< ஆதியாகமம் 42 >
1 ௧ எகிப்திலே தானியம் உண்டென்று யாக்கோபு அறிந்து, தன் மகன்களை நோக்கி: “நீங்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ன?
А Јаков видећи да има жита у Мисиру, рече синовима својим: Шта гледате један на другог?
2 ௨ எகிப்திலே தானியம் உண்டென்று கேள்விப்படுகிறேன்; நாம் சாகாமல் உயிரோடிருக்க நீங்கள் அங்கே போய், நமக்காகத் தானியத்தை வாங்குங்கள்” என்றான்.
И рече: Ето чујем да у Мисиру има жита; идите онамо те нам купите отуда, да останемо живи и не помремо.
3 ௩ யோசேப்பின் சகோதரர்கள் பத்துப்பேர் தானியம் வாங்க எகிப்திற்குப் போனார்கள்.
И десеторица браће Јосифове отидоше да купе жита у Мисиру.
4 ௪ யோசேப்பின் தம்பியாகிய பென்யமீனுக்கு ஏதோ தீங்கு வரும் என்று சொல்லி, யாக்கோபு அவனை அவனுடைய சகோதரர்களோடு அனுப்பவில்லை.
А Венијамина брата Јосифовог не пусти отац с браћом говорећи: Да га не би задесило како зло.
5 ௫ கானான் தேசத்திலே பஞ்சம் உண்டாயிருந்ததால், தானியம் வாங்கப்போகிறவர்களுடனேகூட இஸ்ரவேலின் மகன்களும் போனார்கள்.
И дођоше синови Израиљеви да купе жита с осталима који долажаху; јер беше глад у земљи хананској.
6 ௬ யோசேப்பு அந்த தேசத்திற்கு அதிபதியாயிருந்து, தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தானியத்தை விற்றான். யோசேப்பின் சகோதரர்கள் வந்து, முகங்குப்புறத் தரையிலே விழுந்து அவனை வணங்கினார்கள்.
А Јосиф управљаше земљом, и продаваше жито свему народу по земљи. И браћа Јосифова дошавши поклонише му се лицем до земље.
7 ௭ யோசேப்பு அவர்களைப் பார்த்து, தன் சகோதரர்கள் என்று தெரிந்துகொண்டான்; தெரிந்தும் தெரியாதவன்போலக் கடினமாக அவர்களோடு பேசி: “நீங்கள் எங்கேயிருந்து வந்தீர்கள்” என்று கேட்டான்; அதற்கு அவர்கள்: “கானான் தேசத்திலிருந்து தானியம் வாங்கவந்தோம்” என்றார்கள்.
А Јосиф угледавши браћу позна их; али се учини да их не познаје, и оштро им проговори и рече: Одакле сте дошли? А они рекоше: Из земље хананске, да купимо хране.
8 ௮ யோசேப்பு அவர்களைத் தன் சகோதரர்கள் என்று தெரிந்தும், அவர்களுக்கு அவனைத் தெரியவில்லை.
Јосиф дакле позна браћу своју; али они њега не познаше.
9 ௯ யோசேப்பு அவர்களைக் குறித்துத் தான் கண்ட கனவுகளை நினைத்து, அவர்களை நோக்கி: “நீங்கள் உளவாளிகள், தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்க வந்தீர்கள்” என்றான்.
И опомену се Јосиф снова које је снио за њих; и рече им: Ви сте уходе; дошли сте да видите где је земља слаба.
10 ௧0 அதற்கு அவர்கள்: “அப்படியல்ல, ஆண்டவனே, உமது அடியாராகிய நாங்கள் தானியம் வாங்க வந்தோம்.
А они му рекоше: Нисмо, господару; него слуге твоје дођоше да купе хране.
11 ௧௧ நாங்கள் எல்லோரும் ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; நாங்கள் நேர்மையானவர்கள்; உமது அடியார் உளவாளிகள் அல்ல” என்றார்கள்.
Сви смо синови једног човека, поштени људи, никада нису слуге твоје биле уходе.
12 ௧௨ அதற்கு அவன்: “அப்படியல்ல, தேசம் எங்கே திறந்துகிடக்கிறது என்று பார்க்கவே வந்தீர்கள்” என்றான்.
А он им рече: Није истина, него сте дошли да видите где је земља слаба.
13 ௧௩ அப்பொழுது அவர்கள்: “உமது அடியாராகிய நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள்; கானான் தேசத்தில் இருக்கிற ஒரு தகப்பனுடைய பிள்ளைகள்; இளையவன் இப்பொழுது எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்; ஒருவன் காணாமற்போனான்” என்றார்கள்.
А они рекоше: Нас је било дванаест браће, слуга твојих, синова једног човека у земљи хананској; и ено, најмлађи је данас код оца нашег, а једног нема више.
14 ௧௪ யோசேப்பு அவர்களை நோக்கி: “உங்களை உளவாளிகள் என்று நான் சொன்னது சரி.
А Јосиф им рече: Кажем ја да сте ви уходе.
15 ௧௫ உங்களுடைய இளைய சகோதரன் இங்கே வந்தாலொழிய நீங்கள் இங்கேயிருந்து புறப்படுவது இல்லை என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.
Него хоћу да се уверим овако: тако жив био Фараон, нећете изаћи одавде докле не дође овамо најмлађи брат ваш.
16 ௧௬ இதனால் நீங்கள் சோதிக்கப்படுவீர்கள்; உங்கள் சகோதரனை அழைத்து வரும்படி உங்களில் ஒருவனை அனுப்புங்கள்; உங்களிடத்தில் உண்மை உண்டோ இல்லையோ என்று உங்கள் வார்த்தைகள் சோதிக்கப்படும்வரைக்கும், நீங்கள் காவலில் இருக்கவேண்டும்; இல்லாவிட்டால், நீங்கள் உளவாளிகள்தான் என்று பார்வோனின் ஜீவனைக்கொண்டு ஆணையிட்டுச் சொல்லுகிறேன் என்று சொல்லி,
Пошљите једног између себе нека доведе брата вашег, а ви ћете остати овде у тамници, па ћу видети је ли истина шта говорите; иначе сте уходе, тако жив био Фараон.
17 ௧௭ அவர்கள் எல்லோரையும் மூன்றுநாட்கள் காவலிலே வைத்தான்.
И затвори их у тамницу на три дана.
18 ௧௮ மூன்றாம் நாளிலே யோசேப்பு அவர்களை நோக்கி: “நான் தேவனுக்குப் பயப்படுகிறவன்; நீங்கள் உயிரோடு இருக்க ஒன்று செய்யுங்கள்.
А трећи дан рече им Јосиф: Ако сте ради животу, ово учините, јер се ја Бога бојим:
19 ௧௯ நீங்கள் நேர்மையானவர்களானால், சகோதரர்களாகிய உங்களில் ஒருவன் காவலில் கட்டப்பட்டிருக்கட்டும்; மற்றவர்கள் புறப்பட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் கொண்டுபோய்க் கொடுத்து,
Ако сте поштени људи, један брат између вас нека остане у тамници, а ви идите и однесите жита колико треба породицама вашим.
20 ௨0 உங்கள் இளைய சகோதரனை என்னிடத்திற்கு அழைத்துக்கொண்டு வாருங்கள்; அப்பொழுது உங்கள் வார்த்தைகள் உண்மையென்று விளங்கும்; நீங்கள் சாவதில்லை” என்றான். அவர்கள் அப்படிச்செய்கிறதற்குச் சம்மதித்து:
Па онда доведите к мени најмлађег брата свог да се посведоче речи ваше и да не изгинете. И они учинише тако.
21 ௨௧ நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவேதனையை நாம் கண்டும், அவன் சொல்லைக் கேட்காமற்போனோமே; ஆகையால் இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது” என்று ஒருவரை ஒருவர் பார்த்துச் சொல்லிக்கொண்டார்கள்.
И рекоше један другом: Доиста се огрешисмо о брата свог, јер видесмо муку душе његове кад нам се мољаше, па га се оглушисмо; зато дође на нас ова мука.
22 ௨௨ அப்பொழுது ரூபன் அவர்களைப் பார்த்து: “இளைஞனுக்கு விரோதமாகப் பாவம் செய்யாதிருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? நீங்கள் கேட்காமற்போனீர்கள்; இப்பொழுது, இதோ, அவனுடைய இரத்தப்பழி நம்மிடத்தில் வாங்கப்படுகிறது” என்றான்.
А Рувим одговори им говорећи: Нисам ли вам говорио: Немојте се грешити о дете? Али ме не послушасте; и зато се ево тражи од нас крв његова.
23 ௨௩ யோசேப்பு மொழிபெயர்ப்பாளரைக்கொண்டு அவர்களிடத்தில் பேசியதால், தாங்கள் சொன்னது அவனுக்குத் தெரியும் என்று அறியாதிருந்தார்கள்.
А они не знаху да их Јосиф разуме, јер се с њим разговараху преко тумача.
24 ௨௪ அவன் அவர்களைவிட்டு அப்புறம்போய் அழுது, திரும்ப அவர்களிடத்திற்கு வந்து, அவர்களோடு பேசி, அவர்களில் சிமியோனைப் பிடித்து, அவர்களுடைய கண்களுக்கு முன்பாகக் கட்டிவைத்தான்.
А Јосиф окрете се од њих, и заплака се. Потом се опет окрете к њима, и проговори с њима, и узевши између њих Симеуна веза га пред њима.
25 ௨௫ பின்பு, அவர்கள் சாக்குகளைத் தானியத்தால் நிரப்பவும், அவர்களுடைய பணத்தைத் திரும்ப அவனவன் சாக்கிலே போடவும், பயணத்திற்குத் தேவையான ஆகாரத்தைக் கொடுக்கவும் யோசேப்பு கட்டளையிட்டான்; அப்படியே அவர்களுக்குச் செய்யப்பட்டது.
И заповеди Јосиф да им наспу вреће жита, па и новце шта је који дао да метну свакоме у врећу, и да им даду брашњенице на пут. И тако би учињено.
26 ௨௬ அவர்கள் அந்தத் தானியத்தைத் தங்கள் கழுதைகள்மேல் ஏற்றிக்கொண்டு, அந்த இடம்விட்டுப் புறப்பட்டுப்போனார்கள்.
И натоваривши жито своје на магарце своје отидоше.
27 ௨௭ தங்குகிற இடத்திலே அவர்களில் ஒருவன் தன் கழுதைக்குத் தீவனம் போடத் தன் சாக்கைத் திறந்தபோது, சாக்கிலே தன் பணம் இருக்கிறதைக் கண்டு,
А један од њих отворив своју врећу да нахрани магарца свог у једној гостионици, виде новце своје озго у врећи.
28 ௨௮ தன் சகோதரர்களைப் பார்த்து, “என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, “தேவன் நமக்கு இப்படிச் செய்தது” என்ன என்றார்கள்.
И рече браћи својој: Ја добих натраг новце своје, ево их у мојој врећи. И задрхта срце у њима и уплашише се говорећи један другом: Шта нам то учини Бог?
29 ௨௯ அவர்கள் கானான் தேசத்திலுள்ள தங்கள் தகப்பனாகிய யாக்கோபிடம் வந்து, தங்களுக்குச் சம்பவித்தவைகளையெல்லாம் அவனுக்கு அறிவித்து:
И дошавши к Јакову оцу свом у земљу хананску, приповедише му све што им се догоди, говорећи:
30 ௩0 “தேசத்திற்கு அதிபதியாயிருக்கிறவன் எங்களை தேசத்தை உளவுபார்க்க வந்தவர்கள் என்று நினைத்து எங்களோடு கடினமாகப் பேசினான்.
Оштро говораше с нама човек, који заповеда у оној земљи, и дочека нас као уходе.
31 ௩௧ நாங்களோ அவனை நோக்கி: நாங்கள் நேர்மையானவர்கள், உளவாளிகள் அல்ல.
А кад му рекосмо: Ми смо поштени људи, никад нисмо били уходе;
32 ௩௨ நாங்கள் பன்னிரண்டு சகோதரர்கள், ஒரு தகப்பனுடைய பிள்ளைகள், ஒருவன் காணாமற்போனான், இளையவன் இப்பொழுது கானான்தேசத்தில் எங்கள் தகப்பனிடத்தில் இருக்கிறான்” என்றோம்.
Било нас је дванаест браће, синова оца нашег; једног већ нема, а најмлађи је данас код оца нашег у земљи хананској;
33 ௩௩ அப்பொழுது தேசத்தின் அதிபதியானவன்: நீங்கள் நேர்மையானவர்கள் என்பதை நான் அறியும்படி உங்கள் சகோதரர்களில் ஒருவனை நீங்கள் என்னிடத்தில் விட்டு, பஞ்சத்தினால் வருந்துகிற உங்கள் குடும்பத்திற்குத் தானியம் வாங்கிக்கொண்டுபோய்க் கொடுத்து,
Рече нам човек, који заповеда у оној земљи: Овако ћу дознати јесте ли поштени људи: брата једног између себе оставите код мене, а шта вам треба за породице ваше глади ради, узмите и идите.
34 ௩௪ உங்கள் இளைய சகோதரனை என்னிடத்தில் அழைத்துக்கொண்டு வாருங்கள்; அதனால் நீங்கள் உளவாளிகள் அல்ல, நேர்மையானவர்கள் என்பதை நான் அறிந்துகொண்டு, உங்கள் சகோதரனை விடுதலை செய்வேன்; நீங்கள் இந்தத் தேசத்திலே வியாபாரமும் செய்யலாம் என்றான் என்று சொன்னார்கள்.
После доведите к мени брата свог најмлађег, да се уверим да нисте уходе него поштени људи; брата ћу вам вратити, и моћи ћете трговати по овој земљи.
35 ௩௫ அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டும்போது, இதோ, அவனவன் சாக்கிலே அவனவன் பணமுடிப்பு இருந்தது; அந்த பணமுடிப்புகளை அவர்களும் அவர்கள் தகப்பனும் கண்டு பயந்தார்கள்.
А кад изручиваху вреће своје, гле, свакоме у врећи беху у завежљају новци његови; и видевши завежљаје новаца својих уплашише се и они и отац им.
36 ௩௬ அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: “என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை; பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாக நேரிடுகிறது” என்றான்.
И рече им Јаков отац њихов: Потрсте ми децу; Јосифа нема, Симеуна нема, па хоћете и Венијамина да узмете; све се скупило на ме.
37 ௩௭ அப்பொழுது ரூபன் தன் தகப்பனைப் பார்த்து, “அவனை என் கையில் ஒப்புவியும், நான் அவனைத் திரும்ப உம்மிடத்தில் கொண்டுவருவேன்; அவனைக் கொண்டுவராவிட்டால், என் இரண்டு மகன்களையும் கொன்றுபோடும்” என்று சொன்னான்.
А Рувим проговори и рече оцу свом: Два сина моја убиј, ако ти га не доведем натраг; дај га у моје руке, и ја ћу ти га опет довести.
38 ௩௮ அதற்கு அவன்: “என் மகன் உங்களோடுகூடப் போவதில்லை; இவனுடைய அண்ணன் இறந்துபோனான், இவன் ஒருவன் மீதியாயிருக்கிறான்; நீங்கள் போகும் வழியில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், நீங்கள் என் நரைமுடியைச் சஞ்சலத்தோடு பாதாளத்தில் இறங்கச்செய்வீர்கள்” என்றான். (Sheol )
А он рече: Неће ићи син мој с вама, јер је брат његов умро и он оста сам, па ако би га задесило како зло на путу на који ћете ићи, свалили би сте ме стара с тугом у гроб. (Sheol )