< ஆபகூக் 3 >
1 ௧ ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் பாடின விண்ணப்பம்.
Ang pag-ampo ni Habacuc nga manalagna, gihimo pinaagi sa Sigionoth.
2 ௨ யெகோவாவே, நீர் வெளிப்படுத்தினதை நான் கேட்டேன், எனக்குப் பயமுண்டானது; யெகோவாவே, வருடங்களின் நடுவிலே உம்முடைய செயலை உயிர்ப்பியும், வருடங்களின் நடுவிலே அதை விளங்கச்செய்யும்; கோபித்தாலும் இரக்கத்தை நினைத்தருளும்.
Oh Jehova, nabati ko ang balita mahitungod kanimo, ug ako nahadlok: Oh Jehova, buhia ang imong buhat sa taliwala sa katuigan; Sa taliwala sa katuigan ipahibalo kini; Sa kaligutgut hinumdumi ang kalooy.
3 ௩ தேவன் தேமானிலிருந்தும், பரிசுத்தர் பாரான் மலையிலிருந்தும் வந்தார்; (சேலா) அவருடைய மகிமை வானங்களை மூடிக்கொண்டது; அவர் துதியினால் பூமி நிறைந்தது.
Ang Dios mianhi gikan sa Teman, Ug ang Balaan gikan sa bukid sa Paran (Selah) Ang iyang himaya milukop sa kalangitan, Ug ang yuta napuno sa pagdayeg kaniya.
4 ௪ அவருடைய பிரகாசம் சூரியனைப்போலிருந்தது; அவருடைய கரத்திலிருந்து கிரணங்கள் வீசின; அங்கே அவருடைய பராக்கிரமம் மறைந்திருந்தது.
Ug ang iyang kahayag maingon sa suga; Siya adunay mga kasilaw nga nagagikan sa iyang kamot; Ug didto gitagoan ang iyang kagahum.
5 ௫ அவருக்கு முன்பாகக் கொள்ளைநோய் சென்றது; அவர் அடிகளிலிருந்து எரிபந்தமான காய்ச்சல் புறப்பட்டது.
Kaniya nagauna ang kamatay, ug ang mga baga minggula didto sa iyang mga tiil.
6 ௬ அவர் நின்று பூமியை அளந்தார்; அவர் பார்த்து அந்நிய மக்களைக் கரையச்செய்தார்; முந்தின மலைகள் சிதறடிக்கப்பட்டது, என்றுமுள்ள மலைகள் தாழ்ந்தது; அவருடைய நடைகள் நித்திய நடைகளாயிருந்தது.
Mitindog siya ug gisukod ang yuta; Mitan-aw siya, ug gibulagbulag ang mga nasud; Ug gipanagkatag ang walay-katapusan nga kabukiran; Nangaunlod ang mga bungtod nga walay katapusan; Ang iyang mga paglakaw maingon man sa kanhing panahon.
7 ௭ கூஷானின் கூடாரங்கள் வருத்தத்தில் அகப்பட்டிருக்கக்கண்டேன்; மீதியான் தேசத்தின் கூடாரங்கள் நடுங்கின.
Nakita ko ang mga balong-balong sa Cushan nga diha sa kagulanan; Nangurog ang mga tabil sa yuta sa Madian.
8 ௮ யெகோவா நதிகளின்மேல் கோபமாயிருந்தாரோ? தேவரீர் உம்முடைய குதிரைகளின்மேலும் காப்பாற்றுகிற உம்முடைய இரதங்களின்மேலும் ஏறிவருகிறபோது, உமது கோபம் நதிகளுக்கும் உமது சினம் சமுத்திரத்திற்கும் விரோதமாயிருந்ததோ?
Gikayugtan ba ni Jehova ang mga suba, Nasuko ba ikaw batok sa mga suba, Kun batok ba sa dagat ang imong kaligutgut, Nga nagkabayo man ikaw sa imong mga kabayo, Sa imong mga carro sa kaluwasan?
9 ௯ கோத்திரங்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த வாக்கின்படியே உம்முடைய வில் நாணேற்றப்பட்டதாக விளங்கினது; (சேலா) நீரே பூமியைப் பிளந்து ஆறுகளை உண்டாக்கினீர்.
Ang imong pana gihimo nga walay putos; Ang mga panumpa sa kabanayan maoy pulong nga matuod. (Selah) Imong gibahin ang yuta pinaagi sa mga suba.
10 ௧0 மலைகள் உம்மைக்கண்டு நடுங்கின; தண்ணீர் திரண்டு கடந்துபோனது; கடல் இரைந்தது, அதின் அலைகளைஉயர எழுந்தது.
Nanagpakakita kanimo ang kabukiran, ug nangahadlok; Miagi ang unos sa kadagatan; Nagpagula sa iyang tingog ang kahiladman, Ug gibayaw ang iyang mga kamot sa itaas.
11 ௧௧ சந்திரனும் சூரியனும் தன்தன் மண்டலத்தில் நின்றன; உமது அம்புகளின் வெளிச்சத்திலும், உமது ஈட்டியினுடைய மின்னல் பிரகாசத்திலும் நடந்தன.
Ang adlaw ug ang bulan ming-urong sa walay paglihok sa ilang pinuy-anan, Sa kahayag sa imong mga udyong samtang (sila) nanagpanaw, Sa kasanag sa imong masidlakong bangkaw.
12 ௧௨ நீர் கோபத்துடன் பூமியில் நடந்தீர், உக்கிரத்துடன் மக்களைப் போரடித்தீர்.
Milatas ka sa kasuko sa yuta; Gigiukan mo tungod sa kasuko ang mga nasud.
13 ௧௩ உமது மக்களின் பாதுகாப்பிற்காகவும் நீர் அபிஷேகம்செய்தவனின் பாதுகாப்பிற்காகவுமே நீர் புறப்பட்டீர்; கழுத்தளவாக அஸ்திபாரத்தைத் திறப்பாக்கி, தீயவனுடைய வீட்டிலிருந்த தலைவனை வெட்டினீர்; (சேலா)
Mipanaw ka alang sa kaluwasan sa imong katawohan, Alang sa kaluwasan sa imong dinihog; Gisamaran mo ang ulo gikan sa balay sa dautang tawo, Ginaablihan ang patukoranan bisan hangtud sa liog. (Selah)
14 ௧௪ என்னைச் சிதறடிப்பதற்குப் பெருங்காற்றைப்போல் வந்தார்கள்; சிறுமையானவனை மறைவிடத்திலே அழிப்பது அவர்களுக்குச் சந்தோஷமாயிருந்தது; நீர் அவனுடைய ஈட்டிகளினாலேயே அவனுடைய சேனைகளின் அதிபதிகளை உருவக் குத்தினீர்.
Gipalagbasan mo sa iyang kaugalingong mga bangkaw ang ulo sa iyang mga manggugubat: Ming-anhi (sila) ingon sa bagyo sa pagkatag kanako; Ang ilang panagmaya sama niadtong molamoy sa kabus sa tago nga dapit.
15 ௧௫ திரளான தண்ணீர் குவியலாகிய சமுத்திரத்திற்குள் உமது குதிரைகளுடன் நடந்துபோனீர்.
Imong gipayatakan ang dagat sa imong mga kabayo, Ang gantong sa gamhanan nga mga tubig.
16 ௧௬ நான் கேட்டபோது என் குடல் குழம்பியது; அந்தச் சத்தத்திற்கு என் உதடுகள் துடித்தது; என் எலும்புகளில் பெலவீனம் உண்டானது; என் நிலையிலே நடுங்கினேன்; ஆனாலும் எங்களோடு எதிர்க்கும் மக்கள் வரும்போது, இக்கட்டுநாளிலே நான் இளைப்பாறுதல் அடைவேன்.
Nakabati ako, ug mikurog ang akong lawas, Nangurog ang akong mga ngabil sa tingog; Misulod sa akong kabukogan ang kadunotan, ug mikurog ako sa akong himutangan; Kay sa hilum kinahanglan maga-hulat ako sa adlaw sa kasamok, Alang sa pag-abut sa katawohan nga mosulong kanamo.
17 ௧௭ அத்திமரம் துளிர்விடாமற்போனாலும், திராட்சைச்செடிகளில் பழம் உண்டாகாமற்போனாலும், ஒலிவமரத்தின் பலன் இல்லாமல் போனாலும், வயல்கள் தானியத்தை விளைவிக்காமற்போனாலும், கிடையில் ஆட்டுமந்தைகள் முதலற்றுப்போனாலும், தொழுவத்திலே மாடுகள் இல்லாமற்போனாலும்,
Kay bisan ang kahoyng higuera dili molambo, Ni may mga bunga diha sa mga balagon; Ang buhat sa olivo makawang, Ug ang kaumahan dili mohatag sa makaon; Ang mga carnero, pagalaglagon gi-kan sa mga toril, Ug didto walay mga panon sa vaca sulod sa mga kamalig:
18 ௧௮ நான் யெகோவாவுக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
Bisan pa niana magamaya ako diha kang Jehova, Magamalipayon ako sa Dios sa akong kaluwasan.
19 ௧௯ ஆண்டவராகிய யெகோவா என் பெலன்; அவர் என் கால்களை மான்கால்களைப்போலாக்கி, உயரமான இடங்களில் என்னை நடக்கச்செய்வார். இது நெகிநோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்டப் பாடல்.
Si Jehova, nga Ginoo, mao ang akong kalig-on; Ug ang akong mga tiil himoon niya nga sama sa mga tiil sa mga bayeng lagsaw, Ug palakton ako niya sa mga hatag-as nakong dapit.