< எபிரேயர் 11 >
1 ௧ விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாக இருக்கிறது.
విశ్వాస ఆశంసితానాం నిశ్చయః, అదృశ్యానాం విషయాణాం దర్శనం భవతి|
2 ௨ அதினாலே முன்னோர்கள் நற்சாட்சி பெற்றார்கள்.
తేన విశ్వాసేన ప్రాఞ్చో లోకాః ప్రామాణ్యం ప్రాప్తవన్తః|
3 ௩ விசுவாசத்தினாலே நாம் உலகங்கள் தேவனுடைய வார்த்தையாலே உண்டாக்கப்பட்டது என்றும், இவ்விதமாக, காணப்படுகிறவைகள் காணப்படுகிறவைகளால் உண்டாகவில்லை என்றும் அறிந்திருக்கிறோம். (aiōn )
అపరమ్ ఈశ్వరస్య వాక్యేన జగన్త్యసృజ్యన్త, దృష్టవస్తూని చ ప్రత్యక్షవస్తుభ్యో నోదపద్యన్తైతద్ వయం విశ్వాసేన బుధ్యామహే| (aiōn )
4 ௪ விசுவாசத்தினாலே ஆபேல் காயீனுடைய பலியைவிட மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தினான்; அதினாலே அவன் நீதிமான் என்று சாட்சிபெற்றான்; அவனுடைய காணிக்கைகளைப்பற்றி தேவனே சாட்சிகொடுத்தார்; அவன் மரித்தும் இன்னும் பேசுகிறான்.
విశ్వాసేన హాబిల్ ఈశ్వరముద్దిశ్య కాబిలః శ్రేష్ఠం బలిదానం కృతవాన్ తస్మాచ్చేశ్వరేణ తస్య దానాన్యధి ప్రమాణే దత్తే స ధార్మ్మిక ఇత్యస్య ప్రమాణం లబ్ధవాన్ తేన విశ్వాసేన చ స మృతః సన్ అద్యాపి భాషతే|
5 ௫ விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணமடையாமல் எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டதினால், அவன் காணப்படாமல் போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவன் என்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்பே சாட்சிபெற்றான்.
విశ్వాసేన హనోక్ యథా మృత్యుం న పశ్యేత్ తథా లోకాన్తరం నీతః, తస్యోద్దేశశ్చ కేనాపి న ప్రాపి యత ఈశ్వరస్తం లోకాన్తరం నీతవాన్, తత్ప్రమాణమిదం తస్య లోకాన్తరీకరణాత్ పూర్వ్వం స ఈశ్వరాయ రోచితవాన్ ఇతి ప్రమాణం ప్రాప్తవాన్|
6 ௬ விசுவாசம் இல்லாமல் தேவனுக்குப் பிரியமாக இருப்பது முடியாதகாரியம்; ஏனென்றால், தேவனிடம் சேருகிறவன் அவர் இருக்கிறார் என்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் கொடுக்கிறவர் என்றும் விசுவாசிக்கவேண்டும்.
కిన్తు విశ్వాసం వినా కోఽపీశ్వరాయ రోచితుం న శక్నోతి యత ఈశ్వరోఽస్తి స్వాన్వేషిలోకేభ్యః పురస్కారం దదాతి చేతికథాయామ్ ఈశ్వరశరణాగతై ర్విశ్వసితవ్యం|
7 ௭ விசுவாசத்தினாலே நோவா அவனுடைய நாட்களிலே பார்க்காதவைகளைப்பற்றி தேவ எச்சரிப்பைப் பெற்று, பயபக்தியுள்ளவனாக, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குக் கப்பலை உண்டாக்கினான்; அதினாலே அவன் உலகம் தண்டனைக்குரியது என்று முடிவுசெய்து, விசுவாசத்தினால் உண்டாகும் நீதிக்கு வாரிசானான்.
అపరం తదానీం యాన్యదృశ్యాన్యాసన్ తానీశ్వరేణాదిష్టః సన్ నోహో విశ్వాసేన భీత్వా స్వపరిజనానాం రక్షార్థం పోతం నిర్మ్మితవాన్ తేన చ జగజ్జనానాం దోషాన్ దర్శితవాన్ విశ్వాసాత్ లభ్యస్య పుణ్యస్యాధికారీ బభూవ చ|
8 ௮ விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் உரிமைப்பங்காகப் பெறப்போகிற இடத்திற்குப் போக அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் எதுவென்று தெரியாமல் புறப்பட்டுப்போனான்.
విశ్వాసేనేబ్రాహీమ్ ఆహూతః సన్ ఆజ్ఞాం గృహీత్వా యస్య స్థానస్యాధికారస్తేన ప్రాప్తవ్యస్తత్ స్థానం ప్రస్థితవాన్ కిన్తు ప్రస్థానసమయే క్క యామీతి నాజానాత్|
9 ௯ விசுவாசத்தினாலே அவன் வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட தேசத்திலே அந்நியனைப்போல வாழ்ந்து, அந்த வாக்குத்தத்தத்திற்கு உடன் வாரிசாகிய ஈசாக்கோடும் யாக்கோபோடும் கூடாரங்களிலே குடியிருந்தான்;
విశ్వాసేన స ప్రతిజ్ఞాతే దేశే పరదేశవత్ ప్రవసన్ తస్యాః ప్రతిజ్ఞాయాః సమానాంశిభ్యామ్ ఇస్హాకా యాకూబా చ సహ దూష్యవాస్యభవత్|
10 ௧0 ஏனென்றால், தேவனே கட்டி உண்டாக்கின அஸ்திபாரங்கள் உள்ள நகரத்திற்கு அவன் காத்திருந்தான்.
యస్మాత్ స ఈశ్వరేణ నిర్మ్మితం స్థాపితఞ్చ భిత్తిమూలయుక్తం నగరం ప్రత్యైక్షత|
11 ௧௧ விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவர் என்று எண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலன் பெற்று, வயதானவளாக இருந்தும் குழந்தைப் பெற்றாள்.
అపరఞ్చ విశ్వాసేన సారా వయోతిక్రాన్తా సన్త్యపి గర్భధారణాయ శక్తిం ప్రాప్య పుత్రవత్యభవత్, యతః సా ప్రతిజ్ఞాకారిణం విశ్వాస్యమ్ అమన్యత|
12 ௧௨ எனவே, சரீரம் செத்தவன் என்று நினைக்கப்படும் ஒருவனாலே, வானத்தில் உள்ள அதிகமான நட்சத்திரங்களைப்போலவும் கடற்கரையில் உள்ள எண்ணமுடியாத மணலைப்போலவும் அதிக மக்கள் பிறந்தார்கள்.
తతో హేతో ర్మృతకల్పాద్ ఏకస్మాత్ జనాద్ ఆకాశీయనక్షత్రాణీవ గణనాతీతాః సముద్రతీరస్థసికతా ఇవ చాసంఖ్యా లోకా ఉత్పేదిరే|
13 ௧௩ இவர்கள் எல்லோரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளைப் பெறாமல், தூரத்திலே அவைகளைப் பார்த்து, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியர்களும், பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு விசுவாசத்தோடு மரித்தார்கள்.
ఏతే సర్వ్వే ప్రతిజ్ఞాయాః ఫలాన్యప్రాప్య కేవలం దూరాత్ తాని నిరీక్ష్య వన్దిత్వా చ, పృథివ్యాం వయం విదేశినః ప్రవాసినశ్చాస్మహ ఇతి స్వీకృత్య విశ్వాసేన ప్రాణాన్ తత్యజుః|
14 ௧௪ இப்படி அறிக்கையிடுகிறவர்கள் சொந்த தேசத்தை தேடிப்போகிறோம் என்று தெரியப்படுத்துகிறார்கள்.
యే తు జనా ఇత్థం కథయన్తి తైః పైతృకదేశో ఽస్మాభిరన్విష్యత ఇతి ప్రకాశ్యతే|
15 ௧௫ தாங்கள் விட்டுவந்த தேசத்தை நினைத்தார்கள் என்றால், அதற்குத் திரும்பிப்போவதற்கு அவர்களுக்கு நேரம் கிடைத்திருக்குமே.
తే యస్మాద్ దేశాత్ నిర్గతాస్తం యద్యస్మరిష్యన్ తర్హి పరావర్త్తనాయ సమయమ్ అలప్స్యన్త|
16 ௧௬ அதையல்ல, அதைவிட மேன்மையான பரமதேசத்தையே விரும்பினார்கள்; ஆகவே, தேவன் அவர்களுடைய தேவன் என்று சொல்லப்பட வெட்கப்படுவது இல்லை; அவர்களுக்கு ஒரு நகரத்தை ஆயத்தம்பண்ணினாரே.
కిన్తు తే సర్వ్వోత్కృష్టమ్ అర్థతః స్వర్గీయం దేశమ్ ఆకాఙ్క్షన్తి తస్మాద్ ఈశ్వరస్తానధి న లజ్జమానస్తేషామ్ ఈశ్వర ఇతి నామ గృహీతవాన్ యతః స తేషాం కృతే నగరమేకం సంస్థాపితవాన్|
17 ௧௭ மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்.
అపరమ్ ఇబ్రాహీమః పరీక్షాయాం జాతాయాం స విశ్వాసేనేస్హాకమ్ ఉత్ససర్జ,
18 ௧௮ ஈசாக்கிடம் உன் வம்சம் விளங்கும் என்று அவனிடம் சொல்லப்பட்டிருந்ததே; இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்ப தேவன் வல்லவராக இருக்கிறார் என்று நினைத்து,
వస్తుత ఇస్హాకి తవ వంశో విఖ్యాస్యత ఇతి వాగ్ యమధి కథితా తమ్ అద్వితీయం పుత్రం ప్రతిజ్ఞాప్రాప్తః స ఉత్ససర్జ|
19 ௧௯ தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
యత ఈశ్వరో మృతానప్యుత్థాపయితుం శక్నోతీతి స మేనే తస్మాత్ స ఉపమారూపం తం లేభే|
20 ௨0 விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
అపరమ్ ఇస్హాక్ విశ్వాసేన యాకూబ్ ఏషావే చ భావివిషయానధ్యాశిషం దదౌ|
21 ௨௧ விசுவாசத்தினாலே யாக்கோபு தன் மரணகாலத்தில் யோசேப்பினுடைய குமாரர்கள் இருவரையும் ஆசீர்வதித்து, தன் கோலின் முனையிலே சாய்ந்து தொழுதுகொண்டான்.
అపరం యాకూబ్ మరణకాలే విశ్వాసేన యూషఫః పుత్రయోరేకైకస్మై జనాయాశిషం దదౌ యష్ట్యా అగ్రభాగే సమాలమ్బ్య ప్రణనామ చ|
22 ௨௨ விசுவாசத்தினாலே யோசேப்பு இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்தைவிட்டுப் புறப்படுவார்கள் என்பதைப்பற்றித் தன்னுடைய கடைசிகாலத்தில் பேசி, தன் எலும்புகளைத் தங்களோடு எடுத்துக்கொண்டுபோகக் கட்டளைக் கொடுத்தான்.
అపరం యూషఫ్ చరమకాలే విశ్వాసేనేస్రాయేల్వంశీయానాం మిసరదేశాద్ బహిర్గమనస్య వాచం జగాద నిజాస్థీని చాధి సమాదిదేశ|
23 ௨௩ மோசே பிறந்தபோது அவனுடைய பெற்றோர் அவனை அழகான குழந்தையென்று கண்டு, விசுவாசத்தினாலே, ராஜாவினுடைய கட்டளைக்குப் பயப்படாமல் அவனை மூன்று மாதங்கள் ஒளித்து வைத்தார்கள்.
నవజాతో మూసాశ్చ విశ్వాసాత్ త్రాన్ మాసాన్ స్వపితృభ్యామ్ అగోప్యత యతస్తౌ స్వశిశుం పరమసున్దరం దృష్టవన్తౌ రాజాజ్ఞాఞ్చ న శఙ్కితవన్తౌ|
24 ௨௪ விசுவாசத்தினாலே மோசே தான் பெரியவனானபோது பார்வோனுடைய குமாரத்தியின் மகன் என்று சொல்லப்படுவதை வெறுத்து,
అపరం వయఃప్రాప్తో మూసా విశ్వాసాత్ ఫిరౌణో దౌహిత్ర ఇతి నామ నాఙ్గీచకార|
25 ௨௫ நிலையில்லாத பாவசந்தோஷங்களை அனுபவிப்பதைவிட தேவனுடைய மக்களோடு துன்பத்தை அனுபவிப்பதையே தெரிந்துகொண்டு,
యతః స క్షణికాత్ పాపజసుఖభోగాద్ ఈశ్వరస్య ప్రజాభిః సార్ద్ధం దుఃఖభోగం వవ్రే|
26 ௨௬ இனிவரும் பலன்மேல் நோக்கமாக இருந்து, எகிப்தில் உள்ள பொக்கிஷங்களைவிட கிறிஸ்துவுக்காக வரும் நிந்தையை அதிக பாக்கியம் என்று நினைத்தான்.
తథా మిసరదేశీయనిధిభ్యః ఖ్రీష్టనిమిత్తాం నిన్దాం మహతీం సమ్పత్తిం మేనే యతో హేతోః స పురస్కారదానమ్ అపైక్షత|
27 ௨௭ விசுவாசத்தினாலே அவன் கண்ணுக்குத் தெரியாதவரைக் காண்கிறதுபோல உறுதியாக இருந்து, ராஜாவின் கோபத்திற்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.
అపరం స విశ్వాసేన రాజ్ఞః క్రోధాత్ న భీత్వా మిసరదేశం పరితత్యాజ, యతస్తేనాదృశ్యం వీక్షమాణేనేవ ధైర్య్యమ్ ఆలమ్బి|
28 ௨௮ விசுவாசத்தினாலே, தலைப்பிள்ளைகளைக் கொல்லுகிறவன் இஸ்ரவேலரைத் தொடாமல் இருக்க, அவன் பஸ்காவையும் இரத்தம் பூசுதலாகிய நியமத்தையும் ஆசரித்தான்.
అపరం ప్రథమజాతానాం హన్తా యత్ స్వీయలోకాన్ న స్పృశేత్ తదర్థం స విశ్వాసేన నిస్తారపర్వ్వీయబలిచ్ఛేదనం రుధిరసేచనఞ్చానుష్ఠితావాన్|
29 ௨௯ விசுவாசத்தினாலே அவர்கள் செங்கடலை உலர்ந்த தரையைக் கடந்துபோவதைப்போலக் கடந்துபோனார்கள்; எகிப்தியரும் அப்படிக்கடந்துபோகத் துணிந்து மூழ்கிப்போனார்கள்.
అపరం తే విశ్వాసాత్ స్థలేనేవ సూఫ్సాగరేణ జగ్ముః కిన్తు మిస్రీయలోకాస్తత్ కర్త్తుమ్ ఉపక్రమ్య తోయేషు మమజ్జుః|
30 ௩0 விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழுநாட்கள் சுற்றிவரப்பட்டு விழுந்தது.
అపరఞ్చ విశ్వాసాత్ తైః సప్తాహం యావద్ యిరీహోః ప్రాచీరస్య ప్రదక్షిణే కృతే తత్ నిపపాత|
31 ௩௧ விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரர்களைச் சமாதானத்தோடு ஏற்றுக்கொண்டு, கீழ்ப்படியாதவர்களோடு சேர்ந்து அழிந்துபோகாமல் இருந்தாள்.
విశ్వాసాద్ రాహబ్నామికా వేశ్యాపి ప్రీత్యా చారాన్ అనుగృహ్యావిశ్వాసిభిః సార్ద్ధం న విననాశ|
32 ௩௨ பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதரிசிகளையும்குறித்து நான் விபரம் சொல்லவேண்டுமென்றால் காலம்போதாது.
అధికం కిం కథయిష్యామి? గిదియోనో బారకః శిమ్శోనో యిప్తహో దాయూద్ శిమూయేలో భవిష్యద్వాదినశ్చైతేషాం వృత్తాన్తకథనాయ మమ సమయాభావో భవిష్యతి|
33 ௩௩ விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள், சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள்,
విశ్వాసాత్ తే రాజ్యాని వశీకృతవన్తో ధర్మ్మకర్మ్మాణి సాధితవన్తః ప్రతిజ్ఞానాం ఫలం లబ్ధవన్తః సింహానాం ముఖాని రుద్ధవన్తో
34 ௩௪ அக்கினியின் கோபத்தை அணைத்தார்கள், பட்டயக்கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள்; யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியர்களுடைய படைகளை முறியடித்தார்கள்.
వహ్నేర్దాహం నిర్వ్వాపితవన్తః ఖఙ్గధారాద్ రక్షాం ప్రాప్తవన్తో దౌర్బ్బల్యే సబలీకృతా యుద్ధే పరాక్రమిణో జాతాః పరేషాం సైన్యాని దవయితవన్తశ్చ|
35 ௩௫ பெண்கள் சாகக்கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடு எழுந்திருக்கப் பெற்றார்கள்; வேறுசிலர் மேன்மையான உயிர்த்தெழுதலை அடைவதற்கு, விடுதலைபெறச் சம்மதிக்காமல், வாதிக்கப்பட்டார்கள்;
యోషితః పునరుత్థానేన మృతాన్ ఆత్మజాన్ లేభిరే, అపరే చ శ్రేష్ఠోత్థానస్య ప్రాప్తేరాశయా రక్షామ్ అగృహీత్వా తాడనేన మృతవన్తః|
36 ௩௬ வேறுசிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், சிறைக்காவலையும் அனுபவித்தார்கள்;
అపరే తిరస్కారైః కశాభి ర్బన్ధనైః కారయా చ పరీక్షితాః|
37 ௩௭ கல்லெறியப்பட்டார்கள், வாளால் அறுக்கப்பட்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள், செம்மறியாட்டுத் தோல்களையும் வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக்கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும் அனுபவித்தார்கள்;
బహవశ్చ ప్రస్తరాఘాతై ర్హతాః కరపత్రై ర్వా విదీర్ణా యన్త్రై ర్వా క్లిష్టాః ఖఙ్గధారై ర్వా వ్యాపాదితాః| తే మేషాణాం ఛాగానాం వా చర్మ్మాణి పరిధాయ దీనాః పీడితా దుఃఖార్త్తాశ్చాభ్రామ్యన్|
38 ௩௮ உலகம் அவர்களுக்குத் தகுதியாக இருக்கவில்லை; அவர்கள் வனாந்திரங்களிலும், மலைகளிலும், குகைகளிலும், பூமியின் வெடிப்புகளிலும், சிதறி அலைந்தார்கள்.
సంసారో యేషామ్ అయోగ్యస్తే నిర్జనస్థానేషు పర్వ్వతేషు గహ్వరేషు పృథివ్యాశ్ఛిద్రేషు చ పర్య్యటన్|
39 ௩௯ இவர்கள் எல்லோரும் விசுவாசத்தினாலே நற்சாட்சிபெற்றும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை பெற்றுக்கொள்ளாமற்போனார்கள்.
ఏతైః సర్వ్వై ర్విశ్వాసాత్ ప్రమాణం ప్రాపి కిన్తు ప్రతిజ్ఞాయాః ఫలం న ప్రాపి|
40 ௪0 நாம் இல்லாமல் அவர்கள் பூரணர்களாகாதபடி விசேஷித்த நன்மையானதை தேவன் நமக்காக முன்னதாகவே நியமித்திருந்தார்.
యతస్తే యథాస్మాన్ వినా సిద్ధా న భవేయుస్తథైవేశ్వరేణాస్మాకం కృతే శ్రేష్ఠతరం కిమపి నిర్దిదిశే|