< எபிரேயர் 9 >
1 ௧ அன்றியும், முதலாம் உடன்படிக்கையானது ஆராதனைக்குரிய முறைமைகளும் பூமிக்குரிய பரிசுத்த இடமும் உடையதாக இருந்தது.
ସ ପ୍ରଥମୋ ନିଯମ ଆରାଧନାଯା ୱିୱିଧରୀତିଭିରୈହିକପୱିତ୍ରସ୍ଥାନେନ ଚ ୱିଶିଷ୍ଟ ଆସୀତ୍|
2 ௨ எப்படியென்றால், ஒரு கூடாரம் உண்டாக்கப்பட்டிருந்தது; அதின் முந்தின பாகத்தில் குத்துவிளக்கும், மேஜையும், தேவ சமுகத்து அப்பங்களும் இருந்தன; அது பரிசுத்த இடம் எனப்படும்.
ଯତୋ ଦୂଷ୍ୟମେକଂ ନିରମୀଯତ ତସ୍ୟ ପ୍ରଥମକୋଷ୍ଠସ୍ୟ ନାମ ପୱିତ୍ରସ୍ଥାନମିତ୍ୟାସୀତ୍ ତତ୍ର ଦୀପୱୃକ୍ଷୋ ଭୋଜନାସନଂ ଦର୍ଶନୀଯପୂପାନାଂ ଶ୍ରେଣୀ ଚାସୀତ୍|
3 ௩ இரண்டாம் திரைக்கு உள்ளே மகா பரிசுத்த இடம் என்று சொல்லப்பட்ட கூடாரம் இருந்தது.
ତତ୍ପଶ୍ଚାଦ୍ ଦ୍ୱିତୀଯାଯାସ୍ତିରଷ୍କରିଣ୍ୟା ଅଭ୍ୟନ୍ତରେ ଽତିପୱିତ୍ରସ୍ଥାନମିତିନାମକଂ କୋଷ୍ଠମାସୀତ୍,
4 ௪ அதிலே தங்கத்தால் செய்த தூபகலசமும், முழுவதும் தங்கத்தகடு பதிக்கப்பட்ட உடன்படிக்கைப் பெட்டியும் இருந்தன; அந்தப் பெட்டியிலே மன்னா வைக்கப்பட்ட தங்கப்பாத்திரமும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
ତତ୍ର ଚ ସୁୱର୍ଣମଯୋ ଧୂପାଧାରଃ ପରିତଃ ସୁୱର୍ଣମଣ୍ଡିତା ନିଯମମଞ୍ଜୂଷା ଚାସୀତ୍ ତନ୍ମଧ୍ୟେ ମାନ୍ନାଯାଃ ସୁୱର୍ଣଘଟୋ ହାରୋଣସ୍ୟ ମଞ୍ଜରିତଦଣ୍ଡସ୍ତକ୍ଷିତୌ ନିଯମପ୍ରସ୍ତରୌ,
5 ௫ அதற்கு மேலே மகிமையுள்ள கேருபீன்கள் வைக்கப்பட்டுக் கிருபாசனத்தை நிழலிட்டிருந்தன; இவைகளைப்பற்றி விளக்கிச்சொல்ல இப்பொழுது நேரமில்லை.
ତଦୁପରି ଚ କରୁଣାସନେ ଛାଯାକାରିଣୌ ତେଜୋମଯୌ କିରୂବାୱାସ୍ତାମ୍, ଏତେଷାଂ ୱିଶେଷୱୃତ୍ତାନ୍ତକଥନାଯ ନାଯଂ ସମଯଃ|
6 ௬ இவைகள் இவ்விதமாக ஆயத்தமாக்கப்பட்டிருக்க, ஆசாரியர்கள் ஆராதனை முறைமைகளை நிறைவேற்ற முதலாம் கூடாரத்திற்குள் எப்பொழுதும் பிரவேசிப்பார்கள்.
ଏତେଷ୍ୱୀଦୃକ୍ ନିର୍ମ୍ମିତେଷୁ ଯାଜକା ଈଶ୍ୱରସେୱାମ୍ ଅନୁତିଷ୍ଠନତୋ ଦୂଷ୍ୟସ୍ୟ ପ୍ରଥମକୋଷ୍ଠଂ ନିତ୍ୟଂ ପ୍ରୱିଶନ୍ତି|
7 ௭ இரண்டாம் கூடாரத்திற்குள் பிரதான ஆசாரியன்மட்டும் வருடத்திற்கு ஒருமுறை இரத்தத்தை எடுத்துக்கொண்டு உள்ளே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் மக்களுடைய தவறுகளுக்காகவும் செலுத்துவான்.
କିନ୍ତୁ ଦ୍ୱିତୀଯଂ କୋଷ୍ଠଂ ପ୍ରତିୱର୍ଷମ୍ ଏକକୃତ୍ୱ ଏକାକିନା ମହାଯାଜକେନ ପ୍ରୱିଶ୍ୟତେ କିନ୍ତ୍ୱାତ୍ମନିମିତ୍ତଂ ଲୋକାନାମ୍ ଅଜ୍ଞାନକୃତପାପାନାଞ୍ଚ ନିମିତ୍ତମ୍ ଉତ୍ସର୍ଜ୍ଜନୀଯଂ ରୁଧିରମ୍ ଅନାଦାଯ ତେନ ନ ପ୍ରୱିଶ୍ୟତେ|
8 ௮ அதினாலே, முதலாம் கூடாரம் நிற்கும்வரைக்கும் மகா பரிசுத்த இடத்திற்குப் போகிற வழி இன்னும் வெளிப்படவில்லை என்று பரிசுத்த ஆவியானவர் தெரியப்படுத்தியிருக்கிறார்.
ଇତ୍ୟନେନ ପୱିତ୍ର ଆତ୍ମା ଯତ୍ ଜ୍ଞାପଯତି ତଦିଦଂ ତତ୍ ପ୍ରଥମଂ ଦୂଷ୍ୟଂ ଯାୱତ୍ ତିଷ୍ଠତି ତାୱତ୍ ମହାପୱିତ୍ରସ୍ଥାନଗାମୀ ପନ୍ଥା ଅପ୍ରକାଶିତସ୍ତିଷ୍ଠତି|
9 ௯ அந்தக் கூடாரம் இந்தக் காலத்திற்கு உதவுகிற ஒப்பனையாக இருக்கிறது; அதற்கேற்றபடி செலுத்தப்பட்டுவருகிற காணிக்கைகளும் பலிகளும் ஆராதனை செய்கிறவனுடைய மனச்சாட்சியைப் பூரணப்படுத்தமுடியாதவைகள்.
ତଚ୍ଚ ଦୂଷ୍ୟଂ ୱର୍ତ୍ତମାନସମଯସ୍ୟ ଦୃଷ୍ଟାନ୍ତଃ, ଯତୋ ହେତୋଃ ସାମ୍ପ୍ରତଂ ସଂଶୋଧନକାଲଂ ଯାୱଦ୍ ଯନ୍ନିରୂପିତଂ ତଦନୁସାରାତ୍ ସେୱାକାରିଣୋ ମାନସିକସିଦ୍ଧିକରଣେଽସମର୍ଥାଭିଃ
10 ௧0 உண்பதும், குடிப்பது, பலவிதமான குளியல்களும், சரீரத்திற்குரிய சடங்குகளேதவிர வேறோன்றும் இல்லை. இவைகள் சீர்திருத்தல் உண்டாகும் காலம்வரைக்கும் செய்வதற்கு கட்டளையிடப்பட்டது.
କେୱଲଂ ଖାଦ୍ୟପେଯେଷୁ ୱିୱିଧମଜ୍ଜନେଷୁ ଚ ଶାରୀରିକରୀତିଭି ର୍ୟୁକ୍ତାନି ନୈୱେଦ୍ୟାନି ବଲିଦାନାନି ଚ ଭୱନ୍ତି|
11 ௧௧ கிறிஸ்துவானவர் வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியராக வெளிப்பட்டு, கையினால் செய்யப்பட்டதாகிய இந்தப் படைப்பு சம்பந்தமான கூடாரத்தின்வழியாக அல்ல, பெரிதும் உத்தமுமான கூடாரத்தின்வழியாகவும்,
ଅପରଂ ଭାୱିମଙ୍ଗଲାନାଂ ମହାଯାଜକଃ ଖ୍ରୀଷ୍ଟ ଉପସ୍ଥାଯାହସ୍ତନିର୍ମ୍ମିତେନାର୍ଥତ ଏତତ୍ସୃଷ୍ଟେ ର୍ବହିର୍ଭୂତେନ ଶ୍ରେଷ୍ଠେନ ସିଦ୍ଧେନ ଚ ଦୂଷ୍ୟେଣ ଗତ୍ୱା
12 ௧௨ வெள்ளாட்டுக்கடா, இளங்காளை இவைகளுடைய இரத்தத்தினாலே அல்ல, தம்முடைய சொந்த இரத்தத்தினாலும் ஒரேமுறை மகா பரிசுத்த இடத்திற்குள் நுழைந்து, நித்திய மீட்பை உண்டுபண்ணினார். (aiōnios )
ଛାଗାନାଂ ଗୋୱତ୍ସାନାଂ ୱା ରୁଧିରମ୍ ଅନାଦାଯ ସ୍ୱୀଯରୁଧିରମ୍ ଆଦାଯୈକକୃତ୍ୱ ଏୱ ମହାପୱିତ୍ରସ୍ଥାନଂ ପ୍ରୱିଶ୍ୟାନନ୍ତକାଲିକାଂ ମୁକ୍ତିଂ ପ୍ରାପ୍ତୱାନ୍| (aiōnios )
13 ௧௩ அது எப்படியென்றால், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தம் உண்டாகப் பரிசுத்தப்படுத்துமென்றால்,
ୱୃଷଛାଗାନାଂ ରୁଧିରେଣ ଗୱୀଭସ୍ମନଃ ପ୍ରକ୍ଷେପେଣ ଚ ଯଦ୍ୟଶୁଚିଲୋକାଃ ଶାରୀରିଶୁଚିତ୍ୱାଯ ପୂଯନ୍ତେ,
14 ௧௪ நித்திய ஆவியானவராலே தம்மைத்தாமே பழுதில்லாத பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்களுடைய மனச்சாட்சியைச் செத்த செயல்கள் இல்லாமல் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! (aiōnios )
ତର୍ହି କିଂ ମନ୍ୟଧ୍ୱେ ଯଃ ସଦାତନେନାତ୍ମନା ନିଷ୍କଲଙ୍କବଲିମିୱ ସ୍ୱମେୱେଶ୍ୱରାଯ ଦତ୍ତୱାନ୍, ତସ୍ୟ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ରୁଧିରେଣ ଯୁଷ୍ମାକଂ ମନାଂସ୍ୟମରେଶ୍ୱରସ୍ୟ ସେୱାଯୈ କିଂ ମୃତ୍ୟୁଜନକେଭ୍ୟଃ କର୍ମ୍ମଭ୍ୟୋ ନ ପୱିତ୍ରୀକାରିଷ୍ୟନ୍ତେ? (aiōnios )
15 ௧௫ ஆகவே, முதலாம் உடன்படிக்கையின் காலத்திலே நடந்த அக்கிரமங்களை நீக்குவதற்காக அவர் மரணமடைந்து, அழைக்கப்பட்டவர்கள் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நித்திய சுதந்திரத்தை அடைந்துகொள்வதற்காக, புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராக இருக்கிறார். (aiōnios )
ସ ନୂତନନିଯମସ୍ୟ ମଧ୍ୟସ୍ଥୋଽଭୱତ୍ ତସ୍ୟାଭିପ୍ରାଯୋଽଯଂ ଯତ୍ ପ୍ରଥମନିଯମଲଙ୍ଘନରୂପପାପେଭ୍ୟୋ ମୃତ୍ୟୁନା ମୁକ୍ତୌ ଜାତାଯାମ୍ ଆହୂତଲୋକା ଅନନ୍ତକାଲୀଯସମ୍ପଦଃ ପ୍ରତିଜ୍ଞାଫଲଂ ଲଭେରନ୍| (aiōnios )
16 ௧௬ ஏனென்றால், எங்கே மரணசாசனம் உண்டோ, அங்கே அந்த சாசனத்தை எழுதினவனுடைய மரணமும் உண்டாகவேண்டும்.
ଯତ୍ର ନିଯମୋ ଭୱତି ତତ୍ର ନିଯମସାଧକସ୍ୟ ବଲେ ର୍ମୃତ୍ୟୁନା ଭୱିତୱ୍ୟଂ|
17 ௧௭ எப்படியென்றால், மரணம் உண்டான பின்பே மரணசாசனம் உறுதிப்படும்; அதை எழுதினவன் உயிரோடு இருக்கும்போது அதற்குப் பயன் இல்லையே.
ଯତୋ ହତେନ ବଲିନା ନିଯମଃ ସ୍ଥିରୀଭୱତି କିନ୍ତୁ ନିଯମସାଧକୋ ବଲି ର୍ୟାୱତ୍ ଜୀୱତି ତାୱତ୍ ନିଯମୋ ନିରର୍ଥକସ୍ତିଷ୍ଠତି|
18 ௧௮ அப்படியே, முதலாம் உடன்படிக்கையும் இரத்தம் இல்லாமல் உறுதி செய்யப்படவில்லை.
ତସ୍ମାତ୍ ସ ପୂର୍ୱ୍ୱନିଯମୋଽପି ରୁଧିରପାତଂ ୱିନା ନ ସାଧିତଃ|
19 ௧௯ எப்படியென்றால், மோசே, நியாயப்பிரமாணத்தினால், எல்லா மக்களுக்கும் எல்லாக் கட்டளைகளையும் சொன்னபின்பு, இளங்காளை, வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு முடியோடும், ஈசோப்போடும் எடுத்து, புத்தகத்தின் மேலும் மக்கள் எல்லோர்மேலும் தெளித்து:
ଫଲତଃ ସର୍ୱ୍ୱଲୋକାନ୍ ପ୍ରତି ୱ୍ୟୱସ୍ଥାନୁସାରେଣ ସର୍ୱ୍ୱା ଆଜ୍ଞାଃ କଥଯିତ୍ୱା ମୂସା ଜଲେନ ସିନ୍ଦୂରୱର୍ଣଲୋମ୍ନା ଏଷୋୱତୃଣେନ ଚ ସାର୍ଦ୍ଧଂ ଗୋୱତ୍ସାନାଂ ଛାଗାନାଞ୍ଚ ରୁଧିରଂ ଗୃହୀତ୍ୱା ଗ୍ରନ୍ଥେ ସର୍ୱ୍ୱଲୋକେଷୁ ଚ ପ୍ରକ୍ଷିପ୍ୟ ବଭାଷେ,
20 ௨0 தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுவே என்று சொன்னான்.
ଯୁଷ୍ମାନ୍ ଅଧୀଶ୍ୱରୋ ଯଂ ନିଯମଂ ନିରୂପିତୱାନ୍ ତସ୍ୟ ରୁଧିରମେତତ୍|
21 ௨௧ இவ்விதமாக, கூடாரத்தின்மேலும் ஆராதனைக்குரிய எல்லாப் பணிமுட்டுகளின்மேலும் இரத்தத்தைத் தெளித்தான்.
ତଦ୍ୱତ୍ ସ ଦୂଷ୍ୟେଽପି ସେୱାର୍ଥକେଷୁ ସର୍ୱ୍ୱପାତ୍ରେଷୁ ଚ ରୁଧିରଂ ପ୍ରକ୍ଷିପ୍ତୱାନ୍|
22 ௨௨ நியாயப்பிரமாணத்தின்படி ஏறக்குறைய எல்லாம் இரத்தத்தினாலே சுத்திகரிக்கப்படும்; இரத்தம் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது.
ଅପରଂ ୱ୍ୟୱସ୍ଥାନୁସାରେଣ ପ୍ରାଯଶଃ ସର୍ୱ୍ୱାଣି ରୁଧିରେଣ ପରିଷ୍କ୍ରିଯନ୍ତେ ରୁଧିରପାତଂ ୱିନା ପାପମୋଚନଂ ନ ଭୱତି ଚ|
23 ௨௩ ஆகவே, பரலோகத்தில் உள்ளவைகளுக்குச் சாயலானவைகள் இப்படிப்பட்ட பலிகளினாலே சுத்திகரிக்கப்பட வேண்டியதாக இருந்தது; பரலோகத்தில் உள்ளவைகளோ இவைகளிலும் விசேஷித்த பலிகளாலே சுத்திகரிக்கப்படவேண்டியவைகள்.
ଅପରଂ ଯାନି ସ୍ୱର୍ଗୀଯୱସ୍ତୂନାଂ ଦୃଷ୍ଟାନ୍ତାସ୍ତେଷାମ୍ ଏତୈଃ ପାୱନମ୍ ଆୱଶ୍ୟକମ୍ ଆସୀତ୍ କିନ୍ତୁ ସାକ୍ଷାତ୍ ସ୍ୱର୍ଗୀଯୱସ୍ତୂନାମ୍ ଏତେଭ୍ୟଃ ଶ୍ରେଷ୍ଠେ ର୍ବଲିଦାନୈଃ ପାୱନମାୱଶ୍ୟକଂ|
24 ௨௪ அப்படியே, உண்மையான பரிசுத்த இடத்திற்கு அடையாளமான கையினால் செய்யப்பட்ட பரிசுத்த இடத்திலே கிறிஸ்துவானவர் நுழையாமல், பரலோகத்திலே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமூகத்தில் வேண்டுதல் செய்வதற்காக நுழைந்திருக்கிறார்.
ଯତଃ ଖ୍ରୀଷ୍ଟଃ ସତ୍ୟପୱିତ୍ରସ୍ଥାନସ୍ୟ ଦୃଷ୍ଟାନ୍ତରୂପଂ ହସ୍ତକୃତଂ ପୱିତ୍ରସ୍ଥାନଂ ନ ପ୍ରୱିଷ୍ଟୱାନ୍ କିନ୍ତ୍ୱସ୍ମନ୍ନିମିତ୍ତମ୍ ଇଦାନୀମ୍ ଈଶ୍ୱରସ୍ୟ ସାକ୍ଷାଦ୍ ଉପସ୍ଥାତୁଂ ସ୍ୱର୍ଗମେୱ ପ୍ରୱିଷ୍ଟଃ|
25 ௨௫ பிரதான ஆசாரியன் மற்றவர்களுடைய இரத்தத்தோடு ஒவ்வொரு வருடமும் பரிசுத்த இடத்திற்குள் நுழைவதுபோல, அவர் அநேகமுறை தம்மைப் பலியிடுவதற்காக நுழையவில்லை.
ଯଥା ଚ ମହାଯାଜକଃ ପ୍ରତିୱର୍ଷଂ ପରଶୋଣିତମାଦାଯ ମହାପୱିତ୍ରସ୍ଥାନଂ ପ୍ରୱିଶତି ତଥା ଖ୍ରୀଷ୍ଟେନ ପୁନଃ ପୁନରାତ୍ମୋତ୍ସର୍ଗୋ ନ କର୍ତ୍ତୱ୍ୟଃ,
26 ௨௬ அப்படியிருந்தால், உலகம் உண்டானதுமுதல் அவர் அநேகமுறை பாடுபடவேண்டியதாக இருக்குமே; அப்படி இல்லை, அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்க இந்தக் கடைசிகாலத்தில் ஒரேமுறை வெளிப்பட்டார். (aiōn )
କର୍ତ୍ତୱ୍ୟେ ସତି ଜଗତଃ ସୃଷ୍ଟିକାଲମାରଭ୍ୟ ବହୁୱାରଂ ତସ୍ୟ ମୃତ୍ୟୁଭୋଗ ଆୱଶ୍ୟକୋଽଭୱତ୍; କିନ୍ତ୍ୱିଦାନୀଂ ସ ଆତ୍ମୋତ୍ସର୍ଗେଣ ପାପନାଶାର୍ଥମ୍ ଏକକୃତ୍ୱୋ ଜଗତଃ ଶେଷକାଲେ ପ୍ରଚକାଶେ| (aiōn )
27 ௨௭ அன்றியும், ஒரேமுறை இறப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும், மனிதர்களுக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
ଅପରଂ ଯଥା ମାନୁଷସ୍ୟୈକକୃତ୍ୱୋ ମରଣଂ ତତ୍ ପଶ୍ଚାଦ୍ ୱିଚାରୋ ନିରୂପିତୋଽସ୍ତି,
28 ௨௮ கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்ப்பதற்காக ஒரேமுறை பலியிடப்பட்டு, தமக்காகக் காத்துக்கொண்டு இருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அருளும்படி இரண்டாவதுமுறை பாவம் இல்லாமல் தரிசனமாவார்.
ତଦ୍ୱତ୍ ଖ୍ରୀଷ୍ଟୋଽପି ବହୂନାଂ ପାପୱହନାର୍ଥଂ ବଲିରୂପେଣୈକକୃତ୍ୱ ଉତ୍ସସୃଜେ, ଅପରଂ ଦ୍ୱିତୀଯୱାରଂ ପାପାଦ୍ ଭିନ୍ନଃ ସନ୍ ଯେ ତଂ ପ୍ରତୀକ୍ଷନ୍ତେ ତେଷାଂ ପରିତ୍ରାଣାର୍ଥଂ ଦର୍ଶନଂ ଦାସ୍ୟତି|