< ஆதியாகமம் 31 >
1 ௧ பின்பு, லாபானுடைய மகன்கள்: “எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்” என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான்.
雅各伯聽見拉班的兒子們談論說:「雅各伯奪去了我們父親所有的一切,利用我們父親的財物,才獲得了這一切的財富。」
2 ௨ லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இல்லாமல் வேறுபட்டிருந்ததைக் கண்டான்.
雅各伯也注意了拉班對自己的臉色不如先前。
3 ௩ யெகோவா யாக்கோபை நோக்கி: “உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடுகூட இருப்பேன்” என்றார்.
那時,上主對雅各伯說:「你回到你的家鄉和你的出生地,我必與你同在。」
4 ௪ அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையினிடத்திற்கு வரவழைத்து,
雅各伯就派人叫辣黑耳和肋阿來到放羊的田間,
5 ௫ அவர்களை நோக்கி “உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடுகூட இருக்கிறார்”.
對她們說:「我看你們父親的臉色,對我已不如先前;但是我父親的天主卻與我同在。
6 ௬ என்னால் முடிந்தவரை நான் உங்களுடைய தகப்பனுக்கு வேலை செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
你們清楚知道,我是全力服事了你們的父親;
7 ௭ உங்கள் தகப்பனோ, என்னை ஏமாற்றி, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடம்கொடுக்கவில்லை.
你們的父親卻欺騙了我,十次變換了我的工價,但天住卻沒有容許他害我。
8 ௮ புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது.
當他說:有斑點的算是你的工價;全羊群就都生下有斑點的;當他說:有條紋的算是你的工價,全羊群就都生下有條紋的。
9 ௯ இந்த விதமாகத் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார்.
天主這樣將你們父親的牲畜奪來了給我。
10 ௧0 ஆடுகள் சினையாகும்போது, நான் கண்ட கனவில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடு இணையும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன்.
有一次當羊群配合時,我於夢中舉目觀望:看見跳在母羊身上的公山羊,都是有條紋,有斑點和雜色的。
11 ௧௧ அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன்.
天主的使者在夢中對我說:雅各伯! 我答說:我在這裏。
12 ௧௨ அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடு இணையும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாக இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற அனைத்தையும் கண்டேன்.
他說:你舉目觀望:跳在母羊身上的公山羊,都是有條紋,有斑點和雜色的,因為我看到了拉班對你所作的一切。
13 ௧௩ நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைச் செய்த பெத்தேலிலே உனக்குக் காட்சியளித்த தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தார் இருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான்.
我是貝特耳的天主,你曾在那裏用油敷了一座石柱,並對我許了願。現在你起身,離開這地方,回到你生身之地去。」
14 ௧௪ அதற்கு ராகேலும் லேயாளும்: “எங்கள் தகப்பனுடைய வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சொத்தும் உண்டோ?
辣黑耳和肋阿回答他說:「我們在父親家裏還有產業可分嗎﹖
15 ௧௫ அவரால் நாங்கள் அந்நியராக கருதப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்களுடைய பணத்தையும் அபகரித்துக்கொண்டார்.
他豈不是把我們視作外人,把我們出賣了,吞併了我們的身價﹖
16 ௧௬ ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும்” என்றார்கள்.
所以天主由我們父親奪來的那一切財物,都應屬於我們和我們子女。現今凡天主吩咐你的,你都該照辦。
17 ௧௭ அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன்னுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி,
雅各伯遂立即叫自己的兒女和妻子騎上駱駝,
18 ௧௮ பதான் அராமிலே தான் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான்.
帶了自己一切牲畜和積聚的一切財物,即他在帕丹阿蘭所得的一切牲畜,起程往客納罕地,他父親依撒格那裏去了。
19 ௧௯ லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்த சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டாள்.
其時拉班正剪羊毛去了,辣黑耳就偷走了她父親的神像。
20 ௨0 யாக்கோபு தான் ஓடிப்போகிறதை சீரியனாகிய லாபானுக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாகப் போய்விட்டான்.
雅各伯隱瞞了阿蘭人拉班,沒有告訴拉班他將逃走,
21 ௨௧ இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
遂帶了自己所有的一切逃走了,起身過了幼發拉的河,直向基肋阿得山地進發。
22 ௨௨ யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு தெரிவிக்கப்பட்டது.
第三天拉班得報雅各伯偷跑了,
23 ௨௩ அப்பொழுது அவன், தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்கள் அவனைத் தொடர்ந்துபோய் பிரயாணம் செய்து, கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான்.
遂帶了自己的弟兄,在他後面一連追趕了七天的路程,在基肋阿得山地追上了他。
24 ௨௪ அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார்.
天主在夜間夢中顯現給阿蘭人拉班,對他說:「你小心,不要對雅各伯說好說壞。」
25 ௨௫ லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு தன் கூடாரத்தை மலையிலே போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரர்களோடுகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான்.
拉班追上雅各伯時,雅各伯已在山上搭了帳幕;拉班和他的弟兄也在基肋阿得山地搭了帳幕。
26 ௨௬ அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: “நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்?
拉班對雅各伯說:「你作的是什麼事﹖竟瞞著我,將我的女兒們帶走,有如戰俘一樣!
27 ௨௭ நீ ஓடிப்போவதை எனக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாக என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னை சந்தோஷமாக சங்கீதம், மேளதாளம், கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே.
你為什麼暗中偷跑,瞞著我而不通知我,叫我好能快樂的唱著歌,打著鼓,彈著琴歡送你回去﹖
28 ௨௮ என் பிள்ளைகளையும் என் மகள்களையும் நான் முத்தம் செய்யவிடாமல் போனதென்ன? இந்தச் செயலை நீ அறிவில்லாமல் செய்தாய்.
連我的兒女你都不讓我與他們吻別,你作的實在糊塗!
29 ௨௯ உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்று நேற்று இரவில் என்னோடு சொன்னார்.
我本可伸手加害你們,但是你們父親的天主昨夜對我說:小心,不要對雅各伯說好說壞。
30 ௩0 இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள ஏக்கத்தால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய்” என்று கேட்டான்.
你現在切望回到父家,定要回去,但是你為什麼偷走了我的神像! 」
31 ௩௧ யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: “உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன்.
雅各伯回答拉班說:「我害怕,我還以為你要由我手中奪去你的女兒。
32 ௩௨ ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடு விடவேண்டாம்; உம்முடைய பொருட்கள் ஏதாவது என்னிடத்தில் இருக்குமானால் நீர் அதை நம்முடைய சகோதரர்களுக்கு முன்பாகத் தேடிப்பார்த்து, அதை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது.
至於你的神像,你在誰那裏搜出來,決不容他活著;當著我們弟兄的面,你如認出我這裏有什麼是屬於你的,儘管拿去。」雅各伯原不知道是辣黑耳偷了神像。
33 ௩௩ அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் தேடிப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்திற்குப் போனான்.
拉班便進入雅各伯的帳幕,肋阿的帳幕和兩個婢女的帳幕,沒有找著;遂由肋阿的帳幕出來,進入辣黑耳的帳幕,
34 ௩௪ ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை.
辣黑耳卻拿了神像,放在駱駝的鞍下,自己坐在上面。拉班搜遍了整個帳幕,沒有找著。
35 ௩௫ அவள் தன் தகப்பனை நோக்கி: “என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திருக்காததைக்குறித்துக் கோபப்பட வேண்டாம்; பெண்களுக்குரிய வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள்; அப்படியே அவன் அந்தச் சிலைகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
辣黑耳對她父親說:「望我主不要見怪,我不能在你面前起迎,因為我正在經期。」他搜索了,卻沒有找著神像。
36 ௩௬ அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன?
雅各伯於是動怒,與拉班爭論,質問他說:「我有什麼不對,有什麼罪過,致使你在我後面追趕﹖
37 ௩௭ என் தட்டுமுட்டுகளையெல்லாம் தேடிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரர்களுக்கும் உம்முடைய சகோதரர்களுக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நியாயம் தீர்க்கட்டும்.
你搜遍了我的東西,如找出了什麼東西是屬於你家的,擺在我和你的兄弟面前,叫他們在我們兩人間行裁判。
38 ௩௮ இந்த இருபது வருடகாலமாக நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினை அழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் சாப்பிடவில்லை.
這二十年來,我同你在一起,你的母綿羊和母山羊從未流產;你羊群中的公羊,我從未吃過;
39 ௩௯ காயப்பட்டதை நான் உம்மிடம் கொண்டுவராமல், அதற்காக நான் உத்திரவாதம்செய்தேன்; பகலில் திருடப்பட்டதையும், இரவில் திருடப்பட்டதையும் என் கையில் கேட்டு வாங்கினீர்.
被野獸撕裂的我從未給你帶回,我自己賠償了損失;不論是白天偷去的,或是黑夜偷去的,你都向我索取。
40 ௪0 பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன்.
日間我受盡炎熱,夜間受盡嚴寒,兩眼無法入睡。在你家內這二十年,為了你的兩個女兒,我服事了你十四年;
41 ௪௧ இந்த இருபது வருடகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினான்கு வருடங்கள் உம்முடைய இரண்டு மகள்களுக்காகவும், ஆறு வருடங்கள் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
另六年是為了你的羊群,這期間你竟十次變更了我的工價。
42 ௪௨ என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடு இல்லாவிட்டால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கடின உழைப்பையும் பார்த்து, நேற்று இரவு உம்மைக் கடிந்துகொண்டார்” என்று சொன்னான்.
假若我父的天主,亞巴郎的天主,依撒格所敬畏的上主,不同我在一起,你現在定會打發我空手回去;但是天主見到了我的苦況和我的辛苦,在昨夜就下了判決。」
43 ௪௩ அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: “இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்?
拉班回答雅各伯說:「女兒是我的女兒,孩子是我的孩子,羊群是我的羊群,你眼見的這一切都是我的。但是對我的女兒,對她們生的孩子,我今天能作什麼呢﹖
44 ௪௪ இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருப்பதற்காக, நீயும் நானும் உடன்படிக்கை செய்துகொள்ளலாம்” என்றான்.
現在,來,讓我們在你我之間立約,作你我之間的證據。」
45 ௪௫ அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.
雅各伯遂拿了一塊石頭,立作石柱,
46 ௪௬ பின்னும் யாக்கோபு தன் சகோதரர்களைப் பார்த்து, “கற்களைக் குவியலாகச் சேருங்கள்” என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் உணவருந்தினார்கள்.
然後對自己的親戚說:「你們堆集石頭。」他們便拿了石頭,堆成一堆,就在那堆石頭上吃了飯。
47 ௪௭ லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான்.
拉班稱那石堆為「耶加爾、撒哈杜達;」雅各伯稱為「基肋阿得」
48 ௪௮ “இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது.
拉班說:「今天這堆石頭在你和我之間作見證。」為此給它起名叫「基肋阿得。」
49 ௪௯ அல்லாமலும் அவன்: “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், யெகோவா எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக;
又叫作「米茲帕,」因為他說:「我們彼此分離後,願上主監視我和你:
50 ௫0 நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி” என்று சொன்னதால், அது மிஸ்பா என்னும் பெயர்பெற்றது.
如果你虐待我的女兒,或在我的女兒外,另娶妻室,雖無人在我們中間,但有天主在你我之間作證。」
51 ௫௧ மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: “இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார்.
拉班又對雅各伯說:「看這堆石頭,看我在你我之間所立的石柱:
52 ௫௨ தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி.
這堆石頭是見證,這石柱是見證,我決不越過這堆石頭去妨害你,你也不要越過這堆石頭和這石柱來妨害我。
53 ௫௩ ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக” என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான்.
但願亞巴郎的天主和納曷爾的天主,--即他們父親的天主,--在我們之間行裁判! 」雅各伯就指自己的父親依撒格所敬畏的上主起了誓。
54 ௫௪ பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள்.
然後雅各伯在山上宰牲獻祭,叫了自己的親戚來吃飯;吃飯以後就在山上過了夜。
55 ௫௫ லாபான் அதிகாலையில் எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.
拉班清早起來,與自己的外孫和女兒吻別,祝福了他們,便起身回本鄉去了。