< கலாத்தியர் 2 >

1 பதினான்கு வருடங்களுக்குப்பின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு, பர்னபாவோடு மீண்டும் எருசலேமுக்குப் போனேன்.
ⲁ̅ⲒⲦⲀ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲒⲆ ⲚⲢⲞⲘⲠⲒ ⲀⲒϢⲈ ⲚⲎⲒ ⲈϨⲢⲎⲒ ⲈⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲚⲈⲘ ⲂⲀⲢⲚⲀⲂⲀⲤ ⲀⲒϬⲒ ⲆⲈ ⲘⲠⲒⲔⲈ ⲦⲒⲦⲞⲤ ⲚⲈⲘⲎⲒ.
2 நான் தேவ அறிவிப்பினாலே அங்குபோய், யூதரல்லாத மக்களுக்கு நான் பிரசங்கிக்கிற நற்செய்தியை அவர்களுக்கு விளக்கிச் சொன்னேன்; ஆனாலும் நான் ஓடுகிறதும், ஓடினதும் வீணாகப் போகாதபடி சபையை நடத்துகிற தலைவர்களுக்கே தனிமையாக விளக்கிச் சொன்னேன்.
ⲃ̅ⲀⲒϢⲈ ⲆⲈ ⲈϨⲢⲎⲒ ⲔⲀⲦⲀ ⲞⲨϬⲰⲢⲠ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲀⲒⲬⲰ ϦⲀⲦⲞⲦⲞⲨ ⲘⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲈϮϨⲒⲰⲒϢ ⲘⲘⲞϤ ϦⲈⲚⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲤⲀⲠⲤⲀ ⲆⲈ ⲚⲚⲎ ⲈⲐⲘⲈⲨⲒ ϪⲈ ⲘⲎⲠⲰⲤ ⲀⲒϬⲞϪⲒ ϦⲈⲚⲞⲨϢⲞⲨⲒⲦ ⲒⲈ ⲚⲀⲒϬⲞϪⲒ.
3 ஆனாலும் என்னோடு இருந்த தீத்து கிரேக்கனாக இருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளுவதற்குக் கட்டாயப்படுத்தப்படவில்லை.
ⲅ̅ⲀⲖⲖⲀ ⲞⲨⲆⲈ ⲠⲔⲈ ⲦⲒⲦⲞⲤ ⲪⲎ ⲈⲦⲬⲎ ⲚⲈⲘⲎⲒ ⲈⲞⲨⲈⲒⲚⲒⲚ ⲠⲈ ⲘⲠⲞⲨϢⲈⲢⲀⲚⲀⲄⲔⲀⲌⲒⲚ ⲘⲘⲞϤ ⲈⲤⲞⲨⲂⲎⲦϤ
4 கிறிஸ்து இயேசுவிற்குள் நமக்கு உண்டான சுதந்திரத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்குவதற்காக குறுக்குவழியாக நுழைந்த கள்ளச் சகோதரர்களினால் அப்படியானது.
ⲇ̅ⲈⲐⲂⲈ ⲚⲒⲤⲚⲎⲞⲨ ⲆⲈ ⲚⲚⲞⲨϪ ⲚⲎ ⲈⲦⲀⲨⲒ ⲈϦⲞⲨⲚ ⲈϪⲈⲢ ⲦⲈⲚⲘⲈⲦⲢⲈⲘϨⲈ ⲐⲀⲒ ⲈⲦⲈⲚⲦⲀⲚ ⲘⲘⲀⲨ ϦⲈⲚⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ϨⲒⲚⲀ ⲚⲤⲈⲀⲒⲦⲈⲚ ⲘⲂⲰⲔ
5 நற்செய்தியாகிய சத்தியம் உங்களிடம் மாறாமல் நிலைத்திருப்பதற்காக, நாங்கள் ஒருமணிநேரம் கூட அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
ⲉ̅ⲚⲀⲒ ⲈⲦⲈ ⲘⲠⲈⲚⲞϨⲒ ϦⲈⲚⲠⲞⲨϬⲚⲈ ϪⲰϤ ⲠⲢⲞⲤ ⲞⲨⲞⲨⲚⲞⲨ ϨⲒⲚⲀ ϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈⲤϢⲰⲠⲒ ⲈⲤⲤⲘⲞⲚⲦ ϨⲀⲢⲰⲦⲈⲚ.
6 அல்லாமலும் அங்கிருந்த சபைத் தலைவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை; அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் எனக்குக் கவலையில்லை. தேவன் மனிதர்களிடம் பட்சபாதம் உள்ளவர் இல்லையே.
ⲋ̅ⲈⲂⲞⲖ ⲆⲈ ϦⲈⲚⲚⲎ ⲈⲐⲘⲈⲨⲒ ϪⲈ ⲀⲚⲞⲚ ⲠⲈ ⲘⲠⲒⲢⲎϮ ⲈⲚⲀⲨⲞⲒ ⲘⲘⲞϤ ⲚⲞⲨⲤⲎⲞⲨ ⲚϤϢⲈⲂⲒⲎⲞⲨⲦ ⲚⲦⲞⲦ ⲀⲚ ⲚϨⲖⲒ ⲪⲚⲞⲨϮ ⲘⲠⲀϤϬⲒ ϨⲞ ⲚⲢⲰⲘⲒ ⲚⲎ ⲄⲀⲢ ⲈⲐⲘⲈⲨⲒ ϪⲈ ⲀⲚⲞⲚ ⲠⲈ ⲘⲠⲞⲨⲞⲨⲀϨ ϨⲖⲒ ⲈⲢⲞⲒ.
7 அதுமட்டுமல்லாமல், விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக பேதுருவைப் பலப்படுத்தினவர், யூதரல்லாத மக்களுக்கு அப்போஸ்தலனாக இருப்பதற்காக என்னையும் பலப்படுத்தினதினால்,
ⲍ̅ⲀⲖⲖⲀ ⲠⲈⲦⲞⲨⲂⲎϤ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ϪⲈ ⲀⲨⲦⲈⲚϨⲞⲨⲦ ⲈⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲚⲦⲈϮⲘⲈⲦⲀⲦⲤⲈⲂⲒ ⲔⲀⲦⲀ ⲪⲢⲎϮ ⲘⲠⲈⲦⲢⲞⲤ ⲈⲦⲀⲨⲦⲈⲚϨⲞⲨⲦϤ ⲈⲪⲀ ⲠⲒⲤⲈⲂⲒ.
8 விருத்தசேதனம் உள்ளவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக பேதுருவிற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டதுபோல, விருத்தசேதனம் இல்லாதவர்களுக்குப் பிரசங்கிப்பதற்காக எனக்கும் அதிகாரம் கொடுக்கப்பட்டதென்று அவர்கள் பார்த்து;
ⲏ̅ⲪⲎ ⲄⲀⲢ ⲈⲦⲀϤⲈⲢϨⲰⲂ ϦⲈⲚⲠⲈⲦⲢⲞⲤ ⲈⲨⲘⲈⲦⲀⲠⲞⲤⲦⲞⲖⲞⲤ ⲚⲦⲈⲠⲤⲈⲂⲒ ⲀϤⲈⲢϨⲰⲂ ⲚϦⲎⲦ ϨⲰ ⲈⲚⲒⲈⲐⲚⲞⲤ.
9 எனக்குக் கொடுக்கப்பட்ட கிருபையை அறிந்தபோது, தூண்களாக நினைக்கப்பட்ட யாக்கோபும், கேபாவும், யோவானும், தாங்கள் விருத்தசேதனம் உள்ளவர்களுக்கும், நாங்கள் யூதரல்லாத மக்களுக்கும் பிரசங்கிப்பதற்காக, நெருங்கிய ஐக்கியத்திற்கு அடையாளமாக எனக்கும் பர்னபாவிற்கும் வலது கரம் கொடுத்து,
ⲑ̅ⲞⲨⲞϨ ⲈⲦⲀⲨⲈⲘⲒ ⲈⲠⲒϨⲘⲞⲦ ⲈⲦⲦⲞⲒ ⲚⲎⲒ ⲚϪⲈⲒⲀⲔⲰⲂⲞⲤ ⲚⲈⲘ ⲔⲎⲪⲀⲤ ⲚⲈⲘ ⲒⲰⲀⲚⲚⲎⲤ ⲚⲎ ⲈⲦⲞⲨⲘⲈⲨⲒ ⲈⲢⲰⲞⲨ ϪⲈ ϨⲀⲚⲤⲦⲨⲖⲖⲞⲤ ⲚⲈⲀⲨϮ ⲆⲈⲜⲒⲀ ⲚⲎⲒ ⲚⲈⲘ ⲂⲀⲢⲚⲀⲂⲀⲤ ⲈⲨⲘⲈⲦϢⲪⲎ ⲢϨⲒⲚⲀ ⲀⲚⲞⲚ ⲘⲈⲚ ⲈⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲚⲐⲰⲞⲨ ⲆⲈ ⲈⲠⲒⲤⲈⲂⲒ.
10 ௧0 ஏழைகளை நினைத்துக்கொள்ளச் சொன்னார்கள்; அப்படிச் செய்வதற்காக அதற்கு முன்னமே நானும் ஆவலாக இருந்தேன்.
ⲓ̅ⲘⲞⲚⲞⲚ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲚϤⲒⲢⲰⲞⲨϢ ⲚⲚⲒϨⲎⲔⲒ ⲞⲨⲞϨ ⲪⲀⲒ ⲀⲒⲒⲎⲤⲞⲨⲤ ⲘⲘⲞⲒ ⲈⲀⲒϤ.
11 ௧௧ மேலும், பேதுரு அந்தியோகியாவிற்கு வந்தபோது, அவன்மேல் குற்றஞ்சுமத்தினால், நான் அவனை முகமுகமாக எதிர்த்தேன்.
ⲓ̅ⲁ̅ⲈⲦⲀϤⲒ ⲆⲈ ⲈϦⲞⲨⲚ ⲚϪⲈⲔⲎⲪⲀⲤ ⲈⲦⲀⲚⲦⲒⲞⲬ ⲒⲀ ⲀⲒϮ ⲈϦⲞⲨⲚ ⲈϨⲢⲀϤ ⲚϨⲞ ⲞⲨⲂⲈ ϨⲞ ϪⲈ ⲚⲈⲀⲨⲈⲢⲔⲀⲦⲀⲄⲒⲚⲰⲤⲔⲒⲚ ⲠⲈ.
12 ௧௨ எப்படியென்றால், யாக்கோபினிடமிருந்து சிலர் வருகிறதற்கு முன்பே அவன் யூதரல்லாத மக்களோடு சாப்பிட்டான்; அவர்கள் வந்தபோதோ, விருத்தசேதனம் உள்ளவர்களுக்குப் பயந்து, விலகிப் பிரிந்தான்.
ⲓ̅ⲃ̅ⲈⲘⲠⲀⲦⲈ ϨⲖⲒ ⲄⲀⲢ ⲒⲈⲂⲞⲖ ϨⲀ ⲒⲀⲔⲰⲂⲞⲤ ⲚⲈϢⲀϤⲞⲨⲰⲘ ⲠⲈ ⲚⲈⲘ ⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲈⲦⲀⲨⲒ ⲆⲈ ⲀϤϨⲈⲚϤ ⲚⲀϤ ⲞⲨⲞϨ ⲀϤⲪⲞⲢϪϤ ⲈⲂⲞⲖ ⲈϤⲈⲢϨⲞϮ ϦⲀⲦϨⲎ ⲚⲚⲒⲈⲂⲞⲖ ϦⲈⲚⲠⲤⲈⲂⲒ.
13 ௧௩ மற்ற யூதர்களும் அவனோடுகூட இணைந்து மாய்மாலம்பண்ணினார்கள்; அவர்களுடைய மாய்மாலத்தினாலே பர்னபாவும் ஈர்க்கப்பட்டான்.
ⲓ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨⲈⲢⲘⲈⲦϢⲞⲂⲒ ⲚⲈⲘⲀϤ ⲚϪⲈⲠⲤⲰϪⲠ ⲚⲚⲒⲒⲞⲨⲆⲀⲒ ϨⲰⲤⲦⲈ ⲠⲔⲈⲂⲀⲢⲚⲀⲂⲀⲤ ⲀϤϢⲈ ⲚⲀϤ ϦⲈⲚⲦⲞⲨⲘⲈⲦϢⲞⲂⲒ.
14 ௧௪ இப்படி அவர்கள் நற்செய்தியின் சத்தியத்தின்படி சரியாக நடக்காததை நான் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்பாக நான் பேதுருவைப் பார்த்து சொன்னது என்னவென்றால்: யூதனாக இருக்கிற நீ யூதர்கள் முறைப்படி நடக்காமல், யூதரல்லாதவர்களின் முறைப்படி நடந்து கொண்டிருக்க, யூதரல்லாதோரை யூதர்கள் முறைப்படி நடக்கச்சொல்லி நீ எப்படிக் கட்டாயப்படுத்தலாம்?
ⲓ̅ⲇ̅ⲀⲖⲖⲀ ⲈⲦⲀⲒⲚⲀⲨ ϪⲈ ⲤⲈⲞϨⲒ ⲈⲢⲀⲦⲞⲨ ⲀⲚ ϦⲈⲚϮⲘⲈⲐⲘⲎⲒ ⲚⲦⲈⲠⲒⲈⲨⲀⲄⲄⲈⲖⲒⲞⲚ ⲠⲈϪⲎ ⲒⲚⲔⲎⲪⲀⲤ ⲘⲠⲈⲘⲐⲞ ⲚⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ϪⲈ ⲒⲤϪⲈ ⲚⲐⲞⲔ ⲚⲐⲞⲔ ⲞⲨⲒⲞⲨⲆⲀⲒ ⲔⲞⲚϦ ⲘⲘⲈⲦⲈⲐⲚⲞⲤ ⲞⲨⲞϨ ⲘⲘⲈⲦⲒⲞⲨⲆⲀⲒ ⲀⲚ ⲠⲰⲤ ⲈⲔⲈⲢⲀⲚⲀⲄⲔⲀⲌⲒⲚ ⲚⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲈⲈⲢⲘⲈⲦⲒⲞⲨⲆⲀⲒ.
15 ௧௫ யூதரல்லாதவர்களில் பிறந்த பாவிகளாக இல்லாமல், பிறப்பின்படி யூதர்களாக இருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலேதவிர, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே மனிதன் நீதிமானாக்கப்படுவது இல்லை என்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினால் இல்லை, கிறிஸ்துவிற்குள் உள்ள விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படுவதற்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
ⲓ̅ⲉ̅ⲀⲚⲞⲚ ⲆⲈ ⲪⲨⲤⲒ ⲀⲚⲞⲚ ϨⲀⲚⲒⲞⲨⲆⲀⲒ ⲞⲨⲞϨ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲀⲚ ⲚⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ.
16 ௧௬ நியாயப்பிரமாணத்தின் செய்கைகளினாலே எந்த மனிதனும் நீதிமானாக்கப்படுவதில்லையே.
ⲓ̅ⲋ̅ⲈⲚⲈⲘⲒ ϪⲈ ⲤⲈⲚⲀⲐⲘⲀⲒⲈ ⲠⲒⲢⲰⲘⲒ ⲀⲚ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲒⲘⲎϮ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲚⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲞⲨⲞϨ ⲀⲚⲞⲚ ϨⲰⲚ ⲀⲚⲚⲀϨϮ ⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲒⲎⲤⲞⲨⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲚⲘⲀⲒ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲀϨϮ ⲘⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲚⲈⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲠⲒⲚⲞⲘⲞⲤ ϪⲈ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲚⲒϨⲂⲎⲞⲨⲒ ⲚⲦⲈⲠⲒⲚⲞⲘⲞⲤ ⲤⲈⲚⲀⲐⲘⲀⲒⲈ ⲤⲀⲢⲜ ⲚⲒⲂⲈⲚ ⲀⲚ.
17 ௧௭ கிறிஸ்துவிற்குள் நீதிமான்களாக்கப்படுவதற்கு விரும்புகிற நாமும் பாவிகளாக இருப்போமென்றால், கிறிஸ்து பாவத்திற்குக் காரணரோ? இல்லையே.
ⲓ̅ⲍ̅ⲒⲤϪⲈ ⲆⲈ ⲈⲚⲔⲰϮ ⲚⲤⲀⲘⲀⲒ ϦⲈⲚⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲀⲨϪⲈⲘⲈⲚ ϨⲰⲚ ⲈⲚⲞⲒ ⲚⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ ϨⲀⲢⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲞⲨⲆⲒⲀⲔⲰⲚ ⲚⲦⲈⲪⲚⲞⲂⲒ ⲠⲈ ⲚⲚⲈⲤϢⲰⲠⲒ.
18 ௧௮ நான் இடித்துப்போட்டவைகளையே நான் மீண்டும் கட்டினால், பிரமாணத்தை மீறுகிறவனாக இருப்பேன்.
ⲓ̅ⲏ̅ⲒⲤϪⲈ ⲄⲀⲢ ⲚⲎ ⲈⲦⲀⲒⲂⲞⲖⲞⲨ ⲈⲂⲞⲖ ⲚⲀⲒ ⲞⲚ ⲈϮⲔⲰⲦ ⲘⲘⲰⲞⲨ ϮⲈⲢⲤⲨⲚⲒⲤⲦⲀⲚⲒⲚ ⲘⲘⲞⲒ ⲘⲠⲀⲢⲀⲂⲀⲦⲎⲤ.
19 ௧௯ தேவனுக்கென்று பிழைப்பதற்காக நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
ⲓ̅ⲑ̅ⲀⲚⲞⲔ ⲄⲀⲢ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲈⲚ ⲞⲨⲚⲞⲘⲞⲤ ⲀⲒⲘⲞⲨ ⲘⲠⲒⲚⲞⲘⲞⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲀⲰⲚϦ ⲚⲈⲘ ⲪⲚⲞⲨϮ ⲀⲨⲀϢⲦ ⲚⲈⲘ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ.
20 ௨0 கிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்டேன்; ஆனாலும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் இல்லை, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்; நான் இப்பொழுது சரீரத்தில் பிழைத்திருக்கிறதோ, என்மேல் அன்புவைத்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்த தேவனுடைய குமாரன்மேல் உள்ள விசுவாசத்தினாலே பிழைத்திருக்கிறேன்.
ⲕ̅ϮⲞⲚϦ ⲀⲚⲞⲔ ⲀⲚ ϪⲈ ϤⲞⲚϦ ⲆⲈ ⲚϦⲎⲦ ⲚϪⲈⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲪⲎ ⲆⲈ ⲈϮⲞⲚϦ ⲚϦⲎⲦϤ ϮⲚⲞⲨ ϦⲈⲚⲦⲤⲀⲢⲜ ⲀⲒⲰⲚϦ ϦⲈⲚⲠⲒⲚⲀϨϮ ⲚⲦⲈⲠϢⲎ ⲢⲒ ⲘⲪⲚⲞⲨϮ ⲪⲀⲒ ⲈⲦⲀϤⲘⲈⲚⲢⲒⲦ ⲞⲨⲞϨ ⲀϤⲦⲎ ⲒϤ ⲈϨⲢⲎⲒ ⲈϪⲰⲒ.
21 ௨௧ நான் தேவனுடைய கிருபையை வீணாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமென்றால் கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.
ⲕ̅ⲁ̅ⲚϮⲚⲀϢⲈϢ ⲠⲒϨⲘⲞⲦ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲀⲚ ⲒⲤϪⲈ ⲄⲀⲢ ⲈⲂⲞⲖ ϦⲈⲚⲪⲚⲞⲘⲞⲤ ⲠⲈ ϮⲘⲈⲐⲘⲎ ⲒϨⲀⲢⲀ ⲠⲬⲢⲒⲤⲦⲞⲤ ⲀϤⲘⲞⲨ ⲚϪⲒⲚϪⲎ.

< கலாத்தியர் 2 >