< ஆதியாகமம் 11 >
1 ௧ பூமியெங்கும் ஒரே மொழியும், ஒரே விதமான பேச்சும் இருந்தது.
А беше на целој земљи један језик и једнаке речи.
2 ௨ மக்கள் கிழக்கேயிருந்து பயணம்செய்யும்போது, சிநெயார் தேசத்தில் சமபூமியைக்கண்டு, அங்கே குடியிருந்தார்கள்.
А кад отидоше од истока, нађоше равницу у земљи сенарској, и населише се онде.
3 ௩ அப்பொழுது அவர்கள்: “நாம் செங்கல் அறுத்து, அதை நன்றாகச் சுடுவோம் வாருங்கள்” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்; கல்லுக்குப் பதிலாக செங்கலும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் அவர்களுக்கு இருந்தது.
Па рекоше међу собом: Хајде да правимо плоче и да их у ватри печемо. И беху им опеке место камена и смола земљана место креча.
4 ௪ பின்னும் அவர்கள்: “நாம் பூமியெங்கும் சிதறிப்போகாதபடி, நமக்கு ஒரு நகரத்தையும், வானத்தைத் தொடுமளவு ஒரு கோபுரத்தையும் கட்டி, நமக்குப் பெயர் உண்டாகச் செய்வோம் வாருங்கள்” என்று சொல்லிக்கொண்டார்கள்.
После рекоше: Хајде да сазидамо град и кулу, којој ће врх бити до неба, да стечемо себи име, да се не бисмо расејали по земљи.
5 ௫ மனிதர்கள் கட்டுகிற நகரத்தையும் கோபுரத்தையும் பார்க்கிறதற்குக் யெகோவா இறங்கினார்.
А Господ сиђе да види град и кулу, што зидаху синови човечији.
6 ௬ அப்பொழுது யெகோவா: “இதோ, மக்கள் ஒரே கூட்டமாக இருக்கிறார்கள்; அவர்கள் அனைவருக்கும் ஒரே மொழியும் இருக்கிறது; அவர்கள் இதைச் செய்யத்தொடங்கினார்கள்; இப்பொழுதும் தாங்கள் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்று இருக்கிறார்கள்.
И рече Господ: Гле, народ један, и један језик у свих, и то почеше радити, и неће им сметати ништа да не ураде шта су наумили.
7 ௭ நாம் இறங்கிப்போய், ஒருவர் பேசுவதை மற்றொருவர் புரிந்துகொள்ளாதபடி, அங்கே அவர்கள் மொழியைத் தாறுமாறாக்குவோம்” என்றார்.
Хајде да сиђемо, и да им пометемо језик, да не разумеју један другог шта говоре.
8 ௮ அப்படியே யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்; அப்பொழுது நகரம் கட்டுவதை விட்டுவிட்டார்கள்.
Тако их Господ расу оданде по свој земљи, те не сазидаше града.
9 ௯ பூமியெங்கும் பேசப்பட்ட மொழியைக் யெகோவா அந்த இடத்தில் தாறுமாறாக்கியதால், அதின் பெயர் பாபேல் எனப்பட்டது; யெகோவா அவர்களை அந்த இடத்திலிருந்து பூமியெங்கும் சிதறிப்போகச் செய்தார்.
Зато се прозва Вавилон, јер онде помете Господ језик целе земље, и оданде их расу Господ по свој земљи.
10 ௧0 சேமுடைய வம்சவரலாறு: வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 2 வருடங்களுக்குப் பிறகு, சேம் 100 வயதானபோது, அர்பக்சாத்தைப் பெற்றெடுத்தான்.
Ово је племе Симово: беше Симу сто година, кад роди Арфаксада, друге године после потопа.
11 ௧௧ சேம் அர்பக்சாத்தைப் பெற்றபின் 500 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Арфаксада поживе Сим пет стотина година, рађајући синове и кћери.
12 ௧௨ அர்பக்சாத் 35 வயதானபோது சாலாவைப் பெற்றெடுத்தான்.
А Арфаксад поживе тридесет и пет година, и роди Салу;
13 ௧௩ சாலாவைப் பெற்றபின் அர்பக்சாத் 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Салу поживе Арфаксад четири стотине и три године, рађајући синове и кћери.
14 ௧௪ சாலா 30 வயதானபோது ஏபேரைப் பெற்றெடுத்தான்.
А Сала поживе тридесет година, и роди Евера;
15 ௧௫ ஏபேரைப் பெற்றபின் சாலா 403 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Евера поживе Сала четири стотине и три године, рађајући синове и кћери.
16 ௧௬ ஏபேர் 34 வயதானபோது பேலேகைப் பெற்றெடுத்தான்.
А Евер поживе тридесет и четири године, и роди Фалека;
17 ௧௭ பேலேகைப் பெற்றபின் ஏபேர் 430 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Фалека поживе Евер четири стотине и тридесет година, рађајући синове и кћери.
18 ௧௮ பேலேகு 30 வயதானபோது ரெகூவைப் பெற்றெடுத்தான்.
А Фалек поживе тридесет година, и роди Рагава;
19 ௧௯ ரெகூவைப் பெற்றபின் பேலேகு 209 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Рагава поживе Фалек двеста и девет година, рађајући синове и кћери.
20 ௨0 ரெகூ 32 வயதானபோது செரூகைப் பெற்றெடுத்தான்.
А Рагав поживе тридесет и две године, и роди Серуха;
21 ௨௧ செரூகைப் பெற்றபின் ரெகூ 207 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Серуха поживе Рагав двеста и седам година, рађајући синове и кћери.
22 ௨௨ செரூகு முப்பது 30 நாகோரைப் பெற்றெடுத்தான்.
А Серух поживе тридесет година, и роди Нахора;
23 ௨௩ நாகோரைப் பெற்றபின் செரூகு 200 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Нахора поживе Серух двеста година, рађајући синове и кћери.
24 ௨௪ நாகோர் 29 வயதானபோது தேராகைப் பெற்றெடுத்தான்.
А Нахор поживе двадесет и девет година, и роди Тару;
25 ௨௫ தேராகைப் பெற்றபின் நாகோர் 119 வருடங்கள் உயிரோடிருந்து மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான்.
А родив Тару поживе Нахор сто и деветнаест година, рађајући синове и кћери.
26 ௨௬ 70 வயதானபோது ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்.
А Тара поживе седамдесет година, и роди Аврама, Нахора и Арана.
27 ௨௭ தேராகுடைய வம்சவரலாறு: தேராகு ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றெடுத்தான்; ஆரான் லோத்தைப் பெற்றெடுத்தான்.
А ово је племе Тарино: Тара роди Аврама, Нахора и Арана; а Аран роди Лота.
28 ௨௮ ஆரான் தன் பிறந்த இடமாகிய ஊர் என்கிற கல்தேயர் தேசத்துப் பட்டணத்திலே தன் தகப்பனாகிய தேராகு இறப்பதற்குமுன்னே இறந்தான்.
И умре Аран пре Таре оца свог на постојбини својој, у Уру халдејском.
29 ௨௯ ஆபிராமும் நாகோரும் திருமணம் செய்தார்கள்; ஆபிராமுடைய மனைவிக்கு சாராய் என்று பெயர்; நாகோருடைய மனைவிக்கு மில்க்காள் என்று பெயர்; இவள் ஆரானுடைய மகள்; அந்த ஆரான் மில்க்காளுக்கும் இஸ்காளுக்கும் தகப்பன்.
И ожени се Аврам и Нахор, и жени Аврамовој беше име Сара а жени Нахоровој име Мелха, кћи Арама оца Мелхе и Јесхе.
30 ௩0 சாராய்க்குக் குழந்தையில்லை; மலடியாக இருந்தாள்.
А Сара беше нероткиња, и не имаше порода.
31 ௩௧ தேராகு தன் மகனாகிய ஆபிராமையும், ஆரானுடைய மகனும், தன்னுடைய பேரனுமாயிருந்த லோத்தையும், ஆபிராமுடைய மனைவியாகிய தன்னுடைய மருமகள் சாராயையும் அழைத்துக்கொண்டு, அவர்களுடன் ஊர் என்கிற கல்தேயர்களுடைய பட்டணத்தைவிட்டு, கானான் தேசத்திற்குப் போகப் புறப்பட்டான்; அவர்கள் ஆரான்வரைக்கும் வந்தபோது, அங்கே தங்கிவிட்டார்கள்.
И узе Тара сина свог Аврама и Лота сина Ароновог, унука свог, и Сару снаху своју, жену Аврама сина свог; и пођоше заједно из Ура халдејског да иду у земљу хананску, и дођоше до Харана, и онде се настанише.
32 ௩௨ தேராகுடைய ஆயுசு நாட்கள் 205 வருடங்கள்; தேராகு ஆரானிலே இறந்தான்.
И поживе Тара свега двеста и пет година; и умре Тара у Харану.