< ஓசியா 14 >
1 ௧ இஸ்ரவேலே, உன் தேவனாகிய யெகோவாவிடத்தில் திரும்பு; நீ உன் அக்கிரமத்தினால் விழுந்தாய்.
Israel, san wʼakyi kɔ Awurade wo Nyankopɔn nkyɛn. Wʼasehwe fi wo bɔne!
2 ௨ வார்த்தைகளைக்கொண்டு யெகோவாவிடத்தில் திரும்புங்கள்; அவரை நோக்கி: தேவரீர் எல்லா அக்கிரமத்தையும் நீக்கி, எங்களைத் தயவாக அங்கீகரித்தருளும்; அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் பலிகளைச் செலுத்துவோம்.
Fa wo nsɛm a wowɔ san kɔ Awurade nkyɛn. Ka kyerɛ no se, “Fa yɛn bɔne nyinaa kyɛ yɛn, na fa ahummɔbɔ gye yɛn, na yɛatumi ayi wo ayɛ.
3 ௩ அசீரியா எங்களைக் காப்பாற்றுவதில்லை; நாங்கள் குதிரைகளின்மேல் ஏறமாட்டோம்; எங்கள் கைகளின் செயலைப்பார்த்து: நீங்கள் எங்களுடைய தேவர்கள் என்று இனிச் சொல்லமாட்டோம்; திக்கற்றவன் உம்மிடத்தில் இரக்கம்பெறுகிறான் என்று சொல்லுங்கள்.
Asiria rentumi nnye yɛn; yɛrentena akofo apɔnkɔ so. Yɛrenka bio da se, ‘Yɛn anyame’ nkyerɛ nea yɛn ara de yɛn nsa ayɛ, na wo mu na ayisaa nya mmɔborɔhunu.”
4 ௪ நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்களை மனப்பூர்வமாகச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கினது.
“Mɛsa wɔn asoɔden yare. Mefi me koma mu adɔ wɔn, efisɛ mʼabufuw nni wɔn so bio.
5 ௫ நான் இஸ்ரவேலுக்குப் பனியைப்போல் இருப்பேன்; அவன் லீலி மலரைப்போல் மலருவான்; லீபனோனைப்போல் வேரூன்றி நிற்பான்.
Mɛyɛ sɛ obosu ama Israel. Ɔbɛfefɛw ayɛ frɔmfrɔm te sɛ sukooko. Te sɛ Lebanon sida no, ɔde ne ntin betim fam;
6 ௬ அவனுடைய கிளைகள் ஓங்கிப் படரும், அவனுடைய அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப்போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப்போலவும் இருக்கும்.
ne mman bɛdennan. Nʼahoɔfɛ bɛyɛ sɛ ngodua, na ne hua ayɛ sɛ Lebanon sida.
7 ௭ அவனுடைய நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப்போலச் செழித்து, திராட்சைச்செடிகளைப்போலப் படருவார்கள்; அவனுடைய வாசனை லீபனோனுடைய திராட்சைரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.
Nnipa bɛtena ne nwini ase bio. Obenyin ayɛ frɔmfrɔm te sɛ aburow. Ɔbɛfefɛw ayɛ frɔmfrɔm te sɛ bobe, na ne din a ahyeta bɛyɛ sɛ nsa a efi Lebanon.
8 ௮ இனி எனக்கும் சிலைகளுக்கும் என்ன என்று எப்பிராயீம் சொல்வான்; நான் அவனுக்குச் செவிகொடுத்து, அவன்மேல் நோக்கமாயிருந்தேன்; நான் பச்சையான தேவதாரு மரத்தைப்போல் இருக்கிறேன்; என்னாலே உன்னுடைய கனி உண்டானது என்று எப்பிராயீம் சொல்வான்.
Efraim dɛn na me ne ahoni wɔ yɛ bio? Megye no so na mʼani aku ne ho. Mete sɛ dua a nʼahaban mpo; sɛ wobɛsow aba a, egyina me so.”
9 ௯ இவைகளை உணரத்தக்க ஞானமுள்ளவன் யார்? இவைகளை ஏற்றுக்கொள்ளத்தக்க புத்தியுள்ளவன் யார்? யெகோவாவுடைய வழிகள் செம்மையானவைகள், நீதிமான்கள் அவைகளில் நடப்பார்கள்; கலகக்காரர்களோவென்றால் அவைகளில் இடறிவிழுவார்கள்.
Hena ne onyansafo? Obehu eyinom mu. Hena na ɔwɔ nhumu? Ɔbɛte eyinom ase. Awurade akwan teɛ. Atreneefo nantew so, nanso asoɔdenfo hintiw wɔ mu.