< எசேக்கியேல் 22 >
1 ௧ பின்னும் யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко мне глаголя:
2 ௨ இப்போதும் மனிதகுமாரனே, இரத்தம்சிந்தின நகரத்துக்காக நீ வழக்காடுவாயோ? வழக்காட மனதிருந்தால், நீ அதின் அருவருப்புகளையெல்லாம் அதற்குத் தெரியப்படுத்தி,
и ты, сыне человечь, аще судити будеши граду кровей, и яви ему вся беззакония его,
3 ௩ அதை நோக்கி: யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், உன்னுடைய காலம் வரக்கூடியதாக உன்னுடைய நடுவிலே இரத்தம்சிந்துகிறதும், உன்னைத் தீட்டுப்படுத்தத்தக்கதாக உனக்கே விரோதமாக அசுத்தமான சிலைகளை உண்டாக்கின நகரமே,
и речеши: сия глаголет Адонаи Господь: о, граде проливаяй кровь среде себе, еже приити времени его, и творяй кумиры на себе, еже осквернитися самому:
4 ௪ நீ சிந்தின உன்னுடைய இரத்தத்தினால் நீ குற்றம்சுமந்ததாகி நீ உண்டாக்கின உன்னுடைய அசுத்தமான சிலைகளால் நீ தீட்டுப்பட்டு, உன்னுடைய நாட்களை நெருங்கச்செய்து, உன்னுடைய வருடங்களை நிறைவேற்றினாய்; ஆகையால் நான் உன்னைப் அந்நியமக்களுக்கு நிந்தையாகவும், தேசங்களுக்கெல்லாம் பரியாசமாகவும் வைப்பேன்.
в крови их, юже излиял еси, согрешил еси, и в кумирех твоих, яже творил, осквернился еси, и сократил еси дни твоя, и привед время лет твоих: сего ради дах тя на укоризну языком и на поругание всем странам,
5 ௫ உனக்கு அருகிலும் உனக்குத் தூரமுமான தேசங்களின் மனிதர்கள் நீ பெயர்கெட்டதென்றும், அமளி பெருத்ததென்றும் உன்னைப் பரியாசம்செய்வார்கள்.
близ тебе и далече от тебе сущым, и поругаются тебе и возопиют на тя: о, нечистый, пресловутый и мног во беззакониих!
6 ௬ இதோ, இஸ்ரவேலின் அதிபதிகளில் அவரவர் தங்களுடைய புயபலத்திற்குத் தக்கதாக, உன்னில் இரத்தம் சிந்தினார்கள்.
Се, старейшины дому Израилева, кийждо ко своим ужикам смесишася в тебе, яко да пролиют кровь:
7 ௭ உன்னிலுள்ள தாய் தகப்பனை அற்பமாக நினைத்தார்கள்; உன்னுடைய நடுவில் பரதேசிக்கு இடையூறு செய்தார்கள்; உனக்குள் திக்கற்றவனையும் விதவையையும் ஒடுக்கினார்கள்.
отцу и матери злословяху в тебе и ко пришелцу обращахуся неправдами в тебе: сироту и вдовицу преобидяху в тебе:
8 ௮ நீ என்னுடைய பரிசுத்த பொருட்களை அசட்டைசெய்து, என்னுடைய ஓய்வு நாட்களை பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்.
и святая Моя уничижаху и субботы Моя оскверняху в тебе:
9 ௯ இரத்தம்சிந்தும்படி பொய் பேசுகிறவர்கள் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; மலைகளின்மேல் சாப்பிடுகிறவர்களும் உன்னிடத்தில் இருக்கிறார்கள்; முறைகேடு செய்கிறவர்கள் உன்னுடைய நடுவில் இருக்கிறார்கள்.
мужие разбойницы беша в тебе, яко да пролиют в тебе кровь, и на горах ядяху в тебе и скверны творяху в тебе:
10 ௧0 தகப்பனை நிர்வாணமாக்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; தீட்டுப்பட்ட பெண்ணை பலவந்தப்படுத்தினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்.
стыд отчий открыша в тебе, и в нечистоте седящую обругаша в тебе:
11 ௧௧ உன்னில் ஒருவன் தன்னுடைய அயலானுடைய மனைவியுடன் அருவருப்பானதைச் செய்கிறான்; வேறொருவன் முறைகேடாகத் தன்னுடைய மருமகளைத் தீட்டுப்படுத்துகிறான்; வேறொருவன் தன்னுடைய தகப்பனுக்குப் பிறந்த தன்னுடைய சகோதரியைப் பலவந்தம்செய்கிறான்.
кийждо на жену подруга своего беззаконноваша, и кийждо невестку свою оскверняше в нечестии, и кийждо сестру свою, дщерь отца своего, обругаваше в тебе:
12 ௧௨ இரத்தம்சிந்தும்படி லஞ்சம் வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் அதிக வட்டியும் வாங்கி, பொருளாசையினால் உன்னுடைய அயலானுக்கு இடையூறு செய்து, என்னை மறந்துபோனாய் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
мзды взимаху в тебе, яко да пролиют кровь, лихву и избыток взимаху в тебе: и скончал еси скончание злобы твоея яже в насилии, Мене же забыл еси, глаголет Адонаи Господь.
13 ௧௩ இதோ, நீ அநியாயமாகச் சம்பாதித்த பொருளினால், உன்னுடைய நடுவில் நீ சிந்தின இரத்தத்திற்காக நான் கைகொட்டுகிறேன்.
Се убо, ударю рукою Моею о руку Мою на та, яже совершил еси и яже сотворил еси, и на крови твоя бывшыя посреде тебе:
14 ௧௪ நான் உன்னில் நியாயம்செய்யும் நாட்களில் உன்னுடைய இருதயம் தாங்குமோ? அப்பொழுது உன்னுடைய கைகள் திடமாக இருக்குமோ? யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றுவேன்.
аще устоит сердце твое, и аще преодолеют руце твои во днех, в няже Аз творю в тебе? Аз Господь глаголах, и сотворю.
15 ௧௫ நான் உன்னைப் அந்நியஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, உன்னை தேசங்களிலே தூற்றி, உன்னுடைய அசுத்தத்தை உன்னில் ஒழியச்செய்வேன்.
И разсыплю тя во языцех и разсею тя в странах, и оскудеет нечистота твоя из тебе,
16 ௧௬ நீ அந்நியதேசங்களின் கண்களுக்கு முன்பாகப் பரிசுத்தக்குலைச்சலாக இருந்து, நான் யெகோவா என்று அறிந்துகொள்வாய் என்று சொல் என்றார்.
и владети буду тобою пред очима языков, и познаеши, яко Аз Господь.
17 ௧௭ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко мне глаголя:
18 ௧௮ மனிதகுமாரனே, இஸ்ரவேல் மக்கள் எனக்கு பயனற்று போனார்கள்; அவர்களெல்லோரும் குகையிலுள்ள பித்தளையும் தகரமும் இரும்பும் ஈயமுமாக இருக்கிறார்கள்; அவர்கள் வெள்ளியின் கழிவாகப் போனார்கள்.
сыне человечь, се, быша Мне дом Израилев смешани вси с медию и железом, и со оловом чистым и со свинцем, среде пещи сребро смешено суть.
19 ௧௯ ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்களெல்லாரும் கழிவாகப் போனபடியினால், இதோ, நான் உங்களை எருசலேமுக்குள் சேர்ப்பேன்.
Сего ради рцы: сия глаголет Адонаи Господь: понеже бысте вси во смешение едино, сего ради, се, Аз прииму вас во средину Иерусалима:
20 ௨0 வெள்ளியையும், பித்தளையையும், இரும்பையும், ஈயத்தையும், தகரத்தையும் நெருப்பில் ஊதி உருக்குவதற்காகக் குகைக்குள் சேர்க்கிறதுபோல, நான் என்னுடைய கோபத்தினாலும் என்னுடைய கடுங்கோபத்தினாலும் உங்களைச் சேர்த்துவைத்து உருக்குவேன்.
якоже приемлется сребро и медь, и железо и свинец и олово чистое во средину пещи, еже дунути на ня огню, да слиются, тако прииму вас во гневе Моем и в ярости Моей, и соберу и слию вас,
21 ௨௧ நான் உங்களைக் கூட்டி, என்னுடைய கோபமாகிய நெருப்பை உங்கள்மேல் ஊதுவேன்; அதற்குள்ளே நீங்கள் உருகுவீர்கள்.
и дуну на вы во огни гнева Моего, и слияни будете среде его:
22 ௨௨ குகைக்குள் வெள்ளி உருகுகிறதுபோல, நீங்கள் அதற்குள் உருகுவீர்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் என்னுடைய கடுங்கோபத்தை உங்கள்மேல் ஊற்றிவிட்டேன் என்று அறிந்து கொள்வீர்கள் என்றார்.
якоже сливается сребро среде пещи, тако слиетеся посреде его и познаете, яко Аз Господь излиях ярость Мою на вас.
23 ௨௩ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
И бысть слово Господне ко мне глаголя:
24 ௨௪ மனிதகுமாரனே, நீ தேசத்தைப்பார்த்து: நீ சுத்தம் செய்யப்படாத தேசம், கோபத்தின் காலத்தில் மழை பெய்யாத தேசம் என்று அதற்குச் சொல்லு.
сыне человечь, рцы ему: ты еси земля неодождимая, ниже дождь бысть на тя в день ярости.
25 ௨௫ அதிலுள்ள தீர்க்கதரிசிகள் அதின் நடுவில் கட்டுப்பாடு செய்கிறார்கள்; கெர்ச்சிக்கிற சிங்கம் இரை கவ்வுகிறதுபோல, ஆத்துமாக்களை அவர்கள் விழுங்குகிறார்கள்; செல்வத்தையும் விலையுயர்ந்த பொருள்களையும் வாங்கிக்கொள்ளுகிறார்கள்; அதின் நடுவில் அநேகரை விதவைகளாக்குகிறார்கள்.
Егоже старейшины среде его, яко львы рыкающе, восхищающе восхищения, душы изядающе насилием, богатство и честь приемлюще, и вдовицы твоя умножишася посреде тебе:
26 ௨௬ அதின் ஆசாரியர்கள் என்னுடைய வேதத்திற்கு அநியாயம்செய்து, என்னுடைய பரிசுத்த பொருட்களைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறார்கள்; பரிசுத்தம் உள்ளதற்கும் பரிசுத்தம் இல்லாததற்கும் வித்தியாசம் உண்டாக்காமலும், அசுத்தம் உள்ளதற்கும் அசுத்தம் இல்லாததற்கும் உண்டான வேற்றுமையைக் காண்பிக்காமலும் இருந்து, என்னுடைய ஓய்வுநாட்களுக்குத் தங்களுடைய கண்களை மூடிக்கொள்ளுகிறார்கள்; அவர்கள் நடுவிலே நான் அவமதிக்கப்படுகிறேன்.
и жерцы его отвергошася закона Моего и оскверниша святая Моя: между святым и сквернавым не разлучаху, и между нечистым и чистым не разделяху, и от суббот Моих покрываху очи свои, и оскверняху Мя посреде себе:
27 ௨௭ அதின் நடுவில் இருக்கிற அதின் பிரபுக்கள் இரை கவ்வுகிற ஓநாய்களைப்போல் இருக்கிறார்கள்; அநியாயமாகப் பொருள் சம்பாதிக்கிறதற்கு இரத்தம் சிந்துகிறார்கள், ஆத்துமாக்களைக் கொள்ளையிடுகிறார்கள்.
князи его среде его яко волцы восхищающе похищения, еже пролияти кровь и погубити душы, яко да лихоимством лихоимствуют:
28 ௨௮ அதின் தீர்க்கதரிசிகள் பொய்யானதை பார்த்து, பொய்ச்சாஸ்திரத்தை அவர்களுக்குச் சொல்லி, யெகோவா சொல்லாமலிருந்தும், யெகோவாகிய ஆண்டவர் சொன்னாரென்று சொல்லி, அவர்களுக்குச் சாரமற்ற சாந்தைப் பூசுகிறார்கள்.
и пророцы его помазующии их падут, видящии суетная, волхвующии ложная, глаголюще: сия глаголет Адонаи Господь: а Господь не глагола.
29 ௨௯ தேசத்தின் மக்கள் இடையூறு செய்து, கொள்ளையடித்து, சிறுமையும் எளிமையுமானவனை ஒடுக்கி, அந்நியனை அநியாயமாகத் துன்பப்படுத்துகிறார்கள்.
Людий земли утесняюще неправдою и восхищающе восхищения, нища и убога насильствующе и со пришелцем не живуще судом.
30 ௩0 நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவும் தகுந்த ஒரு மனிதனைத் தேடினேன், ஒருவனையும் காணவில்லை.
И исках от них мужа живуща право и стояща цело пред лицем Моим во время гнева Моего, еже бы не до конца погубити его, и не обретох.
31 ௩௧ ஆகையால், நான் அவர்கள்மேல் என்னுடைய கோபத்தை ஊற்றி, என்னுடைய கடுங்கோபத்தின் நெருப்பால் அவர்களை அழித்து, அவர்களுடைய வழியின் பலனை அவர்கள் தலையின்மேல் சுமத்துவேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்றார்.
И излиях нань ярость Мою во огни гнева Моего, еже скончати я: пути их на главы их дах, глаголет Адонаи Господь.