< எபிரேயர் 13 >
1 ௧ சகோதர அன்பு நிலைத்திருக்கட்டும்.
భ్రాతృషు ప్రేమ తిష్ఠతు| అతిథిసేవా యుష్మాభి ర్న విస్మర్య్యతాం
2 ௨ அந்நியர்களை உபசரிக்க மறக்காதிருங்கள்; அதினாலே சிலர் அறியாமல் தேவதூதர்களையும் உபசரித்ததுண்டு.
యతస్తయా ప్రచ్ఛన్నరూపేణ దివ్యదూతాః కేషాఞ్చిద్ అతిథయోఽభవన్|
3 ௩ சிறைச்சாலையில் இருக்கிறவர்களோடு நீங்களும் சிறைச்சாலையிலே இருக்கிறவர்களைப்போல அவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்; அவர்களுடைய சரீரங்களைப்போல உங்களுடைய சரீரங்களும் தீங்கு அனுபவித்ததாக நினைத்து, தீங்கு அனுபவிக்கிறவர்களை நினைத்துக்கொள்ளுங்கள்.
బన్దినః సహబన్దిభిరివ దుఃఖినశ్చ దేహవాసిభిరివ యుష్మాభిః స్మర్య్యన్తాం|
4 ௪ திருமணம் எல்லோருக்குள்ளும் கனமுள்ளதாகவும், பரிசுத்தமாகவும் இருப்பதாக; வேசிக்கள்ளர்களையும் விபசாரக்காரர்களையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
వివాహః సర్వ్వేషాం సమీపే సమ్మానితవ్యస్తదీయశయ్యా చ శుచిః కిన్తు వేశ్యాగామినః పారదారికాశ్చేశ్వరేణ దణ్డయిష్యన్తే|
5 ௫ நீங்கள் பணஆசை இல்லாதவர்களாக நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகளே போதும் என்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதும் இல்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.
యూయమ్ ఆచారే నిర్లోభా భవత విద్యమానవిషయే సన్తుష్యత చ యస్మాద్ ఈశ్వర ఏవేదం కథితవాన్, యథా, "త్వాం న త్యక్ష్యామి న త్వాం హాస్యామి| "
6 ௬ அதினாலே நாம் தைரியத்தோடு: கர்த்தர் எனக்கு உதவிசெய்கிறவர், நான் பயப்படமாட்டேன், மனிதன் எனக்கு என்ன செய்வான் என்று சொல்லலாமே.
అతఏవ వయమ్ ఉత్సాహేనేదం కథయితుం శక్నుమః, "మత్పక్షే పరమేశోఽస్తి న భేష్యామి కదాచన| యస్మాత్ మాం ప్రతి కిం కర్త్తుం మానవః పారయిష్యతి|| "
7 ௭ தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாகச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.
యుష్మాకం యే నాయకా యుష్మభ్యమ్ ఈశ్వరస్య వాక్యం కథితవన్తస్తే యుష్మాభిః స్మర్య్యన్తాం తేషామ్ ఆచారస్య పరిణామమ్ ఆలోచ్య యుష్మాభిస్తేషాం విశ్వాసోఽనుక్రియతాం|
8 ௮ இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக்கிறார். (aiōn )
యీశుః ఖ్రీష్టః శ్వోఽద్య సదా చ స ఏవాస్తే| (aiōn )
9 ௯ பலவிதமான அந்நிய போதனைகளால் அலைந்து திரியாமல் இருங்கள். உணவுபொருட்களால் இல்லை, கிருபையினாலே இருதயம் உறுதிப்படுத்தப்படுகிறது நல்லது; உணவுபொருட்களால் பயனில்லையே.
యూయం నానావిధనూతనశిక్షాభి ర్న పరివర్త్తధ్వం యతోఽనుగ్రహేణాన్తఃకరణస్య సుస్థిరీభవనం క్షేమం న చ ఖాద్యద్రవ్యైః| యతస్తదాచారిణస్తై ర్నోపకృతాః|
10 ௧0 நமக்கு ஒரு பலிபீடம் உண்டு, அங்குள்ளவைகளைச் சாப்பிடுகிறதற்கு ஆசரிப்புக்கூடாரத்தில் ஆராதனை செய்கிறவர்களுக்கு அதிகாரம் இல்லை.
యే దష్యస్య సేవాం కుర్వ్వన్తి తే యస్యా ద్రవ్యభోజనస్యానధికారిణస్తాదృశీ యజ్ఞవేదిరస్మాకమ్ ఆస్తే|
11 ௧௧ ஏனென்றால், எந்த மிருகங்களுடைய இரத்தம் பாவங்களுக்காகப் பரிசுத்த இடத்திற்குள் பிரதான ஆசாரியனாலே கொண்டுவரப்படுகிறதோ, அந்த மிருகங்களின் உடல்கள் முகாமிற்கு வெளியே சுட்டெரிக்கப்படும்.
యతో యేషాం పశూనాం శోణితం పాపనాశాయ మహాయాజకేన మహాపవిత్రస్థానస్యాభ్యన్తరం నీయతే తేషాం శరీరాణి శిబిరాద్ బహి ర్దహ్యన్తే|
12 ௧௨ அப்படியே, இயேசுவும் தம்முடைய சொந்த இரத்தத்தினாலே மக்களைப் பரிசுத்தம் பண்ணுவதற்காக நகர வாசலுக்கு வெளியே பாடுகள்பட்டார்.
తస్మాద్ యీశురపి యత్ స్వరుధిరేణ ప్రజాః పవిత్రీకుర్య్యాత్ తదర్థం నగరద్వారస్య బహి ర్మృతిం భుక్తవాన్|
13 ௧௩ ஆகவே, நாம் அவருடைய நிந்தையைச் சுமந்து, முகாமிற்கு வெளியே அவரிடம் புறப்பட்டுப் போவோம்.
అతో హేతోరస్మాభిరపి తస్యాపమానం సహమానైః శిబిరాద్ బహిస్తస్య సమీపం గన్తవ్యం|
14 ௧௪ நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை; வரப்போகிறதையே விரும்பித்தேடுகிறோம்.
యతో ఽత్రాస్మాకం స్థాయి నగరం న విద్యతే కిన్తు భావి నగరమ్ అస్మాభిరన్విష్యతే|
15 ௧௫ ஆகவே, அவருடைய நாமத்தைத் துதிக்கும் உதடுகளின் கனியாகிய ஸ்தோத்திரபலியை அவர் மூலமாக எப்போதும் தேவனுக்குச் செலுத்துவோம்.
అతఏవ యీశునాస్మాభి ర్నిత్యం ప్రశంసారూపో బలిరర్థతస్తస్య నామాఙ్గీకుర్వ్వతామ్ ఓష్ఠాధరాణాం ఫలమ్ ఈశ్వరాయ దాతవ్యం|
16 ௧௬ அன்றியும் நன்மைசெய்யவும், தானதர்மம் பண்ணவும் மறக்காமல் இருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின்மேல் தேவன் பிரியமாக இருக்கிறார்.
అపరఞ్చ పరోపకారో దానఞ్చ యుష్మాభి ర్న విస్మర్య్యతాం యతస్తాదృశం బలిదానమ్ ఈశ్వరాయ రోచతే|
17 ௧௭ உங்களை நடத்துகிறவர்கள், உங்களுடைய ஆத்துமாக்களுக்காக உத்திரவாதம் பண்ணுகிறவர்களாக விழித்திருக்கிறதினால், அவர்கள் துக்கத்தோடு இல்லை, சந்தோஷத்தோடு அதைச் செய்வதற்காக, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்கி இருங்கள்; அவர்கள் துக்கத்தோடு அதைச்செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாக இருக்காது.
యూయం స్వనాయకానామ్ ఆజ్ఞాగ్రాహిణో వశ్యాశ్చ భవత యతో యైరుపనిధిః ప్రతిదాతవ్యస్తాదృశా లోకా ఇవ తే యుష్మదీయాత్మనాం రక్షణార్థం జాగ్రతి, అతస్తే యథా సానన్దాస్తత్ కుర్య్యు ర్న చ సార్త్తస్వరా అత్ర యతధ్వం యతస్తేషామ్ ఆర్త్తస్వరో యుష్మాకమ్ ఇష్టజనకో న భవేత్|
18 ௧௮ எங்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்; நாங்கள் நல்ல மனச்சாட்சி உள்ளவர்களாக எல்லாவற்றிலும் யோக்கியமாக நடக்க விரும்புகிறோம் என்று உறுதியாக நம்புகிறோம்.
అపరఞ్చ యూయమ్ అస్మన్నిమిత్తిం ప్రార్థనాం కురుత యతో వయమ్ ఉత్తమమనోవిశిష్టాః సర్వ్వత్ర సదాచారం కర్త్తుమ్ ఇచ్ఛుకాశ్చ భవామ ఇతి నిశ్చితం జానీమః|
19 ௧௯ நான் மிகவும் சீக்கிரமாக உங்களிடம் வருவதற்கு நீங்கள் தேவனை வேண்டிக்கொள்ளும்படி உங்களை அதிகமாகக் கேட்டுக்கொள்ளுகிறேன்.
విశేషతోఽహం యథా త్వరయా యుష్మభ్యం పున ర్దీయే తదర్థం ప్రార్థనాయై యుష్మాన్ అధికం వినయే|
20 ௨0 நித்திய உடன்படிக்கையின் இரத்தத்தினாலே ஆடுகளுடைய பெரிய மேய்ப்பரான நம்முடைய கர்த்தராகிய இயேசுவை மரித்தோரிலிருந்து எழும்பிவரப்பண்ணின சமாதானத்தின் தேவன், (aiōnios )
అనన్తనియమస్య రుధిరేణ విశిష్టో మహాన్ మేషపాలకో యేన మృతగణమధ్యాత్ పునరానాయి స శాన్తిదాయక ఈశ్వరో (aiōnios )
21 ௨௧ இயேசுகிறிஸ்துவைக்கொண்டு தமக்குமுன்பாகப் பிரியமானதை உங்களில் நடப்பித்து, நீங்கள் தம்முடைய விருப்பத்தின்படிசெய்ய உங்களை எல்லாவிதமான நல்லசெய்கையிலும் தகுதி உள்ளவர்களாக்குவாராக; அவருக்கு என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
నిజాభిమతసాధనాయ సర్వ్వస్మిన్ సత్కర్మ్మణి యుష్మాన్ సిద్ధాన్ కరోతు, తస్య దృష్టౌ చ యద్యత్ తుష్టిజనకం తదేవ యుష్మాకం మధ్యే యీశునా ఖ్రీష్టేన సాధయతు| తస్మై మహిమా సర్వ్వదా భూయాత్| ఆమేన్| (aiōn )
22 ௨௨ சகோதரர்களே, நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதின இந்தப் புத்திமதியான வார்த்தைகளை நீங்கள் பொறுமையாக ஏற்றுக்கொள்ள உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்.
హే భ్రాతరః, వినయేఽహం యూయమ్ ఇదమ్ ఉపదేశవాక్యం సహధ్వం యతోఽహం సంక్షేపేణ యుష్మాన్ ప్రతి లిఖితవాన్|
23 ௨௩ சகோதரனாகிய தீமோத்தேயு விடுதலையாக்கப்பட்டான் என்று தெரிந்துகொள்ளுங்கள்; அவன் சீக்கிரமாக வந்தால், நான் அவனோடுகூட வந்து, உங்களைப் பார்ப்பேன்.
అస్మాకం భ్రాతా తీమథియో ముక్తోఽభవద్ ఇతి జానీత, స చ యది త్వరయా సమాగచ్ఛతి తర్హి తేన సార్ద్ధంమ్ అహం యుష్మాన్ సాక్షాత్ కరిష్యామి|
24 ௨௪ உங்களை நடத்துகிறவர்களையும், பரிசுத்தவான்கள் எல்லோரையும் வாழ்த்துங்கள். இத்தாலியா தேசத்தார் எல்லோரும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
యుష్మాకం సర్వ్వాన్ నాయకాన్ పవిత్రలోకాంశ్చ నమస్కురుత| అపరమ్ ఇతాలియాదేశీయానాం నమస్కారం జ్ఞాస్యథ|
25 ௨௫ கிருபையானது உங்கள் அனைவரோடும் இருப்பதாக. ஆமென்.
అనుగ్రహో యుష్మాకం సర్వ్వేషాం సహాయో భూయాత్| ఆమేన్|