< ஓசியா 10 >

1 இஸ்ரவேல் பலனற்ற திராட்சைச்செடி, அது தனக்குத்தானே பழங்களைக் கொடுக்கிறது; அவன் தன் பழங்களின் பெருக்கத்திற்குச் சரியாகப் பலிபீடங்களை அதிகமாக்குகிறான்; தங்கள் தேசத்தின் செழிப்பிற்குச் சரியாகச் சிறப்பான சிலைகளைச் செய்கிறார்கள்.
גפן בוקק ישראל פרי ישוה לו כרב לפריו הרבה למזבחות כטוב לארצו היטיבו מצבות׃
2 ஏமாற்றுகிற இருதயம் அவர்களுக்கு இருக்கிறது; இப்போதும் குற்றம் சுமத்தப்படுவார்கள்; அவர்களுடைய பலிபீடங்களை இடித்து, அவர்களுடைய சிலைகளை நாசமாக்குவார்.
חלק לבם עתה יאשמו הוא יערף מזבחותם ישדד מצבותם׃
3 நாம் யெகோவாவுக்குப் பயப்படாமற்போனதினால் நமக்கு ராஜா இல்லை; ராஜா இருந்தாலும் நமக்காக என்ன செய்வான் என்று இனிச் சொல்லுவார்கள்.
כי עתה יאמרו אין מלך לנו כי לא יראנו את יהוה והמלך מה יעשה לנו׃
4 பொய்யாகச் சத்தியம் செய்கிற வார்த்தைகளைச் சொல்லி, உடன்படிக்கை செய்துகொண்டார்கள்; ஆகையால் வயல்வெளியின் உழவுசால்களில் விஷச் செடிகளைப்போல நியாயத்தீர்ப்பு முளைக்கும்.
דברו דברים אלות שוא כרת ברית ופרח כראש משפט על תלמי שדי׃
5 சமாரியாவின் குடிமக்கள் பெத்தாவேனிலுள்ள கன்றுக்குட்டியினிமித்தம் பயம் அடைவார்கள்; அதற்காகக் களிகூர்ந்த அதின் மக்களும், அதின் பூசாரிகளும் அதின் மகிமை அதைவிட்டு நீங்கிப்போயிற்றென்று அதற்காகத் துக்கம்கொண்டாடுவார்கள்.
לעגלות בית און יגורו שכן שמרון כי אבל עליו עמו וכמריו עליו יגילו על כבודו כי גלה ממנו׃
6 அதுவும் அசீரியாவிலே யாரேப் ராஜாவிற்குக் காணிக்கையாகக் கொண்டுபோகப்படும்; எப்பிராயீம் அவமானமடைவான்; இஸ்ரவேல் தன் மர விக்கிரங்களினால்வெட்கப்படுவான்.
גם אותו לאשור יובל מנחה למלך ירב בשנה אפרים יקח ויבוש ישראל מעצתו׃
7 சமாரியாவின் ராஜா தண்ணீரின்மேல் இருக்கிற நுரையைப்போல் அழிந்துபோவான்.
נדמה שמרון מלכה כקצף על פני מים׃
8 இஸ்ரவேலுடைய பாவமாகிய ஆபேனின் மேடைகள் அழிக்கப்படும்; முட்செடிகளும் முட்பூண்டுகளும் அவர்கள் பலிபீடங்களின்மேல் முளைக்கும்; மலைகளைப்பார்த்து எங்களை மூடுங்கள் என்றும், குன்றுகளைப்பார்த்து எங்கள்மேல் விழுங்கள் என்றும் சொல்வார்கள்.
ונשמדו במות און חטאת ישראל קוץ ודרדר יעלה על מזבחותם ואמרו להרים כסונו ולגבעות נפלו עלינו׃
9 இஸ்ரவேலே, நீ கிபியாவின் நாட்களிலிருந்து பாவம்செய்துவந்தாய்; கிபியாவிலே அக்கிமக்காரர்கள்மேல் வந்த போர் தங்களைக் நெருங்குவதில்லையென்று அந்த நிலையிலே நிற்கிறார்கள்.
מימי הגבעה חטאת ישראל שם עמדו לא תשיגם בגבעה מלחמה על בני עלוה׃
10 ௧0 நான் அவர்களை தண்டிக்க விரும்புகிறேன்; அவர்கள் செய்த இரண்டுவித பாவங்களினாலே கட்டப்படும்போது, மக்கள் அவர்களுக்கு விரோதமாகக் கூடுவார்கள்.
באותי ואסרם ואספו עליהם עמים באסרם לשתי עינתם׃
11 ௧௧ எப்பிராயீம் நன்றாகப் பழக்கப்பட்டுப் போரடிக்க விரும்புகிற இளம்கன்றாக இருக்கிறான்; ஆனாலும் நான் அவனுடைய அழகான கழுத்தின்மேல் பாரத்தை வைப்பேன்; எப்பிராயீமை ஏர் பூட்டி ஓட்டுவேன்; யூதா உழுவான், யாக்கோபு அவனுக்கு வயலை சமப்படுத்துவான்.
ואפרים עגלה מלמדה אהבתי לדוש ואני עברתי על טוב צוארה ארכיב אפרים יחרוש יהודה ישדד לו יעקב׃
12 ௧௨ நீங்கள் நீதிக்கென்று விதைவிதையுங்கள்; தயவுக்கு ஏற்றபடி அறுப்பு அறுங்கள்; உங்களுடைய தரிசுநிலத்தைப் பண்படுத்துங்கள்; யெகோவா வந்து உங்கள்மேல் நீதியைப் பொழியச்செய்யும்வரை, அவரைத் தேடக் காலமாயிருக்கிறது.
זרעו לכם לצדקה קצרו לפי חסד נירו לכם ניר ועת לדרוש את יהוה עד יבוא וירה צדק לכם׃
13 ௧௩ அநியாயத்தை உழுதீர்கள், அநீதியை அறுத்தீர்கள்; பொய்யின் கனிகளைச் சாப்பிட்டீர்கள்; உங்கள் வழியையும் உங்கள் திறமைசாலிகளின் கூட்டத்தையும் நம்பினீர்கள்.
חרשתם רשע עולתה קצרתם אכלתם פרי כחש כי בטחת בדרכך ברב גבוריך׃
14 ௧௪ ஆகையால் உங்கள் மக்களுக்குள் குழப்பம் எழும்பும்; பிள்ளைகளின்மேல் தாய் மோதியடிக்கப்பட்ட யுத்தநாளிலே பெத்தார்பேலைச் சல்மான் அழித்ததுபோல, உங்கள் எல்லா பாதுகாப்புகளும் அழிக்கப்படும்.
וקאם שאון בעמך וכל מבצריך יושד כשד שלמן בית ארבאל ביום מלחמה אם על בנים רטשה׃
15 ௧௫ உங்கள் கொடிய பொல்லாப்பினால் பெத்தேல் இப்படிப்பட்டதை உங்களுக்குச் செய்யும்; அதிகாலமே இஸ்ரவேலின் ராஜா முற்றிலும் அழிக்கப்படுவான்.
ככה עשה לכם בית אל מפני רעת רעתכם בשחר נדמה נדמה מלך ישראל׃

< ஓசியா 10 >