< ஆதியாகமம் 35 >
1 ௧ தேவன் யாக்கோபை நோக்கி: “நீ எழுந்து பெத்தேலுக்குப் போய், அங்கே குடியிருந்து, நீ உன் சகோதரனாகிய ஏசாவின் முகத்திற்கு விலகி ஓடிப்போகிறபோது, உனக்குக் காட்சியளித்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு” என்றார்.
౧దేవుడు యాకోబుతో “నువ్వు లేచి బేతేలుకు వెళ్ళి అక్కడ నివసించు. నీ సోదరుడైన ఏశావు నుండి నువ్వు పారిపోయినప్పుడు నీకు కనబడిన దేవునికి అక్కడ ఒక బలిపీఠం కట్టు” అని చెప్పాడు.
2 ௨ அப்பொழுது யாக்கோபு தன் வீட்டாரையும் அவனுடன் இருந்த மற்ற அனைவரையும் நோக்கி: “உங்களிடத்தில் இருக்கிற அந்நிய தெய்வங்களை விலக்கிப்போட்டு, உங்களைச் சுத்தம்செய்துகொண்டு, உங்கள் ஆடைகளை மாற்றுங்கள்”.
౨యాకోబు తన ఇంటివారితో, తన దగ్గర ఉన్న వారందరితో “మీ దగ్గర ఉన్న అన్యదేవుళ్ళను పారవేసి, మిమ్మల్ని మీరు పవిత్ర పరచుకుని, మీ వస్త్రాలు మార్చుకోండి.
3 ௩ நாம் எழுந்து பெத்தேலுக்குப் போவோம் வாருங்கள்; எனக்கு ஆபத்து நேரிட்ட நாளில் என் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்து, நான் நடந்த வழியிலே என்னுடன் இருந்த தேவனுக்கு அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்குவேன் என்றான்.
౩మనం బేతేలుకు బయలుదేరి వెళ్దాం. నా కష్ట సమయంలో నాకు సహాయం చేసి, నేను వెళ్ళిన అన్ని చోట్లా నాకు తోడై ఉన్న దేవునికి అక్కడ ఒక బలిపీఠం కడతాను” అని చెప్పాడు.
4 ௪ அப்பொழுது அவர்கள் தங்கள் கையில் இருந்த எல்லா அந்நிய தெய்வங்களையும், தங்கள் காதணிகளையும் யாக்கோபிடத்தில் கொடுத்தார்கள்; யாக்கோபு அவைகளை சீகேம் ஊர் அருகே இருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழே புதைத்துப்போட்டான்.
౪వారు తమ దగ్గర ఉన్న అన్యదేవుళ్ళన్నిటినీ తమ చెవి పోగులనూ యాకోబుకు అప్పగించారు. యాకోబు వాటిని షెకెము దగ్గర ఉన్న సింధూర వృక్షం కింద పాతిపెట్టాడు.
5 ௫ பின்பு பயணம் புறப்பட்டார்கள்; அவர்களைச் சுற்றிலும் இருந்த பட்டணத்தார்களுக்கு தேவனாலே பயங்கரம் உண்டானதால், அவர்கள் யாக்கோபின் மகன்களைப் பின்தொடரவில்லை.
౫వారు ప్రయాణమై వెళ్తూ ఉన్నప్పుడు, వారి చుట్టూ ఉన్న పట్టణాల వారికి దేవుడు భయం పుట్టించాడు కాబట్టి వారు యాకోబు కుటుంబాన్ని తరమ లేదు.
6 ௬ யாக்கோபும் அவனுடன் இருந்த எல்லா மக்களும் கானான் தேசத்திலுள்ள பெத்தேல் என்னும் லூஸுக்கு வந்தார்கள்.
౬యాకోబు, అతడితో ఉన్నవారంతా కనానులో లూజుకు, అంటే బేతేలుకు వచ్చారు.
7 ௭ அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக்கட்டி, தன் சகோதரனுடைய முகத்திற்குத் தப்பி ஓடிப்போனபோது, அங்கே தனக்கு தேவன் காட்சியளித்ததால், அந்த இடத்திற்கு ஏல்பெத்தேல் என்று பெயரிட்டான்.
౭అతడు తన అన్న దగ్గర నుండి పారిపోయినప్పుడు దేవుడక్కడ అతడికి ప్రత్యక్షమయ్యాడు కాబట్టి వారు అక్కడ ఒక బలిపీఠం కట్టి ఆ ప్రదేశానికి ఏల్ బేతేలు అని పేరు పెట్టారు.
8 ௮ ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் இறந்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம் செய்யப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பெயர் உண்டானது.
౮రిబ్కా దాది దెబోరా చనిపోయినప్పుడు ఆమెను బేతేలుకు దిగువన ఉన్న సింధూర వృక్షం కింద పాతిపెట్టి, దానికి అల్లోన్ బాకూత్ అనే పేరు పెట్టారు.
9 ௯ யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின்பு தேவன் அவனுக்கு மறுபடியும் காட்சியளித்து, அவனை ஆசீர்வதித்து:
౯యాకోబు పద్దనరాము నుండి వస్తూ ఉండగా దేవుడు అతడికి మళ్ళీ ప్రత్యక్షమై అతణ్ణి ఆశీర్వదించాడు.
10 ௧0 “இப்பொழுது உன் பெயர் யாக்கோபு, இனி உன் பெயர் யாக்கோபு எனப்படாமல், இஸ்ரவேல் என்று உனக்குப் பெயராகும் என்று சொல்லி, அவனுக்கு இஸ்ரவேல்” என்று பெயரிட்டார்.
౧౦అప్పుడు దేవుడు అతనితో “నీ పేరు యాకోబు. కానీ ఇప్పటినుండి అది యాకోబు కాదు, నీ పేరు ఇశ్రాయేలు” అని చెప్పి అతనికి ఇశ్రాయేలు అని పేరు పెట్టాడు.
11 ௧௧ பின்னும் தேவன் அவனை நோக்கி: “நான் சர்வவல்லமையுள்ள தேவன், நீ பலுகிப் பெருகுவாயாக; ஒரு தேசமும் பற்பல தேசங்களின் மக்களும் உன்னிலிருந்து உண்டாகும்; ராஜாக்களும் உன் சந்ததியில் பிறப்பார்கள்.
౧౧దేవుడు “నేను సర్వశక్తిగల దేవుణ్ణి. నువ్వు ఫలించి అభివృద్ధి పొందు. ఒక జనాంగం, జాతుల గుంపు నీనుండి కలుగుతాయి. రాజులు నీ సంతానంలో నుండి వస్తారు.
12 ௧௨ நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் கொடுத்த தேசத்தை உனக்குக் கொடுப்பேன்; உனக்குப்பின் உன் சந்ததிக்கும் இந்த தேசத்தைக் கொடுப்பேன்” என்று சொல்லி,
౧౨నేను అబ్రాహాముకు, ఇస్సాకుకు ఇచ్చిన దేశాన్ని నీకిస్తాను. నీ తరువాత నీ సంతానానికి కూడా ఈ దేశాన్ని ఇస్తాను” అని అతనితో చెప్పాడు.
13 ௧௩ தேவன் அவனோடு பேசின இடத்திலிருந்து அவனைவிட்டு எழுந்தருளிப்போனார்.
౧౩దేవుడు అతనితో మాట్లాడిన ఆ స్థలం నుండి పరలోకానికి వెళ్ళాడు.
14 ௧௪ அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான்.
౧౪దేవుడు తనతో మాట్లాడిన చోట యాకోబు ఒక స్తంభం, అంటే ఒక రాతి స్తంభం నిలబెట్టి దాని మీద పానార్పణం చేసి దాని మీద నూనె పోశాడు.
15 ௧௫ தேவன் தன்னோடு பேசின அந்த இடத்திற்கு யாக்கோபு பெத்தேல் என்று பெயரிட்டான்.
౧౫తనతో దేవుడు మాట్లాడిన చోటికి యాకోబు బేతేలు అని పేరు పెట్టాడు.
16 ௧௬ பின்பு, பெத்தேலை விட்டுப் பயணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டானது.
౧౬వారు బేతేలు నుండి ప్రయాణమై వెళ్ళారు. దారిలో ఎఫ్రాతాకు ఇంకా కొంత దూరం ఉన్నప్పుడు రాహేలుకు కానుపు నొప్పులు మొదలయ్యాయి.
17 ௧௭ அப்போது மருத்துவச்சி அவளைப் பார்த்து: “பயப்படாதே, இந்த முறையும் மகனைப் பெறுவாய்” என்றாள்.
౧౭ఆమె ప్రసవం వలన తీవ్రంగా ప్రయాసపడుతూ ఉండగా మంత్రసాని ఆమెతో “భయపడ వద్దు, ఈ సారి కూడా నీకు కొడుకే పుడతాడు” అంది.
18 ௧௮ மரணகாலத்தில் அவளுடைய உயிர் பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பெயரிட்டாள்; அவனுடைய தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பெயரிட்டான்.
౧౮రాహేలు కొడుకును ప్రసవించి చనిపోయింది. ప్రాణం పోతూ ఉన్న సమయంలో ఆమె “వీడి పేరు బెనోని” అంది. కాని అతని తండ్రి అతనికి బెన్యామీను అని పేరు పెట్టాడు.
19 ௧௯ ராகேல் இறந்து, பெத்லகேம் என்னும் எப்பிராத்தா ஊருக்குப் போகிற வழியிலே அடக்கம் செய்யப்பட்டாள்.
౧౯ఆ విధంగా రాహేలు చనిపోయినప్పుడు ఆమెను బేత్లెహేము అని పిలిచే ఎఫ్రాతా మార్గంలో సమాధి చేశారు.
20 ௨0 அவளுடைய கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்த நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.
౨౦యాకోబు ఆమె సమాధి మీద ఒక స్తంభాన్ని నిలిపాడు. అది ఈ రోజు వరకూ రాహేలు సమాధి స్తంభంగా నిలిచి ఉంది.
21 ௨௧ இஸ்ரவேல் பயணம்செய்து, ஏதேர் என்கிற கோபுரத்திற்கு அப்புறத்தில் கூடாரம் போட்டான்.
౨౧ఇశ్రాయేలు ప్రయాణం కొనసాగించి మిగ్దల్ ఏదెరుకు అవతల తన గుడారం వేసుకున్నాడు.
22 ௨௨ இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடு உறவுகொண்டான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.
౨౨ఇశ్రాయేలు ఆ దేశంలో నివసిస్తున్నప్పుడు రూబేను తన తండ్రి ఉపపత్ని అయిన బిల్హాతో లైంగిక సంబంధం పెట్టుకున్నాడు. ఆ సంగతి ఇశ్రాయేలుకు తెలిసింది.
23 ௨௩ யாக்கோபின் மகன்கள் பன்னிரண்டுபேர். யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற மகன்கள்.
౨౩యాకోబు కొడుకులు పన్నెండు మంది. యాకోబు జ్యేష్ఠకుమారుడు రూబేను, షిమ్యోను, లేవి, యూదా, ఇశ్శాఖారు, జెబూలూను. వీరు లేయా కొడుకులు.
24 ௨௪ யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள் ராகேல் பெற்ற மகன்கள்.
౨౪యోసేపు, బెన్యామీను. వీరు రాహేలు కొడుకులు.
25 ௨௫ தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற மகன்கள்.
౨౫రాహేలు దాసి అయిన బిల్హా కొడుకులు దాను, నఫ్తాలి.
26 ௨௬ காத், ஆசேர் என்பவர்கள் லேயாளின் பணிவிடைக்காரியாகிய சில்பாள் பெற்ற மகன்கள்; இவர்களே யாக்கோபுக்குப் பதான் அராமிலே பிறந்த மகன்கள்.
౨౬లేయా దాసి అయిన జిల్పా కొడుకులు గాదు, ఆషేరు. వీరంతా పద్దనరాములో యాకోబుకు పుట్టిన కొడుకులు.
27 ௨௭ பின்பு, யாக்கோபு அர்பாவின் ஊராகிய மம்ரேக்கு தன் தகப்பனாகிய ஈசாக்கினிடத்தில் வந்தான்; அது ஆபிரகாமும் ஈசாக்கும் தங்கியிருந்த எபிரோன் என்னும் ஊர்.
౨౭అబ్రాహాము, ఇస్సాకులు నివసించిన మమ్రేలోని కిర్యతర్బాలో తన తండ్రి ఇస్సాకు దగ్గరికి యాకోబు వచ్చాడు. అదే హెబ్రోను.
28 ௨௮ ஈசாக்கு வயது முதிர்ந்தவனும் பூரண ஆயுசுமுள்ளவனாகி, 180 வருடங்கள் உயிரோடிருந்து,
౨౮ఇస్సాకు నూట ఎనభై సంవత్సరాలు బతికాడు.
29 ௨௯ உயிர்பிரிந்து இறந்து, தன் ஜனத்தாரோடு சேர்க்கப்பட்டான். அவனுடைய மகன்களாகிய ஏசாவும் யாக்கோபும் அவனை அடக்கம்செய்தார்கள்.
౨౯ఇస్సాకు కాలం నిండిన వృద్ధుడై చనిపోయి తన పూర్వికుల దగ్గరికి చేరిపోయాడు. అతని కొడుకులు ఏశావు, యాకోబు అతణ్ణి సమాధి చేశారు.