< ஆதியாகமம் 28 >
1 ௧ ஈசாக்கு யாக்கோபை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யாமல்,
Pea ui ʻe ʻAisake ʻa Sēkope ʻo ne tāpuaki ia, ʻo ne naʻinaʻi kiate ia, mo ne pehē ki ai, “ʻOua naʻa ke fili ho uaifi mei he ngaahi ʻofefine ʻo Kēnani;
2 ௨ எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கும் உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டிற்குப் போய், அந்த இடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் மகள்களுக்குள் ஒருவளை மனைவியாக்கிக்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.
Ka ke tuʻu ʻo ʻalu ki Petanalami, ki he fale ʻo Petueli ko e tamai ʻa hoʻo faʻē; pea ke fili hao uaifi mei he ngaahi ʻofefine ʻo Lepani, ko e tuongaʻane ʻo hoʻo faʻē.
3 ௩ சர்வவல்லமையுள்ள தேவன் உன்னை ஆசீர்வதித்து, நீ பல மக்கள்கூட்டமாக உன்னைப் பலுகவும் பெருகவும்செய்து;
Pea ke tāpuaki koe ʻe he ʻOtua Māfimafi, pea fakatupu mo fakatokolahiʻi koe, koeʻuhi ke ke hoko ko e fuʻu kakai tokolahi.
4 ௪ தேவன் ஆபிரகாமுக்குக் கொடுத்ததும் நீ பரதேசியாகத் தங்குகிறதுமான தேசத்தை நீ சொந்தமாக்கிக்கொள்ள ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை உனக்கும் உன் சந்ததிக்கும் அருளுவாராக என்று சொல்லி;
Pea ke tuku kiate koe ʻae tāpuaki ʻo ʻEpalahame, pea ki ho hako foki; koeʻuhi ke ke maʻu ʻae fonua ʻaia ʻoku ke ʻāunofo ki ai, ʻaia naʻe foaki ʻe he ʻOtua kia ʻEpalahame.”
5 ௫ ஈசாக்கு யாக்கோபை அனுப்பிவிட்டான். அப்பொழுது அவன் பதான் அராமிலிருக்கும் சீரியா தேசத்தானாகிய பெத்துவேலுடைய மகனும், தனக்கும் ஏசாவுக்கும் தாயாகிய ரெபெக்காளின் சகோதரனுமான லாபானிடத்திற்குப் போகப் புறப்பட்டான்.
Pea naʻe fekau ʻe ʻAisake ʻa Sēkope ke ne ʻalu: pea ʻalu ia ki Petanalami kia Lepani, ko e foha ʻo Petueli ko e [tangata ]Silia, ko e tuongaʻane ʻo Lepeka, ko e faʻē ʻa Sēkope mo ʻIsoa.
6 ௬ ஈசாக்கு யாக்கோபை ஆசீர்வதித்து, ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய அவனைப் பதான் அராமுக்கு அனுப்பினதையும், அவனை ஆசீர்வதிக்கும்போது: “நீ கானானியர்களுடைய பெண்களைத் திருமணம் செய்யவேண்டாம் என்று அவனுக்குக் கட்டளையிட்டதையும்,
Pea ʻi he mamata ʻa ʻIsoa kuo tāpuaki ʻe ʻAisake ʻa Sēkope, ʻo ne fekau ia ke ʻalu ki Petanalami, ke fili moʻona ha uaifi mei ai; pea mo ʻene tāpuaki ia mo naʻinaʻi kiate ia, ʻo pehē, ʻoua naʻa ke fili ha uaifi mei he ngaahi ʻofefine ʻo Kēnani:
7 ௭ யாக்கோபு தன் தகப்பனுக்கும் தன் தாய்க்கும் கீழ்ப்படிந்து, பதான் அராமுக்குப் புறப்பட்டுப்போனதையும் ஏசா கண்டதாலும், ஏசா இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.
Pea mo ʻene talangofua ʻa Sēkope ki heʻene tamai mo ʻene faʻē, pea kuo ʻalu ia ki Petanalami;
8 ௮ கானானியர்களுடைய பெண்கள் தன் தகப்பனாகிய ஈசாக்கின் பார்வைக்கு ஆகாதவர்கள் என்பதை ஏசா அறிந்ததாலும்,
Pea ʻi he mamata ʻa ʻIsoa ʻoku ʻikai fiemālie ʻene tamai ko ʻAisake, ʻi he ngaahi ʻofefine ʻo Kēnani;
9 ௯ ஏசா இஸ்மவேலிடத்திற்குப் போய், தனக்கு முன்னிருந்த மனைவிகளுமன்றி, ஆபிரகாமுடைய மகனாகிய இஸ்மவேலின் மகளும் நெபாயோத்தின் சகோதரியுமாகிய மகலாத்தையும் திருமணம் செய்தான்.
Pea ʻalu ʻa ʻIsoa kia ʻIsimeʻeli, ʻo ne fakatokolahi ʻaki ʻae ngaahi uaifi naʻa ne maʻu ʻa Mehalate, ko e ʻofefine ʻo ʻIsimeʻeli, ko e foha ʻo ʻEpalahame, ko e tuofefine ʻo Nepeoti, ke mali mo ia.
10 ௧0 யாக்கோபு பெயெர்செபாவை விட்டு ஆரானுக்குப் போகப் பயணம்செய்து,
Pea ʻalu atu ʻa Sēkope mei Peasipa, mo [ne ]fononga ki Halani.
11 ௧௧ ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான்.
Pea hoko ia ki he potu ʻe taha, pea ne nofo ai ʻi he pō ko ia, he kuo tō ʻae laʻā; pea ne toʻo ʻae ngaahi maka ʻoe potu ko ia, ke ne ʻolunga ʻaki, pea naʻa ne tokoto ʻi he potu ko ia, ʻo mohe.
12 ௧௨ அங்கே அவன் ஒரு கனவுகண்டான்; இதோ, ஒரு ஏணி பூமியிலே வைக்கப்பட்டிருந்தது, அதின் நுனி வானத்தை எட்டியிருந்தது, அதிலே தேவதூதர்கள் ஏறுகிறவர்களும் இறங்குகிறவர்களுமாக இருந்தார்கள்.
Pea misi ia, pea vakai, kuo fokotuʻu ha tuʻunga ki he funga kelekele, pea tau hake hono potu ki he langi, pea vakai, naʻe feʻaluʻaki hake mo hifo ʻi ai ʻae kau ʻāngelo ʻae ʻOtua.
13 ௧௩ அதற்கு மேலாகக் யெகோவா நின்று: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனுமாகிய யெகோவா; நீ படுத்திருக்கிற பூமியை உனக்கும் உன் சந்ததிக்கும் தருவேன்.
Pea vakai, naʻe ʻafio ʻa Sihova mei ʻolunga ʻi ai, pea pehē ʻe ia, “Ko au ko Sihova, ko e ʻOtua ʻo ʻEpalahame ko hoʻo tamai, pea ko e ʻOtua ʻo ʻAisake: ko e fonua ʻoku ke tokoto ai, te u foaki ia kiate koe, mo ho hako.
14 ௧௪ உன் சந்ததி பூமியின் தூளைப்போலிருக்கும்; நீ மேற்கேயும், கிழக்கேயும், வடக்கேயும், தெற்கேயும் பரவுவாய்; உனக்குள்ளும் உன் சந்ததிக்குள்ளும் பூமியின் வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும்.
Pea ʻe tatau ho hako mo e efu ʻoe kelekele, pea te ke mafola koe ki he lulunga mo e hahake, pea ki he tokelau mo e tonga: pea ʻe monūʻia ʻiate koe mo ho hako, ʻae ngaahi faʻahinga kotoa pē ʻo māmani.
15 ௧௫ நான் உன்னோடு இருந்து, நீ போகிற இடத்திலெல்லாம் உன்னைக் காத்து, இந்தத் தேசத்திற்கு உன்னைத் திரும்பி வரச்செய்வேன்; நான் உனக்குச் சொன்னதைச் செய்யும்வரை உன்னைக் கைவிடுவதில்லை” என்றார்.
Pea vakai, ʻoku ou ʻiate koe, pea te u tauhi koe ʻi hoʻo fononga kotoa pē, pea te u toe ʻomi koe ki he fonua ni: koeʻuhi ʻe ʻikai te u siʻaki koe, ka te u fai ʻaia kuo u lea ai kiate koe.”
16 ௧௬ யாக்கோபு தூக்கம் கலைந்து விழித்தபோது: “உண்மையாகவே யெகோவா இந்த இடத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாமலிருந்தேன்” என்றான்.
Pea ʻā hake ʻa Sēkope mei heʻene mohe, pea pehē ʻe ia, “Ko e moʻoni ʻoku ʻi heni ʻa Sihova; pea naʻe ʻikai te u ʻilo ia.”
17 ௧௭ அவன் பயந்து, இந்த இடம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்” என்றான்.
Pea naʻe manavahē ia, ʻo ne pehē, “ʻOku fakamanavahē ʻae potu ni! ʻOku ʻikai ko ha potu kehe eni, ka ko e fale ʻoe ʻOtua, pea ko eni ʻae matapā ʻoe langi.”
18 ௧௮ அதிகாலையில் யாக்கோபு எழுந்து, தன் தலையின்கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் ஊற்றி,
Pea tuʻu hengihengi hake pe ʻa Sēkope, pea ne toʻo mai ʻae maka naʻa ne ʻolunga ʻaki, pea ne tō ia ko e pou, pea lilingi ʻe ia ʻae lolo ki ai.
19 ௧௯ அந்த இடத்திற்குப் பெத்தேல் என்று பெயரிட்டான்; அதற்கு முன்னே அந்த ஊருக்கு லூஸ் என்னும் பெயர் இருந்தது.
Pea ne ui ʻae hingoa ʻoe potu ko ia ko Peteli: ka ko hono hingoa ʻi muʻa ʻoe kolo ko ia ko Lusa.
20 ௨0 அப்பொழுது யாக்கோபு: “தேவன் என்னோடிருந்து, நான் போகிற இந்த வழியிலே என்னைக் காப்பாற்றி, உண்ண உணவும், உடுக்க உடையும் எனக்குத் தந்து,
Pea fai ai ʻe Sēkope ʻae fuakava, ʻo pehē, “Kapau ʻe ʻiate au ʻae ʻOtua, pea ne tauhi au ʻi he hala ni ʻoku ou ʻalu ai, pea ne foaki kiate au ʻa ʻeku meʻakai, mo e ngaahi kofu ke u ai,
21 ௨௧ என்னை என் தகப்பன் வீட்டிற்குச் சமாதானத்தோடு திரும்பிவரச் செய்வாரானால், யெகோவா எனக்குத் தேவனாயிருப்பார்;
Koeʻuhi ke u toe hoko ki he fale ʻo ʻeku tamai ʻi he fiemālie, pehē, te u ʻOtua ʻaki ʻa Sihova;
22 ௨௨ நான் தூணாக நிறுத்தின இந்தக் கல் தேவனுக்கு வீடாகும்; தேவரீர் எனக்குத் தரும் எல்லாவற்றிலும் உமக்குத் தசமபாகம் செலுத்துவேன்” என்று சொல்லிப் பொருத்தனை செய்துகொண்டான்.
pea ko e maka ni, ʻaia kuo u tō ko e pou, ʻe hoko ia ko e fale ʻoe ʻOtua; pea ʻi he meʻa kotoa pē te ke tuku mai kiate au, te u ʻatu moʻoni hono vahe hongofulu kiate koe.”