< எசேக்கியேல் 33 >
1 ௧ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And the word of the Lord came to me, saying,
2 ௨ மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களுடன் பேசி, அவர்களுடன் சொல்லவேண்டியதாவது: நான் தேசத்தின்மேல் வாளை வரச்செய்யும்போது தேசத்தின் மக்கள் தங்களுடைய எல்லைகளிலுள்ள ஒருவனை அழைத்து, அவனைத் தங்களுக்குக் காவற்காரனாக வைத்தபின்பு,
Son of man, speak to the children of thy people, and thou shalt say to them, On whatsoever land I shall bring a sword, and the people of the land take one man of them, and set him for their watchman:
3 ௩ இவன் தேசத்தின்மேல் வாள் வருவதைக்கண்டு, எக்காளம் ஊதி, மக்களை எச்சரிக்கும்போது,
and he shall see the sword coming upon the land, and blow the trumpet, and sound an alarm to the people;
4 ௪ எக்காளத்தின் சத்தத்தைக் கேட்கிறவன் அதைக் கேட்டும், எச்சரிக்கையாக இல்லாமல், வாள் வந்து அவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவனுடைய இரத்தப்பழி அவனுடைய தலையின்மேல் சுமரும்.
and he that hears the sound of the trumpet shall hear [indeed], and [yet] not take heed, and the sword shall come upon him, and overtake him, his blood shall be upon his [own] head.
5 ௫ அவனுடைய எக்காளத்தின் சத்தத்தைக் கேட்டும், எச்சரிக்கையாக இருக்கவில்லை; அவனுடைய இரத்தப்பழி அவன் மேலே சுமரும்; எச்சரிக்கையாக இருக்கிறவனோ தன்னுடைய உயிரைத் தப்புவித்துக்கொள்ளுவான்.
Because he heard the sound of the trumpet, and took no heed, his blood shall be upon him: but the other, because he took heed, has delivered his soul.
6 ௬ காவற்காரன் வாள் வருவதைக் கண்டும், அவன் எக்காளம் ஊதாமலும் மக்கள் எச்சரிக்கப்படாமலும், வாள் வந்து அவர்களில் யாராவது ஒருவனை வாரிக்கொள்ளுகிறது உண்டானால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே வாரிக்கொள்ளப்பட்டான்; ஆனாலும் அவன் இரத்தப்பழியைக் காவற்காரன் கையிலே கேட்பேன்.
But if the watchman see the sword coming, and do not sound the trumpet, and the people do not watch; and the sword come, and take a soul from among them, that [soul] is taken because of its iniquity; but the blood [thereof] will I require at the watchman's hand.
7 ௭ மனிதகுமாரனே, நான் உன்னை இஸ்ரவேல் மக்களுக்குக் காவற்காரனாக வைத்தேன்; ஆகையால் நீ என்னுடைய வாயினாலே வார்த்தையைக் கேட்டு, என்னுடைய பெயரினாலே அவர்களை எச்சரிப்பாயாக.
And thou, son of man, I have set thee [as] a watchman to the house of Israel, and thou shalt hear a word from my mouth.
8 ௮ நான் துன்மார்க்கனை நோக்கி: துன்மார்க்கனே, நீ சாகவே சாவாய் என்று சொல்லும்போது, நீ துன்மார்க்கனைத் தன்னுடைய துன்மார்க்கத்தில் இல்லாமலிருக்கும்படி எச்சரிக்காமற்போனால், அந்தத் துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்திலே மரணமடைவான்: ஆனாலும் அவனுடைய இரத்தப்பழியை உன்னுடைய கையிலே கேட்பேன்.
When I say to the sinner, Thou shalt surely die; [if] thou speak not to warn the wicked from his way, the wicked himself shall die in his iniquity; but his blood will I require at thine hand.
9 ௯ துன்மார்க்கன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பும்படி நீ அவனை எச்சரித்தும், அவன் தன்னுடைய வழியைவிட்டுத் திரும்பாமற்போனால், அவன் தன்னுடைய அக்கிரமத்திலே மரிப்பான்; நீயோ உன்னுடைய ஆத்துமாவைத் தப்புவிப்பாய்.
But if thou forewarn the wicked of his way to turn from it, and he turn not from his way, he shall die in his ungodliness; but thou hast delivered thine own soul.
10 ௧0 மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எங்களுடைய துரோகங்களும் எங்களுடைய பாவங்களும் எங்கள்மேல் இருக்கிறது, நாங்கள் சோர்ந்துபோகிறோம், நாங்கள் பிழைப்பது எப்படியென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.
And thou, son of man, say to the house of Israel; Thus have ye spoken, saying, Our errors, and our iniquities weigh upon us, and we pine away in them, and how then shall we live?
11 ௧௧ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் துன்மார்க்கனுடைய மரணத்தை விரும்பாமல், துன்மார்க்கன் தன்னுடைய வழியை விட்டுத் திரும்பிப் பிழைப்பதையே விரும்புகிறேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இஸ்ரவேல் மக்களே, உங்களுடைய பொல்லாத வழிகளை விட்டுத் திரும்புங்கள், திரும்புங்கள்; நீங்கள் ஏன் இறக்கவேண்டும் என்கிறார் என்று அவர்களுடன் சொல்லு.
Say to them, Thus saith the Lord; [As] I live, I desire not the death of the ungodly, as that the ungodly should turn from his way and live: turn ye heartily from your way; for why will ye die, O house of Israel?
12 ௧௨ மனிதகுமாரனே, நீ உன்னுடைய மக்களை நோக்கி: நீதிமான் துரோகம்செய்கிற நாளிலே அவனுடைய நீதி அவனைக் காப்பாற்றுவதில்லை; துன்மார்க்கன் தன்னுடைய துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்புகிற நாளிலே அவன் தன்னுடைய அக்கிரமத்தினால் விழுந்து போவதுமில்லை; நீதிமான் பாவம்செய்கிற நாளிலே தன்னுடைய நீதியினால் பிழைப்பதுமில்லை.
Say to the children of thy people, The righteousness of the righteous shall not deliver him, in the day wherein he errs: and the iniquity of the ungodly shall not harm him, in the day wherein he turns from his iniquity, but the righteous [erring] shall not be able to deliver himself.
13 ௧௩ பிழைக்கவே பிழைப்பாய் என்று நான் நீதிமானுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய நீதியை நம்பி, அநியாயம்செய்தால், அவனுடைய நீதியில் ஒன்றும் நினைக்கப்படுவதில்லை, அவன் செய்த தன்னுடைய அநியாயத்திலே மரிப்பான்.
When I say to the righteous, [Thou shalt live; and] he trusts in his righteousness, and shall commit iniquity, none of his righteousnesses shall be remembered; in his unrighteousness which he has wrought, in it shall he die.
14 ௧௪ பின்னும் சாகவே சாவாய் என்று நான் துன்மார்க்கனுக்குச் சொல்லும்போது, அவன் தன்னுடைய பாவத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும்செய்து,
And when I say to the ungodly, Thou shalt surely die; and he shall turn from his sin, and do judgment and justice,
15 ௧௫ துன்மார்க்கன் தான் வாங்கின அடைமானத்தையும் தான் கொள்ளையிட்ட பொருளையும் திரும்பக் கொடுத்துவிட்டு, அநியாயம் செய்யாதபடி ஜீவப்பிரமாணங்களில் நடந்தால், அவன் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.
and return the pledge, and repay that which he has robbed, [and] walk in the ordinances of life, so as to do no wrong; he shall surely live, and shall not die.
16 ௧௬ அவன் செய்த அவனுடைய எல்லாப் பாவங்களும் அவனுக்கு விரோதமாக நினைக்கப்படுவதில்லை; அவன் நியாயமும் நீதியும் செய்தான், பிழைக்கவே பிழைப்பான் என்று சொல்லு.
None of his sins which he has committed shall be remembered: because he has wrought judgment and righteousness; by them shall he live.
17 ௧௭ உன்னுடைய மக்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறார்கள்; அவர்களுடைய வழியே செம்மையானதல்ல.
Yet the children of thy people will say, The way of the Lord is not straight: whereas this their way is not straight.
18 ௧௮ நீதிமான் தன்னுடைய நீதியைவிட்டுத்திரும்பி, அநியாயம்செய்தால், அவன் அதினால் மரிப்பான்.
When the righteous turns away from his righteousness, and shall commit iniquities, then shall he die in them.
19 ௧௯ துன்மார்க்கன் தன்னுடைய அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
And when the sinner turns from his iniquity, and shall do judgment and righteousness, he shall live by them.
20 ௨0 நீங்களோ, ஆண்டவருடைய வழி செம்மையானதல்ல என்கிறீர்கள், இஸ்ரவேல் மக்களே, நான் உங்களில் ஒவ்வொருவனையும் அவனவன் வழிகளின்படி நியாயம் தீர்ப்பேன் என்று சொல் என்றார்.
And this is that which ye said, The way of the Lord is [not] straight. I will judge you, O house of Israel, every one for his ways.
21 ௨௧ எங்களுடைய சிறையிருப்பின் பன்னிரண்டாம் வருடம் பத்தாம் மாதம் ஐந்தாம் நாளிலே எருசலேமிலிருந்து தப்பின ஒருவன் என்னிடத்தில் வந்து: நகரம் அழிக்கப்பட்டது என்றான்.
And it came to pass in the tenth year of our captivity, in the twelfth month, on the fifth [day] of the month, [that] one that had escaped from Jerusalem came to me, saying, The city is taken.
22 ௨௨ தப்பினவன் வருகிறதற்கு முந்தின மாலைவேளையிலே யெகோவாவுடைய கை என்மேல் அமர்ந்து, அவன் காலையில் என்னிடத்தில் வரும்வரை என்னுடைய வாயைத் திறந்திருக்கச்செய்தது; என்னுடைய வாய் திறக்கப்பட்டது, பின்பு நான் மவுனமாக இருக்கவில்லை.
Now the hand of the Lord had come upon me in the evening, before he came; and he opened my mouth, when he came to me in the morning: and my mouth was open, it was no longer kept closed.
23 ௨௩ அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
And the word of the Lord came to me, saying,
24 ௨௪ மனிதகுமாரனே, இஸ்ரவேல் தேசத்தின் பாழான இடங்களிலுள்ள குடிகள்: ஆபிரகாம் ஒருவனாக இருந்து, தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டான்; நாங்கள் அநேகராக இருக்கிறோம், எங்களுக்கு இந்த தேசம் சொந்தமாக கொடுக்கப்பட்டது என்று சொல்லுகிறார்கள்.
Son of man, they that inhabit the desolate [places] on the land of Israel say, Abram was one, and he possessed the land: and we are more numerous; to us the land is given for a possession.
25 ௨௫ ஆகையால், நீ அவர்களை நோக்கி: நீங்கள் இரத்தத்துடன் கூடியதைத் தின்று, உங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கு நேராக உங்களுடைய கண்களை ஏறெடுத்து, இரத்தத்தைச் சிந்தியிருக்கிறீர்கள், நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ?
26 ௨௬ நீங்கள் உங்கள் வாளை நம்பிக்கொண்டு, அருவருப்பானதைச் செய்து, உங்களில் அவனவன் தன்தன் அயலான் மனைவியைத் தீட்டுப்படுத்துகிறீர்கள்; நீங்கள் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்வீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
27 ௨௭ நீ அவர்களை நோக்கி: பாழான இடங்களில் இருக்கிறவர்கள் வாளால் விழுவார்கள்; வெளிகளில் இருக்கிறவனை மிருகங்களுக்கு இரையாக ஒப்புக்கொடுப்பேன்; கோட்டைகளிலும் குகைகளிலும் இருக்கிறவர்கள் கொள்ளைநோயால் மரிப்பார்கள்.
Therefore say to them, Thus saith the Lord God, [As] I live, surely they that are in the desolate places shall fall by swords and they that are in the open plain shall be given for food to the wild beasts of the field, and them that are in the fortified [cities] and them that are in the caves I will slay with pestilence.
28 ௨௮ நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அப்பொழுது அதினுடைய பெலத்தின் பெருமை ஒழிந்துபோகும்; அப்பொழுது இஸ்ரவேலின் மலைகள் கடந்துபோவாரில்லாமல் பாழாய்க்கிடக்கும்.
And I will make the land desert, and the pride of her strength shall perish; and the mountains of Israel shall be made desolate by reason of no man passing through.
29 ௨௯ அவர்கள் செய்த அவர்களுடைய எல்லா அருவருப்புகளுக்காக நான் தேசத்தைப் பாழாக்கும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வார்கள், இதை என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல்லு.
And they shall know that I am the Lord; and I will make their land desert, and it shall be made desolate because of all their abominations which they have wrought.
30 ௩0 மேலும் மனிதகுமாரனே, உன்னுடைய மக்களின் சுவர் ஓரங்களிலும் வீட்டுவாசல்களிலும் உன்னைக்குறித்துப்பேசி, யெகோவாவிடத்திலிருந்து புறப்பட்ட வார்த்தை என்னவென்று கேட்போம் வாருங்கள் என்று ஒருவரோடொருவரும் சகோதரனுடன் சகோதரனும் சொல்லி,
And [as for] thee, son of man, the children of thy people are they that speak concerning thee by the walls, and in the porches of the houses, and they talk one to another, saying, Let us come together, and let us hear the [words] that proceed from the Lord.
31 ௩௧ மக்கள் கூடிவருகிற வழக்கத்தின்படி உன்னிடத்தில் வந்து, உனக்கு முன்பாக என்னுடைய மக்களைப்போல் உட்கார்ந்து, உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவர்கள் அவைகளின்படி செய்கிறதில்லை; அவர்கள் தங்களுடைய வாயினாலே அன்பாய் இருக்கிறோம் என்று சொல்கிறார்கள், அவர்கள் இருதயமோ பொருளாசையைப் பின்பற்றிப்போகிறது.
They approach thee as a people comes together, and sit before thee, and hear thy words, but they will not do them: for [there is] falsehood in their mouth, and their heart [goes] after their pollutions.
32 ௩௨ இதோ, நீ இனிய குரலும் கீதவாத்தியம் வாசிப்பதில் சாமர்த்தியமுமுடையவன் பாடும் இன்பமான பாட்டுக்குச் சமானமாக இருக்கிறாய்; அவர்கள் உன்னுடைய வார்த்தைகளைக் கேட்கிறார்கள்; ஆனாலும் அவைகளின்படி செய்யாமல்போகிறார்கள்.
And thou art to them as a sound of a sweet, well-tuned psaltery, and they will hear thy words, but they will not do them.
33 ௩௩ இதோ, அது வருகிறது, அது வரும்போது தங்கள் நடுவிலே ஒரு தீர்க்கதரிசி இருந்தான் என்று அறிந்துகொள்வார்கள் என்றார்.
But whenever it shall come [to pass], they will say, Behold, it is come: and they shall know that there was a prophet in the midst of them.