< ஆதியாகமம் 13 >

1 ஆபிராமும், அவனுடைய மனைவியும், அவனுக்கு உண்டான அனைத்தும், அவனுடனே லோத்தும், எகிப்தை விட்டு தென்திசைக்கு வந்தார்கள்.
Tako otide Avram iz Misira gore na jug, on i žena mu i sve što imaše, takoðer i Lot s njim.
2 ஆபிராம் மிருகஜீவன்களும் வெள்ளியும் பொன்னுமான சொத்துக்களையுடைய செல்வந்தனாக இருந்தான்.
A bijaše Avram vrlo bogat stokom, srebrom i zlatom.
3 அவன் தன்னுடைய பயணங்களில் தெற்கேயிருந்து பெத்தேல்வரைக்கும், பெத்தேலுக்கும் ஆயீக்கும் நடுவாகத் தான் முன்பு கூடாரம்போட்டதும்,
I iðaše svojim putovima od juga sve do Vetilja, do mjesta gdje mu prvo bijaše šator, izmeðu Vetilja i Gaja,
4 தான் முதன்முதலில் ஒரு பலிபீடத்தை உண்டாக்கினதுமான இடம்வரைக்கும் போனான்; அங்கே ஆபிராம் யெகோவாவுடைய நாமத்தைத் தொழுதுகொண்டான்.
Do mjesta, gdje preðe bješe naèinio žrtvenik; i ondje prizva Avram ime Gospodnje.
5 ஆபிராமுடன் வந்த லோத்துக்கும் ஆடுமாடுகளும் ஜனங்களும் இருந்தார்கள்.
A i Lot koji iðaše s Avramom imaše ovaca i goveda i šatora.
6 அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க அந்த இடம் அவர்களுக்குப் போதுமனதாக இல்லை; அவர்களுடைய சொத்துக்கள் அதிகமாக இருந்ததால், அவர்கள் ஒன்றாகக் குடியிருக்க வசதி இல்லாமற்போனது.
I zemlja ne mogaše ih nositi zajedno, jer blago njihovo bijaše veliko da ne mogahu živjeti zajedno,
7 ஆபிராமுடைய மேய்ப்பர்களுக்கும் லோத்துடைய மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டானது. அந்தக் காலத்தில் கானானியரும் பெரிசியரும் அந்த தேசத்தில் குடியிருந்தார்கள்.
I bijaše svaða meðu pastirima Avramove stoke i pastirima Lotove stoke. A u to vrijeme življahu Hananeji i Ferezeji u onoj zemlji.
8 ஆபிராம் லோத்தை நோக்கி: “எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள்.
Pa Avram reèe Lotu: nemoj da se svaðamo ja i ti, ni moji pastiri i tvoji pastiri; jer smo braæa.
9 இந்த தேசமெல்லாம் உனக்குமுன்பாக இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன்” என்றான்.
Nije li ti otvorena cijela zemlja? Odijeli se od mene. Ako æeš ti na lijevo, ja æu na desno; ako li æeš ti na desno, ja æu na lijevo.
10 ௧0 அப்பொழுது லோத்து சுற்றிலும் பார்த்து: யோர்தான் நதிக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதும் நீர்வளம் உள்ளதாக இருப்பதைக்கண்டான். யெகோவா சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போகும் வழிவரைக்கும் அது யெகோவாவுடைய தோட்டத்தைப்போலவும் எகிப்து தேசத்தைப்போலவும் இருந்தது.
Tada Lot podiže oèi svoje i sagleda svu ravnicu Jordansku, kako cijelu natapaše rijeka, bješe kao vrt Gospodnji, kao zemlja Misirska, sve do Zogora, prije nego Gospod zatr Sodom i Gomor.
11 ௧௧ அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகிலுள்ள சமபூமி முழுவதையும் தேர்ந்தெடுத்து, கிழக்கே புறப்பட்டுப்போனான். இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
I Lot izabra sebi svu ravnicu Jordansku, i otide Lot na istok; i razdijeliše se jedan od drugoga:
12 ௧௨ ஆபிராம் கானான் தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகிலிருக்கும் சமபூமியிலுள்ள பட்டணங்களில் குடியிருந்து, சோதோமுக்குச் செல்லும் வழியில் கூடாரம் போட்டான்.
Avram življaše u zemlji Hananskoj, a Lot življaše po gradovima u onoj ravnici premještajuæi svoje šatore do Sodoma.
13 ௧௩ சோதோமின் மக்கள் பொல்லாதவர்களும் யெகோவாவுக்கு முன்பாக மகா பாவிகளுமாக இருந்தார்கள்.
A ljudi u Sodomu bijahu nevaljali, i griješahu Gospodu veoma.
14 ௧௪ லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்த பின்பு, யெகோவா ஆபிராமை நோக்கி: “உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப் பார்.
A Gospod reèe Avramu, pošto se Lot odijeli od njega: podigni sada oèi svoje, pa pogledaj s mjesta gdje si na sjever i na jug i na istok i na zapad.
15 ௧௫ நீ பார்க்கிற இந்த பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படிக் கொடுத்து,
Jer svu zemlju što vidiš tebi æu dati i sjemenu tvojemu dovijeka.
16 ௧௬ உன் சந்ததியை பூமியின் தூளைப்போலப் பெருகச்செய்வேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணுவதற்கு முடியுமானால், உன் சந்ததியையும் எண்ணமுடியும்.
I uèiniæu da sjemena tvojega bude kao praha na zemlji; ako ko uzmože izbrojiti prah na zemlji, moæi æe izbrojiti i sjeme tvoje.
17 ௧௭ நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எதுவரையோ, அதுவரை நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன்” என்றார்.
Ustani, i prolazi tu zemlju u dužinu i u širinu; jer æu je tebi dati.
18 ௧௮ அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமிக்குப் போய் குடியிருந்து, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
I Avram diže šatore, i doðe i naseli se u ravnici Mamrijskoj, koja je kod Hevrona, i ondje naèini žrtvenik Gospodu.

< ஆதியாகமம் 13 >