< எசேக்கியேல் 23 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2 மனிதகுமாரனே, ஒரே தாயின் மகள்களாகிய இரண்டு பெண்கள் இருந்தார்கள்.
“হে মানবসন্তান, দুজন স্ত্রীলোক ছিল যারা একই মায়ের মেয়ে।
3 அவர்கள் எகிப்திலே விபசாரம் செய்தார்கள்; தங்களுடைய வாலிபத்திலே விபசாரம் செய்தார்கள்; அங்கே அவர்களுடைய மார்பகங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் முலைக்காம்புகள் தொடப்பட்டது.
যৌবনকাল থেকেই তারা মিশরে গণিকা হয়েছিল। সেই দেশে তাদের বুক ধরে সোহাগ করা হত এবং তাদের কুমারী স্তন টিপত।
4 அவர்களில் மூத்தவளின் பெயர் அகோலாள், அவளுடைய தங்கையின் பெயர் அகோலிபாள்; அவர்கள் என்னுடையவர்களாகி, மகன்களையும் மகள்களையும் பெற்றார்கள்; இவைகளே அவர்களுடைய பெயர்கள்; அகோலாள் என்பதற்குச் சமாரியா என்றும், அகோலிபாள் என்பதற்கு எருசலேம் என்றும் பொருளாகும்.
তাদের মধ্যে বড়টির নাম অহলা ও তার বোনের নাম ছিল অহলীবা। তারা আমার হল এবং ছেলেমেয়েদের জন্ম দিল। অহলা হল শমরিয়া এবং অহলীবা হল জেরুশালেম।
5 அகோலாள் என்னுடையவளாக இருக்கும்போது விபசாரியானாள்.
“অহলা আমার থাকাতেই ব্যভিচারে লিপ্ত ছিল; এবং তার প্রেমিকদের প্রতি তার কামনা ছিল, আসিরীয়—সৈন্য
6 சிவப்புகலந்த நீலநிற ஆடை அணிந்த தலைவர்களும், அதிபதிகளும், சௌந்தரிய வாலிபர்களும், குதிரைகளின்மேல் ஏறுகிற வீரர்களுமாக இருந்த அருகாமையின் தேசத்தாராகிய அசீரியர்கள் என்கிற தன்னுடைய நண்பர்கள்மேல் அவள் ஆசைவைத்து,
পরনে নীল কাপড়, শাসনকর্তা ও সেনাপতি, সকলেই সুন্দর যুবক এবং ঘোড়াসওয়ার।
7 அசீரியர்களில் தலைசிறந்தவர்களான அனைவரோடும், தான் ஆசைவைத்த அனைவரோடும் தன்னுடைய விபசாரத்தை நடப்பித்து, அவர்களுடைய அசுத்தமான எல்லா சிலைகளாலும் தீட்டுப்பட்டுப்போனாள்.
সে অভিজাত আসিরীয়দের কাছে নিজেকে বেশ্যারূপে দান করেছিল এবং যাদের সে কামনা করত তাদের সমস্ত দেবতা দ্বারা নিজেকে অশুচি করেছিল।
8 தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள்.
সে মিশরে যে বেশ্যাবৃত্তি শুরু করেছিল তা ত্যাগ করেনি, যখন তার যৌবনকালে পুরুষেরা তার কাছে শুত, তার কুমারী স্তন টিপত এবং তাদের কামনা তার উপর ঢেলে দিত।
9 ஆகையால் அவளுடைய சிநேகிதர்களின் கையிலே, அவள் ஆசைகொண்டிருந்த அசீரியர்களின் கையிலே, நான் அவளை ஒப்புக்கொடுத்தேன்.
“সেইজন্য আমি তাকে তার প্রেমিকদের হাতে ছেড়ে দিলাম, সেই আসিরীয়দের, যাদের সে কামনা করত।
10 ௧0 அவர்கள் அவளை நிர்வாணமாக்கினார்கள்; அவளுடைய மகன்களையும் அவளுடைய மகள்களையும் சிறைபிடித்து, அவளையோ வாளினால் கொன்றுபோட்டார்கள்; அப்படியே அவளிடத்தில் தண்டனைகள் செய்யப்பட்டபடியால் பெண்களுக்குள் அவமதிக்கப்பட்டாள்.
তারা তাকে উলঙ্গ করে, তার ছেলেমেয়েদের কেড়ে নিয়ে তরোয়াল দিয়ে তাকে মেরে ফেলল। সে স্ত্রীলোকদের আলোচনার বিষয় হল, কারণ তাকে শাস্তি দেওয়া হয়েছিল।
11 ௧௧ அவளுடைய தங்கையாகிய அகோலிபாள் இதைக் கண்டும், தன்னுடைய மோகவிகாரத்தில் அவளைவிட கெட்டவளானாள்; தன்னுடைய சகோதரியின் விபசாரங்களிலும் தன்னுடைய விபசாரங்கள் அதிகமானது.
“তার বোন অহলীবা এসব দেখেছিল, তবুও তার কামনা এবং বেশ্যাবৃত্তির কারণে সে তার বোনের চেয়ে আরও বেশি চরিত্রহীন ছিল।
12 ௧௨ மகா அலங்கார உடுப்புள்ள தலைவர்களும், அதிபதிகளும், குதிரை வீரரும், அழகுமுள்ள வாலிபர்களுமான அருகிலுள்ள தேசத்தாராகிய அசீரியர்களின்மேல் ஆசைக்கொண்டாள்.
তারও আসিরীয়—শাসনকর্তা ও সেনাপতি, সম্পূর্ণ পোশাকে যোদ্ধা, ঘোড়াসওয়ার, সকল সুন্দর যুবকদের প্রতি কামনা ছিল।
13 ௧௩ அவளும் அசுத்தமானாள் என்றும், அவர்கள் இருவரும் ஒரே வழியில் போனார்கள் என்றும் கண்டேன்.
আমি দেখলাম সেও নিজেকে অশুচি করল; দুজনই একই পথে গেল।
14 ௧௪ அவள் தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்தாள்; சுவரில் சிவப்பு நிறத்தால் வரையப்பட்ட கல்தேய ஆண்களின் உருவங்களைக் கண்டாள்.
“কিন্তু সে তার বেশ্যাবৃত্তি আরও বাড়াল। সে দেয়ালের উপর লাল রংয়ে আঁকা কলদীয় পুরুষদের ছবি দেখত,
15 ௧௫ அவர்கள் எல்லோரும் தங்களுடைய பிறப்பிடமான கல்தேயாவில் உள்ள பாபிலோனியர்களைப் போல தங்களுடைய இடுப்பில் வார்க்கச்சை கட்டினவர்களும், தங்களுடைய தலைகளில் வண்ணம் தீட்டப்பட்ட பெரிய தலைப்பாகைகளை அணிந்தவர்களும், பார்வைக்கு படைத்தலைவர்களைப்போல தோற்றமுள்ளவர்களாக இருந்தார்கள்.
তাদের কোমর বাঁধনি এবং মাথায় উড়ন্ত পাগড়ি; তারা সবাই দেখতে ব্যাবিলীয় রথের সেনাপতিদের মতো, যারা কলদীয় দেশের অধিবাসী।
16 ௧௬ அவளுடைய கண்கள் அவர்களைப் பார்த்தவுடனே, அவள் அவர்கள்மேல் ஆசைவைத்து, கல்தேயாவுக்கு அவர்கள் அருகிலே தூதுவர்களை அனுப்பினாள்.
তাদের দেখামাত্র তাদের প্রতি তার কামনা জাগত, এবং কলদীয় দেশে তাদের কাছে দূত পাঠাত।
17 ௧௭ அப்பொழுது பாபிலோனியர்கள் அவள் அருகிலே வந்து காமத்திற்கு, தங்களுடைய விபசாரத்தால் அவளைத் தீட்டுப்படுத்தினார்கள்; அவள் இவர்களால் தீட்டுப்பட்டுப்போனபின்பு, அவளுடைய மனது அவர்களை விட்டுப் பிரிந்தது.
তারপর ব্যাবিলীয়রা তার কাছে এসে তার সঙ্গে বিছানায় যেত এবং ব্যভিচার করে তাকে অশুচি করত। তাদের দ্বারা অশুচি হবার পর সে তাদের ঘৃণা করতে লাগল।
18 ௧௮ இவ்விதமாக அவள் தன்னுடைய விபசாரங்களை வெளிப்படுத்தி, தன்னை நிர்வாணமாக்கினபோது, என்னுடைய மனம் அவளுடைய சகோதரியை விட்டுப் பிரிந்ததுபோல அவளையும் விட்டுப் பிரிந்தது.
সে খোলাখুলিভাবে যখন তার বেশ্যার কাজ চালাতে লাগল এবং তার উলঙ্গতা প্রকাশ করল তখন আমি তাকে ঘৃণা করলাম, যেমন আমি তার বোনকে ঘৃণা করেছিলাম।
19 ௧௯ அவள் எகிப்துதேசத்திலே விபசாரம்செய்த தன்னுடைய வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன்னுடைய விபசாரங்களில் அதிகரித்துப்போனாள்.
যৌবনে সে যখন মিশরে গণিকা ছিল তখনকার দিনগুলির কথা মনে করে সে আরও বেশি ব্যভিচার করতে লাগল।
20 ௨0 கழுதையின் உறுப்புப்போல உறுப்பும், குதிரையின் விந்தைப்போன்ற விந்துள்ள அவர்களுக்கு அவள் வைப்பாட்டியாக இருக்கும்படி அவர்கள்மேல் ஆசைவைத்தாள்.
সেখানে সে তার প্রেমিকদের সাথে এমন যৌনাচার করত যাদের যৌনাঙ্গগুলি ছিল গাধার মতো ও নিঃসরণ ছিল ঘোড়ার মতো।
21 ௨௧ எகிப்தியர்களால் உன்னுடைய கன்னிமையின் மார்பகங்களாகிய முலைக்காம்புகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன்னுடைய வாலிபத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.
তোমার যৌবনকালে মিশরে যেমন তোমার বুক ধরে আদর করত এবং টিপত, তুমি আবার সেই যৌবনকালীন ব্যভিচারের আকাঙ্ক্ষা করছ।
22 ௨௨ ஆகையால், அகோலிபாளே, யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, உன்னுடைய மனது விட்டுப்பிரிந்த உன்னை நேசித்தவர்களை நான் உனக்கு விரோதமாக எழுப்பி, உனக்கு விரோதமாக அவர்களைச் சுற்றிலும் வரச்செய்வேன்.
“এই জন্য, অহলীবা, সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তোমার যেসব প্রেমিকদের তুমি ঘৃণা করেছ, আমি তাদেরই তোমার বিরুদ্ধে উত্তেজিত করব এবং চারিদিক থেকে আমি তাদের তোমার বিরুদ্ধে নিয়ে আসব,
23 ௨௩ அழகுள்ள வாலிபர்களும், தலைவர்களும், அதிபதிகளும், குதிரைகள்மேல் ஏறுகிற வீரர்களுமாகிய பெயர்பெற்ற பிரபுக்களான பாபிலோனியர்களையும், கல்தேயர்கள் எல்லோரையும், பேகோடு, சோவா, கோவா என்கிற தேசங்களின் மனிதர்களையும் அவர்களுடன் அசீரியர்கள் எல்லோரையும் வரச்செய்வேன்.
তারা হল ব্যাবিলীয়রা এবং কলদীয়েরা, পকোদ, শোয়া ও কোয়ার লোকেরা, এবং সমস্ত আসিরীয়রা, সুন্দর যুবকেরা, সকলেই শাসনকর্তা ও সেনাপতি, রথের কর্মচারী, উঁচু পদের লোক এবং ঘোড়াসওয়ার।
24 ௨௪ அவர்கள் வண்டிகளுடனும், இரதங்களுடனும், இயந்திரங்களுடனும், மக்கள்கூட்டத்துடனும், கேடகங்களும், சிரியகேடகங்களும், தலைச்சீராக்களும் அணிந்தவர்களாக, உனக்கு விரோதமாக வந்து, உன்னை சுற்றிலும் முகாமிடுவார்கள்; அவர்களுக்கு முன்னே நான் நியாயத்தை விளங்கச்செய்வேன்; அவர்கள் தங்களுடைய நியாயங்களின்படி உன்னை நியாயந்தீர்ப்பார்கள்.
তারা তোমার বিরুদ্ধে অস্ত্র, রথ ও মালবাহী শকট এবং লোকজনের মস্ত বড়ো একটি দল নিয়ে আসবে; তারা ছোটো ও বড়ো ঢাল নিয়ে মাথা ঢাকার টুপি পরে তোমাকে ঘেরাও করবে। শাস্তি পাবার জন্য আমি তোমাকে তাদের হাতে তুলে দেব এবং তারা তাদের বিচারের নিয়ম অনুসারে তোমাকে শাস্তি দেবে।
25 ௨௫ உனக்கு விரோதமாக என்னுடைய எரிச்சலை வெளிப்படுத்துவேன்; அவர்கள் உன்னை கடுங்கோபமாக நடத்தி, உன்னுடைய மூக்கையும் உன்னுடைய காதுகளையும் அறுத்துப்போடுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் வாளால் வெட்டப்பட்டுபோவார்கள்; அவர்கள் உன்னுடைய மகன்களையும் உன்னுடைய மகள்களையும் பிடித்துக்கொள்ளுவார்கள்; உன்னில் மீதியாக இருப்பவர்கள் நெருப்புக்கு இரையாவார்கள்.
আমার অন্তর্জ্বালা আমি তোমার বিরুদ্ধেই কাজে লাগাব বলে তারা তাদের প্রকোপ তোমার প্রতি ব্যবহার করবে। তারা তোমার নাক ও কান কেটে দেবে এবং তোমার বাকি লোকদের তরোয়াল দিয়ে মেরে ফেলবে। তারা তোমার ছেলেমেয়েদের নিয়ে যাবে, আর তোমার বাকি লোকেরা আগুনে পুড়ে মরবে।
26 ௨௬ அவர்கள் உன்னுடைய ஆடைகளை கழற்றி, உன்னுடைய அழகான ஆபரணங்களைப் பறித்துக்கொள்ளுவார்கள்.
তারা তোমাকে বিবস্ত্র করবে এবং তোমার সুন্দর গহনা নিয়ে নেবে।
27 ௨௭ இப்படியாக உன்னுடைய முறைகேட்டையும், நீ எகிப்துதேசத்தில் துவங்கின உன்னுடைய விபசாரத்தையும் ஒழியச்செய்வேன்; நீ இனி அவர்களை பார்க்க உன்னுடைய கண்களை ஏறெடுக்காமலும், எகிப்தை நினைக்காமலும் இருப்பாய்.
যে ব্যভিচার ও গণিকাবৃত্তি তুমি মিশরে শুরু করেছিলে তা আমি এইভাবে বন্ধ করে দেব। তাতে তুমি এই জিনিসগুলির প্রতি আকৃষ্ট হবে না অথবা মিশরকে আর মনেও রাখবে না।
28 ௨௮ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீ பகைக்கிறவர்களின் கையிலும், உன்னுடைய மனம்விட்டுப் பிரிந்தவர்களின் கையிலும் நான் உன்னை ஒப்புக்கொடுப்பேன்.
“কেননা সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি যাদের ঘৃণা করো, যাদের প্রতি বিরক্ত হয়ে তুমি তাড়িয়ে দিয়েছ আমি তোমাকে তাদের হাতেই তুলে দেব।
29 ௨௯ அவர்கள் உன்னை வெறுப்பாக நடத்தி, உன்னுடைய உழைப்பின் பலனையெல்லாம் எடுத்துக்கொண்டு, உன்னை முழுவதும் நிர்வாணமாக்கிவிடுவார்கள்; அப்படியே உன்னுடைய வெட்கக்கேடும் உன்னுடைய முறைகேடுமான உன்னுடைய விபசாரத்தின் நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்.
তারা তোমার প্রতি ঘৃণার সঙ্গে ব্যবহার করবে এবং তুমি যা কিছু উপার্জন করেছ তার সবকিছু নিয়ে নেবে। তারা তোমাকে উলঙ্গিনী ও বিবস্ত্রা করে ছেড়ে চলে যাবে, এবং তোমার গণিকাবৃত্তির লজ্জা প্রকাশ পাবে। তোমার ব্যভিচার ও কুকর্মের জন্য
30 ௩0 நீ அந்நியதேசங்களைப் பின்தொடர்ந்து, அவர்களுடைய அசுத்தமான சிலைகளால் உன்னைத் தீட்டுப்படுத்திக்கொண்ட உன்னுடைய விபசாரத்தினால் இவைகள் உனக்குச் செய்யப்படும்.
এই সমস্ত তোমার উপরে পড়েছে, কারণ জাতিগণের সঙ্গে ব্যভিচার করেছ এবং তাদের প্রতিমাগুলি দিয়ে নিজেকে অশুচি করেছ।
31 ௩௧ உன்னுடைய சகோதரியின் வழியிலே நீ நடந்தாய்; ஆகையால் அவளுடைய பாத்திரத்தை உன்னுடைய கையிலே கொடுப்பேன்.
তুমি তোমার বোনের পথ অনুসরণ করেছ; এই জন্য আমি তার পানপাত্র তোমার হাতে দেব।
32 ௩௨ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீ உன்னுடைய சகோதரியினுடைய ஆழமும் அகலமுமானதும் நிறைய வார்க்கப்பட்டதுமான பாத்திரத்தைக் குடித்து, நகைப்பும் பரியாசமுமாவாய்.
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, “তুমি তোমার বোনের পাত্রে পান করবে, সেই পাত্র বড়ো ও গভীর; এটি অপমান এবং উপহাস নিয়ে আসবে, কারণ এতে অনেক ধরে।
33 ௩௩ சமாரியா என்னும் உன்னுடைய சகோதரியினுடைய பாத்திரமாக இருக்கிற துயரமும் அழிவும் என்கிற பாத்திரத்தால் வெறியினாலும் சஞ்சலத்தினாலும் நிறையப்படுவாய்.
তুমি মাতলামিতে ও দুঃখে পূর্ণ হবে, ধ্বংসের ও নির্জনতার পানপাত্র, তোমার বোন শমরিয়ার পানপাত্র।
34 ௩௪ நீ அதில் இருக்கிறதைக் குடித்து, உறிஞ்சி, அதின் ஓடுகளை உடைத்துப்போட்டு, உன்னுடைய மார்பகங்களைக் கீறிக்கொள்வாய்; நான் இதைச் சொன்னேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
তুমি তাতে পান করবে এবং চেটেপুটে পান করবে; তা তুমি ভেঙে চুরমার করবে এবং নিজের বুক ছিঁড়ে ফেলবে। সার্বভৌম সদাপ্রভু বলেন, আমি বলছি।
35 ௩௫ ஆகையால், நீ என்னை மறந்து, என்னை உனக்கு வெளியே தள்ளிவிட்டதற்காக, நீ உன்னுடைய முறைகேட்டையும் உன்னுடைய விபசாரங்களையும் சுமப்பாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
“সুতরাং সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন যেহেতু তুমি আমাকে ভুলে গিয়েছ এবং আমার দিকে পিঠ ফিরিয়েছ বলে তোমাকে তোমার ঘৃণ্য কাজের ও বেশ্যাবৃত্তির ফলভোগ করতে হবে।”
36 ௩௬ பின்னும் யெகோவா என்னை நோக்கி: மனிதகுமாரனே. நீ அகோலாளையும் அகோலிபாளையும் குறித்து வழக்காட மனதிருந்தால், அவர்களுடைய அருவருப்புகளை அவர்களுக்குத் எடுத்துக்காட்டு.
সদাপ্রভু আমাকে বললেন “হে মানবসন্তান, তুমি কি অহলা এবং অহলীবার বিচার করবে? তাহলে তাদের ঘৃণ্য কাজের বিষয় তাদের সম্মুখীন হও,
37 ௩௭ அவர்கள் விபசாரம்செய்தார்கள்; அவர்கள் கைகளில் இரத்தமும் இருக்கிறது; அவர்கள் தங்களுடைய அசுத்தமான சிலைகளுடன் விபசாரம்செய்து, தாங்கள் எனக்குப்பெற்ற தங்களுடைய பிள்ளைகளையும் அவைகளுக்கு இரையாகத் தீயில் பலியிட்டார்கள்.
কারণ তারা ব্যভিচার করেছে এবং তাদের হাতে রক্ত রয়েছে। তাদের প্রতিমাগুলির সঙ্গে ব্যভিচার করেছে; যে সন্তানদের আমার জন্য জন্ম দিয়েছিলে তাদের প্রতিমাদের খাদ্যের জন্য উৎসর্গ করেছে।
38 ௩௮ அன்றியும் அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தை அந்தநாளிலேதானே தீட்டுப்படுத்தி, என்னுடைய ஓய்வு நாட்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்கள்.
তারা এই কাজ আমার প্রতিও করেছে সেই একই সময় তারা আমার পবিত্রস্থান অশুচি করেছে এবং আমার সাব্বাথের পবিত্রতা রক্ষা করেনি।
39 ௩௯ அவர்கள் தங்களுடைய பிள்ளைகளைத் தங்களுடைய அசுத்தமான சிலைகளுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என்னுடைய பரிசுத்த ஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்த நாளில்தானே அதற்குள் நுழைந்தார்கள்; இதோ, என்னுடைய ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்.
যেদিন তারা তাদের প্রতিমাদের কাছে তাদের সন্তানদের উৎসর্গ করেছিল সেদিনই তারা আমার পবিত্রস্থানে গিয়ে তা অপবিত্র করেছে। তারা আমার গৃহের মধ্যেই এই কাজ করেছে।
40 ௪0 இதுவும் இல்லாமல், தூரத்திலுள்ள ஆண்களிடத்திற்குத் தூது அனுப்பி, அவர்களை வரவழைத்தார்கள், அவர்கள் வந்தார்கள்; அவர்களுக்கென்று நீ குளித்து, உன்னுடைய கண்களில் மையிட்டுக்கொண்டு ஆபரணங்களால் உன்னை அலங்கரித்து,
“তারা দূর থেকে পুরুষদের নিয়ে আসার জন্য সংবাদদাতাদের পাঠিয়েছিল, আর যখন তারা এল তোমরা তাদের জন্য স্নান করেছিলে, চোখে কাজল দিয়েছিলে এবং তোমাদের অলংকার পরেছিলে।
41 ௪௧ சிறந்த கட்டிலின்மேல் உட்கார்ந்துகொண்டாய்; அதின் முன்னே ஒரு பீடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது; என்னுடைய தூபவர்க்கத்தையும் என்னுடைய எண்ணெயையும் அதின்மேல் வைத்தாய்.
তোমরা সুন্দর বিছানায় শুয়ে তার সামনে একটি টেবিল রেখে আমারই সুগন্ধি এবং জলপাই তেল তার উপরে রেখেছিলে।
42 ௪௨ அவளிடத்திலே அந்தச் கூட்டத்தின் இரைச்சல் அடங்கின பின்பு, மக்கள் கூட்டமான ஆண்களையும் அழைத்தனுப்பினார்கள்; குடிகாரர்கள் வனாந்திரத்திலிருந்து கொண்டுவரப்பட்டார்கள்; இவர்கள் அவர்களுடைய கைகளில் காப்புகளையும் அவர்களுடைய தலைகளில் அலங்காரமான கிரீடங்களையும் போட்டார்கள்.
“তার চারিদিকে ছিল চিন্তাহীন লোকেদের কোলাহল; উচ্ছৃঙ্খল জনতার সঙ্গে মরুভূমি থেকে মদ্যপায়ীদের আনা হয়েছিল, তারা সেই দুই বোনের হাতে চুড়ি এবং তাদের মাথায় সুন্দর মুকুট পরিয়েছিল।
43 ௪௩ விபசாரங்களில் கிழவியானவளைக் குறித்து அவள் இன்னும் தன்னுடைய விபசாரங்களைச் செய்வாளோ என்றேன்.
তখন ব্যভিচার করে দুর্বল হয়ে যাওয়া এক স্ত্রীলোকের বিষয় আমি বলেছিলাম, ‘এখন লোকেরা গণিকা হিসেবে তার সঙ্গে ব্যবহার করুক, কারণ সে তাই।’
44 ௪௪ விபசாரிகளிடத்திலே போவதுபோல அவளிடத்தில் போனார்கள்; இப்படியாக முறைகேடானவர்களாகிய அகோலாளிடத்திலும் அகோலிபாளிடத்திலும் போனார்கள்.
আর তারা তার সঙ্গে শয়ন করল। একজন গণিকার সঙ্গে যেমন লোকে শয়ন করে, তেমনি করে তারা সেই কামুক স্ত্রীলোক, অহলা ও অহলীবার সঙ্গে শয়ন করেছিল।
45 ௪௫ ஆகையால், விபசாரிகளை நியாயந்தீர்க்கிறபடியாகவும், இரத்தம்சிந்தும் பெண்களை நியாயந்தீர்க்கிறபடியாகவும், நீதிமான்கள் அவர்களை நியாயந்தீர்ப்பார்கள்; அவர்கள் விபசாரிகள், அவர்களுடைய கைகளில் இரத்தம் இருக்கிறது.
কিন্তু ধার্মিক বিচারকেরা ব্যভিচার ও রক্তপাতের পাওনা শাস্তি সেই স্ত্রীলোকদের দেবে, কারণ তারা ব্যভিচারিণী আর তাদের হাতে রক্ত রয়েছে।
46 ௪௬ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு விரோதமாக ஒரு கூட்டத்தை வரச்செய்து, அவர்களை அலைச்சலுக்கும் கொள்ளைக்கும் ஒப்புக்கொடுப்பேன்.
“সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, তুমি তাদের বিরুদ্ধে একদল লোক নিয়ে যাও এবং আতঙ্ক ও লুটের হাতে তাদের তুলে দাও।
47 ௪௭ அந்தக் கூட்டத்தார் அவர்களைக் கல்லெறிந்து, தங்களுடைய வாளால் வெட்டிப்போடுவார்கள்; அவர்களுடைய மகன்களையும் அவர்களுடைய மகள்களையும் கொன்று, அவர்களுடைய வீடுகளை நெருப்பால் சுட்டெரிப்பார்கள்.
সেই জনতা তাদের পাথর ছুঁড়ে মেরে ফেলবে এবং তরোয়াল দিয়ে তাদের টুকরো টুকরো করে কাটবে; তারা তাদের ছেলেদের ও মেয়েদের মেরে ফেলবে এবং তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেবে।
48 ௪௮ இவ்விதமாக எல்லா பெண்களும் புத்தியடைந்து, உங்களுடைய முறைகேடுகளைச் செய்யாதிருக்கும்படி, முறைகேட்டைத் தேசத்தைவிட்டு ஒழியச்செய்வேன்.
“এইভাবে আমি দেশের মধ্যে কুকাজ শেষ করব, যেন সমস্ত স্ত্রীলোকেরা এটাকে সাবধানবাণী হিসেবে নেয় এবং তোমাদের অনুকরণ না করে।
49 ௪௯ உங்களுடைய முறைகேட்டை உங்கள்மேல் சுமத்துவார்கள்; அப்பொழுது நீங்கள் உங்களுடைய அசுத்தமான சிலைகளை வணங்கிய பாவங்களைச் சுமந்து, நான் யெகோவாகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள்.
তোমাদের কুকাজের ফল তোমাদেরই ভোগ করতে হবে এবং প্রতিমাপুজোর পাপের ফল বহন করতে হবে। তখন তোমরা জানবে যে, আমিই সার্বভৌম সদাপ্রভু।”

< எசேக்கியேல் 23 >