< ஆதியாகமம் 13 >
1 ௧ ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள்.
Тако отиде Аврам из Мисира горе на југ, он и жена му и све што имаше, такође и Лот с њим.
2 ௨ ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான்.
А беше Аврам врло богат стоком, сребром и златом.
3 ௩ அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
И иђаше својим путевима од југа све до Ветиља, до места где му прво беше шатор, између Ветиља и Гаја,
4 ௪ தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
До места, где пре беше начинио жртвеник; и онде призва Аврам име Господње.
5 ௫ ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள்.
А и Лот који иђаше с Аврамом имаше оваца и говеда и шатора.
6 ௬ அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.
И земља не могаше их носити заједно, јер благо њихово беше велико да не могоше живети заједно,
7 ௭ ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள்.
И беше свађа међу пастирима Аврамове стоке и пастирима Лотове стоке. А у то време живеху Хананеји и Ферезеји у оној земљи.
8 ௮ ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள்.
Па Аврам рече Лоту: Немој да се свађамо ја и ти, ни моји пастири и твоји пастири; јер смо браћа.
9 ௯ இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான்.
Није ли ти отворена цела земља? Одели се од мене. Ако ћеш ти на лево, ја ћу на десно; ако ли ћеш ти на десно ја ћу на лево.
10 ௧0 அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Тада Лот подиже очи своје и сагледа сву равницу јорданску, како целу натапаше река, беше као врт Господњи, као земља мисирска, све до Загора, пре него Господ затре Содом и Гомор.
11 ௧௧ அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
И Лот изабра себи сву равницу јорданску, и отиде Лот на исток; и разделише се један од другог:
12 ௧௨ ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான்.
Аврам живљаше у земљи хананској, а Лот живљаше по градовима у оној равници премештајући своје шаторе до Содома.
13 ௧௩ சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள்.
А људи у Содому беху неваљали, и грешаху Господу веома.
14 ௧௪ லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்.
А Господ рече Авраму, пошто се Лот одели од њега: Подигни сада очи своје, па погледај с места где си на север и на југ и на исток и на запад.
15 ௧௫ நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து,
Јер сву земљу што видиш теби ћу дати и семену твом до века.
16 ௧௬ உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
И учинићу да семена твог буде као праха на земљи; ако ко узможе избројати прах на земљи, моћи ће избројати и семе твоје.
17 ௧௭ நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார்.
Устани, и пролази ту земљу у дужину и у ширину; јер ћу је теби дати.
18 ௧௮ அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
И Аврам диже шаторе, и дође и насели се у равници мамријској, која је код Хеврона, и онде начини жртвеник Господу.