< ஆதியாகமம் 36 >

1 ஏதோமியரின் தகப்பனாகிய ஏசாவின் வம்சவரலாறு:
ఎదోము అనే మారు పేరు గల ఏశావు వంశావళి ఇది.
2 ஏசா கானான் தேசத்துப் பெண்களில் ஏத்தியனான ஏலோனின் மகளாகிய ஆதாளையும், ஏவியனாகிய சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமாகிய அகோலிபாமாளையும்,
ఏశావు హిత్తీయుడైన ఏలోను కూతురు ఆదా, హివ్వీయుడైన సిబ్యోను కూతురైన అనా కూతురు అహోలీబామా,
3 இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய பஸ்மாத்தையும் திருமணம் செய்திருந்தான்.
ఇష్మాయేలు కూతురు, నెబాయోతు సోదరి అయిన బాశెమతు అనే కనాను యువతులను పెళ్ళి చేసుకున్నాడు.
4 ஆதாள் ஏசாவுக்கு எலிப்பாசைப் பெற்றெடுத்தாள்; பஸ்மாத்து ரெகுவேலைப் பெற்றெடுத்தாள்.
ఏశావుకు ఆదా ఎలీఫజును, బాశెమతు రగూయేలును కన్నారు.
5 அகோலிபாமாள் எயூஷையும், யாலாமையும், கோராகையும் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவுக்குக் கானான் தேசத்திலே பிறந்த மகன்கள்.
అహోలీబామా యూషును, యాలామును, కోరహును కన్నది. వీరు కనాను దేశంలో ఏశావుకు పుట్టిన కొడుకులు.
6 ஏசா தன்னுடைய மனைவிகளையும், மகன்களையும், மகள்களையும், வீட்டிலுள்ள அனைவரையும், ஆடுமாடுகளையும், மற்ற உயிரினங்கள் அனைத்தையும், தான் கானான் தேசத்திலே சம்பாதித்த சொத்து முழுவதையும் சேர்த்துக்கொண்டு, தன் சகோதரனாகிய யாக்கோபைவிட்டுப் பிரிந்து வேறு தேசத்திற்குப் போனான்.
ఏశావు తన భార్యలనూ కుమారులనూ కూతుళ్ళనూ తన ఇంటివారందరినీ తన మందలనూ పశువులనూ తాను కనాను దేశంలో సంపాదించిన ఆస్తి అంతటినీ తీసుకుని తన తమ్ముడైన యాకోబు నుండి దూరంగా మరొక దేశానికి వెళ్ళిపోయాడు.
7 அவர்களுடைய சம்பத்து அதிகமாக இருந்ததால் அவர்கள் ஒன்றாக இணைந்து குடியிருக்க முடியாமற்போனது; அவர்களுடைய மந்தைகளின் காரணமாக அவர்கள் தங்கியிருந்த பூமி அவர்களைத் தாங்க முடியாததாயிருந்தது.
వారు విస్తారమైన సంపద గలవారు కాబట్టి వారు కలిసి నివసించలేక పోయారు. వారి పశువులు అధికంగా ఉండడం వలన వారు నివసించే స్థలం వారిద్దరికీ సరిపోలేదు.
8 ஆதலால் ஏசா சேயீர்மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்.
కాబట్టి ఏశావు శేయీరు కొండ ప్రాంతంలో నివసించాడు. ఏశావుకు మరొక పేరు ఎదోము.
9 சேயீர்மலையில் இருக்கிற ஏதோமியர்களுடைய தகப்பனாகிய ஏசாவின் சந்ததிகளும்,
శేయీరు కొండ ప్రాంతంలో నివసించిన ఎదోమీయుల మూల పురుషుడైన ఏశావు వంశావళి ఇది.
10 ௧0 ஏசாவின் மகன்களுடைய பெயர்களாவன: ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகனுக்கு எலிப்பாஸ் என்று பெயர்; ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்துடைய மகனுக்கு ரெகுவேல் என்று பெயர்.
౧౦ఏశావు కొడుకుల పేర్లు, ఏశావు భార్య ఆదా కొడుకు ఎలీఫజు, మరొక భార్య బాశెమతు కొడుకు రగూయేలు.
11 ௧௧ எலிப்பாசின் மகன்கள் தேமான், ஓமார், செப்போ, கத்தாம், கேனாஸ் என்பவர்கள்.
౧౧ఎలీఫజు కొడుకులు తేమాను, ఓమారు, సెపో, గాతాము, కనజు. ఎలీఫజు ఉపపత్ని తిమ్నా.
12 ௧௨ திம்னாள் ஏசாவின் மகனாகிய எலிப்பாசுக்கு மறுமனையாட்டியாயிருந்து, எலீப்பாசுக்கு அமலேக்கைப் பெற்றெடுத்தாள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய ஆதாளுடைய மகன்கள்.
౧౨ఆమె కొడుకు అమాలేకు. వీరంతా ఏశావు భార్య అయిన ఆదాకు మనుమలు.
13 ௧௩ ரெகுவேலுடைய மகன்கள், நகாத், செராகு, சம்மா, மீசா என்பவர்கள்; இவர்களே ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்கள்.
౧౩రగూయేలు కొడుకులు నహతు, జెరహు, షమ్మా, మిజ్జా. వీరు ఏశావు భార్య అయిన బాశెమతుకు మనుమలు.
14 ௧௪ சிபியோனின் மகளும் ஆனாகின் மகளுமான அகோலிபாமாள் என்கிற ஏசாவின் மனைவி எயூஷ், யாலாம், கோராகு என்னும் மகன்களையும் ஏசாவுக்குப் பெற்றெடுத்தாள்.
౧౪ఏశావుకున్న మరొక భార్య సిబ్యోను కూతురు అయిన అనా కూతురు అహొలీబామా. ఈమె ఏశావుకు కన్న కొడుకులు యూషు, యాలాము, కోరహు.
15 ௧௫ ஏசாவின் மகன்களில் தோன்றிய பிரபுக்களாவன: ஏசாவுக்கு மூத்த மகனாகிய எலிப்பாசுடைய மகன்களில் தேமான் பிரபு, ஓமார் பிரபு, செப்போ பிரபு, கேனாஸ் பிரபு,
౧౫ఏశావు కొడుకుల్లో తెగల నాయకులు ఎవరంటే, ఏశావు మొదటి సంతానమైన ఎలీఫజు కొడుకులు తేమాను, ఓమారు, సెపో, కనజు,
16 ௧௬ கோராகு பிரபு, கத்தாம் பிரபு, அமலேக்கு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் எலிப்பாசின் சந்ததியும் ஆதாளின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
౧౬కోరహు, గాతాము, అమాలేకు. వీరు ఎదోము దేశంలో ఎలీఫజు నుండి వచ్చిన నాయకులు. వీరు ఏశావు భార్య ఆదాకు మనుమలు.
17 ௧௭ ஏசாவின் மகனாகிய ரெகுவேலின் மகன்களில் நகாத் பிரபு, செராகு பிரபு, சம்மா பிரபு, மீசா பிரபு என்பவர்கள்; இவர்கள் ஏதோம் தேசத்தில் ரெகுவேலின் சந்ததியும் ஏசாவின் மனைவியாகிய பஸ்மாத்தின் மகன்களுமாயிருந்த பிரபுக்கள்.
౧౭ఏశావు కొడుకైన రగూయేలు కొడుకులు నహతు, జెరహు, షమ్మా, మిజ్జా. వీరు ఎదోము దేశంలో రగూయేలు నుండి వచ్చిన నాయకులు. వీరు ఏశావు భార్య బాశెమతు మనుమలు.
18 ௧௮ ஏசாவின் மனைவியாகிய அகோலிபாமாளின் மகன்கள் எயூஷ் பிரபு, யாலாம் பிரபு, கோராகு பிரபு என்பவர்கள்; இவர்கள் ஆனாகின் மகளும் ஏசாவுடைய மனைவியுமாகிய அகோலிபாமாளின் சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
౧౮ఇక ఏశావు భార్య, అనా కూతురు అయిన అహొలీబామా కొడుకులు యూషు, యగ్లాము, కోరహు. వీరు అహొలీబామా పుత్రసంతానపు నాయకులు.
19 ௧௯ இவர்களே ஏதோம் என்னும் ஏசாவின் சந்ததி; இவர்களே அவர்களிலிருந்த பிரபுக்கள்.
౧౯వీరంతా ఎదోము అనే ఏశావు కొడుకులు, వారి వారి సంతానపు తెగల నాయకులు.
20 ௨0 அந்த தேசத்தின் குடிகளாகிய ஓரியனான சேயீரின் மகன்கள் லோத்தான், சோபால், சிபியோன், ஆனாகு,
౨౦ఎదోము దేశంలో ఆదినుండీ నివసించిన హోరీయుడైన శేయీరు కొడుకులు లోతాను, శోబాలు, సిబ్యోను, అనా,
21 ௨௧ திஷோன், ஏத்சேர், திஷான் என்பவர்கள்; இவர்களே ஏதோம் தேசத்தில் சேயீரின் மகன்களுமாகிய ஓரியர்களுடைய சந்ததியாயிருந்த பிரபுக்கள்.
౨౧దిషోను, ఏసెరు, దీషాను. వీరు ఎదోము దేశంలోని శేయీరు కొడుకులైన హోరీయుల నాయకులు.
22 ௨௨ லோத்தானுடைய மகன்கள் ஓரி, ஏமாம் என்பவர்கள்; லோத்தானின் சகோதரி திம்னாள் என்பவள்.
౨౨లోతాను కొడుకులు హోరీ, హేమాను. లోతాను సోదరి తిమ్నా.
23 ௨௩ சோபாலின் மகன்கள் அல்வான், மானகாத், ஏபால், செப்போ, ஓனாம் என்பவர்கள்.
౨౩శోబాలు కొడుకులు అల్వాను, మానహదు, ఏబాలు, షపో, ఓనాము.
24 ௨௪ சிபியோனின் மகன்கள் அயா, ஆனாகு என்பவர்கள்; வனாந்திரத்திலே தன் தகப்பனாகிய சீபெயோனின் கழுதைகளை மேய்க்கும்போது, சூடான தண்ணிரைக் கண்டுபிடித்த ஆனாகு இவன்தான்.
౨౪సిబ్యోను కొడుకులు అయ్యా, అనా అనేవారు. ఈ అనా తన తండ్రి సిబ్యోనుకు చెందిన గాడిదలను మేపుతూ ఉండగా మొదటి సారిగా అరణ్యంలో ఉష్ణధారలు కనుగొన్నాడు.
25 ௨௫ ஆனாகின் பிள்ளைகள் திஷோன், அகோலிபாமாள் என்பவர்கள்; இந்த அகோலிபாமாள் ஆனாகின் மகள்.
౨౫అనా కొడుకు దిషోను, కూతురు అహొలీబామా.
26 ௨௬ திஷோனுடைய மகன்கள் எம்தான், எஸ்பான், இத்தரான், கெரான் என்பவர்கள்.
౨౬దిషోను కొడుకులు హెమ్దాను, ఎష్బాను, ఇత్రాను, కెరాను,
27 ௨௭ ஏத்சேருடைய மகன்கள் பில்கான், சகவான், அக்கான் என்பவர்கள்.
౨౭ఏసెరు కొడుకులు బిల్హాను, జవాను, అకాను.
28 ௨௮ திஷானுடைய மகன்கள் ஊத்ஸ், அரான் என்பவர்கள்.
౨౮దీషాను కొడుకులు ఊజు, అరాను.
29 ௨௯ ஓரியரின் சந்ததியில் தோன்றிய பிரபுக்கள் லோத்தான் பிரபு, சோபால் பிரபு, சிபியோன் பிரபு, ஆனாகு பிரபு,
౨౯హోరీయుల నాయకులు ఎవరంటే, లోతాను, శోబాలు, సిబ్యోను, అనా,
30 ௩0 திஷோன் பிரபு, ஏத்சேர் பிரபு, திஷான் பிரபு என்பவர்கள்; இவர்களே சேயீர் தேசத்திலே தங்கள் தங்கள் இடங்களில் இருந்த ஓரியர் சந்ததியான பிரபுக்கள்.
౩౦దిషోను, ఏసెరు, దీషాను. శేయీరు దేశంలోని వారి నాయకుల జాబితా ప్రకారం వీరు హోరీయుల నాయకులు.
31 ௩௧ இஸ்ரவேல் வம்சத்தார்மேல் ராஜாக்கள் அரசாளுகிறதற்கு முன்னே, ஏதோம் தேசத்திலே ஆண்ட ராஜாக்களாவன:
౩౧ఇశ్రాయేలీయుల మీద ఏ రాజూ పరిపాలన చేయక ముందే, ఎదోమును పరిపాలించిన రాజులు ఎవరంటే,
32 ௩௨ பேயோருடைய மகனாகிய பேலா ஏதோமிலே ஆட்சிசெய்தான்; அவனுடைய பட்டணத்திற்குத் தின்காபா என்று பெயர்.
౩౨బెయోరు కొడుకు బెల ఎదోములో పాలించాడు. అతని ఊరు దిన్హాబా.
33 ௩௩ பேலா இறந்தபின், போஸ்றா பட்டணத்தானாகிய சேராகுடைய மகனாகிய யோபாப் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
౩౩బెల చనిపోయిన తరువాత బొస్రావాడైన జెరహు కొడుకు యోబాబు రాజయ్యాడు.
34 ௩௪ யோபாப் இறந்தபின், தேமானிய தேசத்தானாகிய ஊஷாம் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
౩౪యోబాబు చనిపోయిన తరువాత తేమానీయుల దేశస్థుడు హుషాము రాజయ్యాడు.
35 ௩௫ ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
౩౫హుషాము చనిపోయిన తరువాత మోయాబు దేశంలో మిద్యానీయులను ఓడించిన బదదు కొడుకు హదదు రాజయ్యాడు. అతని ఊరు అవీతు.
36 ௩௬ ஆதாத் இறந்தபின், மஸ்ரேக்கா ஊரானாகிய சம்லா அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
౩౬హదదు చనిపోయిన తరువాత మశ్రేకా వాడైన శమ్లా రాజయ్యాడు.
37 ௩௭ சம்லா இறந்தபின், அங்கே இருக்கிற நதிக்குச் சமீபமான ரெகொபோத் என்னும் ஊரானாகிய சவுல் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
౩౭శమ్లా చనిపోయిన తరువాత నదీతీర ప్రాంతమైన రహెబోతుకు చెందిన షావూలు రాజయ్యాడు.
38 ௩௮ சவுல் இறந்தபின், அக்போருடைய மகனாகிய பாகால்கானான் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்.
౩౮షావూలు చనిపోయిన తరువాత అక్బోరు కొడుకు బయల్‌ హానాను రాజయ్యాడు.
39 ௩௯ அக்போருடைய மகனாகிய பாகால்கானான் இறந்தபின், ஆதார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அவனுடைய பட்டணத்திற்குப் பாகு என்று பெயர்; அவனுடைய மனைவியின் பெயர் மெகேதபேல்; அவள் மத்ரேத்துடைய மகளும் மேசகாவின் மகளுமாக இருந்தாள்.
౩౯అక్బోరు కొడుకు బయల్‌ హానాను చనిపోయిన తరువాత హదరు రాజయ్యాడు. అతని ఊరు పాయు. అతని భార్య పేరు మహేతబేలు. ఆమె మేజాహాబు మనుమరాలు అయిన మత్రేదు కూతురు.
40 ௪0 தங்கள் பற்பல வம்சங்களின்படியேயும், குடியிருப்புகளின்படியேயும், பெயர்களின்படியேயும் ஏசாவின் சந்ததியில் தோன்றிய பிரபுக்களுடைய பெயர்களாவன: திம்னா பிரபு, அல்வா பிரபு, எதேத் பிரபு,
౪౦వారివారి తెగల ప్రకారం వారివారి ప్రాంతాల్లో వారివారి పేర్ల చొప్పున ఏశావు సంతానపు నాయకుల పేర్లు ఏవంటే, తిమ్నా, అల్వా, యతేతు,
41 ௪௧ அகோலிபாமா பிரபு, ஏலா பிரபு, பினோன் பிரபு,
౪౧అహొలీబామా, ఏలా, పీనోను,
42 ௪௨ கேனாஸ் பிரபு, தேமான் பிரபு, மிப்சார் பிரபு,
౪౨కనజు, తేమాను, మిబ్సారు,
43 ௪௩ மக்தியேல் பிரபு, ஈராம் பிரபு; இவர்களே தங்கள் சொந்தமான தேசத்திலே பற்பல இடங்களில் குடியிருந்த ஏதோம் சந்ததிப் பிரபுக்கள்; இந்த ஏதோமியருக்குத் தகப்பன் ஏசா.
౪౩మగ్దీయేలు, ఈరాము. వీరంతా తమ తమ స్వాధీనంలో ఉన్న దేశంలో తమతమ నివాస స్థలాల ప్రకారం ఎదోము నాయకులు. ఎదోమీయులకు మూల పురుషుడు ఏశావు.

< ஆதியாகமம் 36 >