< எஸ்றா 10 >

1 எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.
И егда моляшеся Ездра и егда исповедашеся плачущь и моляся пред домом Божиим, собрашася к нему от Израиля собрание велие зело, мужие и жены и отроцы яко плакахуся людие и вознесоша плачь.
2 அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
И отвеща Сехениа сын Иеилев от сынов Иламлих и рече Ездре: мы преступихом пред Богом нашим и пояхом жены чуждия от людий земли, и ныне есть упование Израилю о сем:
3 இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
и ныне завещаем завет Богу нашему, да отвержем вся жены и рожденых от них, якоже хощет: востани и устраши их заповедьми Бога нашего, и по закону да будет:
4 எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
востани, понеже на тебе есть глагол, и мы с тобою: укрепися и сотвори.
5 அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
И воста Ездра, и закля князи, священники и левиты и всего Израиля, да сотворят по словеси сему. И кляшася.
6 அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
И воста Ездра от лица дому Божия и иде в сокровищный дом Ионана сына Елисувова и седе тамо: хлеба не яде и воды не пи, плакаше бо о преступлении пришедших от пленения.
7 அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
И послано бысть слово во Иудею и во Иерусалим всем сыновом преселения, да соберутся во Иерусалим:
8 மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.
всяк, иже аще не приидет в три дни, по совету князей и старейшин, возмется все имение его, и той отлучен будет от сонмища преселения.
9 அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
И собрашася вси мужие Иудины и Вениамини во Иерусалим треми денми: сей есть месяц девятый: в двадесятый день месяца седоша вси людие пред домом Божиим трепещуще о словеси и от зимы.
10 ௧0 அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
И воста Ездра священник и рече к ним: вы преступисте и взясте жены иноплеменнически, еже приложити ко греху Израилеву:
11 ௧௧ இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
и ныне дадите хвалу Господу Богу отец наших, и сотворите угодное пред Ним, и отлучитеся от людий земли и от жен иноплеменнических.
12 ௧௨ அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
И отвещаша все множество гласом великим и реша: по словеси твоему к нам сотворим:
13 ௧௩ ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
обаче людие мнози суть, и время зимнее, и несть мощно стояти вне: и дело несть дне единаго или двух, зело бо много согрешихом во словеси сем:
14 ௧௪ ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
да поставятся князие наши во всем множестве и во всех градех наших, иже пояша жены иноплеменничи, да приидут во времена повеленная, и с ними старейшины от всякаго града и судии, еже отвратити гнев ярости Бога нашего от нас словесе ради сего.
15 ௧௫ ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
Обаче Ионафан сын Асаилев и Иасса сын Фекуев со мною о сем, и Месоллам и Савафай левитин помагаяй им.
16 ௧௬ சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
И сотвориша тако сынове преселения: и разыдошася Ездра священник и мужие князие отечеств в домы, и вси по именом, яко обратишася в день первый месяца десятаго, да взыщут глагола:
17 ௧௭ வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
и совершиша во всех мужех, иже пояша жены иноплеменничи, даже до дне перваго месяца перваго.
18 ௧௮ ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
И обретени суть от сынов священнических иже введоша жены иноплеменничи, от сынов Иисуса сына Иоседекова и братия его Маасиа и Елиезер, и Иарим и Гадалиа:
19 ௧௯ இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
и даша руки своя изгонити жены своя, и согрешившии принесоша от овец о преступлении своем овна:
20 ௨0 இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
и от сынов Еммировых Ананий и Завдиа:
21 ௨௧ ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
и от сынов Ирамлих Маасиа и Еллиа, и Самиа и Иеиил и Озиа:
22 ௨௨ பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
и от сынов Фассуровых Елиоинай, Маасиа и Исмаил, и Нафанаель и Иозавад и Иласа:
23 ௨௩ லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
и от левитов Иозавад и Фамуй и Колиа, тойже и Колит, и Фефеиа, и Иуда и Елиезер:
24 ௨௪ பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
и от певцев Елисав: и от дверник Солмин и Телмин и Одуа:
25 ௨௫ மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
и от Израиля, от сынов Форосовых Рамиа и Азиа, и Мелхиа и Мелмин, и Елиазар и Асавиа и Ванеа:
26 ௨௬ ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
и от сынов Иламовых Матфаниа и Захариа, и Иаиил и Авдий, и Иеримоф и Илиа:
27 ௨௭ சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
и от сынов Зафуевых Елионай, Елисув, Мафанай и Армоф, и Завад и Озиза:
28 ௨௮ பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
и от сынов Вавеиных Ионан, Ананиа и Завуй и Фали:
29 ௨௯ பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
и от сынов Вануевых Мосоллам, Маллух, Адаиа, Иасув и Саал и Римоф:
30 ௩0 பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
и от сынов Фааф-Моавлих Еднеа и Халил и Ванаиа, Маасиа, Матфаниа, Веселеил и Вануй и Манассии:
31 ௩௧ ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
и от сынов Ирамовых Елиезер, Иесиа, Мелхиа, Самаиа, Семеон,
32 ௩௨ பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
Вениамин, Малух, Самариа:
33 ௩௩ ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்;
и от сынов Асимовых Метфанаиа, Мафафа, Завад, Елифалет, Иерами Манассий, Семей:
34 ௩௪ பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
и от сынов Ванииных Моодиа, Амрам и Уил,
35 ௩௫ பெனாயா, பெதியா, கெல்லூ,
Ванаиа, Вадаиа, Хелиа,
36 ௩௬ வனியா, மெரெமோத், எலியாசிப்,
Уаниа, Маримоф и Елиасив,
37 ௩௭ மத்தனியா, மதனாய், யாசாய்,
Матфаниа Мафанай.
38 ௩௮ பானி, பின்னூயி, சிமெயி,
И сотвориша сынове Вануиевы и сынове Семеины,
39 ௩௯ செலேமியா, நாத்தான், அதாயா,
и Салемиа и Нафан и Адаиа,
40 ௪0 மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
Махнада, Авусесей,
41 ௪௧ அசரெயேல், செலேமியா, செமரியா,
Аруесриил и Самариа,
42 ௪௨ சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
Селлум, Амариа, Иосиф:
43 ௪௩ நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
от сынов Навуиных Иеиил, Мафафиа, Завад, Зевенай, Иадай и Иоиль и Ванеа.
44 ௪௪ இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.
Вси тии пояша жены иноплеменнически, и родиша от них сыны.

< எஸ்றா 10 >