< ஆதியாகமம் 4 >

1 ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, காயீனைப் பெற்று, “யெகோவாவுடைய உதவியால் ஒரு மகனைப் பெற்றேன்” என்றாள்.
Иза тога Адам позна Јеву жену своју, а она затрудне и роди Кајина, и рече: Добих човека од Господа.
2 பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றெடுத்தாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
И роди опет брата његовог Авеља. И Авељ поста пастир а Кајин ратар.
3 சிலநாட்கள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் பழங்களைக் யெகோவாவுக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
А после неког времена догоди се, те Кајин принесе Господу принос од рода земаљског;
4 ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் யெகோவா ஏற்றுக்கொண்டார்.
А и Авељ принесе од првина стада свог и од њихове претилине. И Господ погледа на Авеља и на његов принос,
5 காயீனையும் அவனுடைய காணிக்கையையும் அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவனுடைய முகத்தோற்றம் வேறுபட்டது.
А на Кајина и на његов принос не погледа. Зато се Кајин расрди веома, и лице му се промени.
6 அப்பொழுது யெகோவா காயீனை நோக்கி: “உனக்கு ஏன் எரிச்சல் உண்டானது? உன் முகத்தோற்றம் ஏன் வேறுபட்டது?
Тада рече Господ Кајину: Што се срдиш? Што ли ти се лице промени?
7 நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாமலிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அது உன்னை ஆளுகை செய்ய விரும்பும், ஆனால் நீ அதை ஆளுகை செய்யவேண்டும்” என்றார்.
Нећеш ли бити мио, кад добро чиниш? А кад не чиниш добро, грех је на вратима. А воља је његова под твојом влашћу, и ти си му старији.
8 காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலோடு பேசினான்; அவர்கள் வயல்வெளியில் இருக்கும்போது, காயீன் தன்னுடைய சகோதரனாகிய ஆபேலுக்கு விரோதமாக எழும்பி, அவனைக் கொலைசெய்தான்.
После говораше Кајин с Авељем братом својим. Али кад беху у пољу, скочи Кајин на Авеља брата свог, и уби га.
9 யெகோவா காயீனை நோக்கி: “உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே” என்றார்; அதற்கு அவன்: எனக்குத் தெரியாது; என் சகோதரனுக்கு நான் காவலாளியா” என்றான்.
Тада рече Господ Кајину: Где ти је брат Авељ? А он одговори: Не знам; зар сам ја чувар брата свог?
10 ௧0 அதற்கு அவர்: “என்ன செய்தாய்? உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது.
А Бог рече: Шта учини! Глас крви брата твог виче са земље к мени.
11 ௧௧ இப்பொழுது உன் சகோதரனுடைய இரத்தம் உன்னால் பூமியில் சிந்தப்பட்டதால் இந்த பூமியில் நீ சபிக்கப்பட்டிருப்பாய்.
И сада, да си проклет на земљи, која је отворила уста своја да прими крв брата твог из руке твоје.
12 ௧௨ நீ நிலத்தில் பயிரிடும்போது, அது தன்னுடைய பலனை இனி உனக்குக் கொடுக்காது; நீ பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பாய்” என்றார்.
Кад земљу узрадиш, неће ти више давати блага свог. Бићеш потукач и бегунац на земљи.
13 ௧௩ அப்பொழுது காயீன் யெகோவாவை நோக்கி: “எனக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை என்னால் தாங்கிக்கொள்ளமுடியாது.
А Кајин рече Господу: Кривица је моја велика да ми се не може опростити.
14 ௧௪ இன்று என்னை இந்த தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்திற்கு விலகி மறைந்து, பூமியில் நிலையில்லாமல் அலைகிறவனாக இருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே” என்றான்.
Ево ме тераш данас из ове земље да се кријем испред Тебе, и да се скитам и потуцам по земљи, па ће ме убити ко ме удеси.
15 ௧௫ அப்பொழுது யெகோவா அவனை நோக்கி: “காயீனைக் கொல்லுகிற எவன் மேலும் ஏழு பழி சுமரும்” என்று சொல்லி; காயீனைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் அவனைக் கொன்றுபோடாமலிருக்க யெகோவா அவன்மேல் ஒரு அடையாளத்தைப் போட்டார்.
А Господ му рече: Зато ко убије Кајина, седам ће се пута то покајати. И начини Господ знак на Кајину да га не убије ко га удеси.
16 ௧௬ அப்படியே காயீன் யெகோவாவுடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கே நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான்.
И отиде Кајин испред Господа, и насели се у земљи наидској на истоку према Едему.
17 ௧௭ காயீன் தன்னுடைய மனைவியுடன் இணைந்தான்; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றெடுத்தாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்திற்குத் தன் மகனாகிய ஏனோக்குடைய பெயரை வைத்தான்.
И позна Кајин жену своју, а она затрудне и роди Еноха. И сазида град и прозва га по имену сина свог Енох.
18 ௧௮ ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றெடுத்தான்; மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றெடுத்தான்; மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றெடுத்தான்.
А Еноху роди се Гаидад; а Гаидад роди Малелеила: а Малелеило роди Матусала; а Матусал роди Ламеха.
19 ௧௯ லாமேக்கு இரண்டு பெண்களைத் திருமணம் செய்தான்; ஒருத்திக்கு ஆதாள் என்று பெயர், மற்றொருவளுக்குச் சில்லாள் என்று பெயர்.
И узе Ламех две жене: једној беше име Ада а другој Села.
20 ௨0 ஆதாள் யாபாலைப் பெற்றெடுத்தாள்; அவன் கூடாரங்களில் குடியிருக்கிறவர்களுக்கும், மந்தை மேய்க்கிறவர்களுக்கும் தகப்பனானான்.
И Ада роди Јовила; од њега се народише који живе под шаторима и стоку пасу.
21 ௨௧ அவனுடைய சகோதரனுடைய பெயர் யூபால்; அவன் கின்னரக்காரர்கள், நாதசுரக்காரர்கள் அனைவருக்கும் தகப்பனானான்.
А брату његовом беше име Јувал; од њега се народише гудачи и свирачи.
22 ௨௨ சில்லாளும், தூபால் காயீனைப் பெற்றெடுத்தாள்; அவன் பித்தளை, இரும்பு முதலியவற்றின் தொழிலாளர்கள் அனைவருக்கும் ஆசாரியனானான்; தூபால் காயீனுடைய சகோதரி நாமாள்.
А и Села роди Товела, који беше вешт ковати свашта од бронзе и од гвожђа; а сестра Товелу беше Ноема.
23 ௨௩ லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: “ஆதாளே, சில்லாளே, நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே, நான் சொல்வதை மிகவும் கவனமாகக் கேளுங்கள்; எனக்குக் காயமுண்டாக்கிய ஒரு மனிதனைக் கொன்றேன்; எனக்குத் தழும்புண்டாக்கிய ஒரு வாலிபனைக் கொலைசெய்தேன்;
И рече Ламех својим женама, Ади и Сели: Чујте глас мој, жене Ламехове, послушајте речи моје: убићу човека за рану своју и младића за масницу своју.
24 ௨௪ காயீனுக்காக ஏழு பழி சுமருமானால், லாமேக்குக்காக எழுபத்தேழு பழி சுமரும்” என்றான்.
Кад ће се Кајин осветити седам пута, Ламех ће седамдесет и седам пута.
25 ௨௫ பின்னும் ஆதாம் தன் மனைவியுடன் இணைந்தான்; அவள் ஒரு மகனைப் பெற்று: “காயீன் கொலைசெய்த ஆபேலுக்கு பதிலாக, தேவன் எனக்கு வேறொரு மகனைக் கொடுத்தார்” என்று சொல்லி, அவனுக்கு சேத் என்று பெயரிட்டாள்.
А Адам опет позна жену своју, и она роди сина, и наде му име Сит, јер ми, рече, Бог даде другог сина за Авеља, ког уби Кајин.
26 ௨௬ சேத்துக்கும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டான்; அப்பொழுது மக்கள் யெகோவாவுடைய நாமத்தை வழிபட ஆரம்பித்தார்கள்.
И Ситу се роди син, коме надеде име Енос. Тада се поче призивати име Господње.

< ஆதியாகமம் 4 >