< ஓசியா 3 >
1 ௧ பின்பு யெகோவா என்னை நோக்கி: அந்நிய தெய்வங்களை மதித்து, திராட்சைரசமுள்ள பாத்திரங்களை விரும்புகிறவர்களான இஸ்ரவேல் மக்கள்மேல் யெகோவா வைத்திருக்கிற அன்பிற்கு ஒப்பாக நீ இன்னும் போய், தன் நேசரால் நேசிக்கப்பட்டவளும், விபசாரியுமான ஒரு பெண்ணை நேசித்துக்கொள் என்று சொன்னார்.
Potom mi Jahve reče: “Idi opet, ljubi ženu koja drugog ljubi i čini preljub, kao što Jahve ljubi djecu Izraelovu dok se oni k drugim bogovima okreću i žude za kolačima od grožđa.”
2 ௨ அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுகளுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் வாங்கி,
Ja je tad kupih za petnaest srebrnika, za homer i letek ječma,
3 ௩ அவளை நோக்கி: நீ விபசாரம் செய்யாமலும், ஒருவனையும் சேராமலும் அநேகநாட்கள் எனக்காகக் காத்திரு; உனக்காக நானும் காத்திருப்பேன் என்றேன்.
i rekoh joj: “Za mnogo dana ostat ćeš mi povučena, nećeš se odavati bludu ni podavati nikojem čovjeku, a ni ja neću k tebi prilaziti.”
4 ௪ இஸ்ரவேல் மக்கள் அநேகநாட்களாக ராஜாவும், அதிபதியும் இல்லாமலும், பலியும், சிலையும் இல்லாமலும், ஏபோத்தும், தேராபீம் இல்லாமலும் இருப்பார்கள்.
Jer mnogo će dana sinovi Izraelovi ostati bez kralja i bez kneza, bez žrtve i bez stupa, bez oplećka i bez kumira.
5 ௫ பின்பு இஸ்ரவேல் மக்கள் திரும்பி, தங்கள் தேவனாகிய யெகோவாவையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசி நாட்களில் யெகோவாவையும், அவருடைய தயவையும் நாடி நடுக்கத்துடன் வருவார்கள்.
Poslije toga, sinovi će se Izraelovi vratiti; tražit će Jahvu, Boga svoga, i Davida, svoga kralja; sa strahom će pristupiti k Jahvi i k njegovim dobrima, na kraju dana.