< ஓசியா 4 >

1 இஸ்ரவேல் மக்களே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்; தேசத்து மக்களோடு யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அதேனென்றால் தேசத்திலே உண்மையும், இரக்கமும், தேவனைப்பற்றிய அறிவும் இல்லை.
Слышите слово Господне, сынове Израилевы, яко суд Господеви к живущым на земли: зане несть истины, ни милости, ни ведения Божия на земли:
2 பொய் சத்தியம் செய்து, பொய்சொல்லி, கொலைசெய்து, திருடி, விபசாரம்செய்து, மீறிப்போகிறார்கள்; இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகிறது.
клятва и лжа, и убийство и татьба и любодеяние разлияся по земли, и кровь с кровьми мешают.
3 இதினிமித்தம் தேசம் புலம்பும்; அதில் குடியிருக்கிற அனைவரோடுங்கூட மிருகஜீவன்களும் ஆகாயத்துப் பறவைகளும் துவண்டுபோகும்; கடலின் உயிரினங்களும் வாரிக்கொள்ளப்படும்.
Сего ради восплачется земля и умалится со всеми вселившимися на ней, со зверьми польскими и с гады земными и со птицами небесными, и рыбы морския оскудеют:
4 ஆகிலும் ஒருவனும் நியாயத்தைக் காண்பிக்கவும், அவர்களைக் கடிந்துகொள்ளவும் முடியாது; உன் மக்கள் ஆசாரியனோடே வழக்காடுகிறவர்களைப்போல இருக்கிறார்கள்.
яко да никтоже не прится, ни обличается никтоже: людие же мои аки пререкаемый жрец,
5 ஆகையால் நீ பகலிலே இடறிவிழுவாய்; இரவிலே உன்னோடேகூடத் தீர்க்கதரிசியும் இடறிவிழுவான்; நான் உன் தாயை அழிப்பேன்.
и изнеможет во днех, и изнеможет пророк с тобою: нощи уподобих матерь твою.
6 என் மக்கள் அறிவில்லாததினால் அழிகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாக இல்லாமலிருக்க நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன்.
Уподобишася людие Мои аки не имуще умения: яко ты умение отвергл еси, отвергу и Аз тебе, еже не жречествовати Мне, и забыл еси закон Бога своего, забуду и Аз чада твоя.
7 அவர்கள் எவ்வளவாகப் பெருகினார்களோ, அவ்வளவாக எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்; அவர்களுடைய மகிமையை வெட்கமாக மாறச்செய்வேன்.
По множеству их тако согрешиша Мне: славу их в безчестие положу.
8 அவர்கள் என் மக்களின் பாவத்தைச் சாப்பிட்டு, அவர்களுடைய அக்கிரமத்தின்மேல் பசிதாகமாக இருக்கிறார்கள்.
Грехи людий Моих снедят и в неправдах их возмут душы их.
9 ஆதலால் மக்களுக்கு எப்படியோ ஆசாரியனுக்கும் அப்படியே; அவர்கள் வழிகளின்படி நான் அவர்களை விசாரித்து, அவர்களுடைய செயல்களின்படி அவர்களுக்குப் பலனளிப்பேன்.
И будет якоже людие, тако и жрец: и отмщу на них пути их, и умышления их воздам им.
10 ௧0 அவர்கள் யெகோவாவை மதிக்காமல் இருக்கிறதினால் அவர்கள் சாப்பிட்டாலும் திருப்தியடையாமல் இருப்பார்கள்; அவர்கள் விபசாரம் செய்தாலும் பெருகாமல் இருப்பார்கள்.
И будут ясти и не насытятся: соблудиша и не исправятся: понеже Господа оставиша еже снабдети.
11 ௧௧ வேசித்தனமும் திராட்சைரசமும் மதுபானமும் இருதயத்தை மயக்கும்.
Блуд и вино и пиянство прият сердце людий Моих.
12 ௧௨ என் மக்கள் மரக்கட்டையிடம் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கைத்தடி அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்று இருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பி அலையச்செய்தது; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்திராமல் விபச்சாரவழியில் போனார்கள்.
В знамениих вопрошаху и в жезлех своих поведаху тем: духом блужения прельстишася и соблудиша от Бога своего:
13 ௧௩ அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்; இதனால் உங்களுடைய மகள்கள் வேசித்தனமும், உங்கள் மருமக்கள்கள் விபசாரமும் செய்கிறார்கள்.
на версех гор кадяху и на холмех жряху под дубом и под елию и под древом ветвенным, яко добр кров: сего ради соблудят дщери вашя, и невесты вашя возлюбодеют.
14 ௧௪ உங்கள் மகள்கள் வேசித்தனம் செய்கிறதினாலும், உங்கள் மருமக்கள்கள் விபசாரம் செய்கிறதினாலும், நான் அவர்களை தண்டிக்காமல் இருப்பேனோ? அவர்கள் விலகி விபச்சாரிகளோடே கூடப்போய் தாசிகளோடே பலியிடுகிறார்கள்; உணர்வில்லாத மக்கள் அதினால் அகப்பட்டு விழுவார்கள்.
И не присещу на дщери вашя, егда соблудят, и на невесты вашя, егда возлюбодеют: яко и тии со блудницами смесишася и со блудниками требы жряху, и людие смыслящии со блудницею сплетахуся.
15 ௧௫ இஸ்ரவேலே, நீ என்னைவிட்டுப் போனாலும், யூதாவாகிலும் அந்தப் பாவத்திற்கு உட்படாதிருப்பதாக; கில்காலுக்கு வராமலும், பெத்தாவேனுக்குப் போகாமலும், யெகோவாவுடைய ஜீவன்மேல் என்று ஆணையிடாமலும் இருப்பீர்களாக.
Ты же, Израилю, не не разумевай, и Иудо: не входите в Галгалу и не восходите в Дом Онов, и не кленитеся Господем живым.
16 ௧௬ இஸ்ரவேல் அடங்காத கிடாரியைப்போல அடங்காதிருக்கிறது; இப்போது யெகோவா அவர்களை விசாலமான வெளியிலே ஆட்டுக்குட்டியைப்போல் மேய்ந்து அலையச் செய்வார்.
Зане якоже юница стрекалом стречема разсвирепе Израиль: ныне упасет я Господь, яко агнца на пространстве.
17 ௧௭ எப்பிராயீம் சிலைகளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
Причастник кумиром Ефрем положи себе соблазны,
18 ௧௮ அவர்களுடைய மதுபானம் புளித்தது, அவர்கள் எப்போதும் வழிவிலகிப்போகிறார்கள்; அவர்களுடைய அதிபதிகள் தாருங்களென்று வெட்கமானதை நாடுகிறார்கள்.
избра Хананеов: блудяще возблудиша, возлюбиша безчестие от хрепетания своего.
19 ௧௯ காற்று அவர்களைத் தன் இறக்கைகளில் இறுகப்பிடிக்கும்; அவர்கள் தங்கள் பலிகளால் வெட்கப்படுவார்கள்.
Вихр духа возсвищет в крилех своих, и посрамятся от требищ своих.

< ஓசியா 4 >