< ஆதியாகமம் 10 >
1 ௧ நோவாவின் மகன்களாகிய சேம், காம், யாப்பேத் என்பவர்களின் வம்சவரலாறு: வெள்ளப்பெருக்குக்குப் பின்பு அவர்களுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
यिनीहरू नोआका सन्तानहरू थिए, अर्थात्, शेम, हाम, र येपेत । जलप्रलयपछि तिनीहरूका छोराहरू जन्मे ।
2 ௨ யாப்பேத்தின் மகன்கள் கோமர், மாகோகு, மாதாய், யாவான், தூபால், மேசேக்கு, தீராஸ் என்பவர்கள்.
गोमेर, मागोग, मादे, यावान, तूबल, मेशेक र तीरास येपेतका छोराहरू थिए ।
3 ௩ கோமரின் மகன்கள் அஸ்கினாஸ், ரீப்பாத்து, தொகர்மா என்பவர்கள்.
अशकनज, रीपत र तोगर्मा गोमेरका छोराहरू थिए ।
4 ௪ யாவானின் மகன்கள் எலீசா, தர்ஷீஸ், கித்தீம், தொதானீம் என்பவர்கள்.
एलीशाह, तर्शीश, कित्तीम र रोदानीम यावानका छोराहरू थिए ।
5 ௫ இவர்களால் மத்திய தரைக்கடல் தீவுகள் அவனவன் மொழியினடிப்படையிலும், அவரவர்கள் கோத்திரத்தின்படியேயும், சந்ததியின்படியேயும் வெவ்வேறு தேசங்களாகப் பிரிக்கப்பட்டன.
यिनीहरूबाट नै समुद्रतटवासी छुट्टिए र तिनीहरू आफ्नो जातिअनुरूप आ-आफ्नो भाषाअनुसार तिनीहरूको भूमितिर गए ।
6 ௬ காமுடைய மகன்கள் கூஷ், மிஸ்ராயீம், பூத், கானான் என்பவர்கள்.
कूश, मिश्रइम, पूत र कनान हामका छोराहरू थिए ।
7 ௭ கூஷூடைய மகன்கள் சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள். ராமாவின் மகன்கள் சேபா, திதான் என்பவர்கள்.
सेबा, हवीला, सब्ता, रामाह र सब्तका कूशका छोराहरू थिए । शेबा र ददान रामाहका छोराहरू थिए ।
8 ௮ கூஷ் நிம்ரோதைப் பெற்றெடுத்தான்; இவன் பூமியிலே பராக்கிரமசாலியானான்.
कूश निम्रोदका पिता बने, जो पृथ्वीमाथिका पहिलो विजेता थिए ।
9 ௯ இவன் யெகோவாவுக்கு முன்பாகப் பலத்த வேட்டைக்காரனாக இருந்தான்; ஆகையால், “யெகோவா முன்பாகப் பலத்த வேட்டைக்காரனான நிம்ரோதைப்போல” என்னும் வழக்கச்சொல் உண்டானது.
तिनी परमप्रभुको सामु शक्तिशाली शिकारी बने । त्यसैले यसो भनियो, “परमप्रभुको सामु निम्रोदजस्तै शक्तिशाली सिकारी ।”
10 ௧0 சிநெயார் தேசத்திலுள்ள பாபேல், ஏரேக், அக்காத், கல்னே என்னும் இடங்கள் அவன் ஆண்ட ராஜ்யத்திற்கு முதன்மையான இடங்கள்.
तिनका राज्यहरूका सुरुका केन्द्रहरू शिनारको मुलुकका बाबेल, अक्कद र कल्नेह थिए ।
11 ௧௧ அந்தத் தேசத்திலிருந்து அசூர் புறப்பட்டுப்போய், நினிவேயையும், ரெகொபோத் பட்டணத்தையும், காலாகையும்,
तिनी त्यो भूमिबाट बाहिर अश्शूरतित गए, र निनवे, रहोबोत-इर, कालह,
12 ௧௨ நினிவேக்கும் காலாகுக்கும் நடுவாக ரெசேனையும் கட்டினான்; இது பெரிய பட்டணம்.
र निनवे र कालह बिचमा पर्ने रेसेन निर्माण गरे । यो एउटा ठुलो सहर थियो ।
13 ௧௩ மிஸ்ராயீம் லூதீமையும், அனாமீமையும், லெகாபீமையும், நப்தூகீமையும்,
मिश्रइम लूदी, अनामी, लहाबी, नप्तूही
14 ௧௪ பத்ருசீமையும், பெலிஸ்தரின் சந்ததிக்குத் தலைவனாகிய கஸ்லூகிமையும், கப்தொரீமையும் பெற்றெடுத்தான்.
पत्रुसी, कस्लूही (जसबाट पलिश्तीहरू आए) र कप्तोरीहरूका पुर्खा बने ।
15 ௧௫ கானான் தன் மூத்தமகனாகிய சீதோனையும், ஏத்தையும்,
कनान सीदोन अर्थात् तिनका जेठो छोरो, हित्ती,
16 ௧௬ எபூசியர்களையும், எமோரியர்களையும், கிர்காசியர்களையும்,
यबूसी, एमोरी,
17 ௧௭ ஈவியர்களையும், அர்கீரியர்களையும், சீனியர்களையும்,
गिर्गाशी, हिव्वी, अरकी, सिनी,
18 ௧௮ அர்வாதியர்களையும், செமாரியர்களையும், ஆமாத்தியர்களையும் பெற்றெடுத்தான்; பின்பு கானானியர்களின் வம்சத்தார்கள் எங்கும் பரவினார்கள்.
अर्वादी, समारी र हमातीहरूका पुर्खा भए । त्यसपछि कनानीहरूका वंशहरू फैलिए ।
19 ௧௯ கானானியர்களின் எல்லை சீதோன்முதல் கேரார் வழியாகக் காசாவரைக்கும், அங்கிருந்து சோதோம், கொமோரா, அத்மா, செபோயீம் வழியாக லாசாவரைக்கும் இருந்தது.
कनानीहरूको सिमाना सीदोनदेखि गरार जाने बाटोतिर गाजासम्म, र सदोम, गमोरा, अदमा र सबोयीम जाने बाटोतिर भएर लाशासम्म नै थियो ।
20 ௨0 இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் காமுடைய சந்ததியினர்.
तिनीहरूका वंशहरू र भाषाहरूअनुसार तिनीहरूको भूमि र देशमा हामका छोराहरू यिनीहरू नै थिए ।
21 ௨௧ சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியினர் எல்லோருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாக இருந்தான்.
येपेतका दाजु शेमका पनि छोराहरू भए । शेम एबेरका सबै सन्तानहरूका पुर्खा थिए ।
22 ௨௨ சேமுடைய மகன்கள் ஏலாம், அசூர், அர்பக்சாத், லூத், ஆராம் என்பவர்கள்.
एलाम, अश्शूर, अर्पक्षद, लूद र अराम शेमका छोराहरू थिए ।
23 ௨௩ ஆராமுடைய மகன்கள் ஊத்ஸ், கூல், கேத்தெர், மாஸ் என்பவர்கள்.
ऊज, हुल, गेतेर र मेशेक अरामका छोराहरू थिए ।
24 ௨௪ அர்பக்சாத் சாலாவைப் பெற்றெடுத்தான்; சாலா ஏபேரைப் பெற்றெடுத்தான்.
अर्पक्षेद शेलहका पिता बने र शेलह एबेरका पिता बने ।
25 ௨௫ ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.
एबेरका दुई जना छोरा भए । एक जना छोराको नाउँ पेलेग थियो, किनभने तिनको समयमा पृथ्वी विभाजित भयो । तिनको भाइको नाउँ योक्तान थियो ।
26 ௨௬ யொக்தான் அல்மோதாதையும், சாலேப்பையும், அசர்மாவேத்தையும், யேராகையும்,
योक्तान अल्मोदद, शेलेप, हसर्मवित, येरह,
27 ௨௭ அதோராமையும், ஊசாலையும், திக்லாவையும்,
हदोरम, ऊजाल, दिक्ला,
28 ௨௮ ஓபாலையும், அபிமாவேலையும், சேபாவையும்,
ओबाल, अबमाएल, शेबा,
29 ௨௯ ஓப்பீரையும், ஆவிலாவையும், யோபாபையும் பெற்றெடுத்தான்; இவர்கள் அனைவரும் யொக்தானுடைய மகன்கள்.
ओपीर, हवीला योबाबका पिता बने ।
30 ௩0 இவர்களுடைய குடியிருப்பு மேசாதுவங்கி, கிழக்கேயுள்ள மலையாகிய செப்பாருக்குப் போகிற வழிவரைக்கும் இருந்தது.
तिनीहरूका क्षेत्र मेशादेखि सपरा जाने बाटो, पूर्वका पहाडसम्म थियो ।
31 ௩௧ இவர்களே தங்களுடைய தேசங்களிலும், மக்களிலுமுள்ள தங்களுடைய வம்சங்களின்படியேயும், மொழிகளின்படியேயும் சேமுடைய சந்ததியினர்.
तिनीहरूका वंशहरू र भाषाहरूअनुसार तिनीहरूका मुलुकहरू, जातिहरूअनुसार शेमका छोराहरू यिनीहरू नै थिए ।
32 ௩௨ தங்களுடைய மக்களிலுள்ள சந்ததிகளின்படியே நோவாவுடைய மகன்களின் வம்சங்கள் இவைகளே; வெள்ளப்பெருக்குக்குப் பிறகு இவர்களால் பூமியிலே மக்கள் பிரிந்தனர்.
तिनीहरूका वंशावलीहरू र जातिहरूअनुसार नोआका छोराहरूका वंशहरू यिनै थिए । यी जातिहरूबाट नै जातिहरू छुट्टिए र जलप्रलयपछि पृथ्वीभरि गए ।