< எசேக்கியேல் 17 >
1 ௧ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
পরে সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
2 ௨ மனிதகுமாரனே, நீ இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு விடுகதையையும் உவமையையும் கூறி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
“হে মানবসন্তান, তুমি ইস্রায়েল কুলের সামনে একটি ধাঁধা রেখে দৃষ্টান্তের মধ্য দিয়ে বলো।
3 ௩ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார், பெரிய இறக்கைகளையும் நீளமான இறகுகளையும் உடையதும், பலவர்ணமான இறகுகளால் நிறைந்ததுமாகிய ஒரு பெரிய கழுகு லீபனோனில் வந்து, ஒரு கேதுருவின் நுனிக்கிளையைப் பிடித்து,
তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন বিভিন্ন রংয়ের লম্বা পালকে ভরা খুব শক্তিশালী ডানাযুক্ত একটি বিশাল ঈগল লেবাননে এসে সিডার গাছের উপরের ডাল ধরে
4 ௪ அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளைக்கொய்து, அதை வர்த்தக தேசத்திற்குக் கொண்டுபோய், அதை வர்த்தகர்களுடைய நகரத்திலே வைத்தது;
সেটি ভাঙল ও ব্যবসায়ীদের দেশে বয়ে নিয়ে গিয়ে ব্যবসায়ীদের নগরে লাগিয়ে দিল।
5 ௫ தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர் நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாக நட்டது.
“‘সে তোমার দেশের কিছু চারাগাছ নিল ও উর্বর মাটিতে লাগিয়ে দিল। প্রচুর জলের ধারে উইলো গাছের মতো করে সে তা লাগিয়ে দিল,
6 ௬ அது துளிர்த்து, படர்ந்து, தாழ்ந்த அடிமரமுள்ள திராட்சைச்செடியாயிற்று; அதின் கொடிகள் அந்த கழுகுக்கு நேராகவும், அதின் வேர்கள் அதின் கீழாகவும் இருந்தன; இந்த விதமாக அது திராட்சைச் செடியாகி, கிளைகளை வீசி, கொப்புகளைவிட்டது.
সেটি মাটিতে ছড়িয়ে পড়া একটি দ্রাক্ষালতা হল। তার ডালগুলি ওই ঈগলের দিকে ফিরল আর তার শিকড়গুলি পাখির নিচে রইল। এইভাবে সেই দ্রাক্ষালতা বড়ো হল এবং তাতে পাতাভরা অনেক ডাল বের হল।
7 ௭ அன்றியும் பெரிய இறக்கைகளையும் திரளான இறகுகளையும் உடைய வேறொரு பெரிய கழுகு இருந்தது; இதோ, அது தன்னுடைய நடவாகிய பாத்திகளிலிருந்து அதற்குத் தண்ணீர் பாய்ச்சும்படி இந்த திராட்சைச்செடி அதற்கு நேராகத் தன்னுடைய வேர்களை விட்டு, அதற்கு நேராகத் தன்னுடைய கொடிகளை வீசினது.
“‘কিন্তু সেখানে পালকে ঢাকা বড়ো ডানাযুক্ত আর একটি প্রকাণ্ড ঈগল ছিল। সেই দ্রাক্ষালতা জল পাবার জন্য যেখানে সেটি লাগানো হয়েছিল সেখান থেকে তার শিকড় ও ডালগুলি সেই ঈগলের দিকে বাড়িয়ে দিল।
8 ௮ கிளைகளை விடுகிறதற்கும், பழத்தைத்தருகிறதற்கும், மகிமையான திராட்சைச்செடியாகிறதற்கும், இது மிகுந்த தண்ணீர்களின் ஓரமாகிய நல்ல நிலத்தில் நடப்பட்டிருந்தது.
প্রচুর জলের পাশে ভালো মাটিতে তাকে লাগানো হয়েছিল যাতে সে অনেক ডাল বের করতে পারে, ফল ধরাতে পারে ও সুন্দর দ্রাক্ষালতা হয়ে উঠতে পারে।’
9 ௯ இது செழிக்குமா? இது பட்டுப்போகத்தக்கதாக ஒருவன் இதின் வேர்களைப் பிடுங்காமலும், இதின் பழத்தை வெட்டாமலும் இருப்பானோ? துளிர்த்த எல்லா இலைகளோடும் இது பட்டுப்போகும்; இதை வேருடன் பிடுங்கும்படி ஒருவன் பலத்த புயத்தோடும் திரண்ட மக்களோடும் வரத்தேவையில்லை.
“তাদের বলো, ‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, সে কি বেড়ে উঠবে? সে যাতে শুকিয়ে যায় সেইজন্য কি তাকে উপড়ে ফেলে তার ফল ছিড়ে নেওয়া হবে না? সব নতুন গজানো ডগা শুকিয়ে যাবে। তার শিকড় ধরে তুলে ফেলার জন্য কোনও শক্তিশালী হাত বা অনেক লোক লাগবে না।
10 ௧0 இதோ, நடப்பட்ட இது செழிப்பாக இருக்குமோ? கிழக்குகாற்று இதின்மேல் படும்போது இது வாடி உலர்ந்து போகாதோ? இது நடப்பட்ட பாத்திகளிலே வாடிப்போகும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
তাকে লাগানো হয়েছে, কিন্তু সে কি বাঁচবে? সে কি সম্পূর্ণ শুকিয়ে যাবে না যখন পূর্বদিকের বাতাস তাকে আঘাত করবে—যেখানে তাকে লাগানো হয়েছিল সেখানেই সে কি শুকিয়ে যাবে না?’”
11 ௧௧ பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
আর সদাপ্রভুর বাক্য আমার কাছে উপস্থিত হল,
12 ௧௨ இப்போதும் இவைகளின் அர்த்தம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக் கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,
“তুমি এই বিদ্রোহী কুলকে বলো, ‘তোমরা কি জানো না এই সবের অর্থ কি?’ তাদের বলো, ‘ব্যাবিলনের রাজা জেরুশালেমে এসে তার রাজা ও গণ্যমান্য লোকদের ধরে তাঁর সঙ্গে ব্যাবিলনে নিয়ে গেল।
13 ௧௩ அவன் ராஜவம்சத்திலே ஒருவனைத் தெரிந்தெடுத்து, அவனுடன் உடன்படிக்கைசெய்து,
তারপর সে রাজপরিবারের একজনের সঙ্গে চুক্তি করে তাকে তার বাধ্য থাকবার শপথ করাল। সে দেশের প্রধান প্রধান লোকদেরও ধরে নিয়ে গেল,
14 ௧௪ யூத அரசு தன்னை உயர்த்தாமல் தாழ்ந்திருக்கும்படிக்கும், தன்னுடைய உடன்படிக்கையை அவன் கைக்கொள்ளுகிறதினால் அது நிலைநிற்கும்படிக்கும், அவனை ஆணைப்பிரமாணத்திற்கு உட்படுத்தி, தேசத்தில் பலசாலிகளைப் பிடித்துக்கொண்டுபோனானே.
যেন সেই রাজ্যকে অধীনে রাখা যায় এবং তা শক্তিশালী হয়ে উঠতে না পারে কিন্তু চুক্তি রক্ষা করে টিকে থাকতে পারে।
15 ௧௫ இவன் அவனுக்கு விரோதமாகக் கலகம்செய்து, தனக்குக் குதிரைகளையும் அநேகம் ஆட்களையும் அனுப்பவேண்டுமென்று தன்னுடைய பிரதிநிதிகளை எகிப்திற்கு அனுப்பினான்; இப்படிப்பட்டவனுக்கு வாய்க்குமோ? இப்படிச் செய்கிறவன் தப்பித்துக்கொள்வானோ? உடன்படிக்கையை முறித்தவன் தப்பித்துக்கொள்வானோ?
কিন্তু সেই রাজা ঘোড়া ও সৈন্যদল পাবার জন্য মিশরে দূত পাঠিয়ে ব্যাবিলনের রাজার বিরুদ্ধে বিদ্রোহ করল। সে কি সফল হবে? এমন কাজ যে করে সে কি রক্ষা পাবে? চুক্তি ভেঙে ফেললে কি সে রক্ষা পাবে?
16 ௧௬ தன்னை ராஜாவாக ஏற்படுத்திய ராஜாவினுடைய ஆணையை அசட்டைசெய்து, அவனுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டவன், அந்த ராஜாவினுடைய இடமாகிய பாபிலோன் நடுவிலே அவனருகில் இருந்து மரணமடைவானென்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்கிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
“‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য, তাকে যে রাজা সিংহাসনে বসাল, যার শপথ সে অবজ্ঞা করল, আর যার চুক্তি সে ভেঙে ফেলল সে সেই রাজার দেশ ব্যাবিলনে মারা যাবে।
17 ௧௭ அவன் அநேக மக்களை அழிக்கும்படி அணைபோட்டு, முற்றுகைச் சுவர்களைக் கட்டும்போது, பார்வோன் பெரிய படையுடனும், திரளான கூட்டத்தோடும் வந்து இவனுக்காக போரில்உதவமாட்டான்.
যুদ্ধের সময় যখন অনেক জীবন ধ্বংস করার জন্য উঁচু ঢিবি ও ঢালু পথ তৈরি করা হবে তখন ফরৌণের শক্তিশালী মস্ত বড়ো সৈন্যদল তাকে সাহায্য করবে না।
18 ௧௮ இதோ, இவன் வாக்கு கொடுத்திருந்தும் உடன்படிக்கையை முறித்துப்போட்டு, ஆணையை அசட்டைசெய்தான்; இப்படியெல்லாம் செய்தவன் தப்புவதில்லை.
সে শপথ অবজ্ঞা করে চুক্তি ভেঙেছে। সে অধীনতার চুক্তি করেও এসব কাজ করেছে বলে রক্ষা পাবে না।
19 ௧௯ அதற்காக யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: அவன் என்னுடைய ஆணையை அசட்டைசெய்ததையும், என்னுடைய உடன்படிக்கையை முறித்துப்போட்டதையும், நான் அவனுடைய தலையின்மேல் வரச்செய்வேன் என்று என்னுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்.
“‘অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমার জীবনের দিব্য, সে আমার শপথ অবজ্ঞা করেছে ও আমার চুক্তি ভেঙেছে, অতএব তার ফল তাকে দেব।
20 ௨0 அவன் என்னுடைய கண்ணியில் அகப்படும்படிக்கு, நான் என்னுடைய வலையை அவன்மேல் வீசி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோய், அவன் எனக்கு விரோதமாகச்செய்த துரோகத்திற்காக அங்கே அவனை நியாயம் விசாரிப்பேன்.
আমি তার জন্য আমার জাল পাতব এবং সে আমার ফাঁদে ধরা পড়বে। সে আমার প্রতি অবিশ্বস্ত হয়েছে বলে আমি তাকে ব্যাবিলনে নিয়ে যাব আর সেখানে তার বিচার আমি করব।
21 ௨௧ அவனுடன் ஓடிப்போகிற யாவரும் அவனுடைய எல்லா இராணுவங்களும் வாளால் விழுவார்கள்; மீதியானவர்களோ எல்லா திசைகளிலும் சிதறடிக்கப்படுவார்கள்; அப்பொழுது யெகோவாகிய நான் இதைச் சொன்னேன் என்று அறிந்துகொள்வீர்கள்.
তার সব সৈন্যরা তরোয়ালে মারা যাবে আর বাদবাকি সৈন্যরা চারিদিকে ছড়িয়ে পড়বে। তখন তোমরা জানবে যে আমি সদাপ্রভু এই কথা বলেছি।
22 ௨௨ யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் உயர்ந்த கேதுருவின் நுனிக்கிளைகளில் ஒன்றை எடுத்து, அதை நடுவேன்; அதின் இளங்கிளையிலுள்ள கொழுந்துகளில் இளசாக இருக்கிற ஒன்றைக்கொய்து, அதை உயரமும் உன்னதமுமான ஒரு மலையின்மேல் நாட்டுவேன்.
“‘সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, আমি নিজেই সিডার গাছের মাথা থেকে একটি কচি ডাল নিয়ে সেটি লাগাব; আমি তার সব থেকে উঁচু ডালের একটি কচি অংশ ভেঙে পাহাড়ের উঁচু চুড়ার উপরে লাগিয়ে দেব।
23 ௨௩ இஸ்ரவேலின் உயரமான மலையிலே அதை நாட்டுவேன்; அது கிளைகளைவிட்டு, பழம்தந்து, மகிமையான கேதுருவாகும்; அதின் கீழே எல்லாவித பறவைவகைகளும் தங்கி, அதின் கிளைகளின் நிழலிலே தங்கும்.
ইস্রায়েলের উঁচু পাহাড়ের উপরে তা থেকে ডালপালা বের হয়ে ফল ধরবে এবং সেটি একটি বিশাল সিডার গাছ হয়ে উঠবে। সব রকমের পাখি তার ডালপালার মধ্যে বাসা করবে; তারা আশ্রয় পাবে এবং তার ছায়ায় বাস করবে।
24 ௨௪ அப்படியே யெகோவாகிய நான் உயர்ந்த மரத்தைத் தாழ்த்தி, தாழ்ந்த மரத்தை உயர்த்தினேன் என்றும், நான் பச்சையான மரத்தை பட்டுப்போகச்செய்து, பட்டுப்போன மரத்தைத் தழைக்கச்செய்தேன் என்றும் விளைச்சலின் மரங்களுக்கு எல்லாம் தெரியவரும்; யெகோவாகிய நான் இதைச் சொன்னேன், இதை நிறைவேற்றினேன் என்று சொன்னார் என்று சொல் என்றார்.
এতে মাঠের সব গাছপালা জানবে যে, আমিই সদাপ্রভু উঁচু গাছকে নিচু করি এবং নিচু গাছকে উঁচু করি। আমি সবুজ গাছকে শুকনো করি এবং শুকনো গাছকে জীবিত করি। “‘আমি সদাপ্রভু এই কথা বলেছি, এবং আমি তা করব।’”