< ஆதியாகமம் 20 >

1 ஆபிரகாம் அந்த இடத்தைவிட்டு, தென்தேசத்திற்குப் பயணம் செய்து, காதேசுக்கும் சூருக்கும் நடுவாகக் குடியேறி, கேராரிலே தங்கினான்.
А Аврам отиде оданде на југ, и стани се између Кадиса и Сура; и живеше као дошљак у Герару.
2 அங்கே ஆபிரகாம் தன் மனைவியாகிய சாராளைத் “தன் சகோதரி” என்று சொன்னதால், கேராரின் ராஜாவாகிய அபிமெலேக்கு ஆள் அனுப்பி சாராளை வரவழைத்தான்.
И говораше за жену своју Сару: Сестра ми је. А цар герарски Авимелех посла те узе Сару.
3 தேவன் இரவிலே அபிமெலேக்குக்குக் கனவிலே தோன்றி: “நீ வரவழைத்த பெண்ணால் நீ செத்தாய்; அவள் ஒருவனுடைய மனைவியாக இருக்கிறாளே” என்றார்.
Али дође Бог Авимелеху ноћу у сну, и рече му: Гле, погинућеш са жене коју си узео, јер има мужа.
4 அபிமெலேக்கு அவளுடன் இணையாதிருந்தான். ஆகையால் அவன்: “ஆண்டவரே, நீதியுள்ள மக்களை அழிப்பீரோ?
А Авимелех не беше се ње дотакао, и зато рече: Господе, еда ли ћеш и праведан народ погубити?
5 இவள் தன் சகோதரி” என்று அவன் என்னிடம் சொல்லவில்லையா? அவன் தன் சகோதரன் என்று இவளும் சொன்னாளே; உத்தம இருதயத்தோடும் சுத்தமான கைகளோடும் இதைச் செய்தேன் என்று சொன்னான்.
Није ли ми сам казао: Сестра ми је? А и она сама каза: Брат ми је. Учинио сам у чистоти срца свог и у правди руку својих.
6 அப்பொழுது தேவன்: “உத்தம இருதயத்தோடு நீ இதைச் செய்தாய் என்று நான் அறிந்திருக்கிறேன்; நீ எனக்கு விரோதமாகப் பாவம் செய்யாமலிருக்க உன்னைத் தடுத்தேன்; ஆகையால், நீ அவளைத் தொட நான் உனக்கு இடங்கொடுக்கவில்லை.
Тада му рече Бог у сну: Знам да си учинио у чистоти срца свог, зато те сачувах да ми не сагрешиш, и не дадох да је се дотакнеш.
7 அந்த மனிதனுடைய மனைவியை அவனிடத்திற்கு அனுப்பிவிடு; அவன் ஒரு தீர்க்கதரிசி; நீ பிழைப்பதற்கு அவன் உனக்காக வேண்டுதல் செய்வான்; நீ அவளை அனுப்பிவிடாதிருந்தால், நீயும் உன்னைச் சார்ந்த அனைவரும் சாகவே சாவீர்கள் என்று அறிந்துகொள்” என்று கனவிலே அவனுக்குச் சொன்னார்.
А сада врати човеку жену његову, јер је пророк, и молиће се за те, те ћеш остати жив. Ако ли не вратиш, знај да ћеш умрети ти и сви твоји.
8 அபிமெலேக்கு அதிகாலையில் எழுந்து, தன் வேலைக்காரரையெல்லாம் வரவழைத்து, இந்தச் செய்திகளையெல்லாம் அவர்கள் கேட்கும்படி சொன்னான்; அந்த மனிதர் மிகவும் பயந்தார்கள்.
И ујутру рано уста Авимелех, и сазва све слуге своје, и каза им све ово да чују. И уплашише се људи веома.
9 அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து: “நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய், நீ என்மேலும், என்னுடைய ராஜ்ஜியத்தின்மேலும் பெரும்பாவம் சுமரச் செய்வதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
Тада Авимелех дозва Аврама и рече му: Шта си нам учинио? Шта ли сам ти згрешио, те навуче на ме и на царство моје толико зло? Учинио си ми шта не ваља чинити.
10 ௧0 பின்னும் அபிமெலேக்கு ஆபிரகாமை நோக்கி: “எதைக் கண்டு நீ இந்தக் காரியத்தைச் செய்தாய்” என்றான்.
И још рече Авимелех Авраму: Шта ти је било, те си то учинио?
11 ௧௧ அதற்கு ஆபிரகாம்: “இந்த இடத்தில் தெய்வபயம் இல்லையென்றும், என் மனைவியின்பொருட்டு என்னைக் கொன்றுபோடுவார்கள் என்றும் நான் நினைத்தேன்.
А Аврам одговори: Говорих: јамачно нема страха Божјег у овом месту, па ће ме убити ради жене моје.
12 ௧௨ அவள் என்னுடைய சகோதரி என்பதும் உண்மைதான்; அவள் என் தகப்பனுக்கு மகள், என் தாய்க்கு மகளல்ல; அவள் எனக்கு மனைவியானாள்.
А управо и јесте ми сестра, кћи оца мог; али није кћи моје матере, па пође за ме.
13 ௧௩ என் தகப்பன் வீட்டைவிட்டு தேவன் என்னைத் நாடோடியாகத் திரியச்செய்தபோது, நான் அவளை நோக்கி: நாம் போகும் இடமெங்கும், நீ என்னைச் சகோதரன் என்று சொல்வது நீ எனக்குச் செய்யவேண்டிய தயை என்று அவளிடத்தில் சொல்லியிருந்தேன்” என்றான்.
А кад ме Бог изведе из дома оца мог, ја јој рекох: Учини добро, и кажи за ме где год дођемо: Брат ми је.
14 ௧௪ அப்பொழுது அபிமெலேக்கு ஆடுமாடுகளையும், வேலைக்காரரையும், வேலைக்காரிகளையும் ஆபிரகாமுக்குக் கொடுத்து, அவனுடைய மனைவியாகிய சாராளையும் அவனிடத்தில் திரும்ப ஒப்புவித்தான்.
Тада Авимелех узе оваца и говеда и слуга и слушкиња, те даде Авраму, и врати му Сару жену његову.
15 ௧௫ பின்னும் அபிமெலேக்கு: இதோ, “என் தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது; உன் பார்வைக்கு விருப்பமான இடத்தில் குடியிரு” என்று சொன்னான்.
И рече Авимелех Авраму: Ево, земља ти је моја отворена, живи слободно где ти је воља.
16 ௧௬ பின்பு சாராளை நோக்கி: “உன் சகோதரனுக்கு ஆயிரம் வெள்ளிக்காசு கொடுத்தேன்; இதோ, உன்னோடிருக்கிற எல்லோருக்கும் முன்பாகவும், மற்ற அனைவருக்கும் முன்பாகவும், இது உன் முகத்தின் முக்காட்டுக்காக” என்றான்; இப்படி அவள் கடிந்துகொள்ளப்பட்டாள்.
А Сари рече: Ево дао сам твом брату хиљаду сребрника; гле, он ти је очима покривало пред свима који буду с тобом; и то све да ти је за науку.
17 ௧௭ ஆபிரகாமுடைய மனைவியாகிய சாராளுக்காக யெகோவா அபிமெலேக்குடைய வீட்டாரின் கர்ப்பங்களையெல்லாம் அடைத்திருந்ததால்,
И Аврам се помоли Богу, и исцели Бог Авимелеха и жену његову и слушкиње његове, те рађаху.
18 ௧௮ ஆபிரகாம் தேவனை நோக்கி வேண்டிக்கொண்டான்; அப்பொழுது தேவன் அபிமெலேக்கையும், அவனுடைய மனைவியையும், வேலைக்காரிகளையும் குணமாக்கி, குழந்தைபெறும்படி தயவு செய்தார்.
Јер Господ беше сасвим затворио сваку материцу у дому Авимелеховом ради Саре жене Аврамове.

< ஆதியாகமம் 20 >