< எசேக்கியேல் 24 >
1 ௧ பாபிலோனின் சிறையிருப்பின் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாம் தேதியிலே யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
౧బబులోను చెరలో ఉన్న కాలంలో, తొమ్మిదో సంవత్సరం, పదో నెల, పదో రోజు యెహోవా వాక్కు నాకు మళ్ళీ ప్రత్యక్షమై ఇలా అన్నాడు,
2 ௨ மனிதகுமாரனே, இந்த நாளின் பெயரையும், இந்தத் தேதியையும் நீ எழுதிவை, இந்தத் தேதியில்தானே பாபிலோன் ராஜா எருசலேமில் முகாமிட்டிருந்தான்.
౨“నరపుత్రుడా, ఈ రోజు పేరు రాసి ఉంచుకో. కచ్చితంగా ఈ రోజే బబులోను రాజు యెరూషలేమును ముట్టడి వేశాడు.
3 ௩ இப்போதும் நீ கலகவீட்டாருக்கு ஒரு உவமையைக் காண்பித்து, அவர்களை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், ஒரு கொப்பரையை அடுப்பிலே வைத்து, அதிலே தண்ணீரை ஊற்று.
౩తిరుగుబాటుచేసే ఈ ప్రజలకు ఉపమాన రీతిగా ఒక సామెత చెప్పు, ప్రభువైన యెహోవా చెప్పేదేమంటే, వంట కుండ తెచ్చి అందులో నీళ్లు పోసి దాన్ని పొయ్యి మీద పెట్టు.
4 ௪ எல்லா நல்ல இறைச்சி துண்டுகளான பின்னந்தொடைகளும் முன்னந்தொடைகளுமாகிய துண்டுகளைச் சேர்த்து அதிலே போடு; நல்ல எலும்புகளால் அதை நிரப்பு.
౪తొడ, జబ్బ మొదలైన మంచి ముక్కలన్నీ అందులో వేసి, మంచి ఎముకలు ఏరి దాన్ని నింపు.
5 ௫ ஆட்டுமந்தையில் தெரிந்துகொள்ளப்பட்டதை அதற்காகக் கொண்டுவந்து, எலும்புகளை அதின் கீழே குவித்து எரிக்கவேண்டும்; அதிலுள்ள எலும்புகளும் வேகத்தக்கதாக அதைப் பொங்கப்பொங்கக் காய்ச்சவேண்டும்.
౫మందలో శ్రేష్ఠమైన వాటిని తీసికో. దానిలో ఉన్న ఎముకలు ఉడికేలా ఎక్కువ కట్టెలు పోగు చెయ్యి, దాన్ని బాగా పొంగించు. ఎముకలు ఉడికేలా పొంగించు.
6 ௬ இதற்காகக் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நுரை ஒட்டிக்கொண்டிருக்கிறதும் நுரை நீங்காததுமாகிய கொப்பரை என்னப்பட்ட இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, அதில் இருக்கிறதைக் துண்டுதுண்டாக எடுத்துக்கொண்டுபோ; அதின்பேரில் சீட்டுப்போடகூடாது.
౬కాబట్టి ప్రభువైన యెహోవా చెప్పేదేమంటే, రక్త నగరానికి బాధ. మడ్డి గల ఆ కుండకు బాధ తప్పదు. దానిలోనుంచి ఆ మడ్డి పోదు. దానికోసం చీటీలు వెయ్యకుండా వండిన దాన్ని ముక్క వెంట ముక్క దానిలోనుంచి తీసుకో.
7 ௭ அவளுடைய இரத்தம் அவள் நடுவில் இருக்கிறது; மண்ணிலே மறைந்துபோகும்படி அதைத் தரையிலே ஊற்றாமல் கற்பாறையிலே ஊற்றிப்போட்டாள்.
౭దాని రక్తం దాని మధ్యనే ఉంది. అది దాన్ని నున్నటి బండ మీద ఉంచింది. మట్టితో దాన్ని కప్పేందుకు వీలుగా ఆ రక్తాన్ని నేల మీద కుమ్మరించ లేదు.
8 ௮ நீதியைச் சரிக்கட்டுவதற்காகக் கோபத்தை காட்டும்படி நான் அவள் இரத்தத்தை மறைக்காமல் கன்மலையின்மேல் வைத்தேன்.
౮కాబట్టి దాని విషయం కోపాగ్ని రేకెత్తించి ప్రతీకారం తీర్చుకోవాలని, అది చిందించిన రక్తం మట్టితో కప్పకుండా దాన్ని ఆ నున్నటి బండ మీద నేను ఉండనిచ్చాను.”
9 ௯ ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இரத்தம்சிந்திய நகரத்திற்கு ஐயோ, நான் பெரிதான கட்டைகளைக் குவித்து எரியச்செய்வேன்.
౯కాబట్టి ప్రభువైన యెహోవా చెప్పేదేమంటే “ఆ నెత్తురు నగరానికి బాధ. నేను కూడా మరి ఎక్కువ కట్టెలు పేర్చబోతున్నాను.
10 ௧0 அதிகமான விறகுகளை அடுக்கி, தீயை மூட்டு, இறைச்சியை முறுக வேகவைத்துச் சாறுகளை ஊற்று; எலும்புகளை எரித்துப்போடு.
౧౦కట్టెలు ఎక్కువ చెయ్యి! అగ్ని రాజెయ్యి! మాంసాన్ని బాగా ఉడకబెట్టు. మాంసం బాగా ఉడికించి మసాలా కలిపి పులుసు పెట్టు! ఎముకలు బాగా మగ్గనివ్వు!
11 ௧௧ பின்பு கொப்பரை காய்ந்து, அதின் கழிவு வெந்து, அதற்குள் இருக்கிற அதின் அழுக்கு உருகி, அதின் நுரை நீங்கும்படி அதை வெறுமையாகத் தழலின்மேல் வை.
౧౧తరువాత ఖాళీ గిన్నె పొయ్యి మీద పెట్టు. అప్పుడు దానికున్న అశుద్ధం, మడ్డీ కరిగిపోతాయి. అది వేడై ఆ కంచును కాల్చే వరకూ ఆ గిన్నె పొయ్యి మీదే ఉంచు.
12 ௧௨ அது மகா வருத்தத்தை உண்டாக்கியும், அதின் அதிகமான நுரை அதை விட்டு நீங்கவில்லை; அதின் நுரை நெருப்புக்கு உள்ளாகவேண்டியது.
౧౨అలసట పుట్టే వరకూ ఇంతగా శ్రమించినా, అగ్నిలో కాల్చినా, దానిలో నుంచి ఆ తుప్పు పోలేదు.
13 ௧௩ உன்னுடைய அசுத்தத்துடன் முறைகேடும் இருக்கிறது; நான் உன்னைச் சுத்திகரித்தும், நீ சுத்தமாகாததினால், இனி என்னுடைய கடுங்கோபம் உன்னில் தணிந்துமுடியும் வரை உன்னுடைய அசுத்தம் நீங்கிச் சுத்திகரிக்கப்படமாட்டாய்.
౧౩నీ సిగ్గుమాలిన ప్రవర్తన నీ అపవిత్రతలో ఉంది. నిన్ను శుద్ధి చెయ్యడానికి నేను పూనుకున్నా, నువ్వు శుద్ధి కాలేదు. నీపై నా క్రోధం తీర్చుకునే వరకూ నువ్వు శుద్ధి కావు.
14 ௧௪ யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இது நிறைவேறும், நான் இதைச் செய்வேன்; நான் பின்வாங்குவதும் தப்பவிடுவதும் மனஸ்தாபப்படுவதும் இல்லை; உன்னுடைய வழிகளுக்கும் உன்னுடைய செய்கைகளுக்குத்தகுந்தபடி உன்னை நியாயந்தீர்ப்பார்களென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
౧౪యెహోవానైన నేను ప్రకటించాను. అది జరుగుతుంది. నేనే దాన్ని నెరవేరుస్తాను. నేను వెనుకాడను, కనికరించను. నీ ప్రవర్తనను బట్టి, నీ క్రియలనుబట్టి నీకు శిక్ష ఉంటుంది. ఇదే యెహోవా వాక్కు.”
15 ௧௫ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
౧౫యెహోవా వాక్కు నాకు వచ్చి ఇలా అన్నాడు,
16 ௧௬ மனிதகுமாரனே, இதோ, நான் உன்னுடைய கண்களுக்கு விருப்பமானவளை ஒரே அடியினாலே உன்னைவிட்டு எடுத்துக்கொள்ளுவேன்; ஆனாலும் நீ புலம்பாமலும் அழாமலும் கண்ணீர்விடாமலும் இரு.
౧౬“నరపుత్రుడా, చూడు! నీ కళ్ళకు ఇష్టమైన దాన్ని నీ నుంచి ఒక్క తెగులు మూలంగా తీసేస్తాను. నువ్వు సంతాప పడవద్దు. కన్నీరు కార్చ వద్దు.
17 ௧௭ அலறாமல் பெருமூச்சு விடு, துக்கம் கொண்டாடவேண்டாம்; உன்னுடைய தலைப்பாகையை உன்னுடைய தலையிலே கட்டி, உன்னுடைய காலணியை உன்னுடைய பாதங்களில் அணிந்துகொள்; உன்னுடைய தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இரு என்றார்.
౧౭నువ్వు మౌనంగా మూలగాలి. చనిపోయిన వాళ్లకు అంత్యక్రియలు చెయ్యొద్దు. తలపాగా కట్టుకుని చెప్పులు వేసుకో. నీ గడ్డం దాచుకోవద్దు, భార్యను కోల్పోయిన పురుషుని ఆహారం తినొద్దు.”
18 ௧௮ விடியற்காலத்தில் நான் மக்களுடன் பேசினேன்; அன்று சாயங்காலத்தில் என்னுடைய மனைவி இறந்துபோனாள்; எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன்.
౧౮ఉదయం ప్రజలకు నేను ప్రకటించాను. సాయంత్రం నా భార్య చనిపోగా నాకు ఆజ్ఞాపించినట్టు మరుసటి ఉదయాన నేను చేశాను.
19 ௧௯ அப்பொழுது மக்கள் என்னை நோக்கி: நீர் செய்கிறவைகள் எங்களுக்கு எதற்கு அடையாளம் என்பதை எங்களுக்குத் தெரிவிக்கமாட்டீரா என்று கேட்டார்கள்.
౧౯ప్రజలు నన్ను “నువ్వు చేస్తున్నవాటి అర్థం మాకు చెప్పవా?” అని అడిగారు.
20 ௨0 நான் அவர்களுக்கு மறுமொழியாக: யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
౨౦కాబట్టి నేను వాళ్ళతో “యెహోవా వాక్కు నాకు ప్రత్యక్షమై ఇలా చెప్పాడు,
21 ௨௧ நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், இதோ, உங்களுடைய பலத்தின் முக்கியமும் உங்களுடைய கண்களின் விருப்பமும் உங்களுடைய ஆத்துமாவின் வாஞ்சையுமாகிய என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை நான் பரிசுத்தக்குலைச்சலாக்குகிறேன்; நீங்கள் விட்டுவந்த உங்களுடைய மகன்களும் உங்களுடைய மகள்களும் வாளால் விழுவார்கள்.
౨౧ఇశ్రాయేలీయులకు నువ్వు ఈ విధంగా చెప్పు, చూడు! ప్రభువైన యెహోవా చెప్పేదేమంటే, మీ బలంలో మీకున్న అతిశయం, మీ నేత్రాశలు, మీ మనస్సులో మీకున్న వాంఛలు నా పవిత్ర ప్రాంగణాన్ని అపవిత్రం చేస్తున్నాయి! కాబట్టి, మీరు వెనుక విడిచిన మీ కొడుకులూ, కూతుళ్ళూ కత్తిచేత కూలిపోతారు.
22 ௨௨ அப்பொழுது நான் செய்ததுபோல நீங்களும் செய்வீர்கள்; தாடியை மூடாமலும் துக்கங்கொண்டாடுகிறவர்களின் உணவை சாப்பிடாமலும் இருப்பீர்கள்.
౨౨అప్పుడు నేను చేసినట్టే మీరూ చేస్తారు. మీ గడ్డాలు కప్పుకోరు. సంతాపంలో ఉన్న పురుషుల ఆహారం తినరు!
23 ௨௩ உங்களுடைய தலைப்பாகைகள் உங்களுடைய தலைகளிலும், உங்களுடைய காலணிகள் உங்களுடைய கால்களிலும் இருக்கும்; நீங்கள் புலம்பாமலும் அழாமலும் இருந்து, உங்களுடைய அக்கிரமங்களில் வாடிப்போய், ஒருவரையொருவர் பார்த்துத் தவிப்பீர்கள்.
౨౩మీ తలపాగాలు మీ తలలపై ఉంటాయి. మీ చెప్పులు మీ కాళ్ళకు ఉంటాయి. మీరు సంతాపపడరు, కన్నీరు కార్చరు. ఒకడినొకరు చూసి మూలుగుతూ, మీరు చేసిన దోషాల కారణంగా క్షీణించిపోతారు.
24 ௨௪ அப்படியே எசேக்கியேல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்று சொன்னார் என்றேன்.
౨౪కాబట్టి, యెహెజ్కేలు మీకు సూచనగా ఉంటాడు. అతడు చేసిన ప్రకారం మీరూ చేస్తారు. అప్పుడు నేను ప్రభువైన యెహోవానని మీరు తెలుసుకుంటారు.”
25 ௨௫ பின்னும் மனிதகுமாரனே, நான் எந்த நாளிலே அவர்களுடைய பலத்தையும், அவர்களுடைய அலங்காரத்தின் மகிழ்ச்சியையும், அவர்களுடைய கண்களின் விருப்பத்தையும், அவர்களுடைய ஆத்துமாவின் விசேஷித்த வாஞ்சையையும், அவர்களுடைய மகன்களையும், அவர்களுடைய மகள்களையும் அவர்களைவிட்டு எடுத்துக்கொள்ளுகிறேனோ,
౨౫“కాని, నరపుత్రుడా, వాళ్ళ ఆనందాన్నీ, వాళ్ళ అతిశయాన్నీ, వాళ్ళ కళ్ళకు ఇష్టమైనదాన్నీ, వాళ్ళ కొడుకులనూ, వాళ్ళ కూతుళ్ళనూ నేను బలవంతంగా పట్టుకున్న రోజు నీకు సమాచారం తెలియజేయడానికి, తప్పించుకుని వచ్చిన వాడొకడు నీదగ్గరికి వస్తాడు.
26 ௨௬ அந்த நாளிலேதானே தப்பிவந்த ஒருவன் உன்னிடத்தில் வந்து உன்னுடைய காதுகள் கேட்கச் சொல்லுவான் அல்லவோ?
౨౬ఆ రోజున నువ్వింక మౌనంగా ఉండకుండాా, తప్పించుకుని వచ్చిన వాడితో నోరు తెరిచి స్పష్టంగా మాట్లాడతావు,
27 ௨௭ அந்த நாளிலேதானே உன்னுடைய வாய் திறக்கப்பட்டு, நீ தப்பிவந்தவனுடன் பேசுவாய்; இனி மவுனமாக இருக்கமாட்டாய்; இப்படி நீ அவர்களுக்கு அடையாளமாக இருப்பாய்; நான் யெகோவா என்று அப்பொழுது அறிந்துகொள்வார்கள் என்றார்.
౨౭నేను యెహోవానై ఉన్నానని వాళ్ళు తెలుసుకునేలా నువ్వు వాళ్లకు సూచనగా ఉంటావు.”