< ஆதியாகமம் 47 >

1 யோசேப்பு பார்வோனிடம் சென்று: “என்னுடைய தகப்பனும், சகோதரர்களும், தங்களுடைய ஆடுமாடுகளோடும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றோடும்கூடக் கானான்தேசத்திலிருந்து வந்தார்கள்; இப்பொழுது கோசேன் நாட்டில் இருக்கிறார்கள்” என்று சொல்லி;
Пришед же Иосиф, поведа фараону глаголя: отец мой и братия моя, и скоти и волове их, и вся сущая их приидоша из земли Ханаани: и се, суть в земли Гесем.
2 தன் சகோதரர்களில் ஐந்துபேரைப் பார்வோனுக்கு முன்பாகக் கொண்டுபோய் நிறுத்தினான்.
От братий же своих поя пять мужей и постави их пред фараоном.
3 பார்வோன் அவனுடைய சகோதரர்களை நோக்கி: “உங்களுடைய தொழில் என்ன” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “உமது அடியாராகிய நாங்களும் எங்கள் பிதாக்களும் மந்தை மேய்க்கிறவர்கள் என்று பார்வோனிடத்தில் சொன்னதுமன்றி,
И рече фараон к братиям Иосифовым: что дело ваше? Они же реша фараону: пастуси овчии, раби твои, и мы и отцы наши отдетска и доселе.
4 கானான் தேசத்திலே பஞ்சம் கொடிதாயிருக்கிறது; உமது அடியாரின் மந்தைகளுக்கு மேய்ச்சல் இல்லாததால், இந்த தேசத்திலே தங்கவந்தோம்; உமது அடியாராகிய நாங்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்க தயவுசெய்யவேண்டும்” என்று வேண்டிக்கொண்டார்கள்.
Рекоша же фараону: обитати в земли приидохом, несть бо пажити скотом раб твоих: одоле бо глад на земли Ханаани: ныне убо да вселимся раби твои в земли Гесем.
5 அப்பொழுது பார்வோன் யோசேப்பை நோக்கி: “உன்னுடைய தகப்பனும், சகோதரர்களும் உன்னிடத்தில் வந்திருக்கிறார்களே.
И рече фараон Иосифу, глаголя: отец твой и братия твоя приидоша к тебе:
6 எகிப்துதேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் குடியேறும்படி செய்; அவர்கள் கோசேன் நாட்டிலே குடியிருக்கலாம்; அவர்களுக்குள்ளே திறமையுள்ளவர்கள் உண்டென்று உனக்குத் தெரிந்திருந்தால், அவர்களை என் ஆடுமாடுகளை விசாரிக்கிறதற்குத் தலைவராக ஏற்படுத்தலாம் என்றான்.
се, земля Египетская пред тобою есть: на лучшей земли посели отца твоего и братию твою, да вселятся в земли Гесем: аще же веси, яко суть в них мужие сильнии, постави их старейшины скотом моим. (приидоша же во Египет ко Иосифу Иаков и сынове его: и услыша фараон царь Египетский).
7 பின்பு, யோசேப்பு தன் தகப்பனாகிய யாக்கோபை அழைத்துக்கொண்டுவந்து, அவனைப் பார்வோனுக்கு முன்பாக நிறுத்தினான். யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்.
Введе же Иосиф Иакова отца своего и постави его пред фараоном, и благослови Иаков фараона.
8 பார்வோன் யாக்கோபை நோக்கி: “உமக்கு வயது என்ன” என்று கேட்டான்.
Рече же фараон ко Иакову: колико лет дний жития твоего?
9 அதற்கு யாக்கோபு: “நான் பரதேசியாக வாழ்ந்த நாட்கள் 130 வருடங்கள்; என் ஆயுசு நாட்கள் கொஞ்சமும் வேதனை நிறைந்ததுமாக இருக்கிறது; அவைகள் பரதேசிகளாக வாழ்ந்த என் பிதாக்களுடைய ஆயுசு நாட்களுக்கு வந்து எட்டவில்லை” என்று பார்வோனுடனே சொன்னான்.
И рече Иаков фараону: дние лет жития моего, яже обитаю, сто тридесять лет: малы и злы быша дние лет жития моего: не достигоша во дни лет жития отец моих, яже дни обиташа.
10 ௧0 பின்னும் யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்து, அவனிடத்திலிருந்து புறப்பட்டுப்போனான்.
И благословив Иаков фараона, отиде от него.
11 ௧௧ பார்வோன் கட்டளையிட்டபடியே, யோசேப்பு தன்னுடைய தகப்பனுக்கும், சகோதரர்களுக்கும் எகிப்துதேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டைச் சொந்தமாகக் கொடுத்து, அவர்களைக் குடியேற்றினான்.
И всели Иосиф отца своего и братию свою, и даде им обдержание в земли Египетстей, на лучшей земли, в земли Рамессийстей, якоже повеле фараон.
12 ௧௨ யோசேப்பு தன்னுடைய தகப்பனையும், சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தார் அனைவரையும், அவரவர்கள் குடும்பத்திற்குத்தக்கதாக ஆகாரம் கொடுத்து ஆதரித்துவந்தான்.
И деляше Иосиф пшеницу отцу своему и братии своей и всему дому отца своего по числу лиц.
13 ௧௩ பஞ்சம் மிகவும் கொடிதாயிருந்தது; தேசமெங்கும் ஆகாரம் கிடைக்காமல்போனது; எகிப்துதேசமும் கானான்தேசமும் பஞ்சத்தினாலே நலிந்துபோனது.
Пшеницы же не бяше во всей земли, одоле бо глад зело: скончавашеся же земля Египетская и земля Ханааня от глада.
14 ௧௪ யோசேப்பு எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணத்தையெல்லாம் தானியம் வாங்கியவர்களிடத்திலிருந்து பெற்று, அதைப் பார்வோன் அரண்மனையிலே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
Собра же Иосиф все сребро обретшееся в земли Египетстей и в земли Ханаани, за пшеницу, юже куповаху, и размеряше им пшеницу, и внесе Иосиф все сребро в дом фараонов.
15 ௧௫ எகிப்துதேசத்திலும் கானான்தேசத்திலுமுள்ள பணம் செலவழிந்தபோது, எகிப்தியர்கள் எல்லோரும் யோசேப்பினிடத்தில் வந்து: “எங்களுக்கு ஆகாரம் தாரும்; பணம் இல்லை, அதினால் நாங்கள் உமக்கு முன்பாகச் சாகவேண்டுமோ” என்றார்கள்.
И оскуде все сребро от земли Египетския и от земли Ханаанския: приидоша же вси Египтяне ко Иосифу, глаголюще: даждь нам хлебы, и вскую умираем пред тобою? Скончася бо сребро наше.
16 ௧௬ அதற்கு யோசேப்பு: “உங்களிடத்தில் பணம் இல்லாமல்போனால், உங்கள் ஆடுமாடுகளைக் கொடுங்கள்; அவைகளுக்குப் பதிலாக உங்களுக்குத் தானியம் கொடுக்கிறேன்” என்றான்.
Рече же им Иосиф: пригоните скоты вашя, и дам вам хлебы за скоты вашя, аще скончася сребро ваше.
17 ௧௭ அவர்கள் தங்கள் ஆடுமாடு முதலானவைகளை யோசேப்பினிடத்தில் கொண்டுவந்தார்கள்; யோசேப்பு குதிரைகளையும் ஆடுகளையும் மாடுகளையும் கழுதைகளையும் வாங்கிக்கொண்டு, அந்த வருடம் அவர்களுடைய ஆடுமாடு முதலான எல்லாவற்றிற்கும் பதிலாக அவர்களுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களை ஆதரித்தான்.
Пригнаша же скоты своя ко Иосифу, и даде им Иосиф хлебы за кони и за овцы, и за волы и за ослы, и прекорми их хлебами за вся скоты их в том лете.
18 ௧௮ அந்த வருடம் முடிந்தபின், அடுத்தவருடத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: “பணமும் செலவழிந்துபோனது; எங்களுடைய ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்களுடைய சரீரமும், நிலமுமே அல்லாமல், எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை; இது எங்கள் ஆண்டவனுக்குத் தெரியாத காரியம் அல்ல.
Прейде же то лето, и приидоша к нему во второе лето и рекоша ему: да не како погибнем от господина нашего? Аще бо скончася сребро наше, и имение и скоты пред тобою, господине, и не остася нам пред господином нашим, точию едино тело и земля наша:
19 ௧௯ நாங்களும் எங்களுடைய நிலங்களும் உம்முடைய கண்களுக்கு முன்பாக அழிந்து போகலாமா? நீர் எங்களையும் எங்களுடைய நிலங்களையும் வாங்கிக்கொண்டு, ஆகாரம் கொடுக்கவேண்டும்; நாங்களும் எங்களுடைய நிலங்களும் பார்வோனுக்கு உடைமைகளாயிருப்போம்; நாங்கள் சாகாமல் உயிரோடிருக்கவும், நிலங்கள் பாழாகப் போகாமலிருக்கவும், எங்களுக்கு விதைத்தானியத்தைத் தாரும்” என்றார்கள்.
да не умрем убо пред тобою, и земля опустеет, купи нас и землю нашу хлебами: и будем мы и земля наша раби фараону: даждь семя, да посеем и живи будем, и не умрем, и земля не опустеет.
20 ௨0 அப்படியே எகிப்தியர்கள் தங்களுக்குப் பஞ்சம் அதிகமானதால் அவரவர் தங்கள் தங்கள் வயல் நிலங்களை விற்றார்கள்; யோசேப்பு எகிப்தின் நிலங்கள் எல்லாவற்றையும் பார்வோனுக்காக வாங்கினான்; இந்த விதமாக அந்த பூமி பார்வோனுடையதாயிற்று.
И купи Иосиф всю землю Египетскую фараону: продаша бо Египтяне землю свою фараону, ибо одоле им глад: и бысть земля фараону.
21 ௨௧ மேலும் அவன் எகிப்தின் ஒரு எல்லை முதல் மறு எல்லைவரைக்குமுள்ள மக்களை அந்தந்தப் பட்டணங்களில் குடிமாறிப்போகச்செய்தான்.
И люди поработи ему в рабы, от края предел Египетских даже до краев,
22 ௨௨ ஆசாரியர்களுடைய நிலத்தை மாத்திரம் அவன் வாங்கவில்லை; அது பார்வோனாலே ஆசாரியர்களுக்கு மானியமாகக் கொடுக்கப்பட்டிருந்ததாலும், பார்வோன் அவர்களுக்குக் கொடுத்த மானியத்தினாலே அவர்கள் வாழ்க்கை நடத்திவந்ததாலும், அவர்கள் தங்கள் நிலத்தை விற்கவில்லை.
кроме земли жреческия токмо, тоя бо не купи Иосиф: даянием бо даде в дар жерцем фараон, и ядяху даяние, еже даде им фараон: сего ради не продаша земли своея.
23 ௨௩ பின்னும் யோசேப்பு மக்களை நோக்கி: “இதோ, இன்று உங்களையும் உங்கள் நிலங்களையும் பார்வோனுக்காக வாங்கிக்கொண்டேன்; இதோ, உங்களுக்குக் கொடுக்கப்படுகிற விதைத் தானியம், இதை நிலத்தில் விதையுங்கள்.
Рече же Иосиф всем Египтяном: се, купих вас и землю вашу днесь фараону: возмите себе семена и сейте на земли:
24 ௨௪ விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கைப் பார்வோனுக்குக் கொடுக்கவேண்டும்; மற்ற நான்கு பங்கும் வயலுக்கு விதையாகவும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் ஆகாரமாகவும் உங்களுடையதாகவும் இருக்கட்டும்” என்றான்.
и будут плоды ея, и да дасте пятую часть фараону, четыри же части будут вам самем в семена земли и на препитание вам и всем сущым в домех ваших.
25 ௨௫ அப்பொழுது அவர்கள்: “நீர் எங்களுடைய உயிரைக் காப்பாற்றினீர்; எங்கள் ஆண்டவனுடைய கண்களில் எங்களுக்குத் தயவு கிடைக்கவேண்டும்; நாங்கள் பார்வோனுக்கு அடிமைகளாயிருக்கிறோம்” என்றார்கள்.
И рекоша: оживил ны еси, обретохом благодать пред господином нашим, и будем раби фараону.
26 ௨௬ ஐந்தில் ஒன்று பார்வோனுக்குச் சேரும் வாரம் என்று யோசேப்பு விதித்த கட்டளையின்படி எகிப்து தேசத்திலே இந்த நாள்வரைக்கும் நடந்துவருகிறது; ஆசாரியரின் நிலம் மாத்திரம் பார்வோனைச் சேராமலிருந்தது.
И устави им Иосиф заповедь даже до сего дне на земли Египетстей пятую часть даяти фараону, кроме земли жреческия: та точию не бяше фараоня.
27 ௨௭ இஸ்ரவேலர்கள் எகிப்து தேசத்திலுள்ள கோசேன் நாட்டிலே குடியிருந்தார்கள்; அங்கே நிலங்களை உரிமைபாராட்டி, மிகவும் பலுகிப் பெருகினார்கள்.
Вселися же Израиль в земли Египетстей, на земли Гесем, и наследствоваше ю: и возрастоша, и умножишася зело.
28 ௨௮ யாக்கோபு எகிப்து தேசத்திலே பதினேழு வருடங்கள் இருந்தான்; யாக்கோபுடைய ஆயுசு நாட்கள் நூற்றுநாற்பத்தேழு வருடங்கள்.
Поживе же Иаков в земли Египетстей седмьнадесять лет: и быша дние Иаковли лет жизни его, сто четыредесять седмь лет.
29 ௨௯ இஸ்ரவேல் மரணமடையும் காலம் நெருங்கியது. அப்பொழுது அவன் தன் மகனாகிய யோசேப்பை வரவழைத்து, அவனை நோக்கி: “என்மேல் உனக்குத் தயவுண்டானால், உன் கையை என் தொடையின்கீழ் வைத்து எனக்கு நம்பிக்கையும் உண்மையுமுள்ளவனாயிரு; என்னை எகிப்திலே அடக்கம் செய்யாதிருப்பாயாக.
Приближишася же дние Израилю еже умрети, и призва сына своего Иосифа и рече ему: аще обретох благодать пред тобою, подложи руку твою под стегно мое и сотвориши надо мною милость и истину, еже не погребсти мене во Египте,
30 ௩0 நான் என் பிதாக்களோடு படுத்துக்கொள்ளவேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்செய்திருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்செய்” என்றான். அதற்கு அவன்: “உமது சொற்படி செய்வேன்” என்றான்.
но да почию со отцы моими: и изнесеши мя из Египта, и погребеши мя во гробе их. Он же рече: аз сотворю по словеси твоему.
31 ௩௧ அப்பொழுது அவன்: “எனக்கு ஆணையிட்டுக்கொடு” என்றான்; அவனுக்கு ஆணையிட்டுக்கொடுத்தான். அப்பொழுது இஸ்ரவேல் கை கோலில் சாய்ந்து தொழுதுகொண்டான்.
Рече же: кленися мне. И клятся ему. И поклонися Израиль на конец жезла его.

< ஆதியாகமம் 47 >