< ஆதியாகமம் 49 >
1 ௧ யாக்கோபு தன் மகன்களை அழைத்து: “நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்குச் சம்பவிக்கும் காரியங்களை அறிவிப்பேன்.
És szólítá Jákób az ő fiait, és monda: Gyűljetek egybe, hadd jelentsem meg néktek, a mi rátok következik a messze jövőben.
2 ௨ யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; உங்கள் தகப்பனாகிய இஸ்ரவேலுக்குச் செவிகொடுங்கள்”.
Gyűljetek össze s hallgassatok Jákóbnak fiai! hallgassatok Izráelre, a ti atyátokra.
3 ௩ “ரூபனே, நீ என் முதற்பிறந்தவன்; நீ என் திறமையும், என் முதற்பெலனுமானவன்; நீ மேன்மையில் பிரதானமும் வல்லமையில் விசேஷமுமானவன்.
Rúben, te elsőszülöttem, erőm, tehetségem zsengéje, első a méltóságban, első a hatalomban.
4 ௪ தண்ணீரைப்போல தளம்பினவனே, நீ மேன்மை அடையமாட்டாய்; உன் தகப்பனுடைய படுக்கையின்மேல் ஏறினாய்; நீ அதைத் தீட்டுப்படுத்தினாய்; என் படுக்கையின்மேல் ஏறினானே.
Állhatatlan, mint a víz, nem leszesz első, mivel atyád ágyába léptél fel: akkor megfertőztetted! Nyoszolyámba lépett ő.
5 ௫ சிமியோனும், லேவியும் சகோதரர்கள்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.
Simeon és Lévi atyafiak, erőszak eszközei az ő fegyverök.
6 ௬ என் ஆத்துமாவே, அவர்களுடைய இரகசிய ஆலோசனைக்கு உடன்படாதே; என் மேன்மையே, அவர்கள் கூட்டத்தில் நீ சேராதே; அவர்கள் தங்கள் கோபத்தினாலே ஒரு மனிதனைக் கொன்று, தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை அழித்தார்களே.
Tanácsukban ne légyen részes lelkem, gyűlésükkel ne egyesűljön dicsőségem, mert haragjokban férfit öltek, s kedvök telve inát szegték az ökörnek.
7 ௭ அவர்களுடைய கடுமையான கோபமும், கொடுமையான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; யாக்கோபிலே அவர்களைப் பிரியவும், இஸ்ரவேலிலே அவர்களைச் சிதறவும் செய்வேன்.
Átkozott haragjok, mert erőszakos, és dühök, mivel kegyetlen; eloszlatom őket Jákóbban, és elszélesztem Izráelben.
8 ௮ யூதாவே, சகோதரர்களால் புகழப்படுபவன் நீயே; உன் கை உன் எதிரிகளுடைய கழுத்தின்மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய மகன்கள் உன்னைப் பணிவார்கள்.
Júda! téged magasztalnak atyádfiai, kezed ellenségeidnek nyakán lesz s meghajolnak előtted atyáidnak fiai.
9 ௯ யூதா பெரிய சிங்கம், நீ இரையை விரும்பி ஏறிப்போனாய்; என் மகனே, சிங்கம்போலும் கிழச்சிங்கம்போலும் மடங்கிப்படுத்தான்; அவனை எழுப்புகிறவன் யார்?
Oroszlánkölyök Júda; zsákmányt ejtvén, felmentél, fiam! Lehevert, lenyúgodott, mint a hím oroszlán, és mint nőstény oroszlán; ki veri őt fel?
10 ௧0 சமாதானக் யெகோவா வரும்வரைக்கும் செங்கோல் யூதாவைவிட்டு நீங்குவதும் இல்லை, ஆளுகை அவனுடைய பாதங்களைவிட்டு ஒழிவதும் இல்லை; மக்கள் அவரிடத்தில் சேருவார்கள்.
Nem múlik el Júdától a fejedelmi bot, sem a vezéri pálcza térdei közűl; míg eljő Siló, és a népek néki engednek.
11 ௧௧ அவன் தன் கழுதைக்குட்டியைத் திராட்சைச்செடியிலும், தன் பெண்கழுதையின் குட்டியை உயர்தர திராட்சைச்செடியிலும் கட்டுவான்; திராட்சை ரசத்திலே தன் ஆடையையும், திராட்சைப்பழங்களின் இரத்தத்திலே தன் அங்கியையும் வெளுப்பான்.
Szőlőtőhöz köti szamarát, és nemes venyigéhez szamara vemhét, ruháját borban mossa, felöltőjét a szőlő vérében.
12 ௧௨ அவனுடைய கண்கள் திராட்சைரசத்தினால் சிவப்பாகவும், அவனுடைய பற்கள் பாலினால் வெண்மையாகவும் இருக்கும்.
Bortól veresek szemei, tejtől fehérek fogai.
13 ௧௩ செபுலோன் கடற்கரை அருகே குடியிருப்பான்; அவன் கப்பல் துறைமுகமாக இருப்பான்; அவனுடைய எல்லை சீதோன்வரைக்கும் இருக்கும்.
Zebulon a tenger partjáig lakozik, azaz a hajók kikötőjéig s határának széle Czídonig ér.
14 ௧௪ இசக்கார் இரண்டு சுமைகளின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.
Izsakhár erős csontú szamár, a karámok közt heverész.
15 ௧௫ அவன், இளைப்பாறுதல் நல்லது என்றும், நாடு வசதியானது என்றும் கண்டு, சுமக்கிறதற்குத் தன் தோளைச் சாய்த்து, கூலிவேலை செய்கிறவனானான்.
S látja, hogy jó a nyugalom és hogy a föld mily kies: teher alá hajtja hátát, s robotoló szolgává lesz.
16 ௧௬ தாண் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாகி, தன் ஜனத்தை நியாயம் விசாரிப்பான்.
Dán ítéli az ő népét, mint Izráel akármelyik nemzetsége.
17 ௧௭ தாண், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாக அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற பாம்பைப்போலவும், பாதையில் இருக்கிற விரியனைப்போலவும் இருப்பான்.
Dán kígyó lesz az úton, szarvaskígyó az ösvényen, mely a ló körmébe harap, hogy lovagja hanyatt esik.
18 ௧௮ யெகோவாவே, உம்மாலே விடுவிக்கப்படக் காத்திருக்கிறேன்.
Szabadításodra várok Uram!
19 ௧௯ காத் என்பவன்மேல் ராணுவக்கூட்டம் பாய்ந்துவிழும்; அவனோ முடிவிலே அதின்மேல் பாய்ந்துவிழுவான்.
Gád! had háborgatja; majd ő hág annak sarkába.
20 ௨0 ஆசேருடைய ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிகரமானவைகளை அவன் தருவான்.
Ásernek kenyere kövér, királyi csemegét szolgáltat.
21 ௨௧ நப்தலி விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.
Nafthali, gyorslábú szarvas, az ő beszéde kedves.
22 ௨௨ யோசேப்பு கனிதரும் செடி; அவன் நீரூற்றின் அருகில் உள்ள கனிதரும் செடி; அதின் கொடிகள் சுவரின்மேல் படரும்.
Termékeny fa József, termő ág a forrás mellett, ágazata meghaladja a kőfalat.
23 ௨௩ வில்வீரர்கள் அவனை மனவருத்தமாக்கி, அவன்மேல் எய்து, அவனைப் பகைத்தார்கள்.
Keserítik, lövöldözik és üldözik a nyilazók:
24 ௨௪ ஆனாலும், அவனுடைய வில் உறுதியாக நின்றது; அவனுடைய புயங்கள் யாக்கோபுடைய வல்லவரின் கைகளால் பலமடைந்தன; இதினால் அவன் மேய்ப்பனும் இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான்.
De mereven marad kézíve, feszülten keze karjai, Jákób Hatalmasának kezétől, onnan, Izráel pásztorától, kősziklájától.
25 ௨௫ உன் தகப்பனுடைய தேவனாலே அப்படியாயிற்று, அவர் உனக்குத் துணையாயிருப்பார்; சர்வவல்லவராலே அப்படியாயிற்று, அவர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், மார்பகங்களுக்கும் கர்ப்பங்களுக்கும் உரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.
Atyád Istenétől, a ki segéljen; a mindenhatótól, a ki megáldjon, az ég áldásaival, onnan felülről, a mélység áldásaival, mely alant terül, az emlők és anyaméh áldásaival.
26 ௨௬ உன் தகப்பனுடைய ஆசீர்வாதங்கள் என் பிதாக்களுடைய ஆசீர்வாதங்களுக்கு மேற்பட்டதாயிருந்து, நித்திய பர்வதங்களின் முடிவுவரைக்கும் எட்டுகின்றன; அவைகள் யோசேப்புடைய தலையின் மேலும், தன் சகோதரர்களில் விசேஷித்தவனுடைய உச்சந்தலையின்மேலும் வருவதாக.
Atyád áldásai meghaladják az ős hegyek áldásait, az örök halmok kiességeit. Szálljanak József fejére, a testvérek közűl kiválasztatottnak koponyájára.
27 ௨௭ பென்யமீன் பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையை அழிப்பான், மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” என்றான்.
Benjámin ragadozó farkas: reggel ragadományt eszik, este pedig zsákmányt oszt.
28 ௨௮ இவர்கள் எல்லோரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் அவர்களை ஆசீர்வதிக்கும்போது, அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்.
Mind ezek Izráel nemzetségei, tizenketten, és ez az a mit mondott nékik az ő atyjok, mikor őket megáldá; mindeniket tulajdon áldásával áldá meg.
29 ௨௯ பின்னும் அவன் அவர்களை நோக்கி: “நான் என் ஜனத்தாரோடு சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களருகில் அடக்கம் செய்யுங்கள்” என்று கட்டளையிட்டு;
És parancsola nékik és monda: Én az én népemhez takaríttatom, temessetek engem az én atyáimhoz, ama barlangba, mely a Khitteus Efron mezején van.
30 ௩0 அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா எனப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாக இருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனான எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார்.
Abba a barlangba, mely Kanaán földén Mamré átellenében Makpelahnak mezején van, melyet megvett Ábrahám a mezővel együtt a Khitteus Efrontól, temetésre való örökségül.
31 ௩௧ அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்செய்தார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்செய்தேன்.
Oda temették el Ábrahámot és Sárát az ő feleségét; oda temették Izsákot és Rebekát az ő feleségét; s oda temettem el Leát is.
32 ௩௨ அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் மகன்களிடமிருந்து வாங்கப்பட்டது” என்றான்.
Szerzemény e mező és a barlang, mely abban van, a Khéth fiaitól.
33 ௩௩ யாக்கோபு தன் மகன்களுக்குக் கட்டளையிட்டு முடிந்தபின்பு, அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் மடக்கிக்கொண்டு உயிர்போய், தன் மக்களோடு சேர்க்கப்பட்டான்.
És elvégezé Jákób a mit fiainak parancsolt és fölszedé lábait az ágyra, és kimúlék és az ő népéhez takaríttaték.