< ஆதியாகமம் 26 >

1 ஆபிரகாமின் நாட்களில் உண்டான பஞ்சத்தை அல்லாமல், மேலும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது; அப்பொழுது ஈசாக்கு பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கிடம் கேராருக்குப் போனான்.
以前,在亞巴郎時代曾有過一次饑荒,現在地上又有了饑荒,依撒格便去了革辣爾,即培肋舍特人王阿彼默肋客那裏。
2 யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நீ எகிப்திற்குப் போகாமல், நான் உனக்குச் சொல்லும் தேசத்தில் குடியிரு.
上主顯現給他說:「你不要下到埃及去,要住在我指示給你的地方。
3 இந்தத் தேசத்தில் குடியிரு; நான் உன்னோடுகூட இருந்து, உன்னை ஆசீர்வதிப்பேன்; நான் உனக்கும் உன் சந்ததிக்கும் இந்தத் தேசங்கள் அனைத்தையும் தந்து, உன் தகப்பனாகிய ஆபிரகாமுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
你要住在這地方,我必與你同在,祝福你,因為我要將這整個地方賜給你和你的後裔,實踐我向你父親亞巴郎所立的誓約;
4 ஆபிரகாம் என் சொல்லுக்குக் கீழ்ப்படிந்து, என் விதிகளையும், என் கற்பனைகளையும், என் நியமங்களையும், என் பிரமாணங்களையும் கைக்கொண்டதால்,
且要使你的後裔繁多如天上的星辰,要將這一切地方賜給你的後裔,地上萬民要因你的後裔蒙受祝福,
5 நான் உன் சந்ததியை வானத்தின் நட்சத்திரங்களைப்போலப் பெருகச்செய்து, உன் சந்ததிக்கு இந்தத் தேசங்கள் அனைத்தையும் தருவேன்; உன் சந்ததிக்குள் பூமியிலுள்ள அனைத்து தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.
因為亞巴郎聽從了我的話,遵守了我的訓示、誡命、規定和法律。」
6 ஈசாக்கு கேராரிலே குடியிருந்தான்.
依撒格就在革辣爾住下了。
7 அந்த இடத்து மனிதர்கள் அவனுடைய மனைவியைக் குறித்து விசாரித்தபோது: “இவள் என் சகோதரி என்றான். ரெபெக்காள் பார்ப்பதற்கு அழகுள்ளவளானதால், அந்த இடத்து மனிதர்கள் அவள்நிமித்தம் தன்னைக் கொன்றுபோடுவார்கள் என்று எண்ணி, அவளைத் தன் மனைவி என்று சொல்லுவதற்குப் பயந்தான்.
那地方的人問到他的妻子時,他就說:「這是我的妹妹。」他怕說:「這是我的妻子。」恐怕那地方的人為了黎貝加要殺害他,因為她面貌美麗。
8 அவன் அங்கே அநேகநாட்கள் குடியிருக்கும்போது, பெலிஸ்தருக்கு ராஜாவாகிய அபிமெலேக்கு ஜன்னல் வழியாகப் பார்க்கும்போது, ஈசாக்கு தன் மனைவியாகிய ரெபெக்காளோடு விளையாடிக்கொண்டிருக்கிறதைப் பார்த்தான்.
他在那裏住了許久;有一天培肋舍特人王阿彼默肋客從窗戶向外眺望,看見依撒格正在愛撫他的妻子黎貝加。
9 அபிமெலேக்கு ஈசாக்கை அழைத்து: “அவள் உன் மனைவியாயிருக்கிறாளே! பின்பு ஏன் அவளை உனது சகோதரி என்று சொன்னாய்” என்றான். அதற்கு ஈசாக்கு: “அவள் நிமித்தம் நான் சாகாதபடி இப்படிச் சொன்னேன்” என்றான்.
阿彼默肋客遂召依撒格來說:「看,她明明是你的妻子,為什麼你說:她是我的妹妹﹖」依撒格回答說:「因為我怕我可能因她而被殺害。」
10 ௧0 அதற்கு அபிமெலேக்கு: “எங்களிடத்தில் ஏன் இப்படிச் செய்தாய்? மக்களில் யாராவது உன் மனைவியோடு உறவுகொள்ளவும், எங்கள்மேல் பழி சுமரவும் நீ இடமுண்டாக்கினாயே” என்றான்.
阿彼默肋客說:「你對我們作的是什麼事﹖差一點百姓中就有人與你妻子同睡,叫我們陷於罪惡。」
11 ௧௧ பின்பு, அபிமெலேக்கு: “இந்த மனிதனையாகிலும் இவன் மனைவியையாகிலும் தொடுகிறவன் நிச்சயமாகக் கொலைசெய்யப்படுவான்” என்று எல்லா மக்களுக்கும் அறிவித்தான்.
於是阿彼默肋客號令全百姓說:「凡觸犯這人和他妻子的,必死無赦。」
12 ௧௨ ஈசாக்கு அந்தத் தேசத்தில் விதைவிதைத்தான்; யெகோவா அவனை ஆசீர்வதித்ததால் அந்த வருடத்தில் 100 மடங்கு பலனை அடைந்தான்;
依撒格在那地方耕種,當年就得了百倍的收成。上主實在祝福了他,
13 ௧௩ அவன் செல்வந்தனாகி, வரவர விருத்தியடைந்து, மகா பெரியவனானான்.
他竟成了富翁,越來越富,終於成了個大富翁,
14 ௧௪ அவனுக்கு ஆட்டு மந்தையும், மாட்டு மந்தையும், அநேக வேலைக்காரரும் இருந்ததால் பெலிஸ்தர் அவன்மேல் பொறாமைகொண்டு,
擁有羊群、牛群和許多奴僕,因此培肋舍特人都嫉妒他。
15 ௧௫ அவனுடைய தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் அவனுடைய வேலைக்காரர்கள் வெட்டின கிணறுகளையெல்லாம் மண்ணினால் மூடிப்போட்டார்கள்.
那時,凡他父親的僕人,在他父親亞巴郎生時所掘的井,培肋舍特人都用土填了。
16 ௧௬ அபிமெலேக்கு ஈசாக்கை நோக்கி: “நீ எங்களை விட்டுப் போய்விடு; எங்களைவிட மிகவும் பலத்தவனானாய்” என்றான்.
阿彼默肋客對依撒格說:「你在我們中太強盛了。你離開我們罷! 」
17 ௧௭ அப்பொழுது ஈசாக்கு அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டு, கேராரின் பள்ளத்தாக்கிலே கூடாரம் போட்டு, அங்கே குடியிருந்து,
依撒格遂離開了那裏,在革辣爾山谷中搭了帳幕,住在那裏。
18 ௧௮ தன் தகப்பனாகிய ஆபிரகாமின் நாட்களில் வெட்டப்பட்டவைகளும், ஆபிரகாம் இறந்தபின் பெலிஸ்தர் மூடிப்போட்டவைகளுமான கிணறுகளை மறுபடியும் தோண்டி, தன் தகப்பன் அவைகளுக்கு வைத்திருந்த பெயர்களின்படியே அவைகளுக்குப் பெயரிட்டான்.
依撒格將他父親生時所掘的,亞巴郎死後培肋舍特人所填的一些水井,又從新掘好,仍照他父親起的名字稱呼這些水井。
19 ௧௯ ஈசாக்குடைய வேலைக்காரர்கள் பள்ளத்தாக்கிலே கிணறுவெட்டி, தண்ணீரைக் கண்டார்கள்.
依撒格的僕人在山谷中掘井時,掘了一口活水井。
20 ௨0 கேராரூர் மேய்ப்பர்கள் “இந்தத் தண்ணீர் தங்களுடையது என்று சொல்லி”, ஈசாக்குடைய மேய்ப்பர்களுடனே வாக்குவாதம் செய்தார்கள்; அவர்கள் தன்னோடு வாக்குவாதம் செய்ததால், அந்தக் கிணற்றுக்கு ஏசேக்கு என்று பெயரிட்டான்.
革辣爾的牧童和依撒格的牧童遂發生了爭論,說:「這水是我們的。」為此他給那井起名叫「爭論,」因為他們曾與他爭論過。
21 ௨௧ வேறொரு கிணற்றை வெட்டினார்கள்; அதைக்குறித்தும் வாக்குவாதம் செய்தார்கள்; ஆகையால் அதற்கு சித்னா என்று பெயரிட்டான்.
依撒格的僕人又另掘了一口井,為這口井又起了爭論,為此他給這井起名叫「仇恨。」
22 ௨௨ பின்பு அந்த இடத்தைவிட்டுப் போய், வேறொரு கிணற்றை வெட்டினான்; அதைக்குறித்து அவர்கள் வாக்குவாதம் செய்யவில்லை; அப்பொழுது அவன்: “நாம் தேசத்தில் பெருகுவதற்காக, இப்பொழுது யெகோவா நமக்கு இடமுண்டாக்கினார்” என்று சொல்லி, அதற்கு ரெகொபோத் என்று பெயரிட்டான்.
以後,他由那裏遷往別處,又掘了另一口井,為這口井再沒有起爭論,遂給這井起名叫「寬大,」說:「上主終於使我們寬綽,我們將在這地繁盛。」
23 ௨௩ அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.
依撒格由那裏上到了貝爾舍巴,
24 ௨௪ அன்று இரவிலே யெகோவா அவனுக்குக் காட்சியளித்து: “நான் உன் தகப்பனாகிய ஆபிரகாமுடைய தேவன், பயப்படாதே, நான் உன்னோடுகூட இருந்து, என் ஊழியக்காரனாகிய ஆபிரகாமின் பொருட்டு உன்னை ஆசீர்வதித்து, உன் சந்ததியைப் பெருகச் செய்வேன்” என்றார்.
那天夜裏上主顯現給他說:「我是你父親亞巴郎的天主,你不要害怕,因為我與你同在,我必要為了我僕人亞巴郎的緣故祝福你,使你的後裔繁盛。」
25 ௨௫ அங்கே அவன் ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, அங்கே தன் கூடாரத்தைப் போட்டான். அந்த இடத்தில் ஈசாக்கின் வேலைக்காரர்கள் ஒரு கிணற்றை வெட்டினார்கள்.
依撒格就在那裏築了一座祭壇,呼求了上主的名;也在那裏搭了帳幕,他的僕人也在那裏掘了一口井。
26 ௨௬ அபிமெலேக்கும் அவனுடைய நண்பனாகிய அகுசாத்தும், படைத்தலைவனாகிய பிகோலும், கேராரிலிருந்து அவனிடத்திற்கு வந்தார்கள்.
阿彼默肋客和他的摯友阿胡匝特以及他的司令非苛耳,由革辣爾來到了依撒格那裏。
27 ௨௭ அப்பொழுது ஈசாக்கு அவர்களை நோக்கி: “ஏன் என்னிடத்தில் வந்தீர்கள்? நீங்கள் என்னைப் பகைத்து, என்னை உங்களிடத்தில் இருக்கவிடாமல் துரத்திவிட்டீர்களே” என்றான்.
他遂對他們說:「你們既然仇恨我,將我由你們中間驅逐,為什麼又來到我這裏﹖」
28 ௨௮ அதற்கு அவர்கள்: “நிச்சயமாக யெகோவா உம்மோடுகூட இருக்கிறார் என்று கண்டோம்; ஆகையால் எங்களுக்கும் உமக்கும் ஒரு ஒப்பந்தம் உண்டாகவேண்டும் என்று நாங்கள் தீர்மானம் செய்தோம்.
他們回答說:「我們實在看出上主與你同在;因此我們想,更好我們雙方彼此宣誓,讓我們與你立約:
29 ௨௯ நாங்கள் உம்மைத் தொடாமல், நன்மையையே உமக்குச் செய்து, உம்மைச் சமாதானத்தோடு அனுப்பிவிட்டதுபோல, நீரும் எங்களுக்குத் தீங்குசெய்யாமலிருக்க உம்மோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வந்தோம்; நீர் யெகோவாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவராமே” என்றார்கள்.
你決不加害我們,猶如我們從未觸犯你,只有好待了你,叫你平安離去;如今你實是上主祝福的人。」
30 ௩0 அவன் அவர்களுக்கு விருந்துசெய்தான், அவர்கள் சாப்பிட்டுக் குடித்தார்கள்.
依撒格遂為他們設宴,大家一齊吃了喝了。
31 ௩௧ அதிகாலையில் எழுந்து ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். பின்பு ஈசாக்கு அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் அவனிடத்திலிருந்து சமாதானத்தோடு போய்விட்டார்கள்.
次日一早起來,彼此宣了誓。然後依撒格送他們出來,他們遂平安離去。
32 ௩௨ அந்நாளில்தானே ஈசாக்கின் வேலைக்காரர்கள் வந்து, தாங்கள் கிணறு வெட்டின செய்தியை அவனுக்குத் தெரிவித்து, “தண்ணீர் கண்டோம்” என்றார்கள்.
當天依撒格的僕人來,報告他們掘井的事說:「我們找著了水。」
33 ௩௩ அதற்கு சேபா என்று பெயரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பெயர் இந்த நாள்வரைக்கும் பெயெர்செபா எனப்படுகிறது.
依撒格就給這井起名叫「誓約;」為此,那城直到今日還稱作「誓約井。」
34 ௩௪ ஏசா 40 வயதானபோது, ஏத்தியர்களான பெயேரியினுடைய மகளாகிய யூதீத்தையும், ஏலோனுடைய மகளாகிய பஸ்மாத்தையும் திருமணம்செய்தான்.
厄撒烏到四十歲時,娶了赫特人貝厄黎的女兒友狄特和赫特人厄隆的女兒巴色瑪特為妻。
35 ௩௫ அவர்கள் ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் மனஉளைச்சலைக் கொடுத்தார்கள்.
她們二人使依撒格和黎貝加傷心難受。

< ஆதியாகமம் 26 >