< ஓசியா 5 >
1 ௧ ஆசாரியர்களே, இதைக் கேளுங்கள்; இஸ்ரவேல் மக்களே, கவனியுங்கள்; ராஜாவின் வீட்டாரே, செவிகொடுங்கள்; இந்த நியாயவிசாரிப்பு உங்கள்மேல் செல்லும்; நீங்கள் மிஸ்பாவில் கண்ணியும் தாபோரின்மேல் விரிக்கப்பட்ட வலையுமானீர்கள்.
“Iguai ũhoro ũyũ, inyuĩ athĩnjĩri-Ngai! Tegai matũ, inyuĩ andũ a Isiraeli! Thikĩrĩria, wee nyũmba ya ũthamaki! Nĩ inyuĩ mũgũtuĩrwo ciira ũyũ: Mũkoretwo mũrĩ mũtego kũu Mizipa, na mũrĩ wabu ya gũtegana yarĩtwo kũu Taboru.
2 ௨ நெறிதவறினவர்கள் அதிகமாக வதைசெய்கிறார்கள்; அவர்கள் எல்லோரையும் நான் தண்டிப்பேன்.
Aregi a watho nĩmarikĩire ũragani-inĩ. Niĩ nĩngamaherithia othe.
3 ௩ எப்பிராயீமை நான் அறிவேன், இஸ்ரவேல் எனக்கு மறைவானதல்ல; எப்பிராயீமே, இப்போது நீ வழிவிலகிப்போனாயே, இஸ்ரவேல் தீட்டுப்பட்டதே.
Niĩ nĩnjũũĩ maũndũ mothe ma Efiraimu; Isiraeli ndahithĩtwo kuuma kũrĩ niĩ. Wee Efiraimu, rĩu nĩũhũrĩte ũmaraya; Isiraeli nake nĩathũkĩte.
4 ௪ அவர்கள் தங்கள் தேவனிடத்திற்குத் திரும்புவதற்குத் தங்கள் செயல்களை சரிசெய்யமாட்டார்கள், வேசித்தன ஆவி அவர்கள் உள்ளத்தில் இருக்கிறது; யெகோவாவை அறியார்கள்.
“Ciĩko ciao itingĩmetĩkĩria gũcookerera Ngai wao. Roho wa ũmaraya ũrĩ ngoro-inĩ ciao, nao makaaga kũmenya Jehova.
5 ௫ இஸ்ரவேலின் அகந்தை அவர்களுடைய முகத்திற்கு முன்பாகச் சாட்சியிடுகிறது; ஆகையால் இஸ்ரவேலும் எப்பிராயீமும் தங்கள் அக்கிரமத்தினால் இடறி விழுவார்கள்; அவர்களோடே யூதாவும் இடறி விழுவான்.
Mwĩtĩĩo wa Isiraeli nĩũrutaga ũira wa kũmookĩrĩra; andũ a Isiraeli na Efiraimu mahĩngagwo nĩ mehia mao; Juda o nake akahĩngwo hamwe nao.
6 ௬ அவர்கள் யெகோவாவை தேடும்படி தங்கள் ஆடுகளோடும் தங்கள் மாடுகளோடும் போவார்கள்; அவரைக் காணமாட்டார்கள்; அவர் அவர்களை விட்டு விலகினார்.
Hĩndĩ ĩrĩa magaathiĩ na ndũũru ciao cia mbũri na cia ngʼombe kũrongooria Jehova-rĩ, matikamuona; we nĩamehereire.
7 ௭ யெகோவாவுக்கு விரோதமாக துரோகம்செய்தார்கள்; அந்நியபிள்ளைகளைப் பெற்றார்கள்; இப்போதும் ஒரு மாதத்திற்குள்ளாக அவர்கள் தங்கள் பங்குகளோடே அழிக்கப்படுவார்கள்.
Nĩmagĩte kwĩhokeka harĩ Jehova; nao magaciara ciana itarĩ na ũngai. Na rĩrĩ, ciathĩ ciao cia Karũgamo ka Mweri nĩikaamameria, o hamwe na mĩgũnda yao.
8 ௮ கிபியாவிலே எக்காளத்தையும், ராமாவிலே பூரிகையையும் ஊதுங்கள்; பெத்தாவேனிலே கதறுங்கள்; பென்யமீனே உன்னைப் பின்தொடருகிறார்கள்.
“Huhai karumbeta kũu Gibea, na mũhuhe coro kũu Rama. Muuge mbu ya gwĩtana mbaara kũu Bethi-Aveni; wee Benjamini, wĩhũũge.
9 ௯ தண்டிப்பின் நாளிலே எப்பிராயீம் பாழாவான்; நிச்சயமாக வரப்போகிறதை இஸ்ரவேலின் கோத்திரங்களுக்குள்ளே அறிவிக்கிறேன்.
Efiraimu nĩgũgakira ihooru mũthenya ũcio wa ituĩro. Gatagatĩ-inĩ ka mĩhĩrĩga ya Isiraeli-rĩ, niĩ ngwanĩrĩra ũrĩa kũrĩ.
10 ௧0 யூதாவின் பிரபுக்கள் எல்லைகளை ஒதுக்குகிறவர்களுக்கு ஒப்பானார்கள்; அவர்கள்மேல் என் கடுங்கோபத்தைத் தண்ணீரைப்போல ஊற்றுவேன்.
Atongoria a Juda mahaana andũ arĩa meheragia mahiga ma mĩhaka. Nĩngamaitĩrĩria mangʼũrĩ makwa, taarĩ kĩguũ kĩa maaĩ.
11 ௧௧ எப்பிராயீம் தகாத கற்பனையை மனதாரப் பின்பற்றிப்போனபடியால் அவன் ஒடுங்கி, நியாயவிசாரணையில் நொறுக்கப்பட்டுப்போகிறான்.
Efiraimu nĩmũhinyĩrĩrie, akarangĩrĩrio ituĩro-inĩ rĩa ciira, nĩ ũndũ wa kwenda kũrũmĩrĩra mĩhianano.
12 ௧௨ நான் எப்பிராயீமுக்குப் பூச்சி அரிப்பைப்போலவும், யூதாவின் வீட்டிற்கு உளுப்பைப்போலவும் இருப்பேன்.
Niĩ haana memenyi kũrĩ Efiraimu, na ngahaana ta ũbuthu kũrĩ andũ a Juda.
13 ௧௩ எப்பிராயீம் தன் வியாதியையும், யூதா தன் காயத்தையும் கண்டபோது, எப்பிராயீம் அசீரியனிடம் போய் யாரேப் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பினான்; ஆனாலும் உங்களைக் குணமாக்கவும் உங்களில் இருக்கிற காயத்தை ஆற்றவும் அவனால் முடியாமற்போனது.
“Rĩrĩa Efiraimu oonire ndwari yake, nake Juda akĩona ironda ciake-rĩ, hĩndĩ ĩyo Efiraimu agĩthiĩ kũrĩ Ashuri, na agĩtũmana kũrĩ mũthamaki ũcio mũnene nĩguo amũteithie. Nowe ndangĩhota gũkũhonia, o na kana ahonie ironda ciaku.
14 ௧௪ நான் எப்பிராயீமுக்குச் சிங்கம்போலவும், யூதாவின் வம்சத்தாருக்குப் பாலசிங்கம்போலவும் இருப்பேன்; நான் நானே காயப்படுத்திவிட்டுப் போய்விடுவேன்; தப்புவிப்பார் இல்லாமல் எடுத்துக்கொண்டு போவேன்.
Niĩ ngaatuĩka ta mũrũũthi kũrĩ Efiraimu, nduĩke ta mũrũũthi ũrĩ hinya kũrĩ Juda. Ngaamatambuuranga, njooke ndĩthiĩre; ngaamataha, na gũtirĩ mũndũ ũkaamahonokia.
15 ௧௫ அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள்.
Ningĩ niĩ nĩngacooka gwakwa, nginya rĩrĩa magetĩkĩra mahĩtia mao. Nao nĩmakarongooria ũthiũ wakwa; nao mona mathĩĩna nĩmakanongoria na kĩo.”