< ஆதியாகமம் 5 >
1 ௧ ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார்.
Вот родословие Адама: когда Бог сотворил человека, по подобию Божию создал его,
2 ௨ அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார்.
мужчину и женщину сотворил их, и благословил их, и нарек им имя: человек, в день сотворения их.
3 ௩ ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான்.
Адам жил сто тридцать лет и родил сына по подобию своему и по образу своему, и нарек ему имя: Сиф.
4 ௪ ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
Дней Адама по рождении им Сифа было восемьсот лет, и родил он сынов и дочерей.
5 ௫ ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней жизни Адамовой было девятьсот тридцать лет; и он умер.
6 ௬ சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான்.
Сиф жил сто пять лет и родил Еноса.
7 ௭ சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Еноса Сиф жил восемьсот семь лет и родил сынов и дочерей.
8 ௮ சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Сифовых было девятьсот двенадцать лет; и он умер.
9 ௯ ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான்.
Енос жил девяносто лет и родил Каинана.
10 ௧0 ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Каинана Енос жил восемьсот пятнадцать лет и родил сынов и дочерей.
11 ௧௧ ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான்.
Всех же дней Еноса было девятьсот пять лет; и он умер.
12 ௧௨ கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான்.
Каинан жил семьдесят лет и родил Малелеила.
13 ௧௩ கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Малелеила Каинан жил восемьсот сорок лет и родил сынов и дочерей.
14 ௧௪ கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Каинана было девятьсот десять лет; и он умер.
15 ௧௫ மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான்.
Малелеил жил шестьдесят пять лет и родил Иареда.
16 ௧௬ மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Иареда Малелеил жил восемьсот тридцать лет и родил сынов и дочерей.
17 ௧௭ மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Малелеила было восемьсот девяносто пять лет; и он умер.
18 ௧௮ யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான்.
Иаред жил сто шестьдесят два года и родил Еноха.
19 ௧௯ யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Еноха Иаред жил восемьсот лет и родил сынов и дочерей.
20 ௨0 யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Иареда было девятьсот шестьдесят два года; и он умер.
21 ௨௧ ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான்.
Енох жил шестьдесят пять лет и родил Мафусала.
22 ௨௨ ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
И ходил Енох пред Богом, по рождении Мафусала, триста лет и родил сынов и дочерей.
23 ௨௩ ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள்.
Всех же дней Еноха было триста шестьдесят пять лет.
24 ௨௪ ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.
И ходил Енох пред Богом; и не стало его, потому что Бог взял его.
25 ௨௫ மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
Мафусал жил сто восемьдесят семь лет и родил Ламеха.
26 ௨௬ மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
По рождении Ламеха Мафусал жил семьсот восемьдесят два года и родил сынов и дочерей.
27 ௨௭ மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Мафусала было девятьсот шестьдесят девять лет; и он умер.
28 ௨௮ லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து,
Ламех жил сто восемьдесят два года и родил сына,
29 ௨௯ “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
и нарек ему имя: Ной, сказав: он утешит нас в работе нашей и в трудах рук наших при возделывании земли, которую проклял Господь Бог.
30 ௩0 லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான்.
И жил Ламех по рождении Ноя пятьсот девяносто пять лет и родил сынов и дочерей.
31 ௩௧ லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான்.
Всех же дней Ламеха было семьсот семьдесят семь лет; и он умер.
32 ௩௨ நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
Ною было пятьсот лет и родил Ной трех сынов: Сима, Хама и Иафета.