< ஆதியாகமம் 33 >
1 ௧ யாக்கோபு தன் கண்களை ஏறெடுத்து, இதோ, ஏசாவும் அவனோடுகூட நானூறு மனிதர்களும் வருகிறதைக் கண்டு, பிள்ளைகளை லேயாளிடத்திலும் ராகேலிடத்திலும் இரண்டு மறுமனையாட்டிகளிடத்திலும் தனிக்குழுக்களாகப் பிரித்துவைத்து,
І звів Яків очі свої, та й побачив, аж ось іде Ісав, а з ним чотири сотні людей. І він поділив своїх дітей на Лію, і на Рахіль, і на обо́х невільниць своїх.
2 ௨ மறுமனையாட்டிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும் முதலிலும், லேயாளையும் அவளுடைய பிள்ளைகளையும் மத்தியிலும், ராகேலையும் யோசேப்பையும் கடைசியிலும் நிறுத்தி:
І поставив він тих невільниць і дітей їх напереді, а Лію й дітей її перед останніми, а Рахіль та Йо́сипа останніми.
3 ௩ தான் அவர்களுக்கு முன்பாக நடந்து போய், ஏழுமுறை தரைவரைக்கும் குனிந்து வணங்கி, தன் சகோதரன் அருகில் போனான்.
А сам пішов перед ними, і вклонився до землі сім раз, аж поки підійшов до брата свого.
4 ௪ அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தம்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
І побіг Ісав назустріч йому, і обняв його, і впав на шию йому, і цілував його. І вони заплакали.
5 ௫ அவன் தன் கண்களை ஏறெடுத்து, பெண்களையும் பிள்ளைகளையும் கண்டு: “உன்னோடிருக்கிற இவர்கள் யார்?” என்றான். அதற்கு அவன்: “தேவன் உமது அடியானுக்கு அருளின பிள்ளைகள்” என்றான்.
І звів свої очі Ісав, і побачив жінок та дітей. І сказав: „Хто то такі?“А той відказав: „Діти, якими обдарував Бог твого раба“.
6 ௬ அப்பொழுது மறுமனையாட்டிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
І підійшли сюди невільниці, і їхні діти, та й вклонилися.
7 ௭ லேயாளும் அவளுடைய பிள்ளைகளும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்; பின்பு யோசேப்பும் ராகேலும் சேர்ந்துவந்து வணங்கினார்கள்.
І підійшла також Лія та діти її, і вклонилися, а потім підійшов Йо́сип і Рахі́ль, та й вклонилися.
8 ௮ அப்பொழுது ஏசா: “எனக்கு எதிர்கொண்டுவந்த அந்த மந்தையெல்லாம் எதற்கு என்றான். அதற்கு யாக்கோபு: “என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவு கிடைப்பதற்காக” என்றான்.
І сказав Ісав: „А що це за ці́лий табір той, що я спіткав?“А той відказав: „Щоб знайти милість в очах мого пана“.
9 ௯ அதற்கு ஏசா: “என் சகோதரனே, எனக்குப் போதுமானது இருக்கிறது; உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றான்.
А Ісав сказав: „Я маю багато, мій брате, — твоє нехай бу́де тобі“.
10 ௧0 அதற்கு யாக்கோபு: “அப்படி அல்ல, உம்முடைய கண்களில் எனக்குத் தயவு கிடைத்ததேயானால், என் வெகுமதியை ஏற்றுக்கொள்ளும்; நீர் என்மேல் பிரியமானீர், நான் உம்முடைய முகத்தைக் கண்டது தேவனுடைய முகத்தைக் கண்டதுபோல இருக்கிறது.
А Яків сказав: „Ні ж бо! Коли я знайшов милість в очах твоїх, то візьми дарунка мого з моєї руки. Бож я побачив обличчя твоє, ніби побачив Боже лице, і ти собі уподобав мене.
11 ௧௧ தேவன் எனக்கு அநுக்கிரகம் செய்திருக்கிறார்; வேண்டியதெல்லாம் எனக்கு உண்டு; ஆகையால் உமக்குக் கொண்டுவரப்பட்ட என் காணிக்கையை ஏற்றுக்கொள்ளும்” என்று சொல்லி, அவனை வருந்திக் கேட்டுக்கொண்டான்; அப்பொழுது அவன் அதை ஏற்றுக்கொண்டான்.
Візьми ж благослове́ння моє, що припроваджене тобі, бо Бог був милостивий до мене, та й маю я все“. І благав він його, — і той узяв.
12 ௧௨ பின்பு ஏசா: “நாம் புறப்பட்டுப்போவோம் வா, நான் உனக்கு முன்னே நடப்பேன்” என்றான்.
І промовив Ісав: „Рушаймо й ходім, а я піду́ обік те́бе“.
13 ௧௩ அதற்கு யாக்கோபு: “பிள்ளைகள் இளவயதுள்ளவர்கள் என்றும், பால்கொடுக்கும் ஆடுமாடுகள் என்னிடத்தில் இருக்கிறது என்றும் என் ஆண்டவனுக்குத் தெரியும்; அவைகளை ஒரு நாளாவது வேகமாக ஓட்டினால், மந்தையெல்லாம் இறந்துபோகும்.
А той відказав: „Пан мій знає, що діти молоді, а дрібна та велика худоба в мене дійні. Коли погнати їх один день, то вигине вся отара.
14 ௧௪ என் ஆண்டவனாகிய நீர் உமது அடியானுக்கு முன்னே போம்; நான் சேயீருக்கு என் ஆண்டவனிடத்திற்கு வரும்வரைக்கும், எனக்குமுன் நடக்கிற மந்தைகளின் நடைக்கும் பிள்ளைகளின் நடைக்கும் ஏற்றபடி, மெதுவாக அவைகளை நடத்திக்கொண்டு வருகிறேன்” என்றான்.
Нехай же піде пан мій перед очима свого раба, а я піду́ поволі за ногою скотини, що передо мною, і за ногою дітей, аж поки не прийду́ до пана свого до Сеїру“.
15 ௧௫ அப்பொழுது ஏசா: “என்னிடத்திலிருக்கிற மனிதர்களில் சிலரை நான் உன்னிடத்தில் நிறுத்திவிட்டுப் போகட்டுமா என்றான். அதற்கு அவன்: “அது எதற்கு, என் ஆண்டவனுடைய கண்களில் எனக்கு தயவுகிடைத்தால் மாத்திரம் போதும்” என்றான்.
І промовив Ісав: „Позоставлю ж з тобою трохи з людей, що зо мною“. А той відказав: „Пощо знаходжу я таку милість в очах свого пана?“
16 ௧௬ அன்றைத்தினம் ஏசா திரும்பித் தான் வந்த வழியே சேயீருக்குப்போனான்.
І вернувся того дня Ісав на дорогу свою до Сеїру.
17 ௧௭ யாக்கோபு சுக்கோத்திற்குப் பயணம்செய்து, தனக்கு ஒரு வீடு கட்டி, தன் மிருகஜீவன்களுக்குக் கூடாரங்களைப் போட்டான்; அதனால் அந்த இடத்திற்கு சுக்கோத் என்று பெயரிட்டான்.
А Яків подався до Суккоту, і збудував собі хату, а для худоби своєї поробив курені́, тому назвав ім'я́ тому місцю: Сукко́т.
18 ௧௮ யாக்கோபு பதான் அராமிலிருந்து வந்தபின் கானான்தேசத்திலிருக்கிற சாலேம் என்னும் சீகேமுடைய பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம்போட்டான்.
І Яків, коли він прийшов із Падану арамейського, прибув спокійно до міста Сихем у Кра́ї ханаанському, і розта́борився перед містом.
19 ௧௯ தான் கூடாரம்போட்ட நிலத்தைச் சீகேமின் தகப்பனாகிய ஏமோரின் மகன்களிடம் 100 வெள்ளிக்காசுக்கு வாங்கி,
І купив він кусок поля, де розклав намета свого, з руки синів Гамора, батька Сихема, за сто срібнякі́в.
20 ௨0 அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்.
І поставив там жертівника, і назвав його: Ел-Елогей-Ізраїль.