< எபிரேயர் 12 >
1 ௧ ஆகவே, மேகத்தைப்போல இத்தனை அதிகமான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான எல்லாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாக இருக்கிற இயேசுவைப் பார்த்து, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடு ஓடுவோம்;
Efter vi nu hafve om oss en så stor hop med vittne, låt oss aflägga syndena, som alltid låder vid oss och gör oss tröga, och låt oss med tålamod löpa i den kamp som oss förelagd är;
2 ௨ அவர் தமக்குமுன்பாக வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை நினைக்காமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபக்கத்தில் வீற்றிருக்கிறார்.
Och se på Jesum, som trona begynt och fullkomnat hafver; hvilken, då han måtte haft glädje, led korset, och aktade intet smäleken; och är sittandes på högra handen på Guds stol.
3 ௩ ஆகவே, நீங்கள் மனம் தளர்ந்தவர்களாக உங்களுடைய ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாமல் இருக்க, தமக்கு விரோதமாகப் பாவிகளால் செய்யப்பட்ட இந்தவிதமான வெறுக்கத்தக்க காரியங்களைச் சகித்த அவரையே நினைத்துக்கொள்ளுங்கள்.
Tänker på honom, som af syndarom sådana gensägelse led emot sig; att I icke tröttens i edor sinne, gifvandes eder utöfver.
4 ௪ பாவத்திற்கு விரோதமாகப் போராடுகிறதில் இரத்தம் சிந்தப்படத்தக்கதாக நீங்கள் இன்னும் எதிர்த்து நிற்கவில்லையே.
Ty I hafven icke ännu allt intill blods emotståndit, kämpande emot syndene;
5 ௫ அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய கண்டிப்பை அற்பமாக நினைக்காதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே.
Och hafven redo förgätit den tröst, som till eder talar, lika som till sin barn: Min son, förakta icke Herrans aga; och gif dig icke utöfver, då du näpses af honom.
6 ௬ கர்த்தர் எவனை நேசிக்கிறாரோ அவனை அவர் கண்டித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று குழந்தைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதிகளை மறந்தீர்கள்.
Ty hvem Herren älskar, den agar han; men han gisslar hvar och en son, han anammar.
7 ௭ நீங்கள் கண்டிக்கப்படுவதை சகிக்கிறவர்களாக இருந்தால் தேவன் உங்களைப் பிள்ளைகளாக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் கண்டிக்காத பிள்ளைகள் உண்டோ?
Hvar I nu liden agan, så bjuder sig Gud till eder, såsom till barn; ty hvilken är den son, som hans fader icke agar?
8 ௮ எல்லோருக்கும் கிடைக்கும் கண்டிப்பு உங்களுக்குக் கிடைக்காமல் இருந்தால் நீங்கள் தேவனுடைய பிள்ளைகளாக இல்லாமல் வேசியின் பிள்ளைகளாக இருப்பீர்களே.
Ären I utan aga, i hvilkom alle delaktige vordne äro, så ären I oägta, och icke barn.
9 ௯ அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைக் கண்டிக்கும்போது, அவர்களுக்கு நாம் பயந்து நடந்திருக்க, நாம் பிழைப்பதற்காக ஆவிகளின் பிதாவிற்கு அதிகமாக அடங்கி நடக்கவேண்டுமல்லவா?
Hafve vi nu köttsliga fäder, som oss aga, och frukte dem; skole vi då icke mycket mer underdånige vara dem andeliga Fadrenom, att vi må lefva?
10 ௧0 அவர்கள் தங்களுக்கு நல்லதென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் கண்டித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்திற்கு நாம் பங்குள்ளவர்களாவதற்காக நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைக் கண்டிக்கிறார்
Och de förre hafva agat oss i några få dagar, efter som dem syntes; men denne till det som nyttigt är, att vi må få hans helgelse.
11 ௧௧ எந்தக் கண்டித்தலும் தற்காலத்தில் சந்தோஷமாக இல்லாமல் துக்கமாக இருக்கும்; ஆனாலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.
All age synes nu icke vara till fröjd, utan till ångest; men sedan vedergäller han en fridsam rättfärdighetenes frukt dem, som deruti öfvade äro;
12 ௧௨ ஆகவே, நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி,
Derföre lyfter upp edra lata händer och trötta knä;
13 ௧௩ முடமாக இருக்கிறது பெலவீனமாகிப்போகாமல் குணமாவதற்காக, உங்களுடைய பாதங்களுக்கு வழிகளைச் சீர்ப்படுத்துங்கள்.
Och stiger viss steg med edra fötter; att icke någor haltar såsom en ofärdig, utan heldre helbregda varder.
14 ௧௪ எல்லோரோடும் சமாதானமாக இருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாக இருக்கவும் விரும்புங்கள்; பரிசுத்தம் இல்லாமல் ஒருவனும் கர்த்த்தரை தரிசிக்கமுடியாது.
Farer efter frid med allom, och efter helgelse, utan hvilken ingen får se Herran.
15 ௧௫ ஒருவனும் தேவனுடைய கிருபையை இழந்துபோகாமல் இருக்கவும், எந்தவொரு கசப்பான வேர் முளைத்து எழும்பிக் கலகம் உண்டாக்குகிறதினால் அநேகர் தீட்டுப்படாமல் இருக்கவும்,
Och ser till, att ingen försummar Guds nåd; att icke uppväxer någon bitter rot, och gör något hinder, och månge måtte genom henne besmittade varda;
16 ௧௬ ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருநேர உணவிற்காக தன் புத்திரசுவிகாரத்தை விற்றுப்போட்ட ஏசாவைப்போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
Att ingen vare en bolare, eller ohelig, såsom Esau, hvilken för en måltid bortsålde sin förstfödslorätt.
17 ௧௭ ஏனென்றால், பின்பதாக அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக்கொள்ள விரும்பியும், தகுதியற்றவன் என்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடு தேடியும் மனம் மாறுதலைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
Men I veten, att då han ville sedan, med arfsrätt, få välsignelse, vardt han bortdrifven; och var honom då intet rum till någon bot, ändock han med tårar derefter sökte.
18 ௧௮ அன்றியும், தொடக்கூடியதும், அக்கினி பற்றியெரிகிற மலையினிடமும், மந்தாரம், இருள், பெருங்காற்று ஆகிய இவைகளிடமும்,
Ty I ären icke gångne till det berget, der man på taga kunde, och med eld brann, eller till töcknene, och mörkret, och stormen;
19 ௧௯ எக்காளமுழக்கத்தினிடமும், வார்த்தைகளுடைய சத்தத்தினிடமும், நீங்கள் வந்து சேரவில்லை; அந்தச் சத்தத்தைக் கேட்டவர்கள் பின்னும் தங்களுக்கு வார்த்தை சொல்லப்படாதபடி வேண்டிக்கொண்டார்கள்.
Och basunsklanget, och till ordarösten; hvilka de vedersakade, som henne hörde, begärande att ordet skulle dem ju icke sagdt varda;
20 ௨0 ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள்.
Ty de förmåtte icke lida det, som der sades: Om något djur kom vid berget, skulle det stenas, eller skjutas igenom;
21 ௨௧ மோசேயும்: நான் மிகவும் பயந்து நடுங்குகிறேன் என்று சொல்லும் அளவிற்கு அந்தக் காட்சி அவ்வளவு பயங்கரமாக இருந்தது.
Och så förskräckelig var den synen, att Moses sade: Jag är förskräckt, och bäfvar;
22 ௨௨ நீங்களோ சீயோன் மலையினிடமும், ஜீவனுள்ள தேவனுடைய நகரமாகிய பரம எருசலேமிடமும், ஆயிரமாயிரம் தேவதூதர்களிடமும்,
Utan I ären komne till Sions berg, och till lefvandes Guds stad, det himmelska Jerusalem, och till den otaliga Änglaskaran.
23 ௨௩ பரலோகத்தில் பெயர் எழுதியிருக்கிற தலைப்பிள்ளைகளின் சர்வசங்கமாகிய சபையினிடமும், எல்லோருக்கும் நியாயாதிபதியாகிய தேவனிடமும், பூரணர்களாக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளினிடமும்,
Och till de förstföddas församling, som i himmelen äro beskrefne; och till Gud, som alla dömer, och till de fullkomliga rättfärdigas andar;
24 ௨௪ புதிய உடன்படிக்கையின் மத்தியஸ்தராகிய இயேசுவினிடமும், ஆபேலினுடைய இரத்தம் பேசினதைவிட நன்மையானவைகளைப் பேசுகிற இரத்தமாகிய தெளிக்கப்படும் இரத்தத்தினிடமும் வந்து சேர்ந்தீர்கள்.
Och till Nya Testamentsens Medlare, Jesum, och till stänkelseblodet, som bättre talar än Abels blod.
25 ௨௫ பேசுகிறவருக்கு நீங்கள் கவனிக்கமாட்டோம் என்று விலகாமல் இருக்க எச்சரிக்கையாக இருங்கள்; ஏனென்றால், பூமியிலே பேசினவருக்கு கவனிக்கமாட்டோம் என்று விலகினவர்கள் தண்டனைக்குத் தப்பித்துக்கொள்ளாமல் இருக்க, பரலோகத்தில் இருந்து பேசுகிறவரை நாம் விட்டுவிலகினால் எப்படித் தப்பித்துக்கொள்ளுவோம்?
Ser till, att I icke vedersaken honom som med eder talar; ty kunde icke de undfly, som vedersakade honom som talade på jordene; huru mycket mindre vi, om vi vedersake honom som af himmelen talar?
26 ௨௬ அவருடைய சத்தம் அப்பொழுது பூமியை அசையப்பண்ணினது; இன்னும் ஒருமுறை நான் பூமியை மட்டுமல்ல, வானத்தையும் அசையப்பண்ணுவேன் என்று இப்பொழுது வாக்குத்தத்தம் செய்திருக்கிறார்.
Hvilkens röst på den tid gjorde jordena bäfvande? Men nu lofvar han, och säger: Ännu en tid skall jag göra bäfvande, icke allenast jordena, utan ock himmelen.
27 ௨௭ இன்னும் ஒருமுறை என்கிற சொல்லானது அசையாதவைகள் நிலைத்திருப்பதற்காக, அசைவுள்ளவைகள் உண்டாக்கப்பட்டவைகள்போல மாறிப்போகும் என்பதைக் குறிக்கிறது.
Det han säger: Ännu en tid, det gifver tillkänna de tings förvandling, som bäfva, såsom de der gjord äro; på det de ting blifva skola, som obäfvande äro.
28 ௨௮ ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.
Derföre, efter vi få det rike som icke bäfva kan, hafve vi nåd, genom hvilka vi tjene Gudi, till att täckas honom med tuktighet och fruktan;
29 ௨௯ நம்முடைய தேவன் சுட்டெரிக்கிற அக்கினியாக இருக்கிறாரே.
Ty vår Gud är en förtärande eld.