< ஆதியாகமம் 2 >
1 ௧ இந்தவிதமாக வானமும் பூமியும், அவைகளில் இருக்கிற அனைத்தயும் உண்டாக்கப்பட்டு முடிந்தன. பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
Tako se dovrši nebo i zemlja i sva vojska njihova.
2 ௨ தேவன் தாம் செய்த தம்முடைய செயலை ஏழாம் நாளிலே நிறைவேற்றி, தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தார்.
I svrši Bog do sedmoga dana djela svoja, koja uèini; i poèinu u sedmi dan od svijeh djela svojih, koja uèini;
3 ௩ தேவன் தாம் உருவாக்கும் தம்முடைய செயல்களையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்ததினால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.
I blagoslovi Bog sedmi dan, i posveti ga, jer u taj dan poèinu od svijeh djela svojih, koja uèini;
4 ௪ தேவனாகிய யெகோவா பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும் உண்டாக்கப்பட்ட வரலாறு இவைகளே.
To je postanje neba i zemlje, kad postaše, kad Gospod Bog stvori zemlju i nebo,
5 ௫ நிலத்தினுடைய அனைத்துவிதச் செடிகளும் பூமியின்மேல் இன்னும் உண்டாகவில்லை, நிலத்தினுடைய அனைத்துவிதத் தாவரங்களும் இன்னும் முளைக்கவில்லை; ஏனென்றால் தேவனாகிய யெகோவா பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யச்செய்யவில்லை; நிலத்தைப் பண்படுத்த மனிதனும் இல்லை.
I svaku biljku poljsku, dokle je još ne bješe na zemlji, i svaku travku poljsku, dokle još ne nicaše; jer Gospod Bog još ne pusti dažda na zemlju, niti bješe èovjeka da radi zemlju,
6 ௬ அப்பொழுது பூமியிலிருந்து நீரூற்று எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
Ali se podizaše para sa zemlje da natapa svu zemlju.
7 ௭ தேவனாகிய யெகோவா மனிதனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, உயிரடையச்செய்யும் சுவாசத்தை அவனுடைய மூக்கின் துவாரத்திலே ஊதினார், மனிதன் உயிருள்ள ஆத்துமாவானான்.
A stvori Gospod Bog èovjeka od praha zemaljskoga, i dunu mu u nos duh životni; i posta èovjek duša živa.
8 ௮ தேவனாகிய யெகோவா கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனிதனை அதிலே வைத்தார்.
I nasadi Gospod Bog vrt u Edemu na istoku; i ondje namjesti èovjeka, kojega stvori.
9 ௯ தேவனாகிய யெகோவா, பார்வைக்கு அழகும் சாப்பிடுவதற்கு ஏற்ற அனைத்துவித மரங்களையும், தோட்டத்தின் நடுவிலே வாழ்வளிக்கும் மரத்தையும், நன்மை தீமை அறியத்தக்க ஆற்றலைக் கொடுக்கும் மரத்தையும் பூமியிலிருந்து முளைக்கச்செய்தார்.
I uèini Gospod Bog, te nikoše iz zemlje svakojaka drveta lijepa za gledanje i dobra za jelo, i drvo od života usred vrta i drvo od znanja dobra i zla.
10 ௧0 தோட்டத்திற்குத் தண்ணீர் பாய ஏதேனிலிருந்து ஒரு நதி ஓடி, அங்கேயிருந்து பிரிந்து நான்கு பெரிய ஆறுகளானது.
A voda tecijaše iz Edema natapajuæi vrt, i odande se dijeljaše u èetiri rijeke.
11 ௧௧ முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர், அது ஆவிலா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்; அந்த இடத்திலே பொன் உண்டு.
Jednoj je ime Fison, ona teèe oko cijele zemlje Evilske, a ondje ima zlata,
12 ௧௨ அந்த தேசத்தின் பொன் நல்லது; அந்த இடத்திலே நறுமணப்பிசினும், விலையேறிய முத்துகளும் உண்டு.
I zlato je one zemlje vrlo dobro; ondje ima i bdela i dragoga kamena oniha.
13 ௧௩ ஆற்றுக்கு கீகோன் என்று பெயர், அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
A drugoj je rijeci ime Geon, ona teèe oko cijele zemlje Huske.
14 ௧௪ மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர், அது அசீரியாவுக்குக் கிழக்கே ஓடும்; நான்காம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
A treæoj je rijeci ime Hidekel, ona teèe k Asirskoj. A èetvrta je rijeka Efrat.
15 ௧௫ தேவனாகிய யெகோவா மனிதனை ஏதேன் தோட்டத்திற்கு அழைத்துவந்து, அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.
I uzevši Gospod Bog èovjeka namjesti ga u vrtu Edemskom, da ga radi i da ga èuva.
16 ௧௬ தேவனாகிய யெகோவா மனிதனை நோக்கி: “நீ தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் தாராளமாக சாப்பிடலாம்.
I zaprijeti Gospod Bog èovjeku govoreæi: jedi slobodno sa svakoga drveta u vrtu;
17 ௧௭ ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் பழத்தை சாப்பிடவேண்டாம்; அதை நீ சாப்பிடும் நாளில் சாகவே சாவாய்” என்று கட்டளையிட்டார்.
Ali s drveta od znanja dobra i zla, s njega ne jedi; jer u koji dan okusiš s njega, umrijeæeš.
18 ௧௮ பின்பு, தேவனாகிய யெகோவா: “மனிதன் தனிமையாக இருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன்” என்றார்.
I reèe Gospod Bog: nije dobro da je èovjek sam; da mu naèinim druga prema njemu.
19 ௧௯ தேவனாகிய யெகோவா பூமியிலுள்ள அனைத்துவித மிருகங்களையும், ஆகாயத்தின் அனைத்துவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பெயரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த உயிரினத்திற்கு ஆதாம் என்னென்ன பெயரிட்டானோ அதுவே அதற்குப் பெயரானது.
Jer Gospod Bog stvori od zemlje sve zvijeri poljske i sve ptice nebeske, i dovede k Adamu da vidi kako æe koju nazvati, pa kako Adam nazove koju životinju onako da joj bude ime;
20 ௨0 அப்படியே ஆதாம் அனைத்துவித நாட்டுமிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், அனைத்துவிதக் காட்டுமிருகங்களுக்கும் பெயரிட்டான்; ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை.
I Adam nadjede ime svakom živinèetu i svakoj ptici nebeskoj i svakoj zvijeri poljskoj; ali se ne naðe Adamu drug prema njemu.
21 ௨௧ அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு ஆழ்ந்த உறக்கத்தை வரச்செய்தார், அவன் ஆழ்ந்து உறங்கினான்; அவர் அவனுடைய விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார்.
I Gospod Bog pusti tvrd san na Adama, te zaspa; pa mu uze jedno rebro, i mjesto popuni mesom;
22 ௨௨ தேவனாகிய யெகோவா தாம் மனிதனிலிருந்து எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனிதனிடத்தில் கொண்டுவந்தார்.
I Gospod Bog stvori ženu od rebra, koje uze Adamu, i dovede je k Adamu.
23 ௨௩ அப்பொழுது ஆதாம்: “இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாக இருக்கிறாள்; இவள் மனிதனிலிருந்து எடுக்கப்பட்டதால் மனுஷி எனப்படுவாள்” என்றான்.
A Adam reèe: sada eto kost od mojih kosti, i tijelo od mojega tijela. Neka joj bude ime èovjeèica, jer je uzeta od èovjeka.
24 ௨௪ இதன் காரணமாக மனிதன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடு இணைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாக இருப்பார்கள்.
Zato æe ostaviti èovjek oca svojega i mater svoju, i prilijepiæe se k ženi svojoj, i biæe dvoje jedno tijelo.
25 ௨௫ ஆதாமும் அவனுடைய மனைவியும் நிர்வாணிகளாக இருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.
A bjehu oboje goli, Adam i žena mu, i ne bješe ih sramota.