< ஓசியா 8 >

1 உன் வாயிலே எக்காளத்தை வை; அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, என் நியாயப்பிரமாணத்திற்கு விரோதமாகத் துரோகம்செய்ததினால், யெகோவாவுடைய வீட்டின்மேல் எதிரி கழுகைப்போல் பறந்துவருகிறான்.
你用口吹角吧! 敌人如鹰来攻打耶和华的家; 因为这民违背我的约, 干犯我的律法。
2 எங்கள் தேவனே, உம்மை அறிந்திருக்கிறோம் என்று சொல்லி இஸ்ரவேலர்கள் கூப்பிடுவார்கள்.
他们必呼叫我说: 我的 神啊,我们以色列认识你了。
3 ஆனாலும் இஸ்ரவேலர்கள் நன்மையை வெறுத்தார்கள்; எதிரி அவர்களைத் தொடருவான்.
以色列丢弃良善; 仇敌必追逼他。
4 அவர்கள் ராஜாக்களை ஏற்படுத்திக்கொண்டார்கள், ஆனாலும் என்னாலே அல்ல; அதிபதிகளை வைத்துக்கொண்டார்கள், ஆனாலும் நான் அறியேன்; அவர்கள் வேரறுப்புண்டு போகும்படித் தங்கள் வெள்ளியினாலும் தங்கள் பொன்னினாலும் தங்களுக்கு சிலைகளைச் செய்தார்கள்.
他们立君王,却不由我; 他们立首领,我却不认。 他们用金银为自己制造偶像, 以致被剪除。
5 சமாரியாவே, உன் கன்றுக்குட்டி உன்னை வெறுத்துவிடுகிறது; என் கோபம் அவர்கள்மேல் மூண்டது; எதுவரைக்கும் சுத்தமடையாமல் இருப்பார்கள்?
撒马利亚啊,耶和华已经丢弃你的牛犊; 我的怒气向拜牛犊的人发作。 他们到几时方能无罪呢?
6 அதுவும் இஸ்ரவேலருடைய செய்கையே; கொல்லன் அதைச் செய்தான், ஆதலால் அது தேவன் அல்லவே, சமாரியாவின் கன்றுக்குட்டி துண்டுதுண்டாகப்போகும்.
这牛犊出于以色列, 是匠人所造的,并不是神。 撒马利亚的牛犊必被打碎。
7 அவர்கள் காற்றை விதைத்து, சூறைக்காற்றை அறுப்பார்கள்; விளைச்சல் அவர்களுக்கு இல்லை; கதிர் மாவைக் கொடுக்கமாட்டாது; கொடுத்தாலும் அந்நியர்கள் அதை விழுங்குவார்கள்.
他们所种的是风,所收的是暴风; 所种的不成禾稼,就是发苗也不结实; 即便结实,外邦人必吞吃。
8 இஸ்ரவேலர்கள் விழுங்கப்படுகிறார்கள்; அவர்கள் இனி அந்நிய மக்களுக்குள்ளே விரும்பப்படாத பாத்திரத்தைப்போல் இருப்பார்கள்.
以色列被吞吃; 现今在列国中,好像人不喜悦的器皿。
9 அவர்கள் தனித்துத் திரிகிற காட்டுக்கழுதையைப்போல் அசீரியர்களிடம் போனார்கள்; எப்பிராயீமர்கள் நேசரைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டார்கள்.
他们投奔亚述,如同独行的野驴; 以法莲贿买朋党。
10 ௧0 அவர்கள் அன்னியமக்களைக் கூலிக்கு அமர்த்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்திற்குள்ளே அகப்படுவார்கள்.
他们虽在列邦中贿买人, 现在我却要聚集惩罚他们; 他们因君王和首领所加的重担日渐衰微。
11 ௧௧ எப்பிராயீம் பாவம் செய்வதற்கேதுவாக பலிபீடங்களைப் பெருகச்செய்தார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவம்செய்வதற்கு ஏதுவாகும்.
以法莲增添祭坛取罪; 因此,祭坛使他犯罪。
12 ௧௨ என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்.
我为他写了律法万条, 他却以为与他毫无关涉。
13 ௧௩ எனக்குச் செலுத்தும் பலிகளின் மாம்சத்தை அவர்கள் பலியிட்டு சாப்பிடுகிறார்கள்; யெகோவா அவர்கள்மேல் பிரியமாக இருக்கமாட்டார்; அவர்களுடைய அக்கிரமத்தை அவர் நினைத்து, அவர்களுடைய பாவத்தை விசாரிக்கும்போதோவெனில், அவர்கள் எகிப்திற்குத் திரும்பிப்போவார்கள்.
至于献给我的祭物, 他们自食其肉, 耶和华却不悦纳他们。 现在必记念他们的罪孽, 追讨他们的罪恶; 他们必归回埃及。
14 ௧௪ இஸ்ரவேல் தன்னை உண்டாக்கின தேவனை மறந்து கோவில்களைக் கட்டுகிறான்; யூதா பாதுகாப்பான பட்டணங்களைப் பெருகச்செய்கிறான்; ஆனாலும் நான் அதின் நகரங்களில் அக்கினியை வரச்செய்வேன்; அது அவைகளின் கோவில்களைச் சுட்டெரிக்கும்.
以色列忘记造他的主,建造宫殿; 犹大多造坚固城, 我却要降火焚烧他的城邑, 烧灭其中的宫殿。

< ஓசியா 8 >