< எசேக்கியேல் 15 >

1 யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
Awurade asɛm baa me nkyɛn sɛ:
2 மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
“Onipa ba, ɛkwan bɛn so na bobe dutan ho bɛba mfasoɔ asene kwaeɛ mu dua foforɔ biara mman?
3 ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
Wɔtwa dua no bi de yɛ biribi a ɛho wɔ mfasoɔ? Wɔde yɛ pɛɛwa a wɔde nneɛma sensɛn soɔ anaa?
4 இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
Na sɛ wɔde ne nyina hyɛ ogya mu na etire ne etire hye ma mfimfini yɛ bidie a, ɛho ba mfasoɔ bi anaa?
5 இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?
Na sɛ ɛho amma mfasoɔ ɛberɛ a ɛdi mu a, ɛbɛyɛ den na wɔbɛtumi de ayɛ mfasodeɛ bi, ɛberɛ a ahye adane bidie?
6 ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
“Enti yei ne deɛ Otumfoɔ Awurade seɛ: Sɛdeɛ mede bobe dua a ɛfera kwaeɛm nnua mu ama sɛ wɔmfa nsɔ ogya no, saa ɛkwan no so na mede nnipa a wɔte Yerusalem no bɛfa.
7 என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
Mɛtu mʼani asi wɔn so. Ɛwom sɛ wafiri ogya no mu deɛ, nanso ɛbɛhye wɔn bio. Na sɛ metu mʼani si wɔn so a, wobɛhunu sɛ mene Awurade.
8 அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
Mɛma asase no ada mpan, ɛfiri sɛ wɔanni nokorɛ, Otumfoɔ Awurade asɛm nie.”

< எசேக்கியேல் 15 >