< எசேக்கியேல் 48 >
1 ௧ கோத்திரங்களின் பெயர்கள்: வடக்கு முனைதுவங்கி ஆமாத்துக்குப்போகிற எத்லோன் வழியின் ஓரத்திற்கும், ஆத்சார் ஏனானுக்கும், ஆமாத்தருகே வடக்கேயிருக்கிற தமஸ்குவின் எல்லைக்கும் உள்ளாகக் கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை தாணுக்கு ஒரு பங்கும்,
А ово су имена племенима. Од краја према северу, уз пут етлонски како се иде у Емат и Асаренан, на међу дамаштанску на север покрај Емата, од источне стране до западне, Даново, једно.
2 ௨ தாணின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கிலுள்ள மத்திய கடல் திசைவரை ஆசேருக்கு ஒரு பங்கும்,
А уз међу Данову, од источне стране до западне, Асирово, једно.
3 ௩ ஆசேரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை நப்தலிக்கு ஒரு பங்கும்,
А уз међу Асирову, од источне стране до западне, Нефталимово, једно.
4 ௪ நப்தலியின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை மனாசேக்கு ஒரு பங்கும்,
А уз међу Нефталимову, од источне стране до западне, Манасијино, једно.
5 ௫ மனாசேயின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை எப்பிராயீமுக்கு ஒரு பங்கும்,
А уз међу Манасијину, од источне стране до западне, Јефремово, једно.
6 ௬ எப்பிராயீமின் எல்லையருகே கிழக்கு திசை துவங்கி மேற்கு திசைவரை ரூபனுக்கு ஒரு பங்கும்,
А уз међу Јефремову, од источне стране до западне, Рувимово, једно.
7 ௭ ரூபனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை யூதாவுக்கு ஒரு பங்கும் உண்டாவதாக.
А уз међу Рувимову, од источне стране до западне, Јудино, једно.
8 ௮ யூதாவின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருக்கும்; இது, இருபத்தையாயிரம் கோல் அகலமும், கிழக்குதிசை துவங்கி மேற்கு திசைவரை இருக்கிற பங்குகளில் ஒவ்வொன்றுக்கும் சரியான நீளமுமாம்; பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
А уз међу Јудину, од источне стране до западне, нека буде принос што ћете принети, двадесет и пет хиљада лаката у ширину, а у дужину као који други део, од источне стране до западне, и светиња да буде усред њега.
9 ௯ இதிலே யெகோவாவுக்கு நீங்கள் அர்ப்பணிக்கப்படவேண்டிய பங்கு இருபத்தையாயிரம் கோல் நீளமும், பத்தாயிரங்கோல் அகலமுமாக இருப்பதாக.
Принос који ћете принети Господу, нека буде од двадесет и пет хиљада лаката у дужину и од десет хиљада у ширину.
10 ௧0 வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
И тај ће свети принос бити свештеницима, са севера двадесет и пет хиљада лаката у дужину, а са запада десет хиљада у ширину, и с истока десет хиљада у ширину, а с југа двадесет и пет хиљада у дужину; и светиња Господња да буде усред њега.
11 ௧௧ இஸ்ரவேல் மக்கள் வழிதப்பிப்போகும்போது, லேவியர்கள் வழிதப்பிப்போனதுபோல வழிதப்பிப்போகாமல், என்னுடைய காவலைக் காத்துக்கொண்ட சாதோக்கியர்களாகிய பரிசுத்தமாக்கப்பட்ட ஆசாரியர்களுக்கு அது உரியதாகும்.
То ће бити свештеницима посвећеним између синова Садокових који држаше шта сам наредио да се држи и не зађоше као други Левити, кад зађоше синови Израиљеви.
12 ௧௨ அப்படியே தேசத்தில் அர்ப்பணிக்கப்படுகிறதிலோ மகா பரிசுத்தமான பங்கு அவர்களுக்கு லேவியருடைய எல்லையருகே இருப்பதாக.
Њихов ће бити свети принос од земље, светиња над светињама, уз међе левитске.
13 ௧௩ ஆசாரியரின் எல்லைக்கு எதிராக லேவியர்கள் அடையும் பங்கு இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும் பத்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; நீளம் இருபத்தைந்தாயிரம் கோலும், அகலம் பத்தாயிரம் கோலுமாக இருப்பதாக.
А Левити да имају уз међе свештеничке двадесет и пет хиљада лаката у дужину, и десет хиљада у ширину; сва дужина да буде двадесет и пет хиљада, а ширина десет хиљада.
14 ௧௪ அவர்கள் அதில் ஒன்றையும் விற்கவும் தேசத்தின் முதல் விளைவை மாற்றவும் மற்றவர்களுக்குக் கொடுக்கவும் கூடாது; அது யெகோவாவுக்குப் பரிசுத்தமானது.
А од тога ништа да не продају ни промењују, ни да преносе првина земаљских, јер је светиња Господу.
15 ௧௫ இருபத்தைந்தாயிரம் கோலுக்கு எதிராக அகலத்தில் மீதியாக இருக்கும் ஐயாயிரம் கோலோவென்றால், பரிசுத்தமாக இல்லாமல், குடியேறும் நகரத்திற்கும் வெளிநிலங்களுக்கும் விடவேண்டும்; நகரம் அதின் நடுவில் இருக்கட்டும்.
А пет хиљада лаката што остаје у ширину према двадесет и пет хиљада биће место посвећено, за град, за насеље, и за подграђа, и град да буде усред њега.
16 ௧௬ அதின் அளவுகளாவன; வடக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், தெற்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், கிழக்கு பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலும், மேற்குப்பக்கம் நான்காயிரத்து ஐந்நூறு கோலுமாம்.
А ово да му је мера: са северне стране четири хиљада и пет стотина лаката, и с јужне стране четири хиљада и пет стотина, и с источне стране четири хиљада и пет стотина, и са западне стране четири хиљада и пет стотина.
17 ௧௭ நகரத்தின் வெளிநிலங்கள் வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாக இருக்கட்டும்.
И подграђе ће бити двеста и педесет лаката са севера, и двеста и педесет с југа, и двеста и педесет с истока, и двеста и педесет са запада.
18 ௧௮ பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக நீளத்தில் மீதியானது கிழக்கே பத்தாயிரம் கோலும் மேற்கே பத்தாயிரம் கோலுமாம்; அது பரிசுத்த அர்ப்பணித்த நிலத்திற்கு எதிராக இருக்கும்; அதின் வருமானம் நகரத்திற்காக வேலை செய்கிறவர்களுக்கு ஆகாரமாக இருப்பதாக.
А шта остане у дужину према светом приносу, десет хиљада лаката на исток и десет хиљада на запад, према светом приносу, од тога доходак нека буде храна слугама градским.
19 ௧௯ இஸ்ரவேலின் எல்லா கோத்திரங்களிலுமிருந்து குறிக்கப்பட்ட சிலர் நகரத்திற்காகப் பணிவிடை செய்வார்கள்.
А слуге које ће служити граду биће из свих племена Израиљевих.
20 ௨0 அர்ப்பணிக்கப்பட்ட நிலம் அனைத்தும் இருபத்தையாயிரம் கோல் நீளமும், இருபத்தைந்தாயிரம் கோல் அகலமுமாக இருக்கவேண்டும்; பட்டணத்தின் நிலம் உட்பட இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலம் சதுரமாக இருக்கவேண்டும்.
Сав овај принос, двадесет и пет хиљада лаката уз двадесет и пет хиљада, четвртаст, принеће у принос свети за достојање граду.
21 ௨௧ பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலத்திற்கும் நகரத்தின் காணிக்கும் இந்த பக்கத்திலும் அந்தப்பக்கத்திலும், அர்ப்பணித்த நிலத்தினுடைய இருபத்தைந்தாயிரம் கோலின் முன்பாகக் கிழக்கு எல்லைவரையும், மேற்கிலே இருபத்தைந்தாயிரம்கோலின் முன்பாக மேற்கே மத்திய கடல் எல்லைவரைக்கும் மீதியாயிருப்பது அதிபதியினுடையது; பங்குகளுக்கு எதிரான அது அதிபதியினுடையதாக இருப்பதாக; அதற்கு நடுவாகப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமும் ஆலயத்தின் பரிசுத்த ஸ்தலமும் இருக்கும்.
А шта остане с обе стране светом приносу и достојању градском, према двадесет и пет хиљада лаката приноса до међе источне, и са запада према двадесет и пет хиљада лаката дуж западне међе према деловима, то да је кнежево; тако ће свети принос и светиња дома бити у среди.
22 ௨௨ அதிபதியினுடையதற்கு நடுவே இருக்கும் லேவியர்களின் நிலம் துவங்கியும் நகரத்தின் நிலம்துவங்கியும், யூதாவின் எல்லைக்கும் பென்யமீனின் எல்லைக்கும் நடுவே இருக்கிறது அதிபதியினுடையது.
А од достојања левитског и од достојања градског, усред оног што је кнежево, између међе Јудине и међе Венијаминове, да је кнежево.
23 ௨௩ மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை பென்யமீனுக்கு ஒரு பங்கும்,
А остала племена биће: од источне стране до западне стране Венијаминово, једно;
24 ௨௪ பென்யமீன் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை சிமியோனுக்கு ஒரு பங்கும்,
А уз међу Венијаминову, од источне стране до западне, Симеуново, једно;
25 ௨௫ சிமியோனின் எல்லை அருகே கிழக்குதிசை துவக்கி மேற்கு திசைவரை இசக்காருக்கு ஒரு பங்கும்,
А уз међу Симеунову, од источне стране до западне, Исахарово, једно;
26 ௨௬ இசக்காரின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை செபுலோனுக்கு ஒரு பங்கும்,
А уз међу Исахарову, од источне стране до западне, Завулоново, једно;
27 ௨௭ செபுலோனின் எல்லையருகே கிழக்குதிசை துவங்கி மேற்குத்திசைவரை காத்துக்கு ஒரு பங்கும் உண்டாயிருக்கட்டும்.
А уз међу Завулонову, од источне стране до западне, Гадово, једно;
28 ௨௮ காத்தின் எல்லையருகே தென்மூலையாகிய தெற்கு எல்லை, தாமார்துவக்கி காதேசிலுள்ள சண்டைமூட்டுதலின் தண்ணீர்கள் வரையும் மத்திய தரைக் கடல்வரைக்கும் போகும்.
А уз међу Гадову с јужне стране, на југ, међа је од Тамара до воде Мериве у Кадису, дуж потока до великог мора.
29 ௨௯ சொந்தமாக்கிக்கொள்ளும்படி இதுவே நீங்கள் இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சீட்டுப்போட்டுப் பங்கிடும் தேசம், இவைகளே அவர்களின் பங்குகள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
То је земља коју ћете жребом разделити племенима Израиљевим у наследство, и то су им делови, говори Господ Господ.
30 ௩0 நகரத்திலிருந்து புறப்படும் வழிகள்: வடக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோலாகிய அளவுண்டாயிருக்கும்.
А ово су крајеви граду: са северне стране четири хиљада и пет стотина лаката да буде мера;
31 ௩௧ நகரத்தின் வாசல்கள், இஸ்ரவேல் கோத்திரங்களுடைய பெயர்களின்படியே பெயர் பெற்றுகொள்ளட்டும்; வடக்கே ரூபனுக்கு ஒரு வாசல், யூதாவுக்கு ஒரு வாசல், லேவிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருக்கட்டும்.
А врата градска да се назову именима племена Израиљевих, троја врата са севера: једна врата Рувимова, једна врата Јудина, једна врата Левијева;
32 ௩௨ கிழக்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் யோசேப்புக்கு ஒரு வாசல், பென்யமீனுக்கு ஒரு வாசல், தாணுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
И с источне стране четири хиљада и пет стотина лаката, и троја врата: једна врата Јосифова, једна врата Венијаминова, једна врата Данова;
33 ௩௩ தெற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் சிமியோனுக்கு ஒரு வாசல், இசக்காருக்கு ஒரு வாசல், செபுலோனுக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
И с јужне стране четири хиљада и пет стотина лаката да буде мера, и троја врата: једна врата Симеунова, једна врата Исахарова, једна врата Завулонова;
34 ௩௪ மேற்கு பக்கத்திலே நான்காயிரத்து ஐந்நூறு கோல், அதில் காத்துக்கு ஒரு வாசல், ஆசேருக்கு ஒரு வாசல், நப்தலிக்கு ஒரு வாசல், ஆக மூன்று வாசல்கள் இருப்பதாக.
Са западне стране четири хиљада и пет стотина лаката, и троја врата: једна врата Гадова, једна врата Асирова, једна врата Нефталимова.
35 ௩௫ சுற்றிலும் அதின் அளவு பதினெட்டாயிரம் கோலாகும்; அந்த நாள்முதல் நகரம் யேகோவா ஷம்மா என்னும் பெயர்பெறும்.
Унаоколо ће бити осамнаест хиљада лаката, а име ће граду од тог дана бити: Господ је ту.