< எசேக்கியேல் 7 >
1 ௧ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
És lett hozzám az Örökkévaló igéje, mondván:
2 ௨ மனிதகுமாரனே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் தேசத்தைக்குறித்து முடிவு வருகிறது, தேசத்தின் நான்கு முனைகளின் மேலும் முடிவு வருகிறது.
Te pedig, ember fia, így szól az Úr, az Örökkévaló Izrael földjéhez: Vég, eljött a vég az ország négy sarkára
3 ௩ இப்போதே உன்மேல் முடிவு வருகிறது; நான் என்னுடைய கோபத்தை உன்மேல் வரச்செய்து, உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
Most íme rajtad a vég, rádbocsátom haragomat, rnegitéllek útjaid szerint és rádvetem mind az utálatosságaidat;
4 ௪ என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புகளுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
nem fog téged sajnálni a szemem és nem fogok könyörülni, mert utaidat hárítom rád és utálatosságaid közepetted lesznek, hogy megtudjátok, hogy én vagyok az Örökkévaló.
5 ௫ உன்னதமான தேவன் சொல்லுகிறது என்னவென்றால்: தீங்கு வருகிறது; இதோ, ஒரே தீங்கு வருகிறது.
Így szól az Úr, az Örökkévaló: vész, egyetlen vész íme jön!
6 ௬ முடிவு வருகிறது, முடிவு வருகிறது, அது உன்மேல் நோக்கமாக இருக்கிறது; இதோ, வருகிறது.
Vég jön, jön a vég, ébredt ellened, íme jön.
7 ௭ தேசத்தில் குடியிருக்கிறவனே, அந்த நாளின் விடியற்காலம் வருகிறது, காலம் வருகிறது, அழிவின் நாள் அருகிலிருக்கிறது, மலைகளில் சந்தோஷசத்தம் இல்லை.
Jön a végzet rád, ország lakója, jön az idő, közül a nap zavarodás és nem kurjantás a hegyeken.
8 ௮ இப்பொழுது விரைவில் என்னுடைய கடுங்கோபத்தை உன்மேல் ஊற்றி, என்னுடைய கோபத்தை உன்னில் தீர்த்துக்கொண்டு, உன்னை உன்னுடைய வழிகளுக்குத்தகுந்தபடி நியாயந்தீர்த்து, உன்னுடைய எல்லா அருவருப்புகளின் பலனையும் உன்மேல் வரச்செய்வேன்.
Most a közelben rád ontom hevemet és elvégzem rajtad haragomat, megitéllek útjaid szerint és rádvetem mind az utálatosságaidat.
9 ௯ என்னுடைய கண் உன்னைத் தப்பவிடாது; நான் இரங்காமல் உன்னுடைய வழிகளுக்குத்தகுந்ததை உன்மேல் வரச்செய்வேன்; உன்னுடைய அருவருப்புக்களுக்குத்தகுந்தது உன்னுடைய நடுவில் வந்திருக்கும்; அப்பொழுது அடிக்கிறவராகிய நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
És nem fog sajnálni a szemem és nem fogok könyörülni, útjaid szerint vetek rád és utálatosságaid közepetted lesznek, hogy megtudjátok, hogy én az Örökkévaló verek.
10 ௧0 இதோ, அந்த நாள், இதோ, வருகிறது, அந்த நாளின் விடியற்காலம் உதிக்கிறது, கோல் பூக்கிறது, அகந்தை செழிக்கிறது.
Íme a nap, íme jön, kisarjadt a végzet, kivirágzott a vessző, kivirult a kevélység.
11 ௧௧ அக்கிரமமானது கொடுமையின் கோலாக எழும்புகிறது; அவர்களிலும் அவர்களுடைய திரளான கூட்டத்திலும் அவர்களுடைய அழிவிலும் ஒன்றும் மீதியாக இருப்பதில்லை; அவர்களுக்காக புலம்பல் உண்டாயிருப்பதுமில்லை.
Az erőszak támadt, gonoszság vesszejéül, nem marad semmi belőlük, sem tömegükből, sem tombolásukból, jajszó sincsen értük.
12 ௧௨ அந்தக் காலம் வருகிறது, அந்த நாள் நெருங்குகிறது; வாங்குகிறவன் சந்தோஷப்படாமலும், விற்கிறவன் துக்கப்படாமலும் இருப்பானாக; அதின் திரளான கூட்டத்தின்மேலும் கடுங்கோபம் இறங்கும்.
Jött az idő, elérkezett a nap, a vevő ne örüljön és az eladó ne gyászoljon, mert harag lobban föl egész tömege ellen.
13 ௧௩ அவர்கள் உயிருள்ளவர்களுக்குள்ளே இன்னும் உயிரோடு இருந்தாலும், விற்றவன் விற்கப்பட்டதற்குத் திரும்பிவருவதில்லை; அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் உண்டான தரிசனம் திரும்பாது; தன்னுடைய அக்கிரமத்திலே வாழுகிற எவனும் தன்னைத் திடப்படுத்தமாட்டான்.
Mert az eladó nem jut vissza az eladott jószághoz, amíg az élők közt van az élete, mart látomás szól egész tömegének, nem fordul el, és kiki a bűne miatt életüket nem tartják meg.
14 ௧௪ அவர்கள் எக்காளம் ஊதி, எல்லாவற்றையும் ஆயத்தம்செய்தும், போருக்குப் போகிறவன் இல்லை; என்னுடைய கடுங்கோபம் அதின் திரளான மக்கள் கூட்டத்தின் மேலும் இறங்குகிறது.
Fújták a harsonát, elkészítettek mindent, de nincs ki harcba megy, mert haragom lobbant föl egész tömege ellen.
15 ௧௫ வெளியே பட்டயமும் உள்ளே கொள்ளைநோயும் பஞ்சமும் உண்டு; வயல்வெளியில் இருக்கிறவன் வாளால் மரிப்பான்; நகரத்தில் இருக்கிறவனையோ பஞ்சமும் கொள்ளைநோயும் சாப்பிடும்.
A kard künn s a dögvész meg az éhség belül; ki a mezőn van, a kard által hal meg, s ki a városban van, azt éhség és dögvész emészti meg.
16 ௧௬ அவர்களில் தப்புகிறவர்கள் தப்புவார்கள்; ஆனாலும் அவர்கள் அனைவரும் அவனவன் தன்தன் அக்கிரமத்திற்காக துக்கித்துக் கூப்பிடுகிற பள்ளத்தாக்குகளின் புறாக்களைப்போல மலைகளில் இருப்பார்கள்.
És menekülnek a menekülőik, s olyanok lesznek a hegyeken mint a völgyek galambjai, melyek búgnak mindannyian – ki-ki bűne miatt.
17 ௧௭ எல்லாக் கைகளும் சலித்து, எல்லா முழங்கால்களும் தண்ணீரைப்போல் தத்தளிக்கும்.
Mind a kezek ellankadnak és mind a térdek vízként folynak szét.
18 ௧௮ சணலாடையை உடுத்திக்கொள்வார்கள்; தத்தளிப்பு அவர்களை மூடும்; எல்லா முகங்களும் வெட்கப்படும், எல்லாத் தலைகளும் மொட்டையடிக்கப்படும்.
És zsákokat kötnek föl és borzadály borítja őket, minden arcon szégyen és mind a fejeiken kopaszság.
19 ௧௯ தங்களுடைய வெள்ளியைத் தெருக்களில் எறிந்துவிடுவார்கள்; அவர்களுடைய பொன் வேண்டாவெறுப்பாக இருக்கும்; யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே அவர்களுடைய வெள்ளியும் அவர்களுடைய பொன்னும் அவர்களை விடுவிக்கமுடியாது; அவர்கள் அதினால் தங்களுடைய ஆத்துமாக்களைத் திருப்தியாக்குவதும் இல்லை, தங்களுடைய வயிறுகளை நிரப்புவதும் இல்லை; அவர்களுடைய அக்கிரமமே அவர்களுக்கு இடறலாக இருந்தது.
Ezüstjüket az utcára dobják és aranyuk fertőzetté lesz, ezüstjük és aranyuk nem mentheti meg őket az Örökkévaló haragjának napján, vágyukat nem elégítik ki és hasukat meg nem töltik, mert bűnre való botlásukká lett.
20 ௨0 அவருடைய சிங்காரத்தின் மகிமையை அகந்தைக்கு என்று வைத்து, அதிலே அருவருக்கப்படத்தக்கதும் சீ என்று இகழப்படத்தக்கதுமான காரியங்களின் சிலைகளை உண்டாக்கினார்கள்; ஆகையால் நான் அவைகளை அவர்களுக்கு வேண்டாவெறுப்பாக்கி,
És ékes díszét gőggé tették és utálatos képeiket, undokságaikat készítették belőle, azért tettem azt nekik fertőzetté.
21 ௨௧ அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
És majd az idegenek kezébe adom prédául és a föld gonoszainak zsákmányul, hogy megszentségtelenítsék.
22 ௨௨ என்னுடைய முகத்தை அவர்களை விட்டுத் திருப்புவேன்; அதினால் என்னுடைய மறைவான இடத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்; கொள்ளைக்காரர்கள் அதற்குள் நுழைந்து, அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
És elfordítom tőlük arcomat és majd megszentségtelenítik kincsemet, és bemennek abba garázdálkodók és megszentségtelenítik.
23 ௨௩ ஒரு சங்கிலியை செய்துவை; தேசம் நியாயத்தீர்ப்புக்குள்ளான இரத்தப்பழிகளால் நிறைந்திருக்கிறது; நகரம் கொடுமையால் நிறைந்திருக்கிறது.
Készítsd a láncot, mert az ország telve van vérontó ítélettel és a város telve van erőszakkal.
24 ௨௪ ஆகையால் அந்நியதேசங்களின் துன்மார்க்கர்களை வரச்செய்வேன், அவர்கள் இவர்களுடைய வீடுகளைச் சொந்தமாக்கிக்கொள்வார்கள்; பலவான்களின் பெருமையை ஒழியச்செய்வேன், அவர்களுடைய பரிசுத்த ஸ்தலங்கள் பரிசுத்தக்குலைச்சலாகும்.
És elhozom a nemzetek legrosszabbjait, hogy elfoglalják házaikat, és megszüntetem a hatalmasok gőgjét és megszentségteleníttetnek szentélyeik.
25 ௨௫ அழிவு வருகிறது; அப்பொழுது சமாதானத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் அது கிடைக்காது.
Rettegés jön, keresnek békét, de nincsen.
26 ௨௬ அழிவின்மேல் அழிவு வரும்; தீயசெய்தியின்மேல் தீயசெய்தி வரும்; அப்பொழுது தீர்க்கதரிசியினிடத்தில் தரிசனத்தைத் தேடுவார்கள்; ஆனாலும் ஆசாரியனிடத்திலே வேதமும் மூப்பரிடத்திலே ஆலோசனையும் இல்லாமல் ஒழிந்துபோகும்.
Baleset jön balesetre, hír lesz hír után, keresnek látomást a prófétától, de tanítás elvész a paptól, tanács a vénektől.
27 ௨௭ ராஜா துக்கித்துக்கொண்டிருப்பான்; பிரபுவைப் பயம் மூடிக்கொண்டிருக்கும்; தேசத்து, மக்களின் கைகள் தளர்ந்துபோகும்; நான் அவர்கள் வழிகளின்படியே அவர்களுக்குச் செய்து, அவர்களுடைய நியாயங்களின்படியே அவர்களை நியாயந்தீர்ப்பேன்; அப்பொழுது நான் உன்னதமான தேவன் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
A király gyászol, a fejedelem ámulatba öltözik, s az ország népének kezei megrémülnek; útjuk szerint fogok cselekedni velük és ítéleteik szerint fogom őket ítélni, hogy megtudják, hogy én vagyok az Örökkévaló.