< எசேக்கியேல் 4 >
1 ௧ மனிதகுமாரனே, நீ ஒரு செங்கல்லை எடுத்து, அதை உனக்குமுன் வைத்து, அதின்மேல் எருசலேம் நகரத்தை வரைந்து,
Og du menneskesønn, ta dig en mursten og legg den foran dig og riss på den en by, Jerusalem,
2 ௨ அதை சுற்றிலும் முற்றுகைபோட்டு, அதை சுற்றிலும் கோட்டைகளை கட்டி, அதை சுற்றிலும் மண்மேடுபோட்டு, அதை சுற்றிலும் இராணுவங்களை நிறுத்தி, அதை சுற்றிலும் மதில் இடிக்கும் இயந்திரங்களை வை.
og reis bolverk mot den og bygg skanser mot den og kast op en voll mot den og still op leire mot den og sett murbrekkere mot den rundt omkring!
3 ௩ மேலும் நீ ஒரு இரும்புச்சட்டியை வாங்கி, அதை உனக்கும் நகரத்திற்கும் நடுவாக இரும்புச்சுவராக்கி, அது முற்றுகையாகக் கிடக்கும்படி உன்னுடைய முகத்தை அதற்கு நேராகத் திருப்பி, அதை முற்றுகைபோட்டுக்கொண்டிரு; இது இஸ்ரவேல் மக்களுக்கு அடையாளம்.
Og ta dig så en jernpanne og sett den som en jernvegg mellem dig og byen og vend ditt ansikt mot den, så den blir kringsatt, og du kringsetter den. Dette skal være et tegn for Israels hus.
4 ௪ நீ உன்னுடைய இடதுபக்கமாக ஒருபக்கமாகப் படுத்து, அதின்மேல் இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமத்திக்கொள்; நீ அந்தப்பக்கமாக ஒருக்களித்திருக்கும் நாட்களின் எண்ணிக்கையின்படியே அவர்களுடைய அக்கிரமத்தைச் சுமப்பாய்.
Og så skal du legge dig på din venstre side og legge Israel-folkets misgjerning på den! I så mange dager som du ligger på den side, skal du bære deres misgjerning;
5 ௫ அவர்களுடைய அக்கிரமத்தின் வருடங்களை உனக்கு நாள் கணக்காக எண்ணக் கட்டளையிட்டேன்; முந்நூற்றுத்தொண்ணூறு நாட்கள்வரைக்கும் நீ இஸ்ரவேல் மக்களின் அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
og jeg vil la deres misgjernings år for dig bli like så mange dager - tre hundre og nitti dager - så lenge skal du bære Israel-folkets misgjerning.
6 ௬ நீ இவைகளை நிறைவேற்றினபின்பு, மறுபடியும் உன்னுடைய வலதுபக்கமாக ஒருக்களித்து, யூதா வீட்டாரின் அக்கிரமத்தை நாற்பதுநாட்கள் வரையும் சுமக்கவேண்டும்; ஒவ்வொரு வருடத்திற்குப் பதிலாக ஒவ்வொரு நாளை உனக்குக் கட்டளையிட்டேன்.
Og når du er kommet til ende med dem, så skal du annen gang legge dig på din høire side og bære Juda-folkets misgjerning; i firti dager, en dag for hvert år, vil jeg la dig bære den.
7 ௭ நீ எருசலேமின் முற்றுகைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த கரமுமாக இருந்து, அதற்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.
Og du skal vende ditt åsyn og din nakne arm mot det kringsatte Jerusalem og profetere mot det.
8 ௮ இதோ, நீ அதை முற்றுகைப்போடும் நாட்களை நிறைவேற்றும்வரை ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்தில் புரளமுடியாதபடி உன்னைக் கயிறுகளால் கட்டுவேன்.
Og se, jeg legger rep om dig, så du ikke kan vende dig fra den ene side til den andre, før du er kommet til ende med de dager du holder det kringsatt.
9 ௯ நீ கோதுமையையும் வாற்கோதுமையையும், பெரும்பயிற்றையும், சிறுபயிற்றையும், தினையையும், கம்பையும் வாங்கி, அவைகளை ஒரு பாத்திரத்திலே போட்டு, அவைகளால் உனக்கு அப்பம்சுடுவாய்; நீ ஒருக்களித்துப் படுக்கும் நாட்களுடைய இலக்கத்தின்படியே முந்நூற்றுத்தொண்ணூறுநாள் அதில் எடுத்துச் சாப்பிடவேண்டும்.
Og ta dig så hvete og bygg og bønner og linser og hirse og spelt og legg dem i ett kar og bak dig brød av dem! I så mange dager som du ligger på din ene side, i tre hundre og nitti dager, skal du ete det.
10 ௧0 நீ சாப்பிடும் உணவு, நாள் ஒன்றுக்கு இருபது சேக்கல் நிறையாக இருக்கும்; அப்படி ஒவ்வொருநாளும் சாப்பிடுவாயாக.
Og den mat som du eter, skal være efter vekt, tyve sekel til hver dag; fra tid til tid skal du ete den.
11 ௧௧ தண்ணீரையும் அளவாக ஹின் என்னும் படியில் ஆறில் ஒரு பங்கைக் குடிப்பாய்; அப்படி நாளுக்குநாள் குடிக்கவேண்டும்.
Det vann du drikker, skal også være efter mål, sjettedelen av en hin; fra tid til tid skal du drikke det.
12 ௧௨ அதை வாற்கோதுமை அடையைப்போல் சாப்பிடு; அது மனிதனிலிருந்து கழிந்த மலத்தின் வறட்டிகளால் அவர்கள் கண்களுக்கு முன்பாகச் சுடப்படவேண்டும்.
Som en byggkake skal du ete det, med menneskeskarn skal du steke det for deres øine.
13 ௧௩ அதற்கு ஒத்தபடியே இஸ்ரவேல் மக்கள், நான் அவர்களைத் துரத்துகிற அந்நியஜாதிகளுக்குள்ளே தங்களுடைய அப்பத்தைத் தீட்டுள்ளதாகச் சாப்பிடுவார்கள் என்று யெகோவா சொன்னார்.
Og Herren sa: Således skal Israels barn ete sitt brød urent blandt de folk som jeg vil drive dem bort til.
14 ௧௪ அப்பொழுது நான்: ஆ, உன்னதமான தேவனே, இதோ, என்னுடைய ஆத்துமா தீட்டுப்படவில்லை; தானாகச் செத்ததையோ, மிருகத்தால் வேட்டையாடப்பட்டதையோ நான் என்னுடைய சிறுவயதுமுதல் இதுவரைக்கும் சாப்பிட்டதில்லை; அருவருப்பான இறைச்சி என்னுடைய வாய்க்குள் போனதுமில்லை என்றேன்.
Da sa jeg: Akk, Herre, Herre! Se, min sjel er ikke blitt uren, og noget selvdødt eller sønderrevet har jeg ikke ett fra min ungdom like til nu, og det er ikke kommet urent kjøtt i min munn.
15 ௧௫ அப்பொழுது அவர் என்னை நோக்கி: பார், மனித மலத்தின் வறட்டிக்குப் பதிலாக உனக்கு மாட்டுச்சாணி வறட்டியைக் கட்டளையிடுகிறேன்; அதினால் உன்னுடைய அப்பத்தைச் சுடு என்றார்.
Så sa han til mig: Vel, jeg vil la dig ta kumøkk i stedet for menneskeskarn, så du kan steke ditt brød over den.
16 ௧௬ பின்னும் அவர்: மனிதகுமாரனே, இதோ, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்குக் குறையவும், அவனவன் திடுக்கிடவும், அவர்கள் தங்களுடைய அக்கிரமத்திலே வாடிப்போகவும்,
Og han sa til mig: Menneskesønn! Se, jeg sønderbryter brødets stav i Jerusalem, og de skal ete brød efter vekt og med bekymring og drikke vann efter mål og med forferdelse,
17 ௧௭ நான் எருசலேமிலே அப்பம் என்னும் ஆதரவுகோலை முறிக்கிறேன்; அவர்கள் அப்பத்தை நிறையின்படியே கவலையுடன் சாப்பிட்டு, தண்ணீரை அளவின்படியே பயத்தோடு குடிப்பார்கள்.
så de skal lide mangel på brød og vann og forferdes, den ene med den andre, og visne bort i sin misgjerning.