< எசேக்கியேல் 36 >

1 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மலைகளை நோக்கித் தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்: இஸ்ரவேல் மலைகளே, யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
“But as for you, son of man, prophesy over the mountains of Israel, and you shall say: O mountains of Israel, listen to the word of the Lord.
2 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; பகைவர்கள் உங்களைக்குறித்து ஆ ஆ, நித்திய மேடுகள் எங்களுடையதானது என்று சொல்லுகிறபடியினால்,
Thus says the Lord God: Because the enemy has said about you: ‘It is well! The everlasting heights have been given to us as an inheritance!’
3 நீ தீர்க்கதரிசனம் சொல்லிச் சொல்லவேண்டியது என்னவென்றால்: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், நீங்கள் அந்நியதேசங்களில் மீதியானவர்களுக்குச் சுதந்தரமாக இருக்கும்படி அவர்கள் உங்களைப் பாழாக்கி, உங்களைச் சுற்றிலுமிருந்து விழுங்கினபடியினாலும், நீங்கள் வாயாடிகளுக்குப் பேச்சும் மக்களுக்கு அவதூறுமானவர்களானபடியினாலும்,
because of this, prophesy and say: Thus says the Lord God: Because you have been made desolate, and you have been trampled on every side, and you have been made into an inheritance for the remainder of the nations, and because you rose up, over the tip of the tongue and over the shame of the people,
4 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் யெகோவாகிய ஆண்டவருடைய வார்த்தையைக் கேளுங்கள்; மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும், பாழாக்கப்பட்ட பாலைவன இடங்களுக்கும், வெறுமையாக விடப்பட்ட பட்டணங்களுக்கும் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: உங்களைச் சுற்றிலும் மீதியான அந்நியமக்களுக்கு நீங்கள் கொள்ளையும் பரியாசமுமாகப்போனபடியினால்,
because of this, O mountains of Israel, listen to the word of the Lord God. Thus says the Lord God to the mountains, and to the hills, to the torrents, and to the valleys, and to the deserts, and to the ruins, and to the forsaken cities, which have been depopulated and ridiculed by the remainder of the nations all around:
5 யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்: என்னுடைய தேசத்தைக் கொள்ளையிடப்பட்ட வெளியாக்கும்படி அதை முழு இருதயத்தின் சந்தோஷத்தோடும் கர்வமான மனதோடும் தங்களுக்குச் சொந்தமாக நியமித்துக்கொண்ட அந்நியமக்களில் மீதியானவர்களுக்கு விரோதமாகவும் ஏதோம் அனைத்துக்கும் விரோதமாகவும், என்னுடைய நெருப்பான எரிச்சலினால் பேசினேன் என்று நிச்சயமாகச் சொல்லுகிறேன்.
Because of this, thus says the Lord God: In the fire of my zeal, I have spoken about the remainder of the nations, and about all of Idumea, who have given my land to themselves, joyfully, as an inheritance, and with all the heart and mind, and who have cast it out, so that they may lay waste to it.
6 ஆகையால், நீ இஸ்ரவேல் தேசத்தைக்குறித்துத் தீர்க்கதரிசனம் சொல்லி, மலைகளுக்கும், மேடுகளுக்கும், ஆறுகளுக்கும், பள்ளத்தாக்குகளுக்கும் சொல்லவேண்டியது என்னவென்றால்; யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இதோ, நீங்கள் அந்நியதேசங்கள் செய்யும் அவமானத்தைச் சுமந்தபடியினால் நான் என்னுடைய எரிச்சலினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் பேசினேன்,
Therefore, prophesy over the soil of Israel, and you shall say to the mountains, and to the hills, to the ridges, and to the valleys: Thus says the Lord God: Behold, I have spoken in my zeal and in my fury, because you have endured the shame of the Gentiles.
7 ஆதலால், யெகோவாகிய ஆண்டவராக இருக்கிற நான் என்னுடைய கரத்தை உயர்த்துவேன், உங்களைச் சுற்றிலும் இருக்கிற அந்நியதேசங்கள் தங்களுடைய அவமானத்தை நிச்சயமாகச் சுமப்பார்கள் என்று சொல்லுகிறேன்.
Therefore, thus says the Lord God: I have lifted up my hand, so that the Gentiles, who are all around you, will themselves bear their shame.
8 இஸ்ரவேல் மலைகளே, நீங்கள் உங்களுடைய இளங்கிளைகளைவிட்டு, என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு உங்களுடைய பழங்களைக் கொடுப்பீர்கள்; அவர்கள் அருகில் வந்துவிட்டார்கள்.
But as for you, O mountains of Israel, spring forth your branches, and bear your fruit, to my people Israel. For they are close to their advent.
9 இதோ, நான் உங்களிடமிருந்து, உங்களைக் கண்காணிப்பேன்; நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.
For behold, I am for you, and I will turn to you, and you will be plowed, and you will receive seed.
10 ௧0 நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வீட்டாராகிய மனிதர்கள் யாவரையும் பெருகச்செய்வேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், பாலைவனமான இடங்கள் கட்டப்படும்.
And I will multiply men among you and among all the house of Israel. And the cities shall be inhabited, and the ruinous places shall be restored.
11 ௧௧ உங்கள்மேல் மனிதர்களையும் மிருகஜீவன்களையும் பெருகிப்பலுகும்படி பெருகச்செய்வேன்; ஆரம்பநாட்களில் நீங்கள் இருந்த நிலைமையில் நான் உங்களை நிலைநிறுத்தி, உங்களுடைய முந்தின சிறப்பைவிட உங்களுக்கு அதிக சிறப்பு உண்டாகச்செய்வேன்; அதினால் நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
And I will fill you again with men and with cattle. And they will be multiplied, and they will increase. And I will cause you to live as from the beginning, and I will give you even greater gifts than those you had from the start. And you shall know that I am the Lord.
12 ௧௨ நான் உங்கள்மேல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் மனிதர்களை நடமாடச்செய்வேன், அவர்கள் உன்னைக் கையாளுவார்கள்; அவர்களுக்குச் சொந்தமாக இருப்பாய்; நீ இனிமேல் அவர்களைச் சாகக்கொடுப்பதில்லை.
And I will lead men over you, over my people Israel, and they will possess you as an inheritance. And you shall be to them as an inheritance. And you shall no longer be permitted to be without them.
13 ௧௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: மக்கள் உன்னைப்பார்த்து: நீ மனிதர்களைப் விழுங்குகிற தேசமென்றும், நீ உன்னுடைய மக்களைச் சாகக்கொடுக்கிற தேசமென்றும் சொல்லுகிறபடியினால்,
Thus says the Lord God: Because they are saying about you, ‘You are a woman who devours men, and you are strangling your own nation,’
14 ௧௪ நீ இனிமேல் மனிதர்களைப் விழுங்குகிறதுமில்லை, இனிமேல் உன்னுடைய மக்களைச் சாகக்கொடுப்பதுமில்லை என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
because of this, you shall no longer consume men, and you shall no longer harm your own nation, says the Lord God.
15 ௧௫ நான் இனிமேல் அந்நியமக்கள் செய்யும் அவமானத்தை உன்னிடத்திலே கேட்கச்செய்வதுமில்லை, நீ மக்களின் நிந்தையை இனிமேல் சுமப்பதுமில்லை; நீ இனிமேல் உன்னுடைய தேசங்களைச் சாகக்கொடுப்பதுமில்லையென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
Neither will I permit men to discover in you the shame of the Gentiles any more. And you shall never again bear the reproach of the peoples. And you shall not send your people away any more, says the Lord God.”
16 ௧௬ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And the word of the Lord came to me, saying:
17 ௧௭ மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் தங்களுடைய சொந்த தேசத்திலே குடியிருக்கும்போது அதைத் தங்களுடைய நடக்கையினாலும் தங்களுடைய செயல்களினாலும் தீட்டுப்படுத்தினார்கள்; அவர்களுடைய நடக்கை என்னுடைய முகத்திற்கு முன்பாக மாதவிடாயுள்ள பெண்ணின் தீட்டைப்போல் இருந்தது.
“Son of man, the house of Israel lived on their own soil, and they defiled it with their ways and with their intentions. Their way, in my sight, became like the uncleanness of a menstruous woman.
18 ௧௮ ஆகையினால் தேசத்திலே அவர்கள் சிந்தின இரத்தத்திற்காக, அதை அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளால் தீட்டுப்படுத்தினதிற்காக நான் என்னுடைய கடுங்கோபத்தை அவர்கள்மேல் ஊற்றி,
And so I poured out my indignation upon them, because of the blood which they shed upon the land, and because they defiled it with their idols.
19 ௧௯ அவர்களை அந்நியதேசங்களுக்குள்ளே சிதறடித்தேன்; தேசங்களில் தூற்றிப்போடப்பட்டார்கள்; அவர்களுடைய நடக்கையின்படியேயும் அவர்களுடைய செயல்களின்படியேயும் அவர்களை நியாயந்தீர்த்தேன்.
And I dispersed them among the Gentiles, and they have been scattered among the lands. I have judged them according to their ways and their plans.
20 ௨0 அவர்கள் அந்நியதேசங்களிடத்தில் போனபோது அந்த மக்கள் இவர்களைக்குறித்து: இவர்கள் யெகோவாவுடைய மக்கள், அவருடைய தேசத்திலிருந்து வந்தார்கள் என்று சொன்னதினால், இவர்கள் என்னுடைய பரிசுத்தபெயரைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
And when they walked among the Gentiles, to whom they had entered, they defiled my holy name, though it was being said about them: ‘This is the people of the Lord,’ and ‘They went forth from his land.’
21 ௨௧ ஆனாலும் இஸ்ரவேல் மக்கள் தாங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்திலே பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே இரங்குகிறேன்.
But I have spared my holy name, which the house of Israel has defiled among the Gentiles, to whom they entered.
22 ௨௨ ஆதலால், நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களை, உங்களுக்காக அல்ல, நீங்கள் வந்துசேர்ந்த அந்நிய மக்களிடத்தில் பரிசுத்தக்குலைச்சலாக்கின என்னுடைய பரிசுத்த பெயருக்காகவே நான் இப்படிச் செய்கிறேன்.
For this reason, you shall say to the house of Israel: Thus says the Lord God: I will act, not for your sake, O house of Israel, but for the sake of my holy name, which you have defiled among the Gentiles, to whom you entered.
23 ௨௩ அந்நியமக்களின் நடுவே நீங்கள் பரிசுத்தக்குலைச்சலாக்கினதும் அவர்களுக்குள் உங்களால் பரிசுத்தக்குலைச்சலாக்கப்பட்டதுமான என்னுடைய மகத்தான பெயரை நான் பரிசுத்தம்செய்யும்பொழுது; அப்பொழுது அந்நியமக்கள் தங்களுடைய கண்களுக்கு முன்பாக நான் உங்களுக்குள் பரிசுத்தம் செய்யப்படும்போது, நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
And I will sanctify my great name, which was defiled among the Gentiles, which you have defiled in their midst. So may the Gentiles know that I am the Lord, says the Lord of hosts, when I will have been sanctified in you, before their eyes.
24 ௨௪ நான் உங்களை அந்நிய மக்களிடத்திலிருந்து அழைத்து, உங்களைச் எல்லா தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்களுடைய சொந்த தேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்.
Certainly, I will take you away from the Gentiles, and I will gather you together from all the lands, and I will lead you into your own land.
25 ௨௫ அப்பொழுது நான் உங்கள்மேல் சுத்தமான தண்ணீர் தெளிப்பேன்; நான் உங்களுடைய எல்லா அசுத்தங்களையும் உங்களுடைய எல்லா அசுத்தமான சிலைகளையும் நீக்கி உங்களைச் சுத்தமாக்குவேன், நீங்கள் சுத்தமாவீர்கள்.
And I will pour clean water over you, and you shall be cleansed from all your filth, and I will cleanse you from all your idols.
26 ௨௬ உங்களுக்கு புதிய இருதயத்தைக் கொடுத்து, உங்களுடைய உள்ளத்திலே புதிதான ஆவியைக் கட்டளையிட்டு, கல்லான இருதயத்தை உங்கள் உடலிலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை உங்களுக்குக் கொடுப்பேன்.
And I will give to you a new heart, and I will place in you a new spirit. And I will take away the heart of stone from your body, and I will give to you a heart of flesh.
27 ௨௭ உங்களுடைய உள்ளத்திலே என்னுடைய ஆவியை வைத்து, உங்களை என்னுடைய கட்டளைகளில் நடக்கவும் என்னுடைய நியாயங்களைக் கைக்கொள்ளவும் அவைகளின்படி செய்யவும்செய்வேன்.
And I will place my Spirit in your midst. And I will act so that you may walk in my precepts and keep my judgments, and so that you may fulfill them.
28 ௨௮ உங்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்திலே நீங்கள் குடியிருப்பீர்கள்; நீங்கள் என்னுடைய மக்களாக இருப்பீர்கள், நான் உங்களுடைய தேவனாக இருந்து,
And you shall live in the land that I gave to your fathers. And you shall be my people, and I will be your God.
29 ௨௯ உங்களுடைய அசுத்தங்களையெல்லாம் நீக்கி, உங்களைக் காப்பாற்றி, உங்கள்மேல் பஞ்சத்தைக் கட்டளையிடாமல், கோதுமையை வரவழைத்து, அதைப் பெருகச்செய்து,
And I will save you from all your filth. And I will call for grain, and I will multiply it, and I will not impose a famine upon you.
30 ௩0 நீங்கள் இனிமேல் தேசங்களுக்குள்ளே பஞ்சத்தினால் உண்டாகும் நிந்தையை அடையாதபடி, மரத்தின் பழங்களையும் வயலின் பலன்களையும் பெருகச்செய்வேன்.
And I will multiply the fruit of the tree and the produce of the field, so that you may no longer bear the disgrace of famine among the nations.
31 ௩௧ அப்பொழுது நீங்கள் உங்களுடைய பொல்லாத மார்க்கங்களையும் உங்களுடைய தகாத செயல்களையும் நினைத்து, உங்களுடைய அக்கிரமங்களுக்காக உங்களுடைய அருவருப்புகளுக்காக உங்களையே வெறுப்பீர்கள்.
And you shall remember your very wicked ways and your intentions, which were not good. And you will be displeased by your own iniquities and your own crimes.
32 ௩௨ நான் இப்படிச் செய்வது உங்களுக்காக அல்லவென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், இது உங்களுக்கு தெரிந்திருப்பதாக; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய வழிகளுக்காக வெட்கப்படுங்கள்.
It is not for your sakes that I will act, says the Lord God; let this be known to you. Be confounded and ashamed over your own ways, O house of Israel.
33 ௩௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் நீக்கி, உங்களைச் சுத்தமாக்கும் காலத்திலே பட்டணங்களில் குடியேறச்செய்வேன்; பாலைவனமான இடங்களும் கட்டப்படும்.
Thus says the Lord God: In the day when I will have cleansed you from all your iniquities, and when I will have caused the cities to be inhabited, and when I will have restored the ruinous places,
34 ௩௪ பாழாக்கப்பட்ட தேசம் கடந்துபோகிற யாவருடைய பார்வைக்கும் பாழாய்க்கிடந்ததற்குப் பதிலாக பயிரிடப்படும்.
and when the deserted land will have been cultivated, which previously was desolate to the eyes of all who passed by,
35 ௩௫ பாழாய்க்கிடந்த இந்த தேசம், ஏதேன் தோட்டத்தைப்போலானது என்றும், பாலைவனமும் பாழும் அழிக்கப்பட்டும் இருந்த பட்டணங்கள் பாதுகாப்பானவைகளும் குடியேற்றப்பட்டவைகளுமாக இருக்கிறது என்றும் சொல்லுவார்கள்.
then they shall say: ‘This uncultivated land has become a garden of delight, and the cities, which were deserted and destitute and overturned, have been settled and fortified.’
36 ௩௬ யெகோவாகிய நான் அழிக்கப்பட்டவைகளைக் கட்டுகிறேன் என்றும், பாழானதைப் பயிர்நிலமாக்குகிறேன் என்றும், அப்பொழுது உங்களைச் சுற்றிலுமுள்ள மீதியான தேசங்கள் அறிந்துகொள்வார்கள்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதைச் செய்வேன்.
And the Gentiles, those who remain around you, shall know that I, the Lord, have built up what was destroyed, and have planted what was uncultivated. I, the Lord, have spoken and acted.
37 ௩௭ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேல் மக்களுக்காக நான் இதை நன்மைச்செய்யும்படி அவர்கள் என்னிடத்தில் விண்ணப்பம்செய்யவேண்டும்; மந்தை பெருகுகிறதுபோல் அவர்களில் மனிதர்களைப் பெருகச்செய்வேன்.
Thus says the Lord God: Even in this time, the house of Israel shall find me, so that I may act for them. I will multiply them like a flock of men,
38 ௩௮ பண்டிகை காலங்களில் எருசலேமிலே பரிசுத்தம்செய்யப்பட்டுவருகிற மந்தைகள் எப்படித் திரளாக இருக்கிறதோ, அப்படியே பாலைவனமாக இருந்த பட்டணங்கள் மனிதர்களின் மந்தையால் நிரம்பி இருக்கும்; அதினால் நான் யெகோவா என்பதை அறிந்துகொள்வார்கள் என்று சொல் என்றார்.
like a holy flock, like the flock of Jerusalem in her solemnities. So shall the deserted cities be filled with flocks of men. And they shall know that I am the Lord.”

< எசேக்கியேல் 36 >