< கலாத்தியர் 1 >
1 ௧ மனிதர்களாலும் இல்லை, மனிதர்கள் மூலமாகவும் இல்லை, இயேசுகிறிஸ்துவினாலும், அவரை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்பின பிதாவாகிய தேவனாலும் அப்போஸ்தலனாக இருக்கிற பவுலாகிய நானும்,
Paul, apôtre (non par la grâce des hommes ou par une institution humaine, mais par la grâce de Jésus-Christ et de Dieu le Père qui a ressuscité Jésus d'entre les morts)
2 ௨ என்னோடு இருக்கிற சகோதரர்கள் எல்லோரும், கலாத்தியா நாட்டில் உள்ள சபைகளுக்கு எழுதுகிறதாவது:
et tous les frères qui sont avec moi, aux églises de Galatie.
3 ௩ பிதாவாகிய தேவனாலும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் உண்டாவதாக;
Grâce et paix vous soient accordées par Dieu le Père et par notre Seigneur Jésus-Christ,
4 ௪ அவர் நம்மை இப்பொழுது இருக்கிற பொல்லாத உலகத்திலிருந்து விடுவிப்பதற்காக நம்முடைய பிதாவாகிய தேவனுடைய விருப்பத்தின்படியே நம்முடைய பாவங்களுக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தார்; (aiōn )
qui s'est donné lui-même pour nos péchés afin de nous délivrer de ce monde pervers où nous vivons, conformément à la volonté de notre Dieu et Père, (aiōn )
5 ௫ அவருக்கு என்றென்றைக்குமுள்ள எல்லாக் காலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (aiōn )
auquel soit la gloire aux siècles des siècles! amen. (aiōn )
6 ௬ உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாகவிட்டு, வேறொரு வித்தியாசமான நற்செய்திக்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
J'admire que si vite vous vous détourniez de celui qui vous a appelés par la grâce de Christ, pour adopter un autre Évangile!
7 ௭ வேறொரு நற்செய்தி இல்லையே; சிலர் உங்களைக் கலங்கப்படுத்தி, கிறிஸ்துவினுடைய நற்செய்தியை மாற்ற விரும்புகிறார்கள்.
Un autre! il n'y en a point; il n'y a que certains brouillons qui veulent pervertir l'Évangile du Christ!
8 ௮ நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த நற்செய்தியைத்தவிர, நாங்களோ அல்லது வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனோ, வேறொரு நற்செய்தியை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
Eh bien, écoutez: Si jamais quelqu'un, fût-ce moi, fût-ce un ange du ciel, venait vous évangéliser autrement que je ne l'ai fait, qu'il soit anathème!
9 ௯ முன்பே சொன்னதுபோல மீண்டும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட நற்செய்தியைத்தவிர வேறொரு நற்செய்தியை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாக இருப்பான்.
Je viens de le dire, et je vous le répète: Si quelqu'un prêche autre chose que ce que vous avez appris, qu'il soit anathème!
10 ௧0 இப்பொழுது மனிதனுடையதா, தேவனுடையதா? யாருடைய அங்கீகாரத்தைத் தேடுகிறேன்? மனிதனைப் பிரியப்படுத்தப் பார்க்கிறேனா? நான் இன்னும் மனிதனைப் பிரியப்படுத்துகிறவனாக இருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் இல்லையே.
Est-ce la faveur des hommes que je cherche ou celle de Dieu? Est-ce aux hommes que je veux plaire? Ah! si j'en étais encore à plaire aux hommes, je ne serais pas serviteur de Christ!
11 ௧௧ மேலும், சகோதரர்களே, என்னால் பிரசங்கிக்கப்பட்ட நற்செய்தி மனிதர்களுடைய யோசனையினால் உண்டானது இல்லையென்று உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
Je vous déclare, mes frères, que l'Évangile qui vous a été prêché par moi n'est pas d'origine humaine.
12 ௧௨ நான் அதை ஒரு மனிதனிடமிருந்து பெற்றதும் இல்லை, மனிதனிடமிருந்து கற்றதும் இல்லை, இயேசுகிறிஸ்துவே அதை எனக்கு வெளிப்படுத்தினார்.
Ce n'est pas même des hommes que je l'ai reçu ou appris, c'est d'une révélation de Jésus-Christ.
13 ௧௩ நான் யூதமதத்தில் இருந்தபோது என்னுடைய நடத்தையைக்குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள்; தேவனுடைய சபையை நான் அதிகமாக துன்பப்படுத்தி, அதைப் பாழாக்கி;
Vous avez entendu parler de ma vie passée, quand j'étais dans le Judaïsme. Vous savez que je persécutais à outrance l'Église de Dieu, que je la ravageais.
14 ௧௪ என் மக்களில் என் வயதுள்ள அநேகரைவிட யூதமதத்தில் தேறினவனாக, என் முற்பிதாக்களுடைய பாரம்பரிய நியாயங்களுக்காக அதிக பக்திவைராக்கியம் உள்ளவனாக இருந்தேன்.
Vous savez que je surpassais dans mon Judaïsme bon nombre de ceux de mon âge et de ma race; j'étais plus que fanatique de mes traditions nationales.
15 ௧௫ அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,
Mais quand Celui qui m'a choisi dès le sein de ma mère et qui m'a appelé par sa grâce,
16 ௧௬ தம்முடைய குமாரனை நான் யூதரல்லாத மக்களுக்கு நற்செய்தியாக அறிவிப்பதற்கு, அவரை எனக்குள் வெளிப்படுத்த விருப்பமாக இருந்தபோது, உடனே நான் சரீரத்தோடும் இரத்தத்தோடும் யோசனை பண்ணாமலும்;
jugea bon de me révéler intérieurement son Fils, pour que je fusse son évangéliste parmi les païens, sur-le-champ, sans prendre conseil de personne
17 ௧௭ எனக்கு முன்பே எருசலேமில் அப்போஸ்தலர்களாக இருந்தவர்களிடம் போகாமலும்; அரபிதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், மீண்டும் தமஸ்கு ஊருக்குத் திரும்பிவந்தேன்.
sans aller à Jérusalem, auprès de ceux qui étaient apôtres avant moi, je me retirai en Arabie, puis je revins à Damas.
18 ௧௮ மூன்று வருடங்களுக்குப்பின்பு, பேதுருவைப் பார்ப்பதற்காக நான் எருசலேமுக்குப்போய், அவனோடுகூட பதினைந்து நாட்கள் தங்கியிருந்தேன்.
Ensuite, trois années plus tard, j'allai, il est vrai, à Jérusalem, pour faire la connaissance de Képhas; et je passai quinze jours auprès de lui;
19 ௧௯ கர்த்தருடைய சகோதரனாகிய யாக்கோபைத்தவிர, அப்போஸ்தலரில் வேறொருவரையும் நான் பார்க்கவில்லை.
mais je ne vis aucun des autres apôtres, si ce n'est Jacques, le frère du Seigneur.
20 ௨0 நான் உங்களுக்கு எழுதுகிற இவைகள் பொய் இல்லை என்று தேவனுக்குமுன்பாக நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
Ce que je vous écris, j'affirme en présence de Dieu que ce n'est pas un mensonge!
21 ௨௧ பின்பு, சீரியா சிலிசியா நாடுகளுக்குச் சென்றேன்.
Je me rendis ensuite dans les provinces de Syrie et de Cilicie;
22 ௨௨ மேலும் யூதேயா நாட்டிலே கிறிஸ்துவிற்குள்ளான சபைமக்களுக்கு அறிமுகம் இல்லாதவனாக இருந்தேன்.
mais j'étais personnellement inconnu des Églises de Christ qui sont en Judée;
23 ௨௩ முன்னே நம்மைத் துன்பப்படுத்தினவனே, தான் அழிக்கப்பார்த்த விசுவாசத்தை இப்பொழுது பிரசங்கிக்கிறான் என்பதைமட்டும் அவர்கள் கேள்விப்பட்டு,
elles avaient seulement entendu dire ceci: «Notre ancien persécuteur prêche maintenant la foi que naguère il voulait détruire»;
24 ௨௪ எனக்காக தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
et on rendait gloire à Dieu à mon sujet.