< கலாத்தியர் 5 >

1 ஆனபடியால், நீங்கள் மீண்டும் அடிமைத்தனத்தின் நுகத்திற்குக் கீழாகாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுதந்திர நிலைமையிலே நிலைத்திருங்கள்.
پس به آن آزادی که مسیح ما را به آن آزادکرد استوار باشید و باز در یوغ بندگی گرفتار مشوید.۱
2 இதோ, நீங்கள் விருத்தசேதனம்பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இருக்காது, என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
اینک من پولس به شما می‌گویم که اگر مختون شوید، مسیح برای شما هیچ نفع ندارد.۲
3 மேலும், விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுகிற எந்த மனிதனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாக இருக்கிறான் என்று மீண்டும் அப்படிப்பட்டவனுக்கு உறுதியாக அறிவிக்கிறேன்.
بلی باز به هرکس که مختون شود شهادت می‌دهم که مدیون است که تمامی شریعت را به‌جا آورد.۳
4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் எல்லோரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையிலிருந்து விழுந்தீர்கள்.
همه شما که از شریعت عادل می‌شوید، از مسیح باطل و از فیض ساقطگشته‌اید.۴
5 நாங்களோ நீதிகிடைக்கும் என்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடு காத்திருக்கிறோம்.
زیرا که ما بواسطه روح از ایمان مترقب امید عدالت هستیم.۵
6 கிறிஸ்து இயேசுவிடம் விருத்தசேதனமும், விருத்தசேதனம் இல்லாததும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் செய்கைகளைச் செய்கிற விசுவாசமே உதவும்.
و در مسیح عیسی نه ختنه فایده دارد و نه نامختونی بلکه ایمانی که به محبت عمل می‌کند.۶
7 நீங்கள் நன்றாக ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
خوب می‌دویدید. پس کیست که شما را ازاطاعت راستی منحرف ساخته است؟۷
8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானது இல்லை.
این ترغیب از او که شما را خوانده است نیست.۸
9 புளிப்பான கொஞ்சம் மாவு பிசைந்த மாவு அனைத்தையும் உப்பப்பண்ணும்.
خمیرمایه اندک تمام خمیر را مخمر می‌سازد.۹
10 ௧0 நீங்கள் வேறுவிதமாகச் சிந்திக்கமாட்டீர்கள் என்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாக இருக்கிறேன்; உங்களைக் குழப்புகிறவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் தனக்குரிய தண்டனையை அடைவான்.
من در خداوند بر شما اعتماد دارم که هیچ رای دیگر نخواهید داشت، لیکن آنکه شما رامضطرب سازد هرکه باشد قصاص خود راخواهد یافت.۱۰
11 ௧௧ சகோதரர்களே, இதுவரைக்கும் நான் விருத்தசேதனத்தைப் பிரசங்கிக்கிறவனாக இருந்தால், இதுவரைக்கும் எதற்காகத் துன்பப்படுகிறேன்? அப்படியென்றால் சிலுவையைப்பற்றி வரும் இடறல் ஒழிந்திருக்குமே.
اما‌ای برادران اگر من تا به حال به ختنه موعظه می‌کردم، چرا جفا می‌دیدم؟ زیراکه در این صورت لغزش صلیب برداشته می‌شد.۱۱
12 ௧௨ உங்களைக் குழப்புகிறவர்கள் உங்களிடமிருந்து துண்டித்துக்கொண்டால் நலமாக இருக்கும்.
کاش آنانی که شما را مضطرب می‌سازند خویشتن را منقطع می‌ساختند.۱۲
13 ௧௩ சகோதரர்களே, நீங்கள் சுதந்திரமாக இருப்பதற்காக அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுதந்திரத்தை நீங்கள் சரீரத்திற்கேதுவாக அநுசரிக்காமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் பணிவிடை செய்யுங்கள்.
زیرا که شما‌ای برادران به آزادی خوانده شده‌اید؛ اما زنهار آزادی خود را فرصت جسم مگردانید، بلکه به محبت، یکدیگر را خدمت کنید.۱۳
14 ௧௪ உன்னை நீ நேசிக்கிறதுபோல மற்றவனையும் நேசிப்பாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
زیرا که تمامی شریعت در یک کلمه کامل می‌شود یعنی در اینکه همسایه خود راچون خویشتن محبت نما.۱۴
15 ௧௫ நீங்கள் ஒருவரையொருவர் கடித்து விழுங்குவீர்கள் என்றால் அழிவீர்கள், அப்படி ஒருவரால் ஒருவர் அழிக்கப்படாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்.
اما اگر همدیگر رابگزید و بخورید، باحذر باشید که مبادا ازیکدیگر هلاک شوید.۱۵
16 ௧௬ பின்னும் நான் சொல்லுகிறது என்னவென்றால், ஆவியானவருக்கு ஏற்றபடி நடந்துகொள்ளுங்கள், அப்பொழுது சரீர இச்சையை நிறைவேற்றாமல் இருப்பீர்கள்.
اما می‌گویم به روح رفتار کنید پس شهوات جسم را به‌جا نخواهید آورد.۱۶
17 ௧௭ சரீர இச்சை ஆவியானவருக்கு எதிராக செயல்படுகிறது. ஆவியானவர் சரீர இச்சைக்கு எதிராக செயல்படுகிறார்; நீங்கள் செய்யவேண்டியவைகளைச் செய்யாதபடி, இவைகள் ஒன்றுக்கொன்று எதிராக இருக்கிறது.
زیرا خواهش جسم به خلاف روح است و خواهش روح به خلاف جسم و این دو با یکدیگر منازعه می‌کنندبطوری که آنچه می‌خواهید نمی کنید.۱۷
18 ௧௮ ஆவியானவரால் நடத்தப்படுவீர்களானால், நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டவர்கள் இல்லை.
اما اگراز روح هدایت شدید، زیر شریعت نیستید.۱۸
19 ௧௯ சரீரத்தின் செய்கைகள் வெளியரங்கமாக இருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம்,
و اعمال جسم آشکار است، یعنی زنا وفسق و ناپاکی و فجور،۱۹
20 ௨0 விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள்,
و بت‌پرستی وجادوگری و دشمنی و نزاع و کینه و خشم وتعصب و شقاق و بدعتها،۲۰
21 ௨௧ பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைப் பெற்றுக்கொள்வதில்லை என்று முன்னமே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
و حسد و قتل ومستی و لهو و لعب و امثال اینها که شما را خبرمی دهم چنانکه قبل از این دادم، که کنندگان چنین کارها وارث ملکوت خدا نمی شوند.۲۱
22 ௨௨ ஆவியானவரின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
لیکن ثمره روح، محبت و خوشی وسلامتی و حلم و مهربانی و نیکویی و ایمان وتواضع و پرهیزکاری است،۲۲
23 ௨௩ சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு எதிரான பிரமாணம் ஒன்றும் இல்லை.
که هیچ شریعت مانع چنین کارها نیست.۲۳
24 ௨௪ கிறிஸ்துவினுடையவர்கள் தங்களுடைய சரீரத்தையும் அதின் ஆசைகளையும் இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறார்கள்.
و آنانی که از آن مسیح می‌باشند، جسم را با هوسها و شهواتش مصلوب ساخته‌اند.۲۴
25 ௨௫ நாம் ஆவியானவராலே பிழைத்திருந்தால், அவருக்கேற்றபடி நடப்போம்.
اگر به روح زیست کنیم، به روح هم رفتار بکنیم.۲۵
26 ௨௬ வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருப்போம்.
لاف‌زن مشویم تا یکدیگر را به خشم آوریم و بر یکدیگر حسد بریم.۲۶

< கலாத்தியர் 5 >