< எசேக்கியேல் 19 >
1 ௧ நீ இஸ்ரவேல் பிரபுக்களின்பேரில் ஒரு புலம்பல் பாடி,
При това, дигни плач за Израилевите първенци, и речи:
2 ௨ சொல்லவேண்டியது என்னவென்றால்: உன்னுடைய தாய் எப்படிப்பட்டவள்? அவள் ஒரு பெண்சிங்கம், அவள் சிங்கங்களுக்குள்ளே படுத்திருந்து, பாலசிங்கங்களின் நடுவிலே தன்னுடைய குட்டிகளை வளர்த்தாள்.
Що беше майка ти? Лъвица. Лежеше между лъвовете, Хранеше лъвчетата си всред млади лъвове.
3 ௩ தன்னுடைய குட்டிகளில் ஒன்று வளர்ந்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களை அழித்தது.
Тя изхрани едно от лъвчетата си, Което, като стана млад лъв, И се научи да граби лов, ядеше човеци.
4 ௪ அந்நியதேசங்களும் அதின் செய்தியைக் கேட்டார்கள், அது அவர்களுடைய படுகுழியில் அகப்பட்டது; அதைச் சங்கிலிகளினால் கட்டி, எகிப்துதேசத்திற்குக் கொண்டுபோனார்கள்.
И народите чуха за него; Хванат биде в ямата им, И с куки го закараха в Египетската земя.
5 ௫ தாய்ச்சிங்கம் காத்திருந்து, தன்னுடைய நம்பிக்கை பொய்யாகப் போனது என்று கண்டு, அது தன்னுடைய குட்டிகளில் வேறொன்றை எடுத்து, அதை பாலசிங்கமாக வைத்தது.
А тя като видя, че надеждата й изчезна и се изгуби, Взе още едно от лъвчетата си Та направи и него млад лъв.
6 ௬ அது சிங்கங்களுக்குள்ளே வசித்து, பாலசிங்கமாகி, இரைதேடப் பழகி, மனிதர்களைச் சாப்பிட்டது.
И като ходеше между лъвовете Стана млад лъв, Който, когато се научи да граби лов, ядеше човеци.
7 ௭ அவர்களுடைய பாழான அரண்மனைகளில் திரிந்து, அவர்களுடைய பட்டணங்களைப் பாழாக்கியது; அதினுடைய கெர்ச்சிப்பின் சத்தத்திற்கு தேசமும் அதிலுள்ள அனைத்தும் பயந்தது.
Той познаваше палатите им, И запустяваше градовете им; И от гласа на рева му Ужасяваше се земята и това, което я пълнеше.
8 ௮ அப்பொழுது சுற்றிலுள்ள தேசங்கள் அதற்கு எதிராக எழும்பிவந்து, தங்களுடைய வலையை அதின்மேல் வீசினார்கள்; அது அவர்களுடைய படுகுழியிலே அகப்பட்டது.
Тогава се опълчиха против него народите от околните области И простряха върху него мрежите си; Той се хвана в ямата им.
9 ௯ அவர்கள் அதைச் சங்கிலிகளினால் கட்டி, ஒரு கூட்டுக்கு உட்படுத்தி, அதைப் பாபிலோன் ராஜாவினிடம் கொண்டுபோனார்கள்; இனி அதின் சத்தம் இஸ்ரவேலின் மலைகளின்மேல் கேட்கப்படாதபடி அதை கோட்டைகளில் கொண்டுபோய் அடைத்தார்கள்.
И с куки го туриха в решетка Та го закараха при Вавилонския цар; Туриха го в крепост, За да се не чуе вече гласа му По Израилевите планини.
10 ௧0 நீ அமைதியாக இருக்கும்போது உன்னுடைய தாய் தண்ணீர் ஓரமாக நாட்டப்பட்டதும், மிகுதியான நீர்ப்பாய்ச்சலால் பழம்தருகிறதும் தழைத்திருக்கிறதுமான திராட்சைச்செடியாக இருந்தாள்.
Майка ти, с жизненост като твоята, Беше като лоза, посадена при вода; Стана плодоносна и клонеста От многото води.
11 ௧௧ ஆளுகிறவர்களின் செங்கோலுக்கேற்ற பலத்தகிளைகள் அதற்கு இருந்தது; அதின் வளர்த்தி அடர்த்தியான கிளைகளுக்குள்ளே உயர ஓங்கி, தன்னுடைய உயரத்தால் தன்னுடைய திரளான கொடிகளோடுங்கூடத் தோன்றியது.
Израснаха по нея яки жезли За скиптри на владетелите, И ръстът им стигна нависоко всред гъстите клончета, И те се отличаваха с височината си И с многото си отрасли.
12 ௧௨ ஆனாலும் அது கோபமாகப் பிடுங்கப்பட்டு, தரையிலே தள்ளுண்டது; கீழ்காற்றினால் அதின் பழம் காய்ந்துபோனது; அதின் பலத்த கிளைகள் முறிந்து, பட்டுப்போயின; நெருப்பு அவைகளைச் சுட்டெரித்தது.
Но тя биде изтръгната с ярост, Хвърлена бе на земята, И източен вятър изсуши плода й; Яките й жезли се счупиха и изсъхнаха; Огън ги изяде.
13 ௧௩ இப்பொழுது அது வறண்டதும் தண்ணீர் இல்லாததுமான வனாந்திர பூமியிலே நடப்பட்டிருக்கிறது.
А сега тя е посадена в пустиня, В суха и безводна земя.
14 ௧௪ அதின் கொடிகளிலுள்ள ஒரு கொப்பிலிருந்து நெருப்பு புறப்பட்டு, அதின் பழத்தைச் சுட்டெரித்தது; ஆளுகிற செங்கோலுக்கு ஏற்ற பலத்த கிளை இனி அதில் இல்லையென்று சொல்; இதுவே புலம்பல், இதுவே புலம்பலாக இருக்கும் என்றார்.
И огън излезе из един жезъл от клончетата й Та изяде плода й, Тъй щото няма вече в нея жезъл достатъчно як За владетелски скиптър. Това е плач, и ще служи за плач.