< ஓசியா 8 >
1 ௧ உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.
Trubu na usta, i reci: kao orao ide na dom Gospodnji; jer prestupiše zavjet moj i otpadiše se od zakona mojega.
2 ௨ எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள்.
Izrailj æe vikati k meni: Bože moj; poznajemo te.
3 ௩ ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான்.
Izrailj je ostavio dobro; neprijatelj æe ga goniti.
4 ௪ அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு சிலைகளைச் செய்தார்கள்.
Postavljaju careve, ali ne od mene; podižu knezove, za koje ja ne znam; od srebra svojega i od zlata svojega grade sebi likove, da se istrijebe.
5 ௫ சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்?
Ostavilo te je tele tvoje, Samarijo; jarost se moja raspalila na njih; dokle se neæe moæi oèistiti?
6 ௬ அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும்.
Jer je i ono od Izrailja; naèinio ga je umjetnik, i nije Bog; tele æe Samarijsko otiæi u komade.
7 ௭ அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர்கள் அதை விழுங்குவார்கள்.
Jer siju vjetar, pa æe žeti oluju; stabljike neæe imati, klica neæe dati brašna; da bi i dala, proždrijeæe ga tuðinci.
8 ௮ இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
Proždrijeæe se Izrailj, biæe meðu narodima kao sud na kom nema miline.
9 ௯ அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
Jer otidoše k Asircu, divljemu magarcu, koji je sam za se; Jefrem naima ljubavnike.
10 ௧0 அவர்கள் அன்னியமக்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்திற்குள்ளே அகப்படுவார்கள்.
A što naimaše meðu narodima, ja æu ih sabrati; a veæ i okusiše malo radi bremena cara nad knezovima.
11 ௧௧ எப்பிராயீம் பாவம் செய்வதற்கேதுவாக பலிபீடங்களைப் பெருகச்செய்தார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவம்செய்வதற்கு ஏதுவாகும்.
Što umnoži Jefrem oltare da griješi, biæe mu oltari na grijeh.
12 ௧௨ என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்.
Napisah mu velike stvari u zakonu svom; ali mu se èine kao nešto tuðe.
13 ௧௩ எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள்.
Za žrtve, koje mi prinose, prinose meso, i jedu ga; Gospod ih ne prima; sada æe se opomenuti bezakonja njihova i pohodiæe grijehe njihove; oni æe se vratiti u Misir.
14 ௧௪ இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின தேவனை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா பாதுகாப்பான பட்டணங்களைப் பெருகச்செய்கிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரச்செய்வேன்; அது அவைகளின் கோவில்களைச் சுட்டெரிக்கும்.
Izrailj zaboravi tvorca svojega, i sagradi dvorove, i Juda umnoži tvrde gradove; ali æu pustiti oganj u gradove ovomu, i spaliæe dvorove onomu.