< எசேக்கியேல் 15 >
1 ௧ யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
主の言葉がわたしに臨んだ、
2 ௨ மனிதகுமாரனே, காட்டிலிருக்கிற செடிகளுக்குள் மற்ற எல்லாச் செடிகொடிகளைவிட திராட்சைச்செடிக்கு மேன்மை என்ன?
「人の子よ、ぶどうの木、森の木のうちにあるぶどうの枝は、ほかの木になんのまさる所があるか。
3 ௩ ஏதாவது ஒரு வேலைசெய்ய அதிலே ஒரு கட்டை எடுக்கப்படுமோ? ஏதாவது ஒரு பொருட்களை தூக்கிவைக்கும்படி ஒரு முளையை அதினால் செய்வார்களோ?
その木は何かを造るために用いられるか。また人はこれを用いて、器物を掛ける木釘を造るだろうか。
4 ௪ இதோ, அது நெருப்பிற்கு இரையாக எறியப்படும்; அதின் இரண்டுமுனைகளையும் நெருப்பு எரித்துப்போடும்; அதின் நடுத்துண்டும் வெந்துபோகும்; அது எந்த வேலைக்காவது உதவுமோ?
見よ、これは火に投げ入れられて燃える。火がその両端を焼いたとき、またその中ほどがこげたとき、それはなんの役に立つだろうか。
5 ௫ இதோ, அது வேகாமல் இருக்கும்போதே ஒரு வேலைக்கும் உதவாமல் இருக்க, நெருப்பு அதை எரித்து, அது வெந்துபோனபின்பு, அது இனி ஒரு வேலைக்கு உதவுவது எப்படி?
見よ、これは完全な時でも、なんの用をもなさない。まして火がこれを焼き、これをこがした時には、なんの役に立つだろうか。
6 ௬ ஆதலால், யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: காட்டுச்செடிகளுக்குள் இருக்கிற திராட்சைச்செடியை நான் நெருப்பிற்கு இரையாக ஒப்புக்கொடுத்ததுபோல, எருசலேமின் குடிகளையும் அப்படியே ஒப்புக்கொடுத்து,
それゆえ主なる神はこう言われる、わたしが森の木の中のぶどうの木を、火に投げ入れて焼くように、エルサレムの住民をそのようにする。
7 ௭ என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்புவேன்; அவர்கள் ஒரு நெருப்பிலிருந்து நீங்கித் தப்பினாலும், வேறே நெருப்பு அவர்களை எரிக்கும்; அப்படியே நான் என்னுடைய முகத்தை அவர்களுக்கு விரோதமாகத் திருப்பும்போது, நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
わたしはわたしの顔を彼らに向けて攻める。彼らがその火からのがれても、火は彼らを焼き尽す。わたしが顔を彼らに向けて攻める時、あなたがたはわたしが主であることを知る。
8 ௮ அவர்கள் துரோகம்செய்தபடியினால், நான் தேசத்தைப் பாழாய்ப் போகச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார் என்றார்.
彼らが、もとりそむいたゆえに、わたしはこの地を荒れ地とすると、主なる神は言われる」。