< ஓசியா 12 >
1 ௧ எப்பிராயீம் காற்றை மேய்ந்து, கொண்டற்காற்றைப் பின்தொடருகிறான்; அவன் நாள்தோறும் பொய்யையும் கேட்டையும் பெருக்கச்செய்து, அசீரியருடன் உடன்படிக்கை செய்கிறான்; எகிப்திற்கு எண்ணெய் கொண்டுபோகப்படுகிறது.
Efraim de mframa ayɛ aduan; odi apuei mframa akyi daa na odi atoro yɛ akakabensɛm bebree. Ɔne Asiria yɛ apam na ɔde ngo kɔ Misraim.
2 ௨ யூதாவோடும் யெகோவாவுக்கு வழக்கு இருக்கிறது; அவர் யாக்கோபை அவன் வழிகளுக்கு ஏற்றபடி விசாரிக்கப்போகிறார்; அவன் செயல்களுக்குத்தக்கதாக அவனுக்கு நீதியைச் சரிக்கட்டுவார்.
Awurade wɔ sobo de bɔ Yuda; ɔbɛtwe Yakob aso wɔ nʼakwan ho na watua no ne nneyɛe so ka.
3 ௩ அவன் தாயின் கர்ப்பத்தில் தன் சகோதரனுடைய குதிகாலைப் பிடித்தான்; தன் பெலத்தினால் தேவனோடே போராடினான்.
Ɔyafunu mu na osoo ne nua nantin; onyinii no, ɔne Onyankopɔn peperee so.
4 ௪ அவன் தூதனுடன் போராடி மேற்கொண்டான், அழுது அவரை நோக்கிக் கெஞ்சினான்; பெத்தேலிலே அவர் அவனைக் கண்டு சந்தித்து, அவ்விடத்திலும் நம்மோடே பேசினார்.
Ɔne ɔbɔfo tentam dii ne so nkonim; ɔde nusu srɛɛ ne nkyɛn adom. Ohuu no wɔ Bet-El ne no kasaa wɔ hɔ.
5 ௫ கர்த்தராகிய அவர் சேனைகளின் தேவன்; யேகோவா என்பது அவருடைய நிலையான நாமம்.
Asafo Awurade Nyankopɔn, Awurade ne ne din a ahyeta!
6 ௬ இப்போதும் நீ உன் தேவனிடத்தில் திரும்பு; தயவையும் நியாயத்தையும் கைக்கொண்டு, இடைவிடாமல் உன் தேவனை நம்பிக்கொண்டிரு.
Ɛsɛ sɛ wosan kɔ wo Nyankopɔn nkyɛn. Tena ɔdɔ ne trenee mu, na twɛn wo Nyankopɔn daa.
7 ௭ அவன் வியாபாரி, கள்ளத்தராசு அவன் கையில் இருக்கிறது; அநியாயம்செய்ய விரும்புகிறான்.
Oguadini de asisi nsania yɛ nʼadwuma; nʼani gye asisi ho.
8 ௮ எப்பிராயீம்: நான் செல்வந்தனானேன்; நான் பொருளைச் சம்பாதித்தேன்; நான் முயற்சிசெய்து தேடின எல்லாவற்றிலும் பாவமாகிய அக்கிரமம் என்னிடத்தில் கண்டுபிடிக்கப்படுவதில்லையென்று சொல்லுகிறான்.
Efraim hoahoa ne ho sɛ, “Meyɛ ɔdefo; manya me ho. Mʼahonya nyinaa mu wɔrenhu amumɔyɛ biara wɔ me ho.”
9 ௯ உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்தது முதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான், பண்டிகை நாட்களில் செய்யப்படுகிறதுபோல், மீண்டும் உன்னைக் கூடாரங்களில் தங்கியிருக்கச்செய்வேன்.
“Mene Awurade wo Nyankopɔn, a miyii wo fii Misraim. Mɛma woakɔtena ntamadan mu bio sɛnea na woyɛ wɔ wʼaponto afahyɛ nna mu no.
10 ௧0 அப்படியே தீர்க்கதரிசிகளுடன் சொன்னேன்; நான் அநேகம் தரிசனங்களை கொடுத்தேன்; தீர்க்கதரிசிகளைக் கொண்டு உவமைகளால் பேசினேன்.
Mekasa kyerɛɛ adiyifo, memaa wɔn anisoadehu bebree na mefaa wɔn so kaa mmebusɛm.”
11 ௧௧ கீலேயாத் அக்கிரமத்தின் இடமோ? ஆம், அவர்கள் பொய்யரானார்கள்; கில்காலிலே காளைகளைப் பலியிடுகிறார்கள்; அவர்களுடைய பீடங்கள் வயல்வரப்புகளில் இருக்கிற கற்குவியல்களைப்போல் இருக்கிறது.
Gilead yɛ otirimɔdenfo ana? Emu nnipa no yɛ ahuhufo! Wɔde anantwi bɔ afɔre wɔ Gilgal ana? Wɔn afɔremuka bɛyɛ te sɛ abo a wɔahɔre no siw wɔ asase a wɔafuntum so.
12 ௧௨ யாக்கோபு சீரியா தேசத்திற்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக வேலைசெய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
Yakob guan kɔɔ Aramfo asase so; Israel som de nyaa ɔyere, ɔhwɛɛ nguan de tuaa ti nsa.
13 ௧௩ யெகோவா ஒரு தீர்க்கதரிசியைக் கொண்டு இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்தார்; தீர்க்கதரிசியினால் காக்கப்பட்டான்.
Awurade nam odiyifo so yii Israel fii Misraim, ɔnam odiyifo so hwɛɛ no.
14 ௧௪ எப்பிராயீமோ அவரை மிகவும் கோபப்படுத்தினான்; ஆகையால் அவனுடைய ஆண்டவர் அவனுடைய இரத்தப்பழிகளை அவன்மேல் சுமத்தி, அவன் செய்த இகழ்ச்சியை அவன்மேல் திருப்புவார்.
Nanso Efraim ahyɛ no abufuw yayaayaw; nʼAwurade bɛma ne mogyahwiegu ho afɔdi ada no so na obetua nʼanimtiaabu no so ka.