசியா 9 >